Author: admin

  • கேளுங்கள் தரப்படும் kelungkal tharappatum

    கேளுங்கள் தரப்படும் என்ற என்
    இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய்
    தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு
    தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய்

    உம் வார்த்தை ஒரு போதும்
    பொய்யாவதில்லை
    பொய் சொல்ல நீரோ
    மனு புத்திரன் இல்லை
    உம் நாமம் மகிமையுற
    இம்மாந்தர் மனம் மகிழ இமை
    பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

    ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க
    ஊழியம் செய்வீர் அன்று
    குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க
    குறைகளை தீர்த்தீரய்யா
    அந்நாளில் அதிசயம்
    செய்த என் இயேசுவே
    இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர்
    உம் நாமம் மகிமையுற
    இம்மாந்தர் மனம் மகிழ இமை
    பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

    இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து
    இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்ததினாலே ஜெயம்…
    இரத்ததினாலே ஜெயம் இயேசு
    இரத்ததினாலே ஜெயம்
    வல்லமை வல்லமை இயேசுவின்
    வல்லமை கிறிஸ்து இயேசுவின்
    வல்லமையே
    ஆவியின் வல்லமை அக்கினி
    வல்லமை அற்புத வல்லமையே

    அனுப்புவேன் என்றுரைத்த
    தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா
    ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட
    அபிஷேகம் அளித்தீரைய்யா
    அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே
    இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே


    kelungkal tharappatum enra en
    iyesuve ketkinrom thanthituvay
    thiratha thuyarala vatitum mantharkku
    theyvika vituthalai iinrituvay

    um varththai oru pothum
    poyyavathillai
    poy solla niro
    manu puththiran illai
    um namam makimaiyura
    immanthar manam makizha imai
    pozhuthil arputham seyyum aiya

    uumaikalum pesa sevitarkalum ketka
    uuzhiyam seyvir anru
    kurutarkalum parkka mutavarkalum natakka
    kuraikalai thirththirayya
    annalil athisayam
    seytha en iyesuve
    innalum uyirotum irukkirir
    um namam makimaiyura
    immanthar manam makizha imai
    pozhuthil arputham seyyum aiya

    iyesuvin iraththam jeyam kiristhu
    iyesuvin iraththam jeyam
    iraththathinale jeyam
    iraththathinale jeyam iyesu
    iraththathinale jeyam
    vallamai vallamai iyesuvin
    vallamai kiristhu iyesuvin
    vallamaiye
    aaviyin vallamai akkini
    vallamai arputha vallamaiye

    anuppuven enruraiththa
    therraravalanai avanikku thanthiraiyya
    aaviyin varangkalai paviyum atainthita
    apishekam aliththiraiyya
    annalil athisayam seytha en iyesuve
    innalum uyirotum irukkinrire


  • கர்த்தர் பெரிய காரியங்கள் karththar periya kariyangkal

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    இன்றே செய்வார் நன்றே செய்வார்
    அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர்
    அல்லேலூயா பாடியே போற்றிடுவோம்

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    தானேயலைப் போல் ஜெபித்திடுவோம்
    தாவீதைப் போல் துதித்திடுவோம்
    சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார்
    உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம்
    சாமுவேலைப் போல் ஊழியமடைவோம்
    நீதியின் பாதையில் நடத்திடுவார்
    சாட்சியின் ஜீவியம் காத்திடுவார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம்
    யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம்
    கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார்
    சீயோன் மலை மீது உயர்த்திடுவார்


    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    inre seyvar nanre seyvar
    arputhangkal seythitum thevan avar
    alleluya patiye porrituvom

    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    thaneyalaip pol jepiththituvom
    thavithaip pol thuthiththituvom
    singkangkalin vaykalai ataiththituvar
    unnathaththil nammai uyarththituvar

    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    salamonaip pol nyanam peruvom
    samuvelaip pol uuzhiyamataivom
    nithiyin pathaiyil nataththituvar
    satsiyin jiviyam kaththituvar

    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    yosuvavaip pol jeyiththituvom
    yoseppai pol vazhnthituvom
    karththare vazhikalai vaykkas seyvar
    siyon malai mithu uyarththituvar


  • பயம் எனக்கு இல்லையே Payam enakku illaiye

    பயம் எனக்கு இல்லையே
    இயேசு ராஜன் என்னுடன்
    பயம் எனக்கு இல்லையே இயேசு
    வலப்பக்கம் இருப்பதால்

    இனி நான் வாழ்வது ஜெயத்துடனே
    எந்தன் இயேசு வெற்றி சிறந்தார்
    பயமுமில்லை கலக்கமில்லை
    ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

    சாவையும் நோயையும் ஜெயித்தாரே
    சிலுவையில் வெற்றி சிறந்தாரே
    பயமுமில்லை கலக்கமில்லை
    ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

    இயேசுவின் தூய இரத்தத்தினாலே
    என்றும் என்றும் விடுதலையே
    பயமுமில்லை கலக்கமில்லை
    ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே


    Payam enakku illaiye
    iyesu rajan ennutan
    payam enakku illaiye iyesu
    valappakkam iruppathal

    ini nan vazhvathu jeyaththutane
    enthan iyesu verri siranthar
    payamumillai kalakkamillai
    jeya kiristhu enrum ennutane

    savaiyum noyaiyum jeyiththare
    siluvaiyil verri siranthare
    payamumillai kalakkamillai
    jeya kiristhu enrum ennutane

    iyesuvin thuya iraththaththinale
    enrum enrum vituthalaiye
    payamumillai kalakkamillai
    jeya kiristhu enrum ennutane


  • பயப்படாதே கலங்கிடாதே Payappatathe kalangkitathe

    பயப்படாதே கலங்கிடாதே
    திகையாதே என் மகனே மகளே
    நான் உன்னுடன் இருக்கின்றேன்
    இயேசு உன்னுடன் இருக்கின்றேன்

    பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
    ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர்
    நீதியின் பாதையில் நடத்திடுவீர்

    செங்கடல் எதிராய் வந்தாலும்
    சேதங்கள் உன்னை அணுகாது
    அக்கினி சூழையில் போட்டாலும்
    விக்கினங்கள் உன்னை சூழாது

    வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன்
    வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன்
    ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன்
    அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன்


    Payappatathe kalangkitathe
    thikaiyathe en makanemakale
    nan unnutan irukkinren
    iyesu unnutan irukkinren

    ponnulla itangkalil kontuselvir
    amarntha thannirantai nataththituvir
    aaththumavai thinam therrituvir
    nithiyin pathaiyil nataththituvir

    sengkatal ethiray vanthalum
    sethangkal unnai anukathu
    akkini suzhaiyil pottalum
    vikkinangkal unnai suzhathu

    varangkalinal unnai alangkarippen
    vallamaiyal niththam niraiththituven
    aaviyin varaththal apishekippen
    akkiniyay unnil pelan tharuven


  • அனாதி அன்பால் Anathi anpal

    அனாதி அன்பால் அழைத்த தேவா
    காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே
    ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே
    ஆ அல்லேலூயா அல்லேலூயா
    ஆ அல்லேலூயா அல்லேலூயா

    என் மேல் நீர் வைத்த அன்பு
    முந்தி வந்ததல்லவோ
    நேசம் மரணத்திலும்
    வலியதல்லவோ
    ஆகையினாலே உந்தன்
    அன்பு என்னை வென்றதே

    வேறெந்த அன்பின் இன்பம்
    நிலையற்றதல்லவோ
    மேகம் போல் மாறிப்போகும்
    தன்மையுள்ளதல்லவோ
    ஆகையினாலே உந்தன்
    அன்பை நான் நம்புவேன்

    அன்பாகவேயிருக்கும்
    அன்பின் தேவனல்லவோ
    உந்தனின் வார்த்தைகளை
    யாரும் மீறலாகுமோ
    ஆகையினாலே நானும்
    என்றும் கீழ்படிவேன்


    anathi anpal azhaiththa theva
    karunyaththale ennai mittir anpe
    aananthaththote nanum vanthen anpe
    aa alleluya alleluya
    aa alleluya alleluya

    en mel nir vaiththa anpu
    munthi vanthathallavo
    nesam maranaththilum
    valiyathallavo
    aakaiyinale unthan
    anpu ennai venrathe

    verentha anpin inpam
    nilaiyarrathallavo
    mekam pol marippokum
    thanmaiyullathallavo
    aakaiyinale unthan
    anpai nan nampuven

    anpakaveyirukkum
    anpin thevanallavo
    unthanin varththaikalai
    yarum miralakumo
    aakaiyinale nanum
    enrum kizhpativen


  • என் நெனப்பெல்லாம் En nenappellam

    என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா
    என் மனசெல்லாம் நீங்க தானப்பா

    நான் நடந்தாலும் உங்க
    நெனப்பு இயேசப்பா நான்
    தூங்கினாலும் உங்க
    நெனப்பு தானப்பா

    நான் கடந்த வந்த
    பாதையெல்லாம் நீங்க தான்
    நான் நடந்து வந்த
    பாதையெல்லாம் நீங்க தான்

    நான் சுகமாக வாழ்வதும்
    உம் கிருபையப்பா நான்
    சோர்ந்து போன
    நேரமெல்லாம் நீங்கப்பா

    நான் வயதானாலும் காத்துக்
    கொள்ளுங்க இயேசப்பா என்னை
    வழுவாமல் காத்துக்
    கொள்ளுங்க இயேசப்பா


    en nenappellam ningka iyesappa
    en manasellam ningka thanappa

    nan natanthalum ungka
    nenappu iyesappa nan
    thungkinalum ungka
    nenappu thanappa

    nan katantha vantha
    pathaiyellam ningka than
    nan natanthu vantha
    pathaiyellam ningka than

    nan sukamaka vazhvathum
    um kirupaiyappa nan
    sornthu pona
    neramellam ningkappa

    nan vayathanalum kaththuk
    kollungka iyesappa ennai
    vazhuvamal kaththuk
    kollungka iyesappa


  • நல்ல தெய்வம் உலகில் Ummai vita enakku

    உம்மை விட எனக்கு ஒன்றும்
    உயர்ந்ததில்லையே உம்மை போல
    நல்ல தெய்வம் உலகில் இல்லையே
    நல்ல தெய்வமே நல்ல இயேசுவே
    உம் மார்பிலே நான்
    சாய்ந்துக் கொள்ளுவேன் -2

    மனம் பதரும் வேளையில் நான்
    திகைக்கும் போதெல்லாம் உம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    மாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே

    ஒரு சிற்பை போல என்னை இந்த
    உலகம் வெறுத்த போதும் உம்
    கரத்தாலே உயர்த்தினீரே
    மண்ணான என்னையும் உம்
    மகிமையாலே நிரப்பினீர்

    பயனற்றவள் என்று உலகம்
    தள்ளிவிட்டாலும் உம்
    அன்பாலே தேற்றினீரே
    அனாதி ஸ்நேகத்தாலே
    அழைத்துக்கொண்ட தெய்வமே


    ummai vita enakku onrum
    uyarnthathillaiye ummai pola
    nalla theyvam ulakil illaiye
    nalla theyvame nalla iyesuve
    um marpile nan
    saynthuk kolluven -2

    manam patharum velaiyil nan
    thikaikkum pothellam um
    marpotu anaiththuk kontire
    masarra pasaththale aravanaiththa theyvame

    oru sirpai pola ennai intha
    ulakam veruththa pothum um
    karaththale uyarththinire
    mannana ennaiyum um
    makimaiyale nirappinir

    payanarraval enru ulakam
    thallivittalum um
    anpale therrinire
    anathi snekaththale
    azhaiththukkonta theyvame


  • தன் ஜீவன் தந்தார் Than jivan thanthar

    தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்
    என் வாழ்க்கை இயேசுவுக்கே
    என் நெஞ்சமே என் நேசமே
    என்றென்றும் இயேசுவுக்கே

    நிம்மதி இல்லாத இந்த உலகில்
    இன்னல்கள் வந்தாலுமே
    இயேசுவே எந்தன் வேதனை
    நீங்க புது பெலன் தந்திடுவார்

    என்னை மறவாத தேவ மைந்தன்
    அவரிடம் தஞ்சமானேன்
    இதயத்தின் வாஞ்சை அறிந்திடுவாரே
    தயவுடன் அருள் புரிவார்

    திரளான மீட்பு தருகின்றார் இயேசு
    சிறுபிள்ளை போல் ஆனேன்
    கிருபையும் என் மேல் வைத்திடுவாரே
    அவர் பாதம் பணிந்திடுவேன்


    than jivan thanthar en jivan aanar
    en vazhkkai iyesuvukke
    en nenysame en nesame
    enrenrum iyesuvukke

    nimmathi illatha intha ulakil
    innalkal vanthalume
    iyesuve enthan vethanai
    ningka puthu pelan thanthituvar

    ennai maravatha theva mainthan
    avaritam thanysamanen
    ithayaththin vanysai arinthituvare
    thayavutan arul purivar

    thiralana mitpu tharukinrar iyesu
    sirupillai pol aanen
    kirupaiyum en mel vaiththituvare
    avar patham paninthituven


  • நீதியின் பாதையில் ஜீவன் Nithiyin pathaiyil jivan

    நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
    அந்த பாதையில் மரணமில்லை
    மரணமேயில்லை

    குணசாலியான ஸ்திரி தன்
    புருஷனுக்கு கிரீடமே கிரீடமே
    மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரி
    பன்றியின் மூக்கில் உள்ள
    பொன் மூக்குத்தி

    புத்தியுள்ள ஸ்திரி தன்
    வீட்டை கட்டுகிறாள்
    புத்தியில்லா ஸ்திரியோ அதை
    இடித்து போடுகிறாள்
    புத்தியில்லா ஸ்திரியோ அதை
    இடித்து போடுகிறாள்

    சண்டைக்காரியோடே ஒரு பெரிய
    வீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும்
    வீட்டின் மேல் மூலையில்
    தங்கியிருப்பது நல்லது
    வீட்டின் மேல் மூலையில்
    தங்கியிருப்பது நல்லது

    குணசாலியான ஸ்திரியை
    கண்டுபிடிப்பவன் யார்
    அவள் விலையோ முத்துக்களை
    பார்க்கிலும் உயர்ந்தது
    அவள் விலையோ முத்துக்களை
    பார்க்கிலும் உயர்ந்தது


    nithiyin pathaiyil jivan untu
    antha pathaiyil maranamillai
    maranameyillai

    kunasaliyana sthiri than
    purushanukku kiritame kiritame
    mathiketay natakkinra azhakulla sthiri
    panriyin mukkil ulla
    pon mukkuththi

    puththiyulla sthiri than
    vittai kattukiral
    puththiyilla sthiriyo athai
    itiththu potukiral
    puththiyilla sthiriyo athai
    itiththu potukiral

    santaikkariyote oru periya
    vittil kutiyiruppathai parkkilum
    vittin mel mulaiyil
    thangkiyiruppathu nallathu
    vittin mel mulaiyil
    thangkiyiruppathu nallathu

    kunasaliyana sthiriyai
    kantupitippavan yar
    aval vilaiyo muththukkalai
    parkkilum uyarnthathu
    aval vilaiyo muththukkalai
    parkkilum uyarnthathu


  • வணங்கா கழுத்துள்ள vanangka kazhuththulla

    வணங்கா கழுத்துள்ள ஆண்களே
    ஆகா ஆண்களே அந்த
    பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே

    மனைவியோடு பழத்தை தின்று
    பாவம் செய்த ஆதாமே
    நாங்க பரிதாபமாகவே ஆனோமே

    ஆத்திரப்பட்டு ஆபேலை
    கொன்ற காயினே அந்த
    ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன்

    இச்சையோடு பெத்சபாளை
    பார்த்தானே மாம்ச அந்த
    தாவீதும் படுகுழியில் விழுந்தானே

    யாக்கோபின் மகளான தீனாளே உன்
    அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே

    யூதாவின் மருமகளே தாமாரே
    மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே

    தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த
    அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே

    தெலியாளை தெரியுமா சிம்சோனே உன்
    அபிஷேகம் எல்லாமே என்னாச்சு


    vanangka kazhuththulla aankale
    aaka aankale antha
    pazhaththukkaka pavikalaka aaningkale

    manaiviyotu pazhaththai thinru
    pavam seytha aathame
    nangka parithapamakave aanome

    aaththirappattu aapelai
    konra kayine antha
    aapelin iraththam angke povanen

    issaiyotu pethsapalai
    parththane mamsa antha
    thavithum patukuzhiyil vizhunthane

    yakkopin makalana thinale un
    azhaku mele aasai vaiththan sikeme

    yuthavin marumakale thamare
    mamanin issaikku paliyana marumakale

    thangkai enrum thamarai paramal antha
    ammanum aasaippattu azhinthane

    theliyalai theriyuma simsone un
    apishekam ellame ennassu