Author: admin

  • ஆராதனைக்குகந்தவரே aradhanaikeugandavare

    ஆராதனைக்குகந்தவரே
    கனம் மகிமைகெல்லாம் பாத்திரரே
    எல்லாவற்றிற்கும் மேலாக
    உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம்
    உந்தன் அன்பினால் எங்கள்
    உள்ளம் நிறைந்து – நன்றி
    நிறைவால் பொங்கி வழிகின்றேதே – 2

    நீதியறியாத எங்களை உந்தன்
    நீதியாக்கிட – பாவமறியாத
    இயேசுவை நீர் பாவமாக்கினிரே
    நீதியின் உணர்வினால் உம்மிடம்
    நெருங்கிட – நன்மைகள்
    அடைந்திட திராணியை தந்தீரே

    இயேசுவின் நாமம் எங்களுடைய
    அதிகார பத்திரம் – உரிமையோடே
    உச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம்
    இயேசுவின் நாமத்தில்
    அனைத்தையும் தந்தீரே – தந்தை உம்
    அன்பினை எண்ணியே தொழுகிறோம்

    பிதாவே உந்தன் சுதந்தரராய்
    இயேசுவை வைத்தீரே – எங்களை உடன்
    சுதந்தரராய் அவருடன் இணைத்தீரே
    எங்களின் சுதந்தரம்
    அனைத்தையும் அறிந்திட – வார்த்தையை
    நோக்குவோம் வளமுடன் வாழ்வோம்


    aradhanaikeugandavare
    ganam magimai ellam pathirare
    yella vatraikum malagee
    ummai uyarthi arradhikindrom
    undhan anbinal engal
    ullam niraindhu- nandri
    niraiwal pongiwaligiradhe nidhi ariyadhe yengalai undhan
    nidhi akkide -nanmaigal
    adaindhide thraniyai thandeer

    yesuvin namm yengalodaye
    adgare patthiram – urimaiyodee
    utharippom uboyoge paduthuwom
    yesuvin namathil
    annaithayum thanthire- thandai um
    anbinai yenniye tholugirom

    pidhave undhan suthanthararai
    yesuvaii waithire- yengalai udan
    sudandharai avarudan innaithire
    yengalin sudhandiram
    annaithayum arindhid – warthaiyai
    nokkuwom walamudan walwom


  • உயிருள்ள நாமம் uyirulla naamam

    உயிருள்ள நாமம் மேலான நாமம்
    ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம்
    உயிருள்ள நாமம் மேலான நாமம்
    ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம்

    ஏசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே – 3

    பரிசுத்தரே படைத்தவரே
    பரிகாரியே எங்கள் நேசரே
    பரிசுத்தரே படைத்தவரே
    பரிகாரியே எங்கள் நேசரே

    பாத்திரர் நீரே ஏசுவே நீர் பாத்திரரே – 2
    உம்மை போல் வேறு தெய்வம் இல்லை


    uyirulla naamam maelaana naamam
    jeevanulla naamam Yesuvin naamam
    uyirulla naamam maelaana naamam
    jeevanulla naamam Yesuvin naamam

    aesuvae meetparae jeevanae engal raajanae – 3

    parisuththarae pataiththavarae
    parikaariyae engal naesarae
    parisuththarae pataiththavarae
    parikaariyae engal naesarae

    paaththirar neerae aesuvae neer paaththirarae – 2
    ummai pol vaetru theyvam illai


  • பூமிக்கொரு புனிதம் poomikkoru punitham

    பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2

    எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
    கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்

    எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
    விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்

    இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
    இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்

    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3


    poomikkoru punitham immannnnil vanthathu
    ullamellaam santhosham intu ponguthu
    paraloka thanthaiyin sellam vanthathu
    mannnnaana ennaiyum thaeti vanthathu
    akilaththaip pataiththavar anuvaanathu
    arivukketta perum vinthaiyithu & 2

    enga Yesu raajaa enga sella iraajaa
    kanni mari vayittil parisuththamaaka piranthaar

    eliyonai naesiththa maamannavar
    aelaiyin kolaththil piranthaaranto
    arinjarin njaanaththai avamaakkiyae
    pullannai meethinil piranthaaranto
    ulakaththin paavaththai thaam pokkavae
    thaevaattukkuttiyaay piranthaaranto & 2
    vinthaiyaam kiristhuvaik konndaaduvom

    irulaana nam vaalvil oliyaettavae
    vitivelli natchaththiram uthiththaaranto
    marulaalae kattunntoor viduvikkavae
    arulaalae uthiraththai eenthaaranto
    paralokil nammai serkka thamai thaalththiyae
    siluvaiyil jeevanaith thanthaaranto & 2
    iratchakar Yesuvaik konndaaduvom

    allaelooyaa osannaa allaelooyaavae & 3


  • சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி Siluvai naadhar yaesuvinPaeroli

    சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி
    வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி
    பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன
    என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம்
    கையின் காயங்கள் பார்கின்றாரேதீய
    வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே

    தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம்
    கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை
    நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில்
    இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார்

    அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர்
    கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை
    விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

    திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்வருந்திடா
    பிள்ளைக்காய் கலங்குகின்றார்தம்கண்ணீர்
    காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்


    Siluvai naadhar yaesuvinPaeroli veesidum
    thooya kangalEnnai noakki paarkkindranaTham
    kaayangalai paarkkindrana

    En kaiyaal paavangal seidhittaalTham
    kaiyin kaayangal paarkkindraaraeTheeya
    vazhiyil en kaalgal sendraalTham kaalin
    kaayangal paarkkindraarae – Siluvai naadhar

    Theettulla ennam en idhayam kondaalEetti
    paaindha nenjai noakkukindraarVeenperumai
    ennil idampetraalMulmudi paarththida aengukindraar

    Avar rattham en paavam kazhuvidumAvar kanneer
    ennai merugaetridumKalangarai vilakkaaga oli
    veesuvaenKalanguvoarai avar mandhai saerpaen

    Thirundhidaa paavikkaai azhukindraarVarundhidaa
    pillaikkaai kalangukindraarTham kanneer kaayaththil
    vizhundhidaKanneerum ratthamum sindhukindraar


  • இயேசு உனக்காய் Yesu Unnakkai

    இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார்
    இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார்
    இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக
    இயேசு விடம் ஓடி வா

    பாரமான சிலுவையை சுமந்தார்
    விலாவிலே குத்தப்பட்டார்
    பொன் கிரீடத்திற்கு பதிலாக
    முட்க்ரீடம் ஏற்றினாரே

    நீ செய்த பாவத்திற்காக
    உன் கஷ்டங்களை மாற்றிட
    இயேசு உனக்காக மரித்தாரே
    உன் பாவங்களை மன்னித்தாரே

    பரிசுத்தமான ஏன் இயேசு
    பாவிகளுக்காய் மரித்தார்
    பரலோகத்தில் உன்னை சேர்க்க
    மணவாட்டியாய் உன்னை மாற்ற


    Yesu Unnakkai Adikapattaar
    Yesu Unnakkai Norukkapattar
    Yesu Sindheena Raktham, Undhanukkaaga,
    Yesu Vidam Odi Vaa

    Baaramaana Siluvaiyai Sumandhaar,
    Vilaavilae Kuthapattar,
    Pon Kreedarthirkku Bathilaaga,
    Mutkreedam Yeatrinaarae

    Nee Seitha Paavathirkaaga
    Un Kastangalai Maatrida
    Yesu Unnakaaga Marithaarae
    Un Paavangalai Mannithaarae

    Parisuthamaana Yen Yesu
    Paavigalukkai Marithaar
    Paralogathil Unnai Serkka
    Manavaatiyaay Unnai Maatra


  • கல்வாரி மலைதனிலே

    கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு
    கண்ணீர் பெருகுதையா – அவர்
    உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்
    உள்ளத்தை உடைக்குதையா

    இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்
    இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2
    பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே
    பாதகர்க்காய் வேண்டினார் -2

    காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட
    களைந்த நிலையில் கர்த்தர் -2
    பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே
    பரதேசில் இருபாய் என்றார்-2

    சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்
    சீராளன் தாயைப் பார்த்தார் – 2
    பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை
    பார் உந்தன் தாயை என்றார் -2

    என் தேவனே என் தேவனே ஏன் என்னைக்
    கைவிட்டீர் என்றுரைத்தார் – 2
    தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே
    சேவகன் காடி கொடுத்தான் – 2

    எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார்
    பொல்லாதார் மீட்படைய -2
    உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை
    ஒப்பு விக்கின்றேன் என்றார் – 2


    Kalvari Malaithanile
    Karthar Siluvai Kandu
    Kanner Peruguthaiyya
    Kanner Peruguthaiyya
    Avar Uyara Siluvaiyil
    Uraitha Pon Vaarthaigal
    Ullathai Udaikkuthaiyya
    Ullathai Udaikkuthaiyya

    Innilathil Thammai
    Kolai Seivaarai
    Irangi Mannippaarundo
    Pithaave Ivargatkku
    Manniyum Endrume
    Paathagarkkai Vendinaar

    Kaayangal Raththathai
    Kotta Kan Mangida
    Kalaintha Nilaiyil Karthar
    Paarthume Kalvanai
    Indru Ennudane
    Paradesil Iruppai Endraar

    Sinthum Raththa Vella
    Siluviayil Thongidum
    Seeralan Thayai Paarthaar
    Paasa Kannaglode
    Paarthume Yovanai
    Paar Untha Thaaiyai Endraar

    En Devane… En Devane …
    Yen Ennai Kaivitteer Endruraithaar ?
    Thagamai Irukkindren Endravar Kurave
    Sevagan Kaadi Koduthaan

    Ellam Mudinthathu
    Endru Sathamittar
    Pollathaar Meetpadaiya
    Ummudiya Kaigalil
    Enthan Aaviyai
    Oppuvikiren Endraar


  • சிலுவையின் நிழலில் Siluvaiyin nilalil

    சிலுவையின் நிழலில் தங்கி நான்
    என்றும் இளைப்பாறுவேன்
    தங்கிடுவேன் தாபரிப்பேன்
    கல்வாரி நேசரின் பாதத்திலே

    சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம்
    சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்
    அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவே
    தூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின்

    அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்
    என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே
    எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலே
    ஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின்

    கொல்கொதா நாயகரின் கொடூர மரணமதை
    தியானித்தென் ஓட்டமதை ஓடிடுவேன்
    மூன்றாணி மீதினில் கள்வரின் மத்தியிலே
    முள்முடி சூடினார் எனக்காகவே – சிலுவையின்

    தாங்கொண்ணா வேதனை சுற்றி வதைத்தநேரம்
    தாசனாம் எந்தனுக்காய் ஏற்றவரே .
    சிலுவை மரணமோ கொடியதோர் வேதனை
    எப்படிப் போற்றுவேன் என் இயேசுவை – சிலுவையின்

    கல்வாரி அன்பினால் கழுவி எந்தனை நீர்
    கறைதிரை அற்றோனாய் மாற்றினீரே
    எக்காளச் சத்தத்தைக் கேட்டிடும் நாளிலே
    கர்த்தராம் இயேசுவை சந்திப்போமே – சிலுவையின்


    Siluvaiyin nilalil thangi naan
    Endrum ilaipaaruvein
    Thangiduvein thaabaripein
    Kalvari neisarin paadhathilay

    Siluvaiyil Yesuvai naan kaanum neramellaam
    Sindhithen jeeviyathai seer seiguvein
    Angamellaam adipattu thongugiraar Yeisuvay
    Thooyanaai ennaiyum maatridavay

    Agoara paadugalaal andha keidadaindhavaraal
    En paavam pokka jeevan eendhavaray
    Ennilla anbinaiyay ennullam ninaikaiyilay
    Oppuvithein ennai suthanaakum

    Golgotha naayagarin kodoora maranamadhai
    Dhyaanithen ottamathai oadiduvein
    Moondraanni meedhinil kalvarin mathiyilay
    Mulmudi soodinaar enakaagavay

    Thaangonna veidhanai sutri vadhaitha neram
    Dhaasanaam endhanukkaai eitravaray
    Siluvai maranamo kodiyadhoar veidhanai
    Eppadi poatruvein en Yeisuvai

    Kalvari anbinaal kaluvi endhanai neer
    Karai thirai atroanaai maatrineeray
    Ekkaala sathathai keitidum naalilay
    Kartharaam Yesuvai sandhippoamay


  • உம் வார்த்தைகள் Um Vaarthaigal

    உம் வார்த்தைகள் மேலானது
    உம் வல்லமை மேலானது
    உம் திரு இரத்தம் மேலானது
    உம் சமூகமே மேலானது
    உம் வார்த்தைகள் மேலானது
    உம் வல்லமை மேலானது
    அல்லேலூயா (8)


    Um Vaarthaigal Melaanathu
    Um Vallamai Melaanathu
    Um Thiru Ratham Melaanathu
    Um Samoogame Melaanathu
    Um Vaarthaigal Melaanathu
    Um Vallamai Melaanathu
    Hallelujah (8)


  • அன்பு ஒன்றை நான் Anbu ondrae naan

    அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்
    அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன்

    அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே

    என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்
    என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன்

    அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே

    என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டு
    என்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன் என்று சொன்னிர்

    அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே

    அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்
    அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன்


    Anbu ondrae naan thedi sendren siluvayil athai kanden
    Anbu ellavatrai thaangum endru naan kandathum unnarnthu konden

    Anbe anbe anbe siluvai anbe
    Anbe anbe anbe siluvai anbe

    Ennai thedi vantha anbai theriyaamal vazhnthirunthen
    Ennai meetka un jeevanaiyum thanthathaale kandukonden

    Anbe anbe anbe siluvai anbe
    Anbe anbe anbe siluvai anbe

    Ennai kaaka vendum endru paadugalai yetru kondu
    Ennai paarthu paasathodu nessikiren endru soneer

    Anbe anbe anbe siluvai anbe
    Anbe anbe anbe siluvai anbe

    Anbu ondrae naan thedi sendren siluvayil athai kanden
    Anbu ellavatrai thaangum endru naan kandathum unnarnthu konden

    Anbe anbe anbe siluvai anbe
    Anbe anbe anbe siluvai anbe


  • இயேசுவுக்கு நான் Yesuvukku Naan

    குட்டி நானய்யா கழுதை குட்டி நானய்யா
    இயேசு ராஜன் ஏறிச்செல்லும் குட்டி நானய்யா
    இயேசு ராஜா செல்கையில்
    ஓசன்னா ஓசன்னா
    என்றதொனி கேட்குதே
    துள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்
    எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்
    துள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்
    எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்

    Kutti Naan Aiyya kazhuthai Kutti Naan Aiyya
    Yesu Raajan YeariSellum Kutti Naan Aiyya
    Yesu Raajan selkaiyil
    Oshanna Oshanna
    Entra Thoni keatkuthae
    Thulli Thulli Oodi Varuvaean Naan
    Enthan Ullam Pongi vazhivathaal
    Thulli Thulli Oodi Varuvaean Naan
    Enthan Ullam Pongi vazhivathaal