Author: admin

  • Thothiram Paadiye Pottriduven தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்

    சரணங்கள்

    1. அற்புதமான அன்பே — என்னில்
      பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
      என்றும் மாறா தேவ அன்பே
      என்னுள்ளம் தங்கும் அன்பே — தோத்திரம்
    2. ஜோதியாய் வந்த அன்பே — பூவில்
      ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
      தியாகமான தேவ அன்பே
      திவ்விய மதுர அன்பே — தோத்திரம்
    3. மாய உலக அன்பை நம்பி
      மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
      என்னை வென்ற தேவ அன்பே
      என்னில் பொங்கும் பேரன்பே — தோத்திரம்
    4. ஆதரவான அன்பே — நித்தம்
      அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
      உன்னதமாம் தேவ அன்பே
      உள்ளம் கவரும் அன்பே — தோத்திரம்
    5. வாக்கு மாறாத அன்பே — திரு
      வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
      சர்வ வல்ல தேவ அன்பே
      சந்ததம் ஓங்கும் அன்பே — தோத்திரம்

    Thothiram Paadiye Pottriduven Lyrics in English

    thoththiram paatiyae pottiduvaen
    thaevaathi thaevanai raajaathi raajanai
    vaalththi vanangiduvaen

    saranangal

    1. arputhamaana anpae — ennil
      porparan paaraattum thooya anpae
      entum maaraa thaeva anpae
      ennullam thangum anpae — thoththiram
    2. jothiyaay vantha anpae — poovil
      jeevan thanthu ennai meetta anpae
      thiyaakamaana thaeva anpae
      thivviya mathura anpae — thoththiram
    3. maaya ulaka anpai nampi
      maannda ennaik kanndalaiththa anpae
      ennai venta thaeva anpae
      ennil pongum paeranpae — thoththiram
    4. aatharavaana anpae — niththam
      annai pol ennaiyum thaangum anpae
      unnathamaam thaeva anpae
      ullam kavarum anpae — thoththiram
    5. vaakku maaraatha anpae — thiru
      vaarththaiyuraith thennaith thaettum anpae
      sarva valla thaeva anpae
      santhatham ongum anpae — thoththiram
  • Thothira Pandigai Aasaripooma தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா

    தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா
    தூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர

    பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி
    பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்

    பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே
    பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே

    கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
    காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே

    நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
    நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து

    இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
    இதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத்


    Thothira Pandigai Aasaripooma Lyrics in English
    thoththirap panntikai aasarippomaa
    thooyakam oothiya pakthiyaal naamae-thoththira

    paaththiram ithuvenap pakar udal porulaavi
    paramanuk karppananjaெy parivu niraiya maevith

    panniththuli nilaththinaip paduththinathante
    pakarumukil kolumaip paduththiya thennnninante

    kadavulae payirukkuk kanamalai peyviththaarae
    kaangaiyaal kathirvalam kathikkavum uyviththaarae

    nenjaththil theyvaanpaam nithinikar vithaipeythu
    niththiya samaathaanam niruva vinn nappam seythu

    iraivan iraththak kaiyaal iratchannyam arulviththai
    ithayaththil vithaiththathar kingunap palanvaiththuth

  • Thothira Paathirane Deva தோத்திர பாத்திரனே தேவா

    தோத்திர பாத்திரனே, தேவா,
    தோத்திரந் துதியுமக்கே!
    நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
    நித்தியம் துதியுமக்கே!

    சரணங்கள்

    1. சத்துரு பயங்களின்றி – நல்ல
      நித்திரை செய்ய எமை
      பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
      சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர
    2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்
      விழிகளை மூடாமல்,
      துடி கொள் தாய்போல் படிமிசை எமது
      துணை எனக் காத்தவனே — தோத்திர
    3. காரிருள் அகன்றிடவே – நல்ல
      கதிரொளி திகழ்ந்திடவே,
      பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
      பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர
    4. இன்றைத் தினமிதிலும் – தொழில்
      எந்தெந்த வகைகளிலும்
      உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
      ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர

    Thothira Paathirane Deva Lyrics in English

    thoththira paaththiranae, thaevaa,
    thoththiran thuthiyumakkae!
    naeththiram pol mulu raathriyungaaththoy
    niththiyam thuthiyumakkae!

    saranangal

    1. saththuru payangalinti – nalla
      niththirai seyya emai
      paththiramaaychchaீ raatti urakkiyae
      suttilung kottaைyaanaay — thoththira
    2. vitinthirul aekumvarai – kannnnin
      vilikalai moodaamal,
      thuti kol thaaypol patimisai emathu
      thunnai enak kaaththavanae — thoththira
    3. kaarirul akantidavae – nalla
      kathiroli thikalnthidavae,
      paarithaip puratti urulach sey thaekana
      paangu seeraakki vaiththaay — thoththira
    4. intaith thinamithilum – tholil
      enthentha vakaikalilum
      un thirumaraippati olukida emakkarul
      oontiyae kaaththuk kolvaay — thoththira
  • Thooyimai Pera Naadu தூய்மை பெற நாடு

    தூய்மை பெற நாடு; கர்த்தர்
    பாதமே
    நிலைத்தவர் வார்த்தை
    உட்கொள்ளென்றுமே
    கூடி பக்தரோடு, சோர்ந்தோர்
    தாங்குவாய்
    யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்

    1. தூய்மை பெற நாடு; லோகக்
      கோஷ்டத்தில்
      தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
      இயேசுவைப் போலாவாய் ,
      நோக்கின் அவரை
      பார்ப்போர் உன்னில் காண்பார்,
      அவர் சாயலை
    2. தூய்மை பெற நாடு; கர்த்தர்
      நடத்த
      என்ன நேரிட்டாலும்
      அவர் பின் செல்ல
      இன்பம் துன்பம் நேர்ந்தும்
      விடாடீநு அவரை
      நோக்கியவர் வாக்கில்
      வைப்பாய் நம்பிக்கை
    3. தூய்மை பெற நாடு; ஆத்மா
      அமர்ந்து
      சிந்தை செய்கை யாவும்
      அவர்க்குட்பட்டு
      அன்பின் ஜீவ ஊற்றைச்
      சேர்ந்து ருசிக்க
      முற்றும் தூய்மையாவாய் ,

    விண்ணில் வசிக்க!


    Thooyimai Pera Naadu Lyrics in English
    thooymai pera naadu; karththar
    paathamae
    nilaiththavar vaarththai
    utkollentumae
    kooti paktharodu, sornthor
    thaanguvaay
    yaavilumae theyva thayai naaduvaay

    1. thooymai pera naadu; lokak
      koshdaththil
      thaniththiru naalum avar paathaththil
      Yesuvaip polaavaay ,
      Nnokkin avarai
      paarppor unnil kaannpaar,
      avar saayalai
    2. thooymai pera naadu; karththar
      nadaththa
      enna naerittalum
      avar pin sella
      inpam thunpam naernthum
      vidaateenu avarai
      Nnokkiyavar vaakkil
      vaippaay nampikkai
    3. thooymai pera naadu; aathmaa
      amarnthu
      sinthai seykai yaavum
      avarkkutpattu
      anpin jeeva oottaைch
      sernthu rusikka
      muttum thooymaiyaavaay ,
      vinnnnil vasikka!
  • Thooyavare Um Vallamaiyai தூயவரே உம் வல்லமையை

    தூயவரே (2) உம் வல்லமையை
    வாஞ்சிக்கிறேன்
    பரிசுத்தரே (2) உம் பரிசுத்தத்தை
    வாஞ்சிக்கிறேன்

    நீர் இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாதே
    உம் கிருபையில்லாமல்
    என்னால் வாழ முடியாதே(2)
    உம் கிருபை வாசலில் வந்துகாத்திருப்பேன்
    என் மன்னவனே வாருமையா(2)

    நீர் செய்த நன்மையை
    என்னால் எண்ணிமுடியாதே
    என்னை சுமந்த தோள்களை
    என்னால் மறக்கமுடியாதே (2)
    உம் வருகை நாள்வரை
    என்னை காத்திடுமே
    உம் பரிசுத்தம் தாருமையா(2)


    Thooyavare Um Vallamaiyai Lyrics in English
    thooyavarae (2) um vallamaiyai
    vaanjikkiraen
    parisuththarae (2) um parisuththaththai
    vaanjikkiraen

    neer illaamal vaalkkai mulumaiyaakaathae
    um kirupaiyillaamal
    ennaal vaala mutiyaathae(2)
    um kirupai vaasalil vanthukaaththiruppaen
    en mannavanae vaarumaiyaa(2)

    neer seytha nanmaiyai
    ennaal ennnnimutiyaathae
    ennai sumantha tholkalai
    ennaal marakkamutiyaathae (2)
    um varukai naalvarai
    ennai kaaththidumae
    um parisuththam thaarumaiyaa(2)

  • Thooyaathi Thooyavarae Umathu Pukalai தூயாதி தூயவரே உமது புகழை நான்

    தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
    பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

    1. சீடரின் கால்களைக் கழுவினவர்
      செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
    2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
      பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
    3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
      துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
    4. பரலோகில் இடமுண்டு என்றவரே
      பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே!

    Thooyaathi Thooyavarae Umathu Pukalai, Naan Paaduvaen Lyrics in English
    thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen
    paaril enakku vaeraெnna vaenndum
    uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi

    1. seedarin kaalkalaik kaluvinavar
      senneeraal ennullam kaluvidumae!
    2. paarorin Nnoykalai neekkinavar
      paavi en paava Nnoy neekkineerae!
    3. thuyarangal paarinil atainthavarae
      thunpangal thaangida pelan thaarumae!
    4. paralokil idamunndu entavarae
      parivaaka enaich serkka vaekam vaarumae!
  • Thooya Thooya Thooyaa தூய தூய தூயா சர்வவல்ல நாதா

    தூய தூய தூயா சர்வவல்ல நாதா
    தேவரீர்க்கெந்நாளும்
    சங்கீதம் ஏறுமே
    தூய தூய தூயா மூவரான
    ஏகா காருணியரே தூய
    திரியேகரே

    1. தூய தூய தூயா அன்பர் சூழ
      நின்று
      தேவ ஆசனமுன்னர் தம் கிரீடம்
      வைப்பரே
      கேரூபிம் சேராபிம் தாடிநந்து
      போற்றப் பெற்று
      இன்றென்றும் வீற்றாழ்வீர்
      அநாதியே!
    2. தூய தூய தூயா ஜோதிப்
      பிரகாசா
      பாவக்கண்ணால் உம்தன்
      மாண்பைக் காண யார் வல்லோர்
      நீரே தூய தூயர்,
      மனோவாக்குக்கெட்டா
      மாட்சிமை, தூய்மை! அன்பும்
      நிறைந்தோர்
    3. தூய தூய தூயா சர்வவல்ல நாதா
      வானம் பூமி ஆழி உம்மைத்
      துதிசெய்யுமே
      தூய தூய தூயா மூவரான
      ஏகா காருணியரே தூய
      திரியேகரே!

    Thooya Thooya Thooyaa Lyrics in English
    thooya thooya thooyaa sarvavalla naathaa
    thaevareerkkennaalum
    sangaீtham aerumae
    thooya thooya thooyaa moovaraana
    aekaa kaarunniyarae thooya
    thiriyaekarae

    1. thooya thooya thooyaa anpar soola
      nintu
      thaeva aasanamunnar tham kireedam
      vaipparae
      kaeroopim seraapim thaatinanthu
      pottap pettu
      intentum veettaாlveer
      anaathiyae!
    2. thooya thooya thooyaa jothip
      pirakaasaa
      paavakkannnnaal umthan
      maannpaik kaana yaar vallor
      neerae thooya thooyar,
      manovaakkukketta
      maatchimai, thooymai! anpum
      nirainthor
    3. thooya thooya thooyaa sarvavalla naathaa
      vaanam poomi aali ummaith
      thuthiseyyumae
      thooya thooya thooyaa moovaraana
      aekaa kaarunniyarae thooya
      thiriyaekarae!
  • Thooya Thooya Em Yesu Natha தூயா தூயா எம் இயேசு நாதா

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
    மாபெரும் அன்பல்லவோ
    பாவம் சுமந்தீர் சாபமானீர்
    பாதம் பணிந்திடுவோம்

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
    சாத்தானைத் தோற்கடித்தீர்
    நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
    நித்தம் தொழுதிடுவோம்

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
    மார்போடு அணைத்திடுவீர்
    மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
    மன்னா தொழுதிடுவோம்

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்


    Thooya Thooya Em Yesu Natha Lyrics in English
    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    1.vinn thurantheer mannnnil vantheer
    maaperum anpallavo
    paavam sumantheer saapamaaneer
    paatham panninthiduvom

    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    2.saavai venteer uyirththu eluntheer
    saaththaanaith thorkatiththeer
    niththiya vaalvai emakku thantheer
    niththam tholuthiduvom

    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    3.meenndum varuveer mannnnil nirpeer
    maarpodu annaiththiduveer
    mangaa vaalvai emakkuth tharuveer
    mannaa tholuthiduvom

    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

  • Thooya Devanai Thuthiththiduvom தூய தேவனை துதித்திடுவோம்

    தூய தேவனை துதித்திடுவோம்
    நேயமாய் நம்மை நடத்தினாரே
    ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்
    போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா

    கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
    கனிவுடன் நம்மை அரவணைத்தே
    நம் கால்களை கன்மலையின் மேல்
    நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்

    யோர்தானைப் போல் வந்த துன்பங்களை
    இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்
    அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே
    பரிசுத்த பாதையில் நடந்திடுவோம்

    கழுகுக்கு சமமாய் நம் வயது
    திரும்பவும் வாம வயதாகும்
    புது நன்மையால் புது பெலத்தால்
    நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும்

    தாவீதுக்கருளின மாகிருபை
    தாசராம் நமக்குமே தந்திடுவார்
    எலிசாவைப் போல் இருமடங்கு
    வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார்

    நலமுடன் நம்மை இதுவரையும்
    கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
    கண்மணி போல் கடைசிவரை
    காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்


    Thooya devanai thuthiththiduvom Lyrics in English
    thooya thaevanai thuthiththiduvom
    naeyamaay nammai nadaththinaarae
    oyaap pukaludan geetham paati thinam
    pottiyae panninthiduvom – allaelooyaa

    kadanthitta naatkalil avar karangal
    kanivudan nammai aravannaiththae
    nam kaalkalai kanmalaiyin mael
    niruththiyae nitham nammai vali nadaththum

    yorthaanaip pol vantha thunpangalai
    Yesuvin pelan konndu kadanthu vanthom
    avar karaththaip pitiththuk konntae
    parisuththa paathaiyil nadanthiduvom

    kalukukku samamaay nam vayathu
    thirumpavum vaama vayathaakum
    puthu nanmaiyaal puthu pelaththaal
    nirampiyae nam vaayum thirupthiyaakum

    thaaveethukkarulina maakirupai
    thaasaraam namakkumae thanthiduvaar
    elisaavaip pol irumadangu
    vallamaiyaal nammai apishaekippaar

    nalamudan nammai ithuvaraiyum
    karththarin arul entum niruththiyathae
    kannmanni pol kataisivarai
    kaaththidum karththaraip pottiduvom

  • Thooya Aaviyae Thunaiyaga Varuveer தூய ஆவியே துணையாக வருவீர்

    தூய ஆவியே துணையாக வருவீர்

    இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் – 2

    மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்

    மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் – 2

    மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்

    மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் – 2

    தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்

    தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் – 2

    பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர்

    பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் – 2

    கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்

    இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் – 2


    Thooya Aaviyae Thunaiyaga Varuveer Lyrics in English
    thooya aaviyae thunnaiyaaka varuveer

    Yesuvin saatchikalaay emmai maattiduveer – 2

    manaththin theemaikalai mannikka varuveer

    manaththin geeralkalai maattida varuveer – 2

    manaththin paarangalaip pokkida varuveer

    manaththin kaayangalai aattida varuveer – 2

    thaalvu manam neekkith thaettida varuveer

    thadumaari naan vilaamal thaangida varuveer – 2

    paavap pitinintu meettida varuveer

    paavak karai kaluvi thooymai thara varuveer – 2

    kalmana ithayaththaik karaiththida varuveer

    ithayaththin veruppukalai vilakkida varuveer – 2