Author: admin

  • Thoeththiram Seyvaenae தோத்திரம் செய்வேனே

    தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
    தோத்திரம் செய்வேனே

    பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
    பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்

    1. அன்னை மரி சுதனை – புல் மீது
      அமிழ்துக் கழுதவனை
      முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
      முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
    2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
      வந்தடி பணிபவனை
      மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
      மான பரன் என்னும் ஞான குணவானை
    3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
      தேடும் குருவானை
      அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
      அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி.

    Thoeththiram Seyvaenae Lyrics in English
    thoththiram seyvaenae – ratchakanaith
    thoththiram seyvaenae

    paaththiramaakka immaathram karunnaivaiththa
    paarththipanai yoothak koththiranai entum

    1. annai mari suthanai – pul meethu
      amilthuk kaluthavanai
      munnannai meethutta sinnak kumaaranai
      munnurai noorpati innilath thuttaோnai
    2. kanthai pothinthavanai – vaanorkalum
      vanthati pannipavanai
      manthaiyark kaanantha maatchiyaliththonai
      maana paran ennum njaana kunavaanai
    3. sempon nuruvaanaith – thaesikarkal
      thaedum kuruvaanai
      ampara maeviya umpar kanaththodu
      anpu pera nintu paim pon malar thoovi.
  • Thoeththiram Patiyae Poerrituvaen தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்

    1. அற்புதமான அன்பே – என்னில்
      பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
      என்றும் மாறா தேவ அன்பே
      என்னுள்ளம் தங்கும் அன்பே
    2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
      ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
      தியாகமான தேவ அன்பே
      திவ்விய மதுர அன்பே

    Thoeththiram Patiyae Poerrituvaen Lyrics in English
    thoththiram paatiyae pottiduvaen
    thaevaathi thaevanai raajaathi raajanai
    vaalththi vanangiduvaen

    1. arputhamaana anpae – ennil
      porparan paaraattum thooya anpae
      entum maaraa thaeva anpae
      ennullam thangum anpae
    2. jothiyaay vantha anpae – poovil
      jeevan thanthu ennai meetta anpae
      thiyaakamaana thaeva anpae
      thivviya mathura anpae
  • Thodum En Kangalaiye தொடும் என் கண்களையே

    தொடும் என் கண்களையே
    உம்மை நான் காண வேண்டுமே
    இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே
    தொடும் என் காதுகளை
    உம் குரலை கேட்க வேண்டுமே
    இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே

    தொடும் என் ஆண்டவரே
    தொடும் என் வாழ்வினையே
    இயேசுவே உம்மைப்போல்
    என்னை மாற்றுமே

    தொடும் என் நாவினையே
    உம் புகழ் பாட வேண்டுமே
    இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே
    தொடும் என் ஆன்மாவையே
    என் பாவம் போக்க வேண்டுமே
    இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

    தொடும் என் மனதினையே
    மனப்புண்கள் ஆறவேண்டுமே
    இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
    தொடும் என் உடலினையே
    உடல் நோய்கள் தீர வேண்டுமே
    இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே


    Thodum en kangalaiye Lyrics in English
    thodum en kannkalaiyae
    ummai naan kaana vaenndumae
    Yesuvae ummai naan kaana vaenndumae
    thodum en kaathukalai
    um kuralai kaetka vaenndumae
    Yesuvae um kuralai kaetka vaenndumae

    thodum en aanndavarae
    thodum en vaalvinaiyae
    Yesuvae ummaippol
    ennai maattumae

    thodum en naavinaiyae
    um pukal paada vaenndumae
    Yesuvae um pukalaip paada vaenndumae
    thodum en aanmaavaiyae
    en paavam pokka vaenndumae
    Yesuvae en paavam pokka vaenndumae

    thodum en manathinaiyae
    manappunnkal aaravaenndumae
    Yesuvae manappunnkal aaravaenndumae
    thodum en udalinaiyae
    udal Nnoykal theera vaenndumae
    Yesuvae udal Nnoykal theera vaenndumae

  • Thirupthiyaakki Nataththituvaar திருப்தியாக்கி நடத்திடுவார்

    திருப்தியாக்கி நடத்திடுவார்
    தேவைகளை சந்திப்பார்
    மீதம் எடுக்க வைப்பார்
    பிறருக்கு கொடுக்க வைப்பார்

    பாடி கொண்டாடுவோம்
    கோடி நன்றி சொல்லுவோம்

    1. ஐந்து அப்பங்களை
      ஆயிரமாய் பெருகச் செய்தார்
      ஐயாயிரம் ஆண்களுக்கு
      வயிராற உணவளித்தார்
    2. பொன்னோடும் பொருளோடும்
      புறப்படச் செய்தாரே
      பலவீனம் இல்லாமலே
      பாதுகாத்து நடத்தினாரே – ஒரு
    3. காடைகள் வரவழைத்தார்
      மன்னாவால் உணவளித்தார்
      கற்பாறையை பிளந்த
      தண்ணீர்கள் ஓடச்செய்தார்
    4. நீடிய ஆயுள் தந்து
      நிறைவோடு நடத்திடுவார்
      முதிர் வயதானாலும்
      பசுமையாய் வாழச் செய்வார்
    5. கெம்பீர சத்ததோடு
      ஆரவார முழக்கத்தோடு
      தெரிந்து கொண்ட தம் மக்களை
      தினமும் நடத்தி சென்றார்
    6. துதிக்கும்போதெல்லாம்
      சுவையான உணவு அது
      ஆத்மா திருப்தியாகும்
      ஆனந்த ராகம் பிறக்கும்

    Thirupthiyaakki Nataththituvaar Lyrics in English

    thirupthiyaakki nadaththiduvaar
    thaevaikalai santhippaar
    meetham edukka vaippaar
    pirarukku kodukka vaippaar

    paati konndaaduvom
    koti nanti solluvom

    1. ainthu appangalai
      aayiramaay perukach seythaar
      aiyaayiram aannkalukku
      vayiraara unavaliththaar
    2. ponnodum porulodum
      purappadach seythaarae
      palaveenam illaamalae
      paathukaaththu nadaththinaarae – oru
    3. kaataikal varavalaiththaar
      mannaavaal unavaliththaar
      karpaaraiyai pilantha
      thannnneerkal odachcheythaar
    4. neetiya aayul thanthu
      niraivodu nadaththiduvaar
      muthir vayathaanaalum
      pasumaiyaay vaalach seyvaar
    5. kempeera saththathodu
      aaravaara mulakkaththodu
      therinthu konnda tham makkalai
      thinamum nadaththi sentar
    6. thuthikkumpothellaam
      suvaiyaana unavu athu
      aathmaa thirupthiyaakum
      aanantha raakam pirakkum
  • Thirupatham Seramal திருப் பாதம் சேராமல்

    Thirupatham Seramal – திருப் பாதம் சேராமல் இருப்பேனோ நான்
    திருப் பாதம் சேராமல் இருப்பேனோ – நான்
    தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ

    அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
    உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்

    ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
    பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே

    சத்திய மார்க்கமும் சகலமுமான
    நித்திய ஜீவனும் நிமலனுமான

    ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
    கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்

    உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
    மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்


    Thirupatham seramal Lyrics in English
    thirup paatham seraamal iruppaeno – naan
    theyvaththaith thaedaamal pilaippaeno

    arutkadalaam eesan atiyavar paasan
    urukkam niraintha vinnnuyiraana naesan

    aaviyum aathmamum aanndavar pangae
    poovil avarallaal pukalidam engae

    saththiya maarkkamum sakalamumaana
    niththiya jeevanum nimalanumaana

    aaruthal thaeruthal aliththidum seyan
    kootru makimaiyil serththidum thooyan

    ulaiyil meluku pol urukuthen nenjam
    malaiyaathun thiruvati vananginaen thanjam

  • Thirupaatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன்

    1. திருப்பாதம் நம்பி வந்தேன்
      கிருபை நிறை இயேசுவே
      தமதன்பைக் கண்டடைந்தேன்
      தேவ சமூகத்திலே
    2. இளைப்பாறுதல் தரும் தேவா
      களைத்தோரை தேற்றிடுமே
      சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
      சுகமாய் அங்கு தாங்கிடுவேன்
    3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
      இன்னல் துன்ப நேரத்திலும்
      கருத்தாய் விசாரித்து என்றும்
      கனிவோடென்னை நோக்கிடுமே
    4. மனம் மாற மாந்தன் நீரல்ல
      மன வேண்டுதல் கேட்டிடும்
      எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
      இயேசுவே உம்மை அண்டிடுவேன்
    5. என்னைக் கைவிடாதிரும் நாதா
      என்ன நிந்தை நேரிடினும்
      உமக்காக யாவும் சகிப்பேன்
      உமது பெலன் ஈந்திடுமே
    6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
      உண்மையாய் வெட்கம் அடையேன்
      தமது முகப் பிரகாசம்
      தினமும் என்னில் வீசிடுதே
    7. சத்துரு தலை கவிழ்ந்தோட
      நித்தமும் கிரியை செய்திடும்
      என்னைத் தேற்றிடும் அடையாளம்
      இயேசுவே இன்று காட்டிடுமே

    Thirupaatham Nambi Vanthen Lyrics in English

    1. thiruppaatham nampi vanthaen
      kirupai nirai Yesuvae
      thamathanpaik kanndatainthaen
      thaeva samookaththilae
    2. ilaippaaruthal tharum thaevaa
      kalaiththorai thaettidumae
      siluvai nilal enthan thanjam
      sukamaay angu thaangiduvaen
    3. ennai Nnokki kooppidu enteer
      innal thunpa naeraththilum
      karuththaay visaariththu entum
      kanivodennai Nnokkidumae
    4. manam maara maanthan neeralla
      mana vaennduthal kaetdidum
      enathullam ootti jepiththae
      Yesuvae ummai anndiduvaen
    5. ennaik kaividaathirum naathaa
      enna ninthai naeritinum
      umakkaaka yaavum sakippaen
      umathu pelan eenthidumae
    6. ummai ookkamaay Nnokkip paarththae
      unnmaiyaay vetkam ataiyaen
      thamathu mukap pirakaasam
      thinamum ennil veesiduthae
    7. saththuru thalai kavilnthoda
      niththamum kiriyai seythidum
      ennaith thaettidum ataiyaalam
      Yesuvae intu kaatdidumae
  • Thirumpi Vanthaan திரும்பி வந்தான்

    திரும்பி வா!

    திரும்பி வந்தான் திரும்பி வந்தான் நீயும் வா!
    திரள் பாவம் சுமந்தாலும் நீயும் வா
    மனந்திரும்பும் ஒரு பாவி நிமித்தமே
    பரலோகில் கோலாகலம் என்றுமே!

    1. போகும்போது இன்பம்தான் அவனிலே
      தகப்பன் சொத்து பாதி அவன் கையிலே
      கனவில் கண்ட வாழ்வெல்லாம் விரைவிலே
      அனுபவித்தான் தடையின்றி வாழ்விலே
    2. சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலே
      தகப்பன் வீட்டை மறந்து சென்றான் தூரமே
      மனம்போன போக்கெல்லாம் போகவே
      மீண்டும் வர மனமில்லை அவனிலே
    3. திரள் சொத்தும் கையைவிட்டு ஓடவே
      தேசத்திலே பஞ்சநிலை பெருகவே
      பசி தீர தவிடுகூட இல்லையே
      பிறந்த வீட்டை நினைத்துப் பார்த்தான் மனதிலே
    4. வீடு நோக்கி வாழ வந்த மகனையே
      காத்திருந்த தகப்பன் கண்டான் தொலைவிலே
      ஓடிவந்து தழுவிக் கொண்டான் நெஞ்சிலே
      உணர்ச்சி பொங்க மகிழ்ந்திருந்தான் முடிவிலே

    Thirumpi Vanthaan Lyrics in English
    thirumpi vaa!

    thirumpi vanthaan thirumpi vanthaan neeyum vaa!
    thiral paavam sumanthaalum neeyum vaa
    mananthirumpum oru paavi nimiththamae
    paralokil kolaakalam entumae!

    1. pokumpothu inpamthaan avanilae
      thakappan soththu paathi avan kaiyilae
      kanavil kannda vaalvellaam viraivilae
      anupaviththaan thataiyinti vaalvilae
    2. sontham pantham vittuch sentan oorilae
      thakappan veettaை maranthu sentan thooramae
      manampona pokkellaam pokavae
      meenndum vara manamillai avanilae
    3. thiral soththum kaiyaivittu odavae
      thaesaththilae panjanilai perukavae
      pasi theera thavidukooda illaiyae
      pirantha veettaை ninaiththup paarththaan manathilae
    4. veedu Nnokki vaala vantha makanaiyae
      kaaththiruntha thakappan kanndaan tholaivilae
      otivanthu thaluvik konndaan nenjilae
      unarchchi ponga makilnthirunthaan mutivilae
  • Thirumpi Paarathey திரும்பிப் பாராதே

    திரும்பிப் பாராதே, சோதோமைத்
    திரும்பிப் பாராதே
    விரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு
    வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு,

    1. சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-
      மாதர் சந்தடி செய்யும்
      சீராட்டு, விந்தையான
      போரோட்டு, – மந்தை
      வேடிக்கை என்று விட்டோட்டு
    2. செல்வத்திலே மெத்தச் செருக்கு – நீ
      செய்வதெல்லாம் முழுத்-திருக்கு
      பல் வழி நீரோட்டப்
      பெருக்கு- ஏன்
      பண்ணுகிறாய் இந்த முறுக்கு?
    3. அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் –
      உல காசையினால் மெத்த
      தியங்கிறாய் சங்கடத்துள்பட்டு
      மயங்கிறாய் – வீண்
      சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ?
    4. ஆண்டவர் யேசு சகாயம் – உனக்
      கடைக்கலம் ஐந்து காயம்;
      வேண்டிக் கொள்வது நேயம்; கை

    விடாதே இந்த


    Thirumpi Paarathey Lyrics in English
    thirumpip paaraathae, sothomaith
    thirumpip paaraathae
    virumpip paarththu, loththin penndu
    verumupputh thoonn aanathaik kanndu,

    1. santhaik koottum pommalaattu,-
      maathar santhati seyyum
      seeraattu, vinthaiyaana
      porottu, – manthai
      vaetikkai entu vittaோttu
    2. selvaththilae meththach serukku – nee
      seyvathellaam muluth-thirukku
      pal vali neerottap
      perukku- aen
      pannnukiraay intha murukku?
    3. angum ingum suttith thayangiraay –
      ula kaasaiyinaal meththa
      thiyangiraay sangadaththulpattu
      mayangiraay – veenn
      sanndaalarodu aen muyangiraay ?
    4. aanndavar yaesu sakaayam – unak
      kataikkalam ainthu kaayam;
      vaenntik kolvathu naeyam; kai
      vidaathae intha
  • Thirumbi Parkiren திரும்பி பார்கிறேன்

    திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

    நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
    தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
    திருப்பி தர ஒன்றும் இல்லையே

    1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
      மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
      மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

    மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
    திரும்பி பார்கிறேன்

    1. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
      சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
      சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

    நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
    – திரும்பி பார்கிறேன்


    Thirumbi Parkiren Lyrics in English
    Thirumbi Parkiren
    thirumpi paarkiraen vantha paathaiyai
    kannnneerodu karththaavae nanti solkiraen (2)

    nadaththineer ennai amarntha thannnneeranntaiyil
    thookkineer ennai unthan pillaiyaakkineer (2)
    thiruppi thara ontum illaiyae

    1. maaraavin kasappai ennil neenga seytheerae
      mathuramaana vaalvai enakku thiruppi thantheerae (2)
      makilchchiyinaal enthan ullam nirampa seytheerae (2)

    makimaippaduththuvaen makimaippaduththuvaen
    jeevanulla kaalamellaam ummai uyarththuvaen (2)-
    thirumpi paarkiraen

    1. sothanaikal soolntha vaelai kathari kooppittaen
      soramal um karaththaal anaiththu konnteerae (2)
      solli mutiyaa nanmaikalai enakkum seytheerae (2)

    nanti solluvaen nanti solluvaen
    jeevanulla kaalamellaam ummai vaalththuvaen (2)

    • thirumpi paarkiraen
  • Thiruma Maraiye Arulpathiye திருமா மறையே அருள்பதியே நின்

    திருமா மறையே அருள்பதியே நின்
    திருச்சபை வளர நின்தயை புரியே

    கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
    கனகார் புவிநின்றே அகல
    மருள்ஜன மொளியுற அவனரு ளுணர

    யேசுநாமமெங் கணுமொளி வீச
    இறையே நினை மெய் விசுவாச
    நேச மோடேயுனின் தாசர்கள் பேச

    ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
    நயவாக் களித்தாய் எமக்குருக்குச்
    சீலமதாயுனின் வசனமதுரைக்க

    ஆறிரண்டு பேரான வருடனே
    அமலா இருந்தாய் வெகுதிடனே
    போரற அருளிய நேயமே போலே

    நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
    நேயா தூயா நினை வாகா
    உன்னி உழைத்திடப் பலமளி யேகா

    சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க
    தமியோர் நின் புகழே உரைக்க
    நித்திய பாக்கியமே புவிக் களிக்க


    Thiruma Maraiye Arulpathiye Lyrics in English
    thirumaa maraiyae arulpathiyae nin
    thiruchchapai valara ninthayai puriyae

    karunnai vaasakak kathirpalath tholira
    kanakaar puvininte akala
    maruljana moliyura avanaru lunara

    yaesunaamameng kanumoli veesa
    iraiyae ninai mey visuvaasa
    naesa motaeyunin thaasarkal paesa

    njaalam anthamat demmudanirukka
    nayavaak kaliththaay emakkurukkuch
    seelamathaayunin vasanamathuraikka

    aariranndu paeraana varudanae
    amalaa irunthaay vekuthidanae
    porara aruliya naeyamae polae

    ninnaiyantik kattida emakkaakaa
    naeyaa thooyaa ninai vaakaa
    unni ulaiththidap palamali yaekaa

    sathya pothakam iththaraithanil selikka
    thamiyor nin pukalae uraikka
    niththiya paakkiyamae puvik kalikka