Author: admin

  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    புது கிருபை, புது மகிமை
    2020’ய நிறப்பப் போகுது – 2
    அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
    அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது – 2
    அனுபவங்கள் மாறப் போகுது
    என் சூழ்நிலைகள் மாறப் போகுது

    ஆண்டவராம் இயேசுவோட ஆசியினால
    ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது – 2
    திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
    ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது
    திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
    அடைக்கப்பட்ட வாசலெல்லாம் திறக்கப் போகுது

    அபிஷேகம் எனக்குள்ள இருப்பதினால
    அலங்கமெல்லாம் சுக்குனூறா இடிய போகுது
    இடிய போகுது அலங்கம் உடையப் போகுது
    தடைகள் எல்லாம் என் வாழ்வில் விலகப் போகுது

    அரையும் குறையுமாயிருந்த என் பாத்திரம்
    நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது – 2
    நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
    நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது
    நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
    சம்பூரணமாக நிறம்பப் போகுது

    வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
    வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
    வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
    ஆத்துமாக்கள் அலை அலையாய் பெருகப் போகுது
    பெருகப் போகுது சபைகள் பெருகப் போகுது
    வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
    பெருகப் போகுது சபைகள் வளரப் போகுது
    எழுப்புதலை என் தேசம் காணப் போகுது


    Pudhu Kirubai pudhu magimai
    2020 ya nirappapoguthu – 2
    Arputhangal Aairamai Nadakka Poguthu
    Adhisayangalai kangal paarkka poguthu – 2
    Anubavangal maara poguthu
    En soolnilaigal maara poguthu

    Aandavaraam yesuvoda aasiyinaala
    Aasirvathamana vaasal thirakka poguthu – 2
    Thirakka poguthu vaasal thirakka poguthu
    Aasirvathamana vaasal thirakka poguthu
    Thirakka poguthu vaasal thirakka poguthu
    Adaikkapatta vaasal ellam thirakka poguthu

    Abishegam enakkulla iruppadhinala
    Alangamellam sukku noora idiya poguthu
    Idiya poguthu alangam udaiya poguthu
    Thadaigal ellam en vaazvil vilaga poguthu

    Araiyum kuraiyumaai irundha en paathiram
    Nanmaiyaalum kirubaiyaalum niraiya poguthu – 2
    Niraiya poguthu nirambi vazhiya poguthu
    Nanmaiyaalum kirubaiyaalum niraiya poguthu
    Niraiya poguthu nirambi vazhiya poguthu
    Sambooranamaaga niramba poguthu

    Valam illamal varandu kidandha sabaigalellam
    Varangalaalum kanigalaalum peruga poguthu
    Valam illamal varandu kidandha sabaigalellam
    Aathumaakkal alai alaiyaai peruga poguthu
    Peruga poguthu sabaigal peruga poguthu
    Varangalaalum kanigalaalum peruga poguthu
    Peruga poguthu sabaigal valara poguthu
    Ezhuppudhalai en dhesam kaana poguthu


  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    நன்றி மறந்தேன்
    நீர் செய்த நன்மை மறந்தேன்
    பாவியாம் என்னை
    இரட்சித்த அன்பை மறந்தேன் – 2
    உம்மை விட்டு தூரம் போனேன்
    என்கரம் பிடித்ததேன்
    உந்தன் அன்பை என்ன சொல்ல
    என் தெய்வமே -2

    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி -2

    பாவிஎன்றென்னை தள்விடாமல்
    அனைத்துக்கொண்டீர் என் தெய்வமே-2
    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2

    தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
    தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே -2
    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2


    Nandri maranthen
    Neer seitha nanmai maranthen
    paaviyam ennai
    ratchitha anbai maranthen – 2
    ummai vitu thuram ponen
    en karam pidithathen
    unthan anbai enna solla
    en deivamey – 2

    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2

    Paavi endruennai thali vidamal
    anaithu kondeer en deivamey – 2
    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2

    Thanimaiyeley thuvanda podhu thunaiyaga vandheer
    thaieelum anbu vaitheer en deivamey – 2
    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2


  • உமக்காகவே பலன் கொடுக்க Umakagavae Palan Koduka

    உமக்காகவே பலன் கொடுக்க
    விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2
    நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ
    நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2
    நான் அவருக்காய் பலன் தரும் விதையே
    என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2

    வழியருகவே விதைக்கப்பட்டோம், வசனத்தை கேள்விப்பட்டோம்
    சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம் – 2
    நீ வழியின் விதையே , உன்னில் பலனில்லையே – 4
    நீ அவருக்காய் பலன் தரவில்லையே
    என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2

    பாறையில் விதைக்கப்பட்டோம் , சந்தோஷமாய் வசனத்தை ஏற்றோம்
    கொஞ்சகாலம் நிலைத்திருந்து , பின்னாலே பின்வாங்கிப்போனோம் – 2
    நீ பாறையின் விதையே , உன்னில் பலனில்லையே -4
    நீ அவருக்காய் பலன் தரவில்லையே
    என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2

    முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம் , வசனத்தை கேட்டுக்கொண்டோம்
    உலக கவலை , ஐஸ்வரத்தின் மயக்கத்தால் பலனற்றுப்போனோம் – 2
    நீ முள்ளின் விதையே , உன்னில் பலனில்லையே – 4
    நீ அவருக்காய் பலன் தரவில்லையே
    என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2

    நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம் , வசனத்தை கேட்டு உணர்ந்தோம்
    இதயத்தில் காத்துகொண்டு , பலமடங்காய் பலன் கொடுப்போம் – 2
    நல்ல நிலத்தின் விதையே , நான் பலன் தருவேனே – 4
    நான் முப்பதும் அறுப்பதும்
    நூறாய் பலன் தருவேன் – 4


    Umakagavae Palan Koduka
    Vithaikapatta Vidhaigal Naangal – 2
    Nee Vazhiyin Vidhaiyo, Karparayin Vidhaiyo
    Nee Mullin Vidhaiyo, Nalla Nilathin Vidhaiyo – 2
    Naan Avarukai Palan Tharum Vidhaiyae
    En Yesuvukai Palan Tharum Vidhaiyae – 2

    Vazhiyarugae Vidhaikapattom, Vasanadhai Kelvipattom
    Sathaanuku Sevikoduthu, Vasanadhil Vilagiponom – 2
    Nee Vazhiyin Vidhayae, Unnil Palanillayae – 4
    Nee Avarukai Palan Tharavillayae
    En Yesuvukai Palan Tharavillayae – 2

    Paarayile Vidhaikapattom, Sandhoshamai Vasanadhai Yetrom
    Konjakalam Nilathirundhu, Pinnale Pinvangiponom – 2
    Nee Paarayin Vidhayae, Unnil Palanillayae -4
    Nee Avarukai Palan Tharavillayae
    En Yesuvukai Palan Tharavillayae – 2

    Mullinmel Vidhaigapattom, Vasanadhai Kettukondom
    Ulaga Kavalai, Aishwairadhin Mayakadhal Palanadruponom – 2
    Nee Mullin Vidhayae, Unnil Palanillayae – 4
    Nee Avarukai Palan Tharavillayae
    En Yesuvukai Palan Tharavillayae – 2

    Nalla Niladhil Vidhaikapattom, Vasanadhai Kettu Unarndhom
    Idhayadhil Kaadhukondu, Palamadangai Palan Kodupom – 2
    Nalla Niladhin Vidhaiyae, Naan Palan Tharuvenae – 4
    Naan Mupadhum Arupadhum
    Noorai Palan Tharuven – 4


  • பின்மாரியின் நாட்கள் Pinmaariyin Naatkal

    பின்மாரியின் நாட்கள் இதுவே
    அபிஷேக நாட்கள் இதுவே
    அற்புதங்களின் நாட்கள் இதுவே
    எழுப்புதல் நாட்கள் இதுவே – 2

    அக்கினி தேவனின் அக்கினி
    தேசத்தில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே – 2

    பெந்தகோஸ்தே நாளைப் போல
    ஆவியால் என்னை நிறைத்திடுமே – 2
    வரங்களாலும் பாஷைகளாலும்
    உலகத்தை நாங்கள் கலக்கனுமே – 2

    அக்கினி தேவனின் அக்கினி
    சபைதனில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே – 2

    பரத்தில் இருந்து இறங்கிடுமே
    வல்லமை அன்பு வெளிப்படுமே – 2
    நாவுகள் யாவும் அறிக்கையிட்டு
    நீரே தேவன் என்று முழங்கிடுமே – 2

    அக்கினி தேவனின் அக்கினி
    சபைதனில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே – 2 – பின்மாரியின்…

    அக்கினி தேவனின் அக்கினி
    என்னையும் நிறைக்கட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே


    Pinmaariyin Naatkal Ithuvae
    Abishega Naathkal Ithuvae
    Arputhangalin Naatkal Ithuvae
    Ezhuputhal Naatkal Ithuvae – 2

    Akkini Devanin Akkini
    Dhesathil Ezhumpattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2

    Penthegosthe Naalai Pola
    Aaviyal Emmai Niraithidumae – 2
    Varangalalum Paashaigalalum
    Ulagathai Nangal Kalakanumae – 2

    Akkini Devanin Akkini
    Sabaithanil Ezhumpattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2

    Parathil Irunthu Irangidumae
    Vallamai Angu Velipadumae – 2
    Naavugal Yavvum Arikkaiyittu
    Neerae Devan Endru Muzhangidumae – 2

    Akkini Devanin Akkini
    Sabaithanil Ezhumpattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2 – Pinmaariyin

    Akkini Devanin Akkini
    Ennaiyum Niraikattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2


  • ஆள் இல்லை ஆள் Aal Illai Aal

    ஆள் இல்லை ஆள் இல்லை
    அழுது ஜெபிக்க ஆள் இல்லை
    செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்
    கண்ணீர் சிந்த ஆள் இல்லை

    சின்னஞ் சிறுவரை சீற்றத்தை செய்து
    வதைக்கும் கூட்டம் உண்டு
    கதறி துடிக்கும் பழக்கர்காக
    கண்ணீர் வடிக்க ஆள் இல்லை

    குடித்து வெறித்து அடித்து உதைக்கும்
    கொடூர கூட்டம் உண்டு
    அழுதாய் வாழ்வை கலிபோர்க்காக
    அழுது புலம்ப ஆள் இல்லை

    திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்
    தினமும் புலம்புகின்றார்
    சிறை வாழ்வலே சிதைந்த்தூர் மீள
    அறையில் ஜெபிக்க ஆள் இல்லை

    கொடுமை புரிவூர் தீமை சேவூர்
    மனம்திரும்பவில்லை
    கண்ணீர் அவரை மற்றும் என்று
    அறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை

    தேவன் வருவார் கணக்கு கேட்பார்
    எப்படி ஜெபித்தாய் என்பார்
    என்ன சொல்ல எப்படி சொல்ல
    தலை குனிவோர் ஏராளம்


    Aal Illai Aal Illai
    Aludhu Jebika Aal Illai
    Seneer Sindhi Nesar Jebithaar
    Kaneer Sindha Aal Illai

    Chinanj Chiruvarai Chitravathai Seithu
    Vathaikum Kootam Undu
    Kathari Thudikum Palakarkaga
    Kaneer Vadika Aal Illai

    Kudithu Verithu Adithu Udhaikum
    Kodura Kootam Undu
    Aludhey Vazhvai Kaliporkaga
    Aludhu Pulamba Aal Illai

    Thirudapattor Virkapattor
    Thinamum Pulambuginrar
    Sirai Vazhvaley Sithainthoor Meela
    Araiyil Jebika Aal Illai

    Kodumai Purivoor Theemai Seivoor
    Manamthirumbavillai
    Kanneer Avarai Mattrum Endru
    Arindhum Jebika Aal Illai

    Dhevan Varuvaar Kanaku Ketpaar
    Eppadi Jebithai Enbaar
    Enna Solla Eppadi Solla
    Thalai Guneevor Yerallam


  • இயேசு வந்து பிறந்து Yesu Vandhu Pirandhu

    இயேசு வந்து பிறந்து விட்டாரே
    உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே
    இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே
    இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே – 2

    இயேசு எந்தன் இயேசு
    எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே
    இயேசு எந்தன் இயேசு
    இரட்சகராய் பூவில் வந்தாரே

    சாஸ்திரிகள் தேடி வந்தனர்
    பாதத்தில் பணிந்து விழுந்தனர்
    வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
    பொன்னையும் சேர்த்து கொடுத்தனர் – 2

    மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்
    இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்
    நற்செய்தியை சொல்லி சென்றனர்
    இயேசுவை புகழ்ந்து பாடினர் – 2


    Yesu Vandhu Pirandhu Vittaarae
    Ulagathirku Velicham Aagave
    Irulai Neekum Oliyaai Vandhaarae
    Irudhayathil Magilchi Thandhaarae – 2

    Yesu Endhan Yesu
    Endhan Alvai Maatr Vittaarae
    Yesu Endhan Yesu
    Ratchagaraai Poovil Vandhaarae

    Saasthirigal Thaedi Vandhanar
    Paadhathil Panindhu Vizhundhanar
    Vellai Polam Thooba Varkkam
    Ponnaiyum Serthu Koduthanar – 2

    Meippargal Panindhu Kunindhanar
    Yesuvai Magilndhu Thudhithanar
    Narcheidhiyai Solli Senranar
    Yesuvai Pugalndhu Paadinar – 2


  • உலகத்தின் மீட்பர் Ulagathin Meetpar

    உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்
    நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்
    பெத்லகேம் தொழுவத்திலே
    தாழ்த்தப்பட்ட நிலையிலே
    மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் – 2

    வணங்கி அவரை உயர்த்திடுவோமே
    அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே
    இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை
    ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே

    இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்
    ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்
    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
    நித்திய பிதா நம்மோடிருக்கிறார் – 2

    நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
    நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
    கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்
    சமாதான பிரபு நம்மோடிருக்கிறார் – 2


    Ulagathin Meetpar Inru Pirandhitaar
    Nam Vaalvai Pudhupikka Vandhittaar
    Bethlehem Thozhuvathilae Thaazhthappatta Nilayilae
    Mannaadhi Mannan Inru Pirandhittaar – 2

    Vanangi Avarai Uyarthiduvomae
    Avar Naamam Solli Aarparipomae
    Ratchagaraam Yesuvai Vinnulaga Raajanai
    Sthotharithu Potriduvomae

    Immanuel Dhevan Inru Pirandhitaar
    Aandavar Nam Naduvilae Vandittaar
    Adhisayam Aanavar Aalosanai Karthar
    Nithiya Pidhaa Nammodirukiraar – 2

    Namakkoru Paalagan Pirandhitaar
    Namakkoru Kumaaran Kodukkappataar
    Karthathuvam Avar Mel Irukum
    Samdhaana Prabu Nammodirukiraar – 2


  • லா லா லா லா லை லா லா லை La La La La Lai La La Lai

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை

    கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
    ஆடிப்பாடி மகிழும் நாட்களே
    ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
    இயேசுவை கொண்டாடுவாங்களே – 2

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை

    வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
    இயேசு இன்று பிறந்ததினாலே
    நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
    இயேசு இங்க வந்ததினாலே – 2

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை

    கொடிய வியாதி பறந்து போகுமே
    யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே
    விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
    என் வாழ்வில் பயமில்லையே – 2

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை


    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai

    Christmas Enraal Kondaatamae
    Aadi Paadi Magilum Naatkalae
    Onraaga Koodiyae Karangalai Thattiyae
    Yesuvai Kondaada Vaangalae – 2

    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai

    Vaalzhkai Ellaam Sezhipaagumae
    Yesu Inru Pirandhadhinaalae
    Nam Vaalkai Maarumae Pudhu Vazhi Thirakkumae
    Yesu Ingu Vandhadhinaalae – 2

    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai

    Kodiya Vyaadhi Parandhu Pogumae
    Yehova Rapha Ennai Thoduvaarae
    Viduvikkum Dhevanae Manidhan Aaga Vandhaarae
    En Vaazhvil Bayam Illayae – 2

    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai


  • Happy Happy Happy Christmas

    Happy Happy Happy Christmas
    எல்லோரும் கொண்டாடுவோம்
    Merry Merry Merry Christmas
    எல்லோரும் ஆர்ப்பரிப்போம் – 2

    இராஜன் இயேசு ஜெனித்தாரே
    பாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவே
    சர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவே
    புது வாழ்வை நமக்கு தந்திடவே – 2

    பெத்லகேமில் பிறந்தவரை
    போற்றித் துதிப்போமே
    சர்வத்தையும் ஆள்பவரை
    வாழ்த்தி துதிப்போமே
    உலகத்தை வென்றவரை
    சேர்ந்து துதிப்போமே
    உள்ளத்தில் வாழ்பவரை
    உயர்த்தி துதிப்போமே – 2


    Happy Happy Happy Christmas
    Ellorum Kondaaduvom
    Merry Merry Merry Christmas
    Ellorum Aarparipom – 2

    Raajan Yesu Jenithaarae
    Paavam Neekidavae Poovinai Venridavae
    Sarva Dhevan Udhithaarae Saabathai Udaikkavae
    Pudhu Vaazhvu Namakku Thandhidavae – 2

    Bethalahemil Pirandhavarai
    Potri Thudhipomae
    Sarvathayum Aalbavarai
    Vaalthi Thudhipomae
    Ulagathai Venravarai
    Serndhu Thudhipomae
    Ullaththil Vaazhnavarai
    Uyarthi Thudhipomae – 2


  • தாவீதின் வம்சத்தில் Dhaaveedhin Vamsathil

    தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
    மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
    தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
    இவ்வுலகில் பிறந்து விட்டாரே – 2

    போற்றி போற்றி புகழ்வோம்
    பாடி பாடி துதிப்போம் – 2

    சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
    முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
    மனித குமாரன் மெய்யான தேவன்
    ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே – 2

    அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
    சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
    தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
    உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே – 2


    Dhaaveedhin Vamsathil Bethlehem Oorinil
    Mariyaalin Maindhanaaha Yoeseppin Maganaaha
    Dhevakumaran Yesu Kristhu Kulandhaiyaaga
    Iuuulagil Pirandhu Vittaarae – 2

    Potri Potri Pugalvom
    Paadi Paadi Thudhipom – 2

    Sathirathil Avargaluku Idam Illayae
    Munnanayil Kulandhayai Vaithaargalae
    Manidha Kumaaran Meeiyaana Dhevan
    Aelayin Thotrathil Avadharithaarae – 2

    Avar Pirappai Thoodhan Arivithaarae
    Sandhoshathin Seidhiyai Therivithaarae
    Thoodhargal Thonri Thudhigalai Paadi
    Unnadhathil Magimai Ena Sonnaargalae – 2