Author: admin

  • Thuthippom Nandriyudan துதிப்போம் நன்றியுடன்

    துதிப்போம் நன்றியுடன்
    சென்ற காலம் முழுவதும்
    காத்த தேவனை இதய நிறைவுடனே

    ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம்
    ஆனந்தமாகப் பாடிடுவோம்
    என்றென்றும் அவர் செய்த நன்மைகளை
    நினைத்தே போற்றிடுவோம்

    இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த
    எபெநேசர் அவரே – இன்னமும்
    வாழ்வில் நம்முடன் இருக்கும்
    இம்மானுவேல் அவரே

    துன்பம் துயரம் தொல்லை இடர்கள்
    எம்மை சூழ்ந்த போதும்
    ஓங்கிய புயத்தால் பாதுகாத்த
    வல்ல தேவன் அவரே

    நல்ல சுகமும் பெலனும் தந்து
    நல் வழி நடத்தினாரே
    கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட
    நல்ல தேவன் அவரே

    கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து
    சோர்ந்திடும் வேளையிலே
    பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர்
    ஊழியப் பாதையிலே


    Thuthippom nandriyudan Lyrics in English
    thuthippom nantiyudan
    senta kaalam muluvathum
    kaaththa thaevanai ithaya niraivudanae

    aarppariththu naam akamakilvom
    aananthamaakap paadiduvom
    ententum avar seytha nanmaikalai
    ninaiththae pottiduvom

    immattum vaalvil uthaviseytha
    epenaesar avarae – innamum
    vaalvil nammudan irukkum
    immaanuvael avarae

    thunpam thuyaram thollai idarkal
    emmai soolntha pothum
    ongiya puyaththaal paathukaaththa
    valla thaevan avarae

    nalla sukamum pelanum thanthu
    nal vali nadaththinaarae
    kooppitta vaelai jepaththaik kaetta
    nalla thaevan avarae

    kalakkam nerukkam pirivu vanthu
    sornthidum vaelaiyilae
    pelappaduththi jeyamum thantheer
    ooliyap paathaiyilae

  • Thuthippom Jebippom Jeyam Eduppom துதிப்போம் ஜெபிப்போம்

    துதிப்போம் ஜெபிப்போம்
    ஜெயம் எடுப்போம் – 2
    துதி என்றாலே ஜெயம்தானே
    ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2
    எக்காளம் வாயிலே
    பட்டயமோ கையிலே

    1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
      துதிப்போம் ஜெபிப்போம்
      ஜெயம் எடுப்போம் – 2
      அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
      துதிப்போம் ஜெபிப்போம்
      ஜெயம் எடுப்போம் – 2
      எக்காளம் வாயிலே
      பட்டயமோ கையிலே
    2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
      கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
    3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
      திராட்சை செடி பலனை தராவிட்டாலும்

    Thuthippom Jebippom Jeyam Eduppom Lyrics in English
    thuthippom jepippom
    jeyam eduppom – 2

    thuthi entalae jeyamthaanae
    jepam entalum jeyamthaanae – 2
    ekkaalam vaayilae
    pattayamo kaiyilae

    1. anthakaara vallamaikal ethirnintalum
      thuthippom jepippom
      jeyam eduppom – 2
      akkiniyin ampukal aevappattalum
      thuthippom jepippom
      jeyam eduppom – 2
      ekkaalam vaayilae
      pattayamo kaiyilae
    2. pelisthiyar senai soolnthukonndaalum
      koliyaath iraatchathan ethir nintalum
    3. aththimara thulirkal illaavittalum
      thiraatchaை seti palanai tharaavittalum
  • Thuthipom Nam Devanai துதிப்போம் நம் தேவனை

    துதிப்போம் நம் தேவனை
    தொழுவோம் நம் இயேசுவை
    துதிகன மகிமைக்கு பாத்திரர் அவரே
    பணிந்து ஆராதிப்போம்

    துதிப்போம் நாம் தொழுவோம்
    பணிந்து ஆராதிப்போம்

    அதிசயம் செய்திடும் தேவன் நம் அடைக்கலமானவர்
    அண்டினோர் எவரையும் காத்தென்றும் நடத்துவார்

    கிருபை நிறைந்த தேவன் நம் குறைகள் நீக்குவார்
    கூடவே இருந்து என்றும் விடுதலை நல்குவார்

    இரக்கம் உடைய தேவன் நம் இதயத்தில் வாழ்கின்றார்
    இதயம் நொறுங்கினோரை இரங்கியே விடுவிப்பார்

    கிருபை நிறைந்த தேவன் நம் கஷ்டங்கள் போக்குவார்
    கருத்தாய் விசாரித்தென்றும் கனிவோடு நடத்துவார்


    Thuthipom nam devanai Lyrics in English
    thuthippom nam thaevanai
    tholuvom nam Yesuvai
    thuthikana makimaikku paaththirar avarae
    panninthu aaraathippom

    thuthippom naam tholuvom
    panninthu aaraathippom

    athisayam seythidum thaevan nam ataikkalamaanavar
    anntinor evaraiyum kaaththentum nadaththuvaar

    kirupai niraintha thaevan nam kuraikal neekkuvaar
    koodavae irunthu entum viduthalai nalkuvaar

    irakkam utaiya thaevan nam ithayaththil vaalkintar
    ithayam norunginorai irangiyae viduvippaar

    kirupai niraintha thaevan nam kashdangal pokkuvaar
    karuththaay visaariththentum kanivodu nadaththuvaar

  • Thuthipom Alleluya Padi துதிப்போம் அல்லேலூயா பாடி

    துதிப்போம் அல்லேலூயா பாடி
    மகிழ்வோம் மகிபனைப் போற்றி
    மகிமை தேவ மகிமை
    தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

    1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
      தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
      அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
      அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்
    2. கூப்பிடும் வேளைகளில் என்னை
      தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
      சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
      சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்
    3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
      கரங்களில் தாங்கிடுவார் தூதர்
      ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
      அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்
    4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
      நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
      பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
      பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்
    5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
      ஒரு போதும் பொல்லாப்பு வராதே
      சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
      விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

    Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English
    Thuthipom Alleluya Padi
    thuthippom allaelooyaa paati
    makilvom makipanaip potti
    makimai thaeva makimai
    thaeva thaevanukkae makimai – allaelooyaa

    1. thaevan nammai vanthataiyach seythaar
      thammai entum atharkaakath thanthaar
      arputhangal seyyum sarva valla thaevan
      ataikkalam koduththiduvaar – thuthippom
    2. kooppidum vaelaikalil ennai
      thappuvikka aaththiramaay vanthaar
      singaththin maelae nadanthiduvaenae
      sarppangalai mithiththiduvaen – thuthippom
    3. paatham kallil entum idaraamal
      karangalil thaangiduvaar thoothar
      oru pothum vaathai un koodaaraththai
      anukaamal kaaththiduvaar – thuthippom
    4. anjitaenae irulilae entum
      nadamaadum kollai Nnoyaik kanndum
      payangaraththirkum parakkum ampirkum
      payanthitaen jeyiththiduvaen – thuthippom
    5. thaevan enthan ataikkalamaamae
      oru pothum pollaappu varaathae
      sarva valla thaevan thaaparamaay ninte
      viduviththuk kaaththiduvaar – thuthippom
  • Thuthipaen Thuthipaen Yesu Devanai துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

    பல்லவி

    துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
    அல்லேலூயா பாடி
    துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

    அனுபல்லவி

    துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
    தூயவனாய் வந்த தேவகுமாரனை

    சரணங்கள்

    1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
      தம் ஜனத்தின் கூக்குரல்
      கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
      லோகப் பாவச் சுமைதனை
      சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
      குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்
    2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
      எங்கள் இயேசு நாயகர்
      பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
      நிலையங்கி தரித்தோராய்
      கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
      சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்
    3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
      அவரருகில் வருவீர்;
      வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
      லோக பாவத்தைச் சுமந்தார்;
      பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
      அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்
    4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
      பரிசுத்தர் யேகோவாவை
      அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
      சர்வ வல்ல பராபரன்
      வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
      நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்

    Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை Lyrics in English
    Thuthipaen Thuthipaen Yesu Devanai

    pallavi

    thuthippaen thuthippaen Yesu thaevanai
    allaelooyaa paati
    thuthippaen thuthippaen Yesu thaevanai

    anupallavi

    thuthippaen lokaththin paavaththai neekkida
    thooyavanaay vantha thaevakumaaranai

    saranangal

    1. karunnai niraintha kannnulloravar
      tham janaththin kookkural
      karunnai koornthu kaetkum kaathullor
      lokap paavach sumaithanai
      sirasukonndu sumanthalikka vente
      kuruseduththuk kolkathaavil sentorai – thuthippaen
    2. por kuththuvilakku aelu maththiyilae
      engal Yesu naayakar
      porkachchaை maarpinil katti nirkiraar
      nilaiyangi thariththoraay
      karpikkung kaariyam kavanamaayk kaettu
      sorpati seyvorai thappaamal meetporai – thuthippaen
    3. valiyum saththiyamum jeevanum avarae!
      avararukil varuveer;
      valiyil aaruthal seypavar avarae;
      loka paavaththaich sumanthaar;
      palaiya supaavangal oliththu muttumaay
      aliththu paktharai motchaththil serpporai – thuthippaen
    4. alpaa, omaekaa, aathiyum anthamumae
      parisuththar yaekovaavai
      allaelooyaa ventu pottip paaduvom
      sarva valla paraaparan
      vallamaiyaalae nam allalellaam vellum
      nallavar Yesuvai allum pakalumaay – thuthippaen
  • Thuthipaen Thuthipaen Thuthipaen துதிப்பேன் துதிப்பேன்

    துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
    அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
    காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
    நான் உள்ளளவும் துதிப்பேன்

    1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
      பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
      என்னை நோக்கி அன்பு கூர்ந்த
      அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
    2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
      துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
      என்னைக் காத்து அன்பு கூர்ந்த
      அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

    Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English
    Thuthipaen Thuthipaen Thuthipaen
    thuthippaen thuthippaen thuthippaen
    annnal Yesuvaiyae thuthippaen
    kaalaa kaalamellaam ennaik kaaththavarai
    naan ullalavum thuthippaen

    1. paavangal pala naan seythittalum
      paavi en maelae anpaich sorinthaar
      ennai Nnokki anpu koorntha
      annnal Yesuvaiyae thuthippaen
    2. nannparkal pakaivaraay maarittalum
      thunpangal thuyarangal soolnthittalum
      ennaik kaaththu anpu koorntha
      annnal Yesuvaiyae thuthippaen
  • Thuthipaen Thuthipaen Devanai துதிப்பேன் துதிப்பேன் தேவனை

    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
    அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
    – துதிப்பேன்

    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
      அனடந்த ஆறா துயரங்களில் – 2
      ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
      மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
      – துதிப்பேன்
    2. இன்றையதினம் வரை காத்திரே
      எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
      நின் கிருபையால் கடந்துவந்தோம்
      அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
      – துதிப்பேன்
    3. ஆனந்தமே பரமானந்தமே
      அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
      அல்லேலுயா உம்க்கல்லேலுயா
      எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
      – துதிப்பேன்

    Thuthipaen Thuthipaen Devanai Lyrics in English
    thuthippaen thuthippaen thaevanai
    thuthikal maththinil vasippaporai – 2
    athisayamaanavarai athilimae naanavarai – 2

    • thuthippaen
    1. kadantha thunpaththin kaalangalil
      anadantha aaraa thuyarangalil – 2
      aaruthal thaeruthal aliththittar
      maaraatha Yesuk aanantham – 2
    • thuthippaen
    1. intaiyathinam varai kaaththirae
      elloraiyum kootti sertheerae – 2
      nin kirupaiyaal kadanthuvanthom
      anpae aaruyirae aanantham – 2
    • thuthippaen
    1. aananthamae paramaananthamae
      annnalai anntinorkaananthamae – 2
      allaeluyaa umkkallaeluyaa
      ellaa naalum umkkallaeluyaa – 2
    • thuthippaen
  • Thuthikku Paathirar Enthan துதிக்குப் பாத்திரரே

    துதிக்குப் பாத்திரரே
    எந்தன் துணையாளரே
    ஆபத்து காலத்தில் அடைக்கலமே
    ஆதரவே என் அனுகூலமே

    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உன்னதரே உயர்ந்தவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    யெகோவா ஷாலோம் நீரே
    எந்தன் சமாதானமே
    நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
    சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

    யெகோவா ஷம்மா நீரே
    என்னோடு இருப்பவரே
    என்ன வந்தாலும் கலங்கிடேனே
    அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

    யெகோவா நிசி நீரே
    எந்தன் ஜெயக் கொடியே
    மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
    மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்


    Thuthikku paathirar enthan Lyrics in English
    thuthikkup paaththirarae
    enthan thunnaiyaalarae
    aapaththu kaalaththil ataikkalamae
    aatharavae en anukoolamae

    ummai aaraathanai seykiraen
    ummai aaraathanai seykiraen
    unnatharae uyarnthavarae
    ummaiyae aaraathippaen

    yekovaa shaalom neerae
    enthan samaathaanamae
    niththiya makilchchi enakku thantheer
    sanjalam thavippu neekkivittir

    yekovaa shammaa neerae
    ennodu iruppavarae
    enna vanthaalum kalangitaenae
    appaa neer ennodu iruppathanaal

    yekovaa nisi neerae
    enthan jeyak kotiyae
    manam makilnthu paadiduvaen
    makimaiyaay neer vetti sirantheer

  • Thuthikkiroem Ummai துதிக்கிறோம் உம்மை

    1.துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
    துத்தியம் செய்வோம் – உமை மா அரசே
    தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
    துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.

    2.சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
    சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
    சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
    தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.

    3.நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,
    நிமலாவியினோ – டாளுகிறீரே,
    நிதமேகார்ச்சனையே – உன்னத
    நேயருக் கர்ச்சனையே – ஆமேன்


    Thuthikkiroem Ummai – Valla Pithaavae Lyrics in English
    1.thuthikkirom ummai – valla pithaavae
    thuththiyam seyvom – umai maa arase
    thothram um maatchimaikkae – paranae
    thunthumi maatchimaikkae – pithaavae.

    2.suthanae yirangum – puviyor kadanaich
    sumanthathaith theerththa – thooyasemmariyae,
    suththaa jepangaelum – paranvalath
    tholaa jepangaelum – kiristhae.

    3.niththiyapithaavin makimaiyil – neerae,
    nimalaaviyino – daalukireerae,
    nithamaekaarchchanaiyae – unnatha
    naeyaruk karchchanaiyae – aamaen

  • Thuthikkenrum Paaththirarae துதிக்கென்றும் பாத்திரரே

    தேவனைத் துதிப்போம்

    துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே
    துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே

    ஆ! அல்லேலூயா – 3
    ஆமென் அல்லேலூயா!

    1. உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே
      பரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரே
      விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே
    2. தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரே
      உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவ

    Thuthikkenrum Paaththirarae Lyrics in English
    thaevanaith thuthippom

    thuthikkentum paaththirarae parisuththamaanavarae
    thuthikalin maththiyinil vaasam seypavarae

    aa! allaelooyaa – 3
    aamen allaelooyaa!

    1. unnmaiyum neethiyum anpum kirupaiyum entum nirainthavarae
      parivum irakkamumneetiya porumaiyum entum utaiyavarae
      visuvaasaththin thuvakkamum mutivumaanavarae
    2. thaalvil emmai ninaiththu anaiththu thookki niruththineerae
      ullang kaiyinil emmai varainthu ententum kaappava