Author: admin

  • Unnathamanavar Maraivinile உன்னதமானவர் மறைவினிலே

    உன்னதமானவர் மறைவினிலே
    சர்வ வல்லவர் நிழல்தனிலே
    தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
    எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்

    ஆண்டவர் எனது அடைக்கலமானார்
    நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
    வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்
    தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்

    தமது சிறகால் அரவணைக்கின்றார்
    இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
    சத்திய வசனம் எனது கேடகம்
    நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு

    என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
    பதினாயிரம் பேர் தாக்கினாலும்
    பாதுகாப்பவர் என் பக்கத்திலே
    பாதிப்பு இல்லையே பயமில்லையே

    செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
    தமது தூதருக்கு கட்டளையிட்டார்
    பாதம் கல்லிலே மோதாமலே
    கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்

    சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
    சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
    சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
    சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்


    Unnathamanavar Maraivinile Lyrics in English
    unnathamaanavar maraivinilae
    sarva vallavar nilalthanilae
    thangi uravaati makilkinten
    engum vetti naan kaannkinten

    aanndavar enathu ataikkalamaanaar
    naan nampum kottaைyum aranumaanaar
    vaedar kannnnikal kollai Nnoykal
    thappuviththu kaappaatti thaangukiraar

    thamathu sirakaal aravannaikkintar
    irakkaiyin geelae amarach seykintar
    saththiya vasanam enathu kaedakam
    nichchayam nichchayam viduthalai unndu

    en pakkam aayirampaer vilunthaalum
    pathinaayiram paer thaakkinaalum
    paathukaappavar en pakkaththilae
    paathippu illaiyae payamillaiyae

    sellum idamellaam ennaik kaakka
    thamathu thootharukku kattalaiyittar
    paatham kallilae mothaamalae
    kaikalil aenthiduvaar thaangiduvaar

    singaththin meethu naan nadanthiduvaen
    seerum sarppangalai mithiththiduvaen
    samaathaanaththin thaevan seekkiramaay
    saaththaanai kaalatiyil nasukkiduvaar

  • Unnathamaanavar Sarva Vallavar உன்னதமானவர் சர்வ வல்லவர்

    உன்னதமானவர் சர்வ வல்லவர்
    நிகரில்லாதவர் நித்தியமானவர் – 2
    சாவை வென்று உயிர்த்தவர் – முழு
    அகிலம் வணங்கும் ஆண்டவர்
    என் நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் – 2
    பாடு! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிது
    மகிழ்ந்து பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்
    தொடருமது அந்தமில்லாமல் நிலைக்குமது – 2

    1.ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர்
    உண்மையுள்ளவர் ஊர்விட்டு வாவெனக்
    கூட்டிச் சென்றவர் உத்தமம் அணிந்தவர்
    காடை, மன்னா! மதுரமான நீர்! தந்தவர்
    அற்புதர் கானான்நாட்டைச் சேரும்வரையிலும்
    துணையாய் வந்தவர் அவர் ஆதரவானவர் – 2

    2.அற்பமான ஆரம்பம் எதையும் அலட்சியம்
    செய்யாதவர் திடமனம், தைரியம்,
    பெலன் தரும் அவரே அதிசயமானவர் – 2
    குழவிகள் அனுப்பி எதிரியைத் துரத்தி
    ஜெயத்தை தந்தவர்
    அர்ப்பணம் நித்தம் தொடர்கின்றபோது
    உயர்வை அளிப்பவர் அவர் ஒப்பில்லாதவர் – 2

    3.காலங்கள்தோறும்செயல்படும்அவரே சரித்திர நாயகர்!
    வாலிபர், அறிவர், மேதைகள் உள்ளம் கொள்ளை கொள்பவர்
    அகண்ட இப்பூமி முழுதும் வாழ்பவர் இதயம் கவர்ந்தவர்
    மா திரளாய்த் தம் சீடர்கள் பெருக்கிடும்
    இயேசு நல்லவர் அவர் என்றும் வல்லவர்- 2


    Unnathamaanavar Sarva Vallavar Lyrics in English
    unnathamaanavar sarva vallavar
    nikarillaathavar niththiyamaanavar – 2
    saavai ventu uyirththavar – mulu
    akilam vanangum aanndavar
    en ninaivaay iruppavar Yesuvae aanndavar – 2
    paadu! paadu! konndaadu! karththarin uththamam maaperithu
    makilnthu paadu! konndaadu! thalaimuraithorum
    thodarumathu anthamillaamal nilaikkumathu – 2

    1.aapirakaamai peyar solli alaiththavar
    unnmaiyullavar oorvittu vaavenak
    koottich sentavar uththamam anninthavar
    kaatai, mannaa! mathuramaana neer! thanthavar
    arputhar kaanaannaattaைch serumvaraiyilum
    thunnaiyaay vanthavar avar aatharavaanavar – 2

    2.arpamaana aarampam ethaiyum alatchiyam
    seyyaathavar thidamanam, thairiyam,
    pelan tharum avarae athisayamaanavar – 2
    kulavikal anuppi ethiriyaith thuraththi
    jeyaththai thanthavar
    arppanam niththam thodarkintapothu
    uyarvai alippavar avar oppillaathavar – 2

    3.kaalangalthorumseyalpadumavarae sariththira naayakar!
    vaalipar, arivar, maethaikal ullam kollai kolpavar
    akannda ippoomi muluthum vaalpavar ithayam kavarnthavar
    maa thiralaayth tham seedarkal perukki

  • Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

    உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

    பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா -2

    உலர்ந்து போன எலும்புகளாய்

    உலரப்பட்ட எங்களிலே -2

    உயிர் தரும் ஆவியைத் தந்து

    வீரச்சேனையாய் மாற்றிடுமே -2

    வாக்களித்த வல்லமையை

    பெந்தேகோஸ்தே நாளினிலே -2

    பொழிந்த இறைவா எங்களிலும்

    நிரம்பி வழியச் செய்தருளும -2

    அடிமை விலங்குகள் தகர்ந்திடவே

    அக்கினி ஆவியை ஈந்திடுமே -2

    தடைகளும் களைகளும் எரிந்திடவே

    மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2


    Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Lyrics in English
    unnatha vallamaiyai iraivaa enakkuth thaarum

    paraloka vallamaiyai innaeram oottumaiyyaa -2

    ularnthu pona elumpukalaay

    ularappatta engalilae -2

    uyir tharum aaviyaith thanthu

    veerachchaேnaiyaay maattidumae -2

    vaakkaliththa vallamaiyai

    penthaekosthae naalinilae -2

    polintha iraivaa engalilum

    nirampi valiyach seytharuluma -2

    atimai vilangukal thakarnthidavae

    akkini aaviyai eenthidumae -2

    thataikalum kalaikalum erinthidavae

    meetpin aaviyai oottidumae -2

  • Unnatha Paramandalangalil உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்

    உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
    ஒளிர்பிதாவே, உனின் நாமம்
    உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
    உனது ராச்சிய முறை வருக;
    முன்னிய உனது சித்தமே பரத்தில்
    முடியுமாப் போல, இப்புவியில்
    முடிவுறச் செய்யப் படுவது மாக;
    முழுதும் நின் கரத்தையே நோக்கும்
    நின் அடியார்க்கன்றாடக உணவு
    நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
    நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
    நிலமலனே, எம்பவம் மனியாய்;
    இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
    இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
    இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
    என்றும் உன் உடைமையே; ஆமென்


    Unnatha Paramandalangalil Lyrics in English
    unnathap paramanndalangalil vasikkum
    olirpithaavae, unin naamam
    uyar parisuththa maayththolap paduka;
    unathu raachchiya murai varuka;
    munniya unathu siththamae paraththil
    mutiyumaap pola, ippuviyil
    mutivurach seyyap paduvathu maaka;
    muluthum nin karaththaiyae Nnokkum
    nin atiyaarkkantadaka unavu
    nirampavae arul; pirar iyattum
    neethikkaetinaiyaam poruppathu pola,
    nilamalanae, empavam maniyaay;
    innamum emaichchothnaikkut padaamal
    idar thavirth thirakkmaayk kaavaay;
    iraachchiyam vallamai makimaimar raெvaiyum
    entum un utaimaiyae; aamen

  • Arpimthu sthuthul nee siluvaloanaa
    అర్పింతు స్తుతుల్ నీ సిలువలోనా

    అర్పింతు స్తుతుల్ నీ సిలువలోనా జూపిన నీ ప్రేమకై
    మరణమొంది సమాధి నుండి మరల లేచితివి

    తలను ముండ్ల కిరీటము బొంది కాళ్ల చేతులు గ్రుచ్చబడి
    బలియైతివి గొఱ్ఱెపిల్ల వలె నా కొరకే ఓ ప్రభువా

    నీ చింతవలన నాకు శాంతి కల్గె నీ సిలువ వలన కిరీటం
    నీ మరణమే నా జీవమాయె నీ ప్రేమ గొప్పదెంతో

    నేను జూచెడి మహిమ స్వర్గము నావలన కలుగదు
    ఆనంద బాష్పములతోనే స్తుతింతు ఈ ధనము నా కొరకే

    నీ సిలువలో తొలగె నా నీచ పాపము నే ద్వేషింతు నన్నియున్
    నీ సింహాసనము నాలోన యుంచుము నిన్ను నే స్తుతించెదను


    Arpinthu sthuthul nee siluvaloanaa joopina nee praemakai
    maranamondhi samaadhi nundi marala laechithivi

    Thalanu mundla kireetamu bondhi kaalla chaethulu gruchchabadi
    baliyaithivi gorrepilla vale naa korakae oa prabhuvaa

    Nee chinthavalana naaku shaanthi kalge nee siluva valana kireetn
    nee maranamae naa jeevamaaye nee praema goppadhenthoa

    Naenu joochedi mahima svargamu naavalana kalugadhu
    aanndha baashpamulathoanae sthuthinthu ee dhanamu naa korakae

    Nee siluvaloa tholage naa neecha paapamu nae dhvaeShinthu nanniyun
    nee sinhaasanamu naaloana yunchumu ninnu nae sthuthinchedhanu

  • Unnatha Maanavarae உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2

    நீர்தானே என் உறைவிடம்
    நீர்தானே என் புகலிடம்
    ஆதலால் ஆபத்து நேரிடாது
    எந்த தீங்கும் மேற்கொள்ளாது
    கால் கல்லில் மோதாமலே
    காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே

    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே – 2
    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்

    நான் நம்பும் தகப்பன் நீர் என்று
    நான் தினம் சொல்லுவேன் – 2
    வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
    தப்புவித்து காப்பாற்றுவீர் – 2

    மன்றாடும் போதெல்லாம்
    பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
    ஆபத்து நேரம் என்னோடு இருந்து
    தப்புவித்து கனப்படுத்துவீர்

    நீடிய ஆயுள் தந்து
    திருப்தியாக்குகிறீர்
    உமது சிறகால் மூடி மூடி
    மறைத்து பாதுகாக்கின்றீர்

    வாஞ்சையாய் இருப்பதால்
    விடுதலை எனக்குண்டு
    உம்திரு நாமம் அறிந்ததால்
    எனக்கு உயர்வு நிச்சயமே


    Unnatha Maanavarae – உன்னதமானவரே என் Lyrics in English
    Unnatha Maanavarae
    unnathamaanavarae en uraividam neerthaanae – 2

    neerthaanae en uraividam
    neerthaanae en pukalidam
    aathalaal aapaththu naeridaathu
    entha theengum maerkollaathu
    kaal kallil mothaamalae
    kaakkum thoothan enakku unndu – neerthaanae

    sakalamum pataiththavarae
    sarva vallavarae – 2
    singaththin maelum paampin maelum
    nadakkach seypavarae – 2 – aathalaal

    naan nampum thakappan neer entu
    naan thinam solluvaen – 2
    vaedanin kannnni paalaakkum kollai Nnoy
    thappuviththu kaappaattuveer – 2

    mantadum pothellaam
    pathil thanthu makilkinteer – 2 -naan
    aapaththu naeram ennodu irunthu
    thappuviththu kanappaduththuveer

    neetiya aayul thanthu
    thirupthiyaakkukireer
    umathu sirakaal mooti mooti
    maraiththu paathukaakkinteer

    vaanjaiyaay iruppathaal
    viduthalai enakkunndu
    umthiru naamam arinthathaal
    enakku uyarvu nichchayamae

  • Unnatha Devanukkae உன்னத தேவனுக்கே மகிமை

    உன்னத தேவனுக்கே மகிமை
    உலகில் சமாதானமாமே
    காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
    கதிரொளியாய் ஜெனித்தார்

    அல்லேலுயா அல்லேலுயா
    அல்லேலுயா துதியவர்க்கே

    மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
    மனுக்கோலமாய் மனுவேலனார்
    மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
    மாணொளியாய் ஜெனித்தார்

    தாரகை என அவர் தோன்றிடவே
    நேர் பாதையில் நடத்திடவே
    தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
    தன் ஒளியாய் ஜெனித்தார்

    வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
    வல்ல தேவனின் ஏக சுதன்
    வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
    வானொளியாய் ஜெனித்தார்

    தாவீதின் வேர் இவராய் அவனின்
    ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
    தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
    தாம் உதித்தார் ஒளியாய்


    Unnatha devanukkae Lyrics in English
    unnatha thaevanukkae makimai
    ulakil samaathaanamaamae
    kaarirul neengidak kaasini meethilae
    kathiroliyaay jeniththaar

    allaeluyaa allaeluyaa
    allaeluyaa thuthiyavarkkae

    maanidar mael ivarkanpithuvo
    manukkolamaay manuvaelanaar
    maatchimai yaavaiyum thuranthae ivvulakil
    maannoliyaay jeniththaar

    thaarakai ena avar thontidavae
    naer paathaiyil nadaththidavae
    tharparan kirupaiyum saththiya meenthida
    than oliyaay jeniththaar

    vaalththuvom paalakan Yesu paran
    valla thaevanin aeka suthan
    vaanjiththaarae emmil vaasam seythidavae
    vaanoliyaay jeniththaar

    thaaveethin vaer ivaraay avanin
    jeya raajjiyam sthaapikkavae
    thaasanin roopamaay thaaranni meethilae
    thaam uthiththaar oliyaay

  • Unnatha Devanae Yesu உன்னத தேவனே என் இயேசு ராஜனே

    உன்னத தேவனே என் இயேசு ராஜனே
    உம்மோடு இணைந்திட
    என் உள்ளம் ஏங்குதையா

    மறுரூபமாக்கிடும்
    மகிமையின் மேகமே
    உம் முகச் சாயலாய்
    உருமாற்றும் தெய்வமே

    இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
    உமக்காகத் துடிக்குதையா
    நினைவெல்லாம் பேச்செல்லாம்
    நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா

    பேரின்பக் கடலிலே
    ஓய்வின்றி மூழ்கணும்
    துதித்து மகிழணும்
    தூயோனாய் வாழணும் நான்

    கொடியாக படரணும்
    உந்தன் நேசரே
    மடிமீது தவழணும்
    மழலைக் குழந்தை நான்

    உம் அன்பைப் பருகிட
    ஓடோடி வந்துள்ளேன்
    உம்மாக மாறிட
    உலகை மறக்கின்றேன்

    ஐயா உம் நிழலிலே
    ஆனந்த பரவசம்
    அளவிடா பேரின்பம்
    ஆரோக்கியம் அதிசயம்


    Unnatha devanae yesu Lyrics in English
    unnatha thaevanae en Yesu raajanae
    ummodu innainthida
    en ullam aenguthaiyaa

    maruroopamaakkidum
    makimaiyin maekamae
    um mukach saayalaay
    urumaattum theyvamae

    iravellaam pakalellaam ithayam
    umakkaakath thutikkuthaiyaa
    ninaivellaam paechchellaam
    naesarae ummaip pattith thaanae aiyaa

    paerinpak kadalilae
    oyvinti moolkanum
    thuthiththu makilanum
    thooyonaay vaalanum naan

    kotiyaaka padaranum
    unthan naesarae
    matimeethu thavalanum
    malalaik kulanthai naan

    um anpaip parukida
    otooti vanthullaen
    ummaaka maarida
    ulakai marakkinten

    aiyaa um nilalilae
    aanantha paravasam
    alavidaa paerinpam
    aarokkiyam athisayam

  • Unnatha Devan Unnudan உன்னத தேவன் உன்னுடன் இருக்க

    உன்னத தேவன் உன்னுடன் இருக்க
    உள்ளமே கலங்காதே
    அவர் வல்லவரே என்றும் நல்லவரே
    நன்மைகள் குறையாதே

    அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
    அன்னாளின் ஜெபம் கேட்டார்
    அனாதையாய் தவித்த
    அந்த ஆகாரின் துயர் துடைத்தார்

    பாவத்தில் இருந்த உன்னை
    பரிசுத்தமாக்கியவர்
    தாழ்மையில் கிடந்த உன்னை
    தம் தயவால் தூக்கியவர்

    நோய்களை போக்கிடுவார் – இயேசு
    பேய்களை விரட்டிடுவார்
    கலங்காதே என் மகனே – இயேசு
    கண்ணீரை துடைத்திடுவார்

    சாபங்கள் போக்கிடுவார்
    ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
    இயேசுவை அண்டிக் கொண்டால் – உன்
    இன்னல்கள் நீக்கிடுவார்

    உலகத்தை நம்பாதே பாவ
    பழிதனை சுமத்தி விடும்
    செம்மையாய் தோன்றும் வழி – உன்னை
    பாதாளம் கொண்டுச் செல்லும்

    இயேசு உன் முன் நடந்தால்
    நீ யோர்தானில் நடந்திடலாம்
    விசுவாசம் உனக்கிருந்தால்
    அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்


    Unnatha devan unnudan Lyrics in English
    unnatha thaevan unnudan irukka
    ullamae kalangaathae
    avar vallavarae entum nallavarae
    nanmaikal kuraiyaathae

    annaalil tham paatham amarntha
    annaalin jepam kaettar
    anaathaiyaay thaviththa
    antha aakaarin thuyar thutaiththaar

    paavaththil iruntha unnai
    parisuththamaakkiyavar
    thaalmaiyil kidantha unnai
    tham thayavaal thookkiyavar

    Nnoykalai pokkiduvaar – Yesu
    paeykalai viratdiduvaar
    kalangaathae en makanae – Yesu
    kannnneerai thutaiththiduvaar

    saapangal pokkiduvaar
    aaseervaathangal thanthiduvaar
    Yesuvai anntik konndaal – un
    innalkal neekkiduvaar

    ulakaththai nampaathae paava
    palithanai sumaththi vidum
    semmaiyaay thontum vali – unnai
    paathaalam konnduch sellum

    Yesu un mun nadanthaal
    nee yorthaanil nadanthidalaam
    visuvaasam unakkirunthaal
    antha erikovaith thakarththidalaam

  • Unnatha Devan Unnai உன்னத தேவன் உன்னை

    உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
    நம்பியே வந்திடுவாய்

    சிலுவை சுமந்தே
    உனக்காய் அவர் மரித்தாரே

    பாவத்தில் அழியாதே
    தேவனை மறவாதே
    இருதயத்தை தட்டுகிறார்
    இன்றதை திறந்தளிப்பாய்

    இன்று உன் ஜீவன் போனால்
    எங்கு நீ சென்றிடுவாய்
    இந்த வேளை சிந்தனை செய்
    இயேசு உன்னை அழைக்கிறாரே

    நரகத்தின் பாதையிலும்
    மரணத்தின் வழிகளிலும்
    உல்லாசமாய் நடப்பது ஏன்
    உண்மையாய் அழிந்திடுவாய்

    தம்மிடம் வருபவரை
    தள்ளிடவே மாட்டார்
    அன்புக்கரம் விரித்தவராய்
    ஆண்டவர் அழைக்கிறாரே


    Unnatha Devan Unnai Lyrics in English

    unnatha thaevan unnai alaikkiraar
    nampiyae vanthiduvaay

    siluvai sumanthae
    unakkaay avar mariththaarae

    paavaththil aliyaathae
    thaevanai maravaathae
    iruthayaththai thattukiraar
    intathai thiranthalippaay

    intu un jeevan ponaal
    engu nee sentiduvaay
    intha vaelai sinthanai sey
    Yesu unnai alaikkiraarae

    narakaththin paathaiyilum
    maranaththin valikalilum
    ullaasamaay nadappathu aen
    unnmaiyaay alinthiduvaay

    thammidam varupavarai
    thallidavae maattar
    anpukkaram viriththavaraay
    aanndavar alaikkiraarae