Author: admin

  • Thaevai Nirainthavar தேவை நிறைந்தவர்

    தேவா வல்லமை தந்திடும்

    தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
    தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
    வேளையில் தந்திடுமே .. இந்த

    1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
      எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
      கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே
    2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
      திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
      எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே
    3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
      நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
      ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே

    Thaevai Nirainthavar Lyrics in English
    thaevaa vallamai thanthidum

    thaevai nirainthavar Yesu thaevaa vallamaithanthidumae
    thaevaikal santhikka aettathor vallamai
    vaelaiyil thanthidumae .. intha

    1. thaevaimikka oru naattinaith thantheer vallamaithanthidumae
      eththanai mathangal eththanai theyvangal
      karththarae theyvam ente kaatta vallamai thanthidumae
    2. naadukal naduvinil amaithiyae illai vallamaithanthidumae
      thirappin vaasalil nintu kalaippinti pulampida
      engalai eluppidumae thaevaa vallamai thanthidumae
    3. niththiya naattukku makkalaich serkka vallamaithanthidumae
      nilaiyillaa ulakinil nilainirkum semippu
      aaththumaakkal mattumae thaevaa vallamai thanthidumae
  • Thaevai Aaththuma Paaram தேவை ஆத்தும பாரம் கொண்டோர்

    தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என
    தேவன் அழைப்பது கேட்கலையோ?
    மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் என
    வேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ?

    1. எத்தனை சிறிது நம் வாழ்க்கை – அதை
      அர்த்தமாய் வாழ்வது மேன்மை
      மாசில்லா உண்மை தேவன்
      இயேசுவுக்காகவே வாழ்வோம்
      வாழ்வோம் நாம் வாழ்வோம்
      இயேசுவுக்காகவே வாழ்வோம் – தேவை
    2. கர்த்தரை சிறிதுமே அறியா
      இந்தியர் கோடிகள் உண்டே
      அத்தனை ஆத்துமா அழிந்தால்
      எத்தனை வேதனை அவர்க்கே
      உணர்வோம் நாம் உணர்வோம்
      பொறுப்பினை இன்றே உணர்வோம் – தேவை
    3. தரிசனம் பெற்றவர் கூட்டம்
      வரிசையாய் புறப்படும் தருணம்
      தரிசு நிலங்களில் எல்லாம்
      பரிசுத்த வசனத்தை விதைப்போம்
      செல்வோம் நாம் செல்வோம்
      இன்றே புறப்பட்டு செல்வோம் – தேவை

    Thaevai Aaththuma Paaram Lyrics in English
    thaevai aaththuma paaram konntoor ena
    thaevan alaippathu kaetkalaiyo?
    maanndidum en janam meetdiduvom ena
    vaenndidum avar thoni kaetkalaiyo?

    1. eththanai sirithu nam vaalkkai – athai
      arththamaay vaalvathu maenmai
      maasillaa unnmai thaevan
      Yesuvukkaakavae vaalvom
      vaalvom naam vaalvom
      Yesuvukkaakavae vaalvom – thaevai
    2. karththarai sirithumae ariyaa
      inthiyar kotikal unntae
      aththanai aaththumaa alinthaal
      eththanai vaethanai avarkkae
      unarvom naam unarvom
      poruppinai inte unarvom – thaevai
    3. tharisanam pettavar koottam
      varisaiyaay purappadum tharunam
      tharisu nilangalil ellaam
      parisuththa vasanaththai vithaippom
      selvom naam selvom
      inte purappattu selvom – thaevai
  • Thaevaathi Thaevanukku Namoe Namoe தேவாதி தேவனுக்கு நமோ நமோ

    தேவாதி தேவனுக்கு நமோ நமோ
    ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

    1. சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே
      சர்வேசு நாதனே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4)
    2. விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே
      எனையாளும் தெய்வமே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4)
    3. யெகோவா தேவனே யெகோவா நிசியே
      யெகோவா ஷம்மாவே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4)
    4. ஆத்தும நேசரே ஆரூயிர் நண்பரே
      ஆனந்த ராகமே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4)
    5. திரியேசு தேவனே மகத்துவ ராஜனே
      மன்னாதி மன்னனே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4)
    6. காட்டு மரங்களில் கிச்சிலியானவரே
      ஊற்றுண்ட தைலமே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4)

    Thaevaathi Thaevanukku Namoe Namoe Lyrics in English
    thaevaathi thaevanukku namo namo
    raajaathi raajanukku namo namo

    1. saaronin rojaavae saalaemin raajaavae
      sarvaesu naathanae namo namo aa… allaelooyaa (4)
    2. vinnnnaalum vaenthanae mannnnaalum mainthanae
      enaiyaalum theyvamae namo namo aa… allaelooyaa (4)
    3. yekovaa thaevanae yekovaa nisiyae
      yekovaa shammaavae namo namo aa… allaelooyaa (4)
    4. aaththuma naesarae aarooyir nannparae
      aanantha raakamae namo namo aa… allaelooyaa (4)
    5. thiriyaesu thaevanae makaththuva raajanae
      mannaathi mannanae namo namo aa… allaelooyaa (4)
    6. kaattu marangalil kichchiliyaanavarae
      oottunnda thailamae namo namo aa… allaelooyaa (4)
  • Thaevaathi Thaevan Iraajaathi Iraajan தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

    தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
    வாழ்க வாழ்கவே
    கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
    வாழ்க வாழ்கவே
    மகிமை உமக்குத்தான்
    மாட்சிமை உமக்குத்தான்
    மகிமை உமக்குத்தான்
    மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

    1. திசை தெரியாமல் ஓடி
      அலைந்தேன் தேடி வந்தீரே
      சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
      இரட்சித்து அணைத்தீரே
    2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
      எப்படி நன்றி சொல்வேன்
      வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
      உம் பணி செய்திடுவேன்
    3. சோதனை நேரம் வேதனை வேளை
      துதிக்க வைத்தீரே
      ஏதிராய் பேசும் இதயங்களை
      நேசிக்க வைத்தீரே
    4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
      அதிகமாய் செய்பவரே
      மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
      அணைத்து மகிழ்பவரே
    5. உiளாயன சேற்றில் வாழ்ந்த
      என்னை தூக்கி எடுத்தீரே
      கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
      பாட வைத்தீரே

    Thaevaathi Thaevan Iraajaathi Iraajan Lyrics in English
    thaevaathi thaevan iraajaathi iraajan
    vaalka vaalkavae
    karththaathi karththar mannaathi mannan
    vaalka vaalkavae
    makimai umakkuththaan
    maatchimai umakkuththaan
    makimai umakkuththaan
    maatchimai athuvum umakkuththaan

    1. thisai theriyaamal oti
      alainthaen thaeti vantheerae
      siluvaiyil thongi iraththam sinthi
      iratchiththu annaiththeerae
    2. eththanai nanmai enakkuch seytheer
      eppati nanti solvaen
      vaalnaalellaam umakkaay vaalnthu
      um panni seythiduvaen
    3. sothanai naeram vaethanai vaelai
      thuthikka vaiththeerae
      aethiraay paesum ithayangalai
      naesikka vaiththeerae
    4. vaennduvatharkum ninaippatharkum
      athikamaay seypavarae
      meenndum meenndum aaruthal thanthu
      annaiththu makilpavarae
    5. uilaayana settil vaalntha
      ennai thookki eduththeerae
      kanmalaiyin maelniruththi – ennai
      paada vaiththeerae
  • Thaevaalayam Selvathae தேவாலயம் செல்வதே

    தேவாலயம் செல்வதே
    மகிழ்சியை கொடுக்கும்

    கர்த்தர் சமுகத்திலே,ஆனந்தம், ஆனந்தம்,
    ஆனந்தம், ஆனந்தம்,ஆனந்தம், ஆனந்தமே (5) முறை

    பாடுவோம் அல்லேலுயா
    பாடுவோம் அல்லேலுயா


    Thaevaalayam Selvathae Lyrics in English
    thaevaalayam selvathae
    makilsiyai kodukkum

    karththar samukaththilae,aanantham, aanantham,
    aanantham, aanantham,aanantham, aananthamae (5) murai

    paaduvom allaeluyaa
    paaduvom allaeluyaa

  • Thaevaa Um Samuukamae தேவா உம் சமூகமே

    தேவா உம் சமூகமே
    எனது பிரியமே இயேசு

    1. வானத்தின் வாசல் நீரே – எங்கள்
      வாழ்க்கையின் அப்பம் நீரே… (தேவா)
    2. நம்பிக்கை தெய்வம் நீரே – எங்கள்
      நங்கூரம் என்றும் நீரே… (தேவா)
    3. அக்கினி ஜூவாலை நீரே- அதி
      காலைப் பனியும் நீரே… (தேவா)
    4. கர்த்தாதி கர்த்தர் நீரே – எங்கள்
      கானான் தேசம் நீரே… (தேவா)
    5. ஆதி அந்தம் நீரே – எம்மை
      ஆட்கொண்ட சொந்தம் நீரே… (தேவா)

    Thaevaa Um Samuukamae Lyrics in English
    thaevaa um samookamae
    enathu piriyamae Yesu

    1. vaanaththin vaasal neerae – engal
      vaalkkaiyin appam neerae… (thaevaa)
    2. nampikkai theyvam neerae – engal
      nangaூram entum neerae… (thaevaa)
    3. akkini joovaalai neerae- athi
      kaalaip paniyum neerae… (thaevaa)
    4. karththaathi karththar neerae – engal
      kaanaan thaesam neerae… (thaevaa)
    5. aathi antham neerae – emmai
      aatkonnda sontham neerae… (thaevaa)
  • Thaevaa Um Saatsi Naan தேவா உம் சாட்சி நான் தினம்

    தேவா உம் சாட்சி நான் – தினம்
    தேவை உம் ஆசிதான்
    தேவா உம் சாட்சி நான்

    1. நித்தியமான ஜீவனைத் தந்தீர்
      சத்தியத்தில் என்னை நடத்துகிறீர்
      ஆவியின் பெலனை அனுபவித்தே
      வாழவைத்தீர் என்றும் மாதிரியாய்
    2. விரும்பிய பாவம் விலக்கிய பின்னும்
      வீரியம் கொண்டே மயக்குகையில்
      நிலைத்திடும் தேவனின் அரசாட்சி
      ஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி
    3. எனக்கெதிராக யார்தான் உண்டு?
      என் மேல் குற்றம் சுமத்துவதார்?
      எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டு
      என் வாழ்வில் அவரே நீங்காத சொத்து
    4. உம்மையே தந்தீர் நன்மைகள் தருவீர்
      நீதிமானாய் என்றும் நிலைத்திருக்க
      வேண்டுதல் செய்வீர் எனக்காக
      மகிமை அளிப்பீர் முடிவாக

    Thaevaa Um Saatsi Naan Lyrics in English
    thaevaa um saatchi naan – thinam
    thaevai um aasithaan
    thaevaa um saatchi naan

    1. niththiyamaana jeevanaith thantheer
      saththiyaththil ennai nadaththukireer
      aaviyin pelanai anupaviththae
      vaalavaiththeer entum maathiriyaay
    2. virumpiya paavam vilakkiya pinnum
      veeriyam konntae mayakkukaiyil
      nilaiththidum thaevanin arasaatchi
      eenthidum vaalvil thinam vetti
    3. enakkethiraaka yaarthaan unndu?
      en mael kuttam sumaththuvathaar?
      ellaamae enakku Yesuvil unndu
      en vaalvil avarae neengaatha soththu
    4. ummaiyae thantheer nanmaikal tharuveer
      neethimaanaay entum nilaiththirukka
      vaennduthal seyveer enakkaaka
      makimai alippeer mutivaaka
  • Thaevaa Um Aanai Maa Perithae தேவா உம் ஆணை மா பெரிதே

    மாபெரும் ஆணை

    தேவா உம் ஆணை மா பெரிதே
    தேவா உம் அழைப்பு மேலானதே
    தேவா என் பணிக்களம் விஸ்தாரமே
    தேவா என் மூச்செல்லாம் உம்பணியே

    1. இயேசுதான் எங்கள் சுபமான செய்தி
      அவனியோர் மீட்புக்கு அவர் தான் வழி
      பாவம் சீர்கேட்டின் முழுக்காரணம்
      போதும் உலகத்தின் அடிமைத்தனம்
      மன்னிப்பு மறுரூபம் பேரின்ப வாழ்வு
      இது தான் இயேசுவின் அன்பளிப்பு
    2. கோடான கோடி ஜனங்கள் உண்டு
      ஆயிரமாயிரம் ரகங்கள் உண்டு
      பாவம் தீர்த்திடும் வழி தேடியே
      வேதனையில் எங்கும் அலை மோதுதே
      அளித்திடும் தேவா கிருபை எந்நாளும்
      அணிவேன் மகிமை தினம் தினமே
    3. உன்னத தரிசனம் நாம் காணுவோம்
      உள்ளத்தில் கரிசனம் நிறைந்திருப்போம்
      கள்ளம் கபடின்றி பணி செய்தபின்
      களிப்புடன் ஓட்டத்தை முடித்திடுவோம்
      தாரும் தேவா உமது பிரசன்னம்
      வேண்டும் தினமே உமது பெலன்

    Thaevaa Um Aanai Maa Perithae Lyrics in English
    maaperum aannai

    thaevaa um aannai maa perithae
    thaevaa um alaippu maelaanathae
    thaevaa en pannikkalam visthaaramae
    thaevaa en moochchellaam umpanniyae

    1. Yesuthaan engal supamaana seythi
      avaniyor meetpukku avar thaan vali
      paavam seerkaettin mulukkaaranam
      pothum ulakaththin atimaiththanam
      mannippu maruroopam paerinpa vaalvu
      ithu thaan Yesuvin anpalippu
    2. kodaana koti janangal unndu
      aayiramaayiram rakangal unndu
      paavam theerththidum vali thaetiyae
      vaethanaiyil engum alai mothuthae
      aliththidum thaevaa kirupai ennaalum
      annivaen makimai thinam thinamae
    3. unnatha tharisanam naam kaanuvom
      ullaththil karisanam nirainthiruppom
      kallam kapatinti panni seythapin
      kalippudan ottaththai mutiththiduvom
      thaarum thaevaa umathu pirasannam
      vaenndum thinamae umathu pelan
  • Thaevaa Ezhupputhal Thaarum தேவா எழுப்புதல் தாரும்

    தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
    உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே

    1. பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
      பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
      பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
      பரமன் இயேசுவை போலாகவே
    2. ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
      அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
      திறப்பின் வாசலில் நிறுத்தும்
      திரண்ட அழிவைத் தடுத்திடவே
    3. பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
      சபைகள் பூத்துக் குலுங்கிடவே
      பேதுருவின் தைரியம் தாரும்
      பாரதம் உம்மை பணிந்திடுமே

    Thaevaa Ezhupputhal Thaarum Lyrics in English
    thaevaa elupputhal thaarum inte en ullaththil thaarum
    uyiroottum en aaththumaavai um siththam niraivaettavae

    1. parisuththa sinthai ennil thaarum
      paavaththin meethu jeyaththai thaarum
      parisuththar vairaakkiyam thaarum
      paraman Yesuvai polaakavae
    2. aaththuma vaanjai ennil thaarum
      anpin thoothanaay anuppidumae
      thirappin vaasalil niruththum
      thirannda alivaith thaduththidavae
    3. pavulin vairaakkiyam ennil thaarum
      sapaikal pooththuk kulungidavae
      paethuruvin thairiyam thaarum
      paaratham ummai panninthidumae
  • Thaeva Siththam தேவ சித்தம்

    தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
    தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே – (2)

    முட்களுக்குள் மலர்கின்றதோர்
    மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

    என்னையுமே தம் சாயலாய்
    என்றென்றும் உருவாக்குவார்

    பொன்னைப் போல புடமிட்டாலும்
    பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
    திராணிக்கு மேல் சோதித்திடார்
    தாங்கிட பெலன் அளிப்பார்

    முன்னறிந்து அழைத்தவரே
    முன்னின்று நலமுடன் நடத்துவார்
    சகலமும் நன்மைக்கேன்றே
    சாட்சியாய் முடித்திடுவார்

    கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
    கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
    இரட்டிப்பான பங்கைப் பெற
    இரட்சகர் அழைத்திடுவார்


    Thaeva Siththam Lyrics in English
    thaeva siththam niraivaera ennaiyum oppataikkiraen
    thaeva saththam ennullam palamaakath thonikkuthae – (2)

    mutkalukkul malarkintathor
    makkalai kavarum leeli pushpam pol

    ennaiyumae tham saayalaay
    ententum uruvaakkuvaar

    ponnaip pola pudamittalum
    ponnaaka vilanguvaen ententumae
    thiraannikku mael sothiththidaar
    thaangida pelan alippaar

    munnarinthu alaiththavarae
    munnintu nalamudan nadaththuvaar
    sakalamum nanmaikkaente
    saatchiyaay mutiththiduvaar

    kashdamellaam tholaiyum or naal
    kannnneerum kavalaiyum neengum annaal
    irattippaana pangaip pera
    iratchakar alaiththiduvaar