Author: admin

  • Vaazhga Vaazhga Bharatha Desam வாழ்க வாழ்க பாரத தேசம்

    வாழ்க வாழ்க பாரத தேசம்
    வாழ்க வாழ்க பாரத தேசம் – (2)

    1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
      தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)
      பாரத தேசம் சுதந்தர தேசம்
      எத்தனை சலுகை! எத்தனை உரிமை!

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    1. நாவின் மொழிகள் பல பல உண்டு
      உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)
      அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
      ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    1. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
      அனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2)
      ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
      விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    1. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
      நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2)
      அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
      சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    1. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
      வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2)
      கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
      என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    1. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
      மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2)
      சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
      அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    1. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
      அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2)
      அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
      இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2


    Vaazhga Vaazhga Bharatha Desam Lyrics in English
    vaalka vaalka paaratha thaesam
    vaalka vaalka paaratha thaesam – (2)

    1. katchi kotikal pala pala vakaiyaam
      thaesak kotiyai kaakkavae avaiyaam – (2)
      paaratha thaesam suthanthara thaesam
      eththanai salukai! eththanai urimai!

    vaalka vaalka paaratha thaesam – 2

    1. naavin molikal pala pala unndu
      ullaththil anaivarum inthiyarallo – (2)
      anpenum moliyil anaivarum onte
      ottumai, aikkiyam uyarvirku nante

    vaalka vaalka paaratha thaesam – 2

    1. neero, payiro namathena vaenndaam
      anaiththu inthiyar samamena vaenndum – (2)
      oruvarukkoruvar uthaviyaay iruppom
      vittu naam koduppom, virainthu valaruvom

    vaalka vaalka paaratha thaesam – 2

    1. ulavar, tholilaalar, veerar, aasiriyar
      naattin naanku thoonnkal entarivom – (2)
      avarkalin vaalvu anaivarin vaalvu
      sirappum selippum kannkalaal kaannpom

    vaalka vaalka paaratha thaesam – 2

    1. lanjam, vari aeyppu, vaelai niruththam
      vanmurai anaiththum akattiyae vaalvom – (2)
      kadaththal tholilillai, pothai porulillai
      entaொru naalvara theermaanam eduppom

    vaalka vaalka paaratha thaesam – 2

    1. jaathi, matham enta suvarkalai thakarppom
      mathamalla, manithanae mukkiyam arivom – (2)
      siruvar, ilainjar ethirkaalam kaappom
      anpenum kayittil thaaykkoti kaannpom

    vaalka vaalka paaratha thaesam – 2

    1. anaivarkkum sama anpu arulum pithaavae
      anaiththilum thaay poomi seliththidach seyyum – (2)
      atharku engal pangai seythidach seyyum
      Yesuvin naamaththil jepikkirom pithaavae

    vaalka vaalka paaratha thaesam – 2

  • Vaavathi Vaanangalil வானாதி வானங்களில்

    வானாதி வானங்களில்
    காணாத விண்ணொளியில்
    வெள்ளிரத பவனியிலே
    கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

    1. தாலாட்டும் புல்லணையில்
      கண் தேடும் அழகன்றோ?
      என்றும் நீங்காத பனிமழையில்
      நீர் தாங்காத குளிரன்றோ?
    2. தூக்காத வன் சிலுவை
      நீர் தூக்கி சுமப்பாயோ?
      கறை காணாத திருரத்தத்தால்
      எம்மை கழுவிட வந்தாயோ?
    3. உலகோரின் பாவத்திற்காய்
      நீ மரிக்க துடிப்பாயோ?
      உந்தன் பிதாவின் சித்தத்தினால்
      மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

    Vaavathi Vaanangalil Lyrics in English

    vaanaathi vaanangalil
    kaannaatha vinnnnoliyil
    velliratha pavaniyilae
    kallaminti vanthaayo kannnnee

    1. thaalaattum pullannaiyil
      kann thaedum alakanto?
      entum neengaatha panimalaiyil
      neer thaangaatha kuliranto?
    2. thookkaatha van siluvai
      neer thookki sumappaayo?
      karai kaannaatha thiruraththaththaal
      emmai kaluvida vanthaayo?
    3. ulakorin paavaththirkaay
      nee marikka thutippaayo?
      unthan pithaavin siththaththinaal
      meenndum uyirppiththu eluvaayo?
  • Vaathai Unthan Koodaraththai வாதை உந்தன் கூடாரத்தை

    வாதை உந்தன் கூடாரத்தை
    அணுகாது மகனே!
    பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே!

    1.உன்னதமான கர்த்தரையே
    உறைவிடமாக்கிக் கொண்டாய்
    அடைக்கலமாய் ஆண்டவனை
    ஆதாயமாக்கிக் கொண்டாய்!

    2.ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
    சாத்தானை ஜெயித்து விட்டோம்
    ஆவி உண்டு, வசனம் உண்டு,
    அன்றாட வெற்றி உண்டு!

    3.கர்த்தருக்குள் நம்பாடுகள்
    ஒரு நாளும் வீணாகாது
    அசையாமல், உறுதியுடன்,
    அதிகமாய் செயல்படுவோம்!

    4.ஆற்றல் அல்ல, சக்தி அல்ல
    ஆவியினால் ஆகும்
    சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
    துணையாளர் முன் செல்கிறார்!


    Vaathai Unthan Koodaraththai Lyrics in English
    vaathai unthan koodaaraththai
    anukaathu makanae!
    pollaappu naeridaathu naeridaathu makalae!

    1.unnathamaana karththaraiyae
    uraividamaakkik konndaay
    ataikkalamaay aanndavanai
    aathaayamaakkik konndaay!

    2.aattukkutti iraththaththinaal
    saaththaanai jeyiththu vittaோm
    aavi unndu, vasanam unndu,
    antada vetti unndu!

    3.karththarukkul nampaadukal
    oru naalum veennaakaathu
    asaiyaamal, uruthiyudan,
    athikamaay seyalpaduvom!

    4.aattal alla, sakthi alla
    aaviyinaal aakum
    sornthidaamal nanmai seyvom
    thunnaiyaalar mun selkiraar!

  • Vaasalandai Nindru Aasaiyai Thattum வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்

    வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
    நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ

    பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
    வாவென்று உன்னை அழைக்கிறாரே

    1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
      ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
      காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
      கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை
    2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
      தற்பரன் தயவை தள்ளிடலாமா?
      நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
      நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை
    3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
      மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
      பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
      ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — வாசலண்டை
    4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
      மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
      பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
      பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் — வாசலண்டை
    5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
      வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
      இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
      இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? — வாசலண்டை

    Vaasalandai Nindru Aasaiyai Thattum Lyrics in English

    vaasalanntai nintu aasaiyaay thattum
    naesar Yesuvukkunnullam thiravaayo

    paaviyai orupothum thallaatha naesar
    vaaventu unnai alaikkiraarae

    1. aatharippaar aarumillai yentennnni
      aatharai meethinil alainthiduvaayae
      kaannaatha aattaைth thaeti vantha maeyppar
      kanndunnai manthaiyil serththiduvaar — vaasalanntai
    2. arpa vaalvai niththiya vaalvu entennnni
      tharparan thayavai thallidalaamaa?
      ninaiyaatha naeram maranam santhiththaal
      niththiyaththai engu nee kalippaay? — vaasalanntai
    3. paavaththinaal saapa rokaththaal thoynthu
      maayaiyil aalnthu matinthiduvaanaen
      paavaththaip pokkidum thooya uthiraththin
      jeeva oottil moolki meetpuraayo? — vaasalanntai
    4. manam maari marupati piranthidaayaakil
      makiparin iraajjiyam kaanak koodumo
      piranthaalo jalaththaalum aaviyaalum meyyaay
      piravaesippaay thaeva iraajjiyaththil — vaasalanntai
    5. valiyum saththiyamum jeevanum Yesu
      vaasalum maeyppanum naathanum Yesu
      Yesuvallaal vaetru iratchippu illaiyae
      iratchannya naal inte vanthidaayo? — vaasalanntai
  • Vaarungal Ondrai வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்

    வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
    வல்ல தேவன் நாமம் புகழ்பாட
    பாடுங்கள் புது பாடலை
    தேவனைத் துதித்து பாடிட

    அவர் துதிகளில் வாசம் செய்பவர்
    அவர் துதிக்கு பாத்திரர்
    அல்லேலூயா-8

    வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்
    பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்
    பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்
    கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

    பூமியின் ராஜாக்களே துதியுங்கள்
    பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள்
    இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள்
    தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார்

    சேனைகளின் கர்த்தரை துதியுங்கள்
    பரிசுத்த் தேவனைத் துதியுங்கள்
    பரலோக தேவனைத் துதியுங்கள்
    மீண்டும் வருபவரைத் துதியுங்கள்


    Vaarungal Ondrai Lyrics in English
    vaarungal ontay kooduvom
    valla thaevan naamam pukalpaada
    paadungal puthu paadalai
    thaevanaith thuthiththu paatida

    avar thuthikalil vaasam seypavar
    avar thuthikku paaththirar
    allaelooyaa-8

    vaanangalae kempeeramaay paadungal
    poomivaal kutikalae uyarththungal
    parvathangal kempeeramaay mulangungal
    karththar tham janaththukku aaruthal seythaar

    poomiyin raajaakkalae thuthiyungal
    pirapukkal janangalae thuthiyungal
    isravael janangalae mulangungal
    tham janaththukkoru kompai uyarththittar

    senaikalin karththarai thuthiyungal
    parisuthth thaevanaith thuthiyungal
    paraloka thaevanaith thuthiyungal
    meenndum varupavaraith thuthiyungal

  • Vaarungal Iraimakkalae Kadal Alai வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

    வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

    நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக

    அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்

    சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே

    எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2

    வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே

    வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்

    தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்

    அருள் ஒளி மனதினில் கலந்திடவே

    கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2

    மனிதனில் மனிதம் மலர்ந்திடவே

    எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்

    உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே

    இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்


    Vaarungal Iraimakkalae Kadal Alai Lyrics in English
    vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer

    naam anpullam konndu orinamaaka

    avar pukal paadiduvom naalum avar vali nadanthiduvom

    siruthuli peruvellam aakidumae

    eliyavar nalam pera innainthiduvom – 2

    variyavar vaalvum uyarnthidumae

    varumaiyin avalangal akattiduvom

    thaevan arasum malarnthidumae anpum neethiyum valarththiduvom

    arul oli manathinil kalanthidavae

    karaikalai ithayaththil kalainthiduvom – 2

    manithanil manitham malarnthidavae

    elukinta theemaikal aliththiduvom

    urimaikal utaimaikal atainthidavae

    Yesuvin kolkaikal aettiduvom

  • Vaarunga En Nesare வாருங்கள் என் நேசரே

    வாருங்கள் என் நேசரே (இயேசுவே)
    வயல் வெளிக்குப் போவோம்
    அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
    உமக்கு கனியாய்க் கொடுப்பேன்

    1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
      அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
      உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி
      தினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள்
    2. நேசத்தால் சோகமானேன்
      உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
      உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
      நீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள்
    3. நீர் செய்த நன்மைகட்காய்
      என்ன நான் செலுத்திடுவேன்
      என் இரட்சிப்பின் பாத்திரத்தை
      என் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் – 2 – வாருங்கள்

    Vaarunga En Nesare – வாருங்கள் என் நேசரே Lyrics in English
    Vaarunga En Nesare / vaarungal en naesarae

    vaarungal en naesarae (Yesuvae)
    vayal velikkup povom
    angae en naesaththin uchchithangalai
    umakku kaniyaayk koduppaen

    1. aaraathanaiyil kalanthu kolvaen
      apishaekaththaal nirainthiduvaen
      ummai thuthiththu thuthiththu thinam paati paati
      thinam nadanamaati makilvaen – 2 – vaarungal
    2. naesaththaal sokamaanaen
      um(unga) paasaththaal nekilnthu ponaen
      unga anpuk kadalilae thinamum moolkiyae
      neenthi neenthi makilvaen – 2 – vaarungal
    3. neer seytha nanmaikatkaay
      enna naan seluththiduvaen
      en iratchippin paaththiraththai
      en kaiyil aenthi iratchakaa ummai tholuvaen – 2 – vaarungal
  • Vaarum Vaarum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே

    வாரும் வாரும் மகத்துவ தேவனே
    வல்லமையாக இப்போ வந்திடும்

    1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
      மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே — வாரும்
    2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
      தரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும்
    3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
      பரிசுத்த ராஜனே! நீர் வாருமே — வாரும்
    4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
      பரலோக ராஜனே! நீர் வாருமே — வாரும்
    5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
      கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும்
    6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
      ஏவுதல் தினம் தாரும் ஏகனே — வாரும்
    7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
      வெற்றியடையக் கிருபை தாருமே — வாருமே
    8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
      ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் — வாரும்

    Vaarum Vaarum Magathuva Devane Lyrics in English

    vaarum vaarum makaththuva thaevanae
    vallamaiyaaka ippo vanthidum

    1. makimaich sorupanae! maavalla thaevanae!
      mannaa! vanthaaseervaatham thaarumae — vaarum
    2. thaay thanthai neer thaamae! tharparaa! engatku
      tharanniyil vaeror thunnai illaiyae — vaarum
    3. paavaththai veruththu paaviyai naesikkum
      parisuththa raajanae! neer vaarumae — vaarum
    4. paktharum muktharum paatith thuthikkinta
      paraloka raajanae! neer vaarumae — vaarum
    5. kaarunnya thaevanae! kathiyummai yanntinom
      kataisivaraiyum kaaththu iratchiyum — vaarum
    6. mannaa! um varavai ennnni yaam jeevikka
      aevuthal thinam thaarum aekanae — vaarum
    7. vilippulla jeeviyam vimalaa! neer eenthumae
      vettiyataiyak kirupai thaarumae — vaarumae
    8. ivvitha paakkiyam aelaikalengatku
      eenthathaalumakkentum sthoththiram — vaarum
  • Vaarum Thooya Aaviyae வாரும் தூய ஆவியே உம்

    வாரும் தூய ஆவியே – உம்
    பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்
    வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
    ஆளுகை செய்யும் – வாரும்

    1. ஜீவ தண்ணீர் நீரே
      தாகம் தீர்க்கும் ஊற்று
      ஆலோசனை கர்‌த்தரே – என்னை
      ஆளுகை செய்யும் – வாரும்
    2. அக்கினியும் நீரே
      பெரும் காற்றும் நீரே
      பெருமழை போலவே – உம்
      ஆவியை ஊற்றும் – வாரும்

    Vaarum Thooya Aaviyae Lyrics in English
    vaarum thooya aaviyae – um
    pirasannaththai vaanjikkirom – um
    vallamaiyaal ennai niraiththu – neer
    aalukai seyyum – vaarum

    1. jeeva thannnneer neerae
      thaakam theerkkum oottu
      aalosanai kar‌ththarae – ennai
      aalukai seyyum – vaarum
    2. akkiniyum neerae
      perum kaattum neerae
      perumalai polavae – um
      aaviyai oottum – vaarum
  • Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி

    வாரும் நாம் எல்லாரும் கூடி
    மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
    மாசிலா நம் யேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோன் ஆ

    தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
    தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார்

    மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
    மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்

    ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
    நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்

    மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்

    பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
    பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.


    Vaarum Naam Ellarum Lyrics in English
    vaarum naam ellaarum kooti
    makil konndaaduvom sattum
    maasilaa nam yaesu naatharai
    vaalththip paaduvon aa

    thaarakam atta aelaikal thalaikka naayanaa-inthath
    thaaranni yilae manudava thaaram aayinaar

    maa pathaviyai ilanthu variyar aananaam -angae
    maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar

    njaalamathil avarkkinnai nannpar yaarular paarum
    nam uyirai meetkavae avar tham uyir vittar

    maa kotiya saavathin valimai neekkiyae-intha
    manndalaththi nintuyirth thavar vinndalanj sentar

    paavikat kaayp paranidam parinthu vaenntiyae -avar
    patcham vaiththurum tholumparai ratchaை seykiraar.