Author: admin

  • மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Maatu Thozhuvathil

    மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
    இயேசு பிறந்தாரே
    கொட்டும் பனியிலே இராஜாவாக
    இயேசு பிறந்தாரே – 2

    நம் பாவங்கள் போக்க
    சாபங்கள் நீக்க
    பூலோகம் வந்தாரே – 4

    விண்மீன் காட்டிய வழி இது
    இருளை போக்கிய ஒளி இது
    நம் இயேசு இராஜாவின் வழி – 2
    சின்ன குழந்தை சிரிப்பினில்
    இதயங்கள் மகிழுதே
    செல்ல குழந்தையின் வருகையால்
    இன்பமாக மாறுதே – 2

    தூதர் உம்மையே துதித்திட
    இடையர் உம்மையே வணங்கிட
    சாஸ்திரியர் உம்மை தொழுதிட – 2
    இருள் போக்க பிறந்தாரே
    கனிவாய் பரலோகம் திறந்தாரே
    மாந்தர்கள் மத்தியில் நமக்காக
    இயேசு பாலனாய் பிறந்தாரே


    Maatu Thozhuvathil Balaganai Yesu Piranthaare
    Kotum Paniyile Rajavage Yesu Piranthaare – 2

    Nam Pavangal Poka Saabangal Neeka
    Boologam Vanthaare – 4

    Vinmeen Kaatiya Vazhi Ithu
    Irutal Pokiya Oil Ithu
    Nam Yesu Rajavin Vazhi – 2
    Chinna Kuhanthai Siripinil
    Ithayangal Magizhuthe
    Chella Kuzhanthai Varugaiyal
    Inbamaga Maarume – 2

    Thoothar Ummaiye Thudhithida
    Idaiyar Ummaiye Vanangida
    Shaastriyar Umaiye Thozhuthida – 2
    Irul Pokka Piranthaare Kanivaai
    Paralogam Thiranthaare
    Manthargal Mathiyil Namakaaga
    Yesu Balanai Piranthaare


  • மானிடர் பாவம் போக்கவே Manidar Pavam Pokkavae

    மானிடர் பாவம் போக்கவே
    பாரில் இரட்சகர் வந்துதித்தார்
    இன்னல்கள் பல துன்பங்கள்
    போக்கவே வந்துதித்தார்

    மரத்தின் கனியினால்
    அன்று பாவம் சூழ்ந்தது
    மரத்தின் சிலுவையால்
    இன்று பாவம் தீர்ந்தது

    ஆதியில் தோன்றிய
    பாவத்தை போக்கவே
    தேவனின் குமாரனே
    உலகில் வந்துதித்தார்-2

    உன்னை மீட்க வந்த தேவன்
    இன்று உன்னை அழைக்கின்றார்
    உன்னிடத்தில் இடமுண்டா-2

    நித்திய வாழ்வினை
    மானிடர் பெற்றிடவே
    தேவனின் குமாரனே
    நம்மை மீட்க வந்தார்-2

    ஜீவ கிரீடம் பெற்றிடவே
    இன்று உன்னை அழைக்கின்றார்
    அவரை நீ ஏற்பாயா-2


    Manidar Pavam Pokkavae
    Paril Ratchakar Vanthuthiththaar
    Innalgal Pala Thunbangal
    Pokkavae Vanthuthiththaar

    Marathin Kaniyinaal
    Andru Paavam Soozhnthathu
    Marathin Siluvayaal
    Indru Paavam Theernthathu

    Aathiyil Thondriya
    Paavathai Pokkavae
    Devanin Kumaranae
    Ulagil Vanthuthiththaar-2

    Unnai Meetka Vantha Thevan
    Indru Unnai Azhaikkindraar
    Unnidaththil Idamundaa-2

    Nithiya Vaazhvinai
    Maanidar Petridavae
    Devanin Kumarane
    Nammai Meetka Vanthaar-2

    Jeeva Kireedam Petridavae
    Indru Unnai Azhaikkindraar
    Avarai Nee Yerpayaa-2


  • கொட்டும் பனியில் குளிர்நிலா Kottum Paniyil Kulir Nila

    கொட்டும் பனியில் குளிர்நிலா
    மண்ணில் வந்த பாலகனே
    உனை தொட்டு தழுவி அணைக்க
    எந்தன் உள்ளம் ஏங்கிடுதே – 2
    அன்னை மடி மீது நீயும் தவழ
    கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்
    மாட்டுத் தொழுவமாய் எந்தன்
    உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார்

    எந்தன் நண்பனாய் அன்பனாய்
    நீயும் மாறிட
    எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை போற்றுவேன் – 2

    வானின் நீளம் ஓடும் நீரும்
    உம் அன்பை அறிந்ததே
    பாவியான எந்தன் உள்ளம்
    உம்மை மறந்ததே
    சாதி மதம் தேடல் இங்கே
    அன்பை அழித்ததே
    உண்மையான அன்பிற்காக
    எங்கியே நின்றதே
    ஒரு தாயை தேடும் பிள்ளை போல
    அன்பை தேடி நின்றேன்
    இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே
    உம்மை கண்டுக்கொண்டேன்
    இருள் யாவும் மறைந்திடும்
    ஒளி எங்கும் பரவிடும்
    இதை யாவரும் காணவே
    உம் வருகை உணர்த்திடும்

    என்னை வீழ்த்திட தாழ்த்திட
    யார் யார் நினைப்பினும்
    உந்தன் பார்வையில் பாதையில்
    என் தேடல் வேண்டுமே – 2


    Kottum Paniyil Kulir Nila
    Mannil Vandha Paalagane
    Unai Thottu Thazhuvi Anaikka Endhan
    Ullam Yaengidudhe
    Annai Madi Meedhu Neeyum Thavazha
    Kandu Kaana Meippargal Vandhanar
    Maatu Thozhuvamai Endhan Ullam Maarida
    Meetpar Pirandhullar

    Endhan Nanbanaai Anbanaai Neeyum Maarida
    Endhan Uyirulla Naalellam Ummai Potruvaen – 2

    Vaanin Neelam Odum Neerum
    Um Anbai Arindhadhe
    Paaviyaana Endhan Ullam Ummai Marandhadhe
    Saathi Madham Thaedal Inge Anbai Azhithadhe
    Unmaiyaana Anbirkaaga Yaengiye Nindradhe
    Oru Thaayai Thaedum Pillai Pola Anbai Thaedi Nindren
    Indha Thaedal Ellai Sellum Munbe Ummai Kandukkonden
    Irul Yaavum Maraindhidum
    Oli Engum Paravidum
    Idhai Yaavarum Kaanave
    Um Varugai Unarthidum

    Ennai Veezhthida Thaazhthida Yaar Yaar Ninaippinum
    Undhan Paarvaiyil Paadhaiyil En Thaedal Vendume – 2


  • ஒரு முறை பார்க்கனும் Orumurai Parkkanum

    ஒரு முறை பார்க்கனும்
    எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
    ஒரு முறை கேட்கனும்
    எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
    பரலோகம் விட்டு வந்த
    அந்த பரிசுத்த பாலனை
    ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
    மகிமையே மகிமையே
    இம்மானுவேல் பிறந்தாரே – 2

    வாழ்க வாழ்க வாழ்கவே
    விண்ணின் தூதர் வாழ்த்தவே
    மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
    வாழ்க வாழ்க வாழ்கவே
    மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
    மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே – ஒரு முறை


    Orumurai Parkkanum
    Enakkaai Mannil Vantha Perazhagai
    Orumurai Ketkanum
    Enakkaai Katharum Antha Thaen Kuralai
    Paralogam Vittu Vantha
    Antha Parisutha Paalanai
    Orumurai Paarkkanumae Rasikkanumae
    Makimayae Makimayae
    Immanuel Piranthaarae – 2

    Vazhga Vazhga Vazhgavae
    Vinnin Thoothar Vaazhththavae
    Mannil Devan Piranthu Vittarae
    Vaazhga Vaazhga Vaazhgavae
    Meippar Koottam Vaazhththavae
    Meetpar Yesu Piranthu Vittarae – Oru Murai


  • தேவாதி தேவன் Devadhi Devan

    தேவாதி தேவன் மனுவேலனே
    தாவீதின் குல இராஜனே
    தூதர்கள் போற்றும் மெய் தேவனே
    திரியேக பரிபாலனே – 2

    பாரினில் வந்த பரமனே உம்மை
    பாடியே போற்றிடுவோம் – 2

    பாலன் பிறந்ததையே
    இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
    பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
    பரமன் நம் இயேசுவையே – 2

    மாட்டுத்தொழுவமொன்றில்
    ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
    மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
    மாஜோதியாய் பிறந்தார் – 2


    Devadhi Devan Manuvelanae
    Dhaveedhin Kula Rajanae
    Thoothargal Pottrum Meithevanae
    Thiriyega Paripaalanae – 2

    Paareenil Vandha Paramanae Ummai
    Paadiyae Pottriduvom – 2

    Paalan Piranthathaiyae
    Indru Paarinil Saatriduvom – 2
    Paadiduvom Pugzhaldhiduvom
    Parman Nam Yesuvaiyae – 2

    Maattu Thozhuvam Ondril
    Yezhai Maanida Roobam Dondu – 2
    Manmaiyai Veruthu Thazhmaiyai Thariththu
    Maajothiyaai Piranthaar – 2


  • கிறிஸ்துமஸ் வந்தாச்சு Christmas Vandhachi

    கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி
    பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி

    ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம்
    மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம்

    பெத்லேஹீமின் ஊரிலே சாத்திரத்தின் தொழுவத்தில்
    இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே

    மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும்
    இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று

    அவர் பிறந்த நர் செய்தி உலகெங்கும் பரவிடவே
    ஏசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்


    Christmas Vandhachi Jolly Jolly Jolly
    Paalagan Pirandhachi Happy Happy Happy

    Happy Christmas Naam Paaduvom
    Merry Christmas Naam Solluvom

    Bethlehemin Oorile Chatthirathin Thozhuvathile
    Yesu Rajan Pirandhare Unnai Ennai Meetidave

    Meipargalum Nyanigalum Uyarndhavarum Thazhndhavarum
    Yesu Rajanai Thozhudhargal Ulaga Ratchagar Ivarendru

    Avar Pirandha Nar Cheidhi Ulagengum Paravidave
    Yesuvi Naam Arivippom Satchiyaga Vazhndhiduvom


  • கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Christmas Kondattam

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    இயேசு பிறந்தாரே
    ஹாலே ….. ஹல்லேலூயா – 2
    ஆஅ ….ஆஅ ஜாலி ஜாலி
    ஒத் …ஒத் … கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் – 2
    இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
    நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2

    வனத்தில் தோறும் நச்சத்திரம்
    இயேசுவின் பிறப்பை வழிகத்தியதே
    இயேசு பிறந்ததினால் சந்தோசம் வந்தது
    இயேசு பிறந்ததினால் சமாதானம் வந்தது – 2

    இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
    நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2

    கிறிஸ்துமஸ் வந்தாலே
    ஆனந்தமே ….. இரட்சகர்
    பிறந்தாரே சந்தோசமே – 2
    மனிதரே இரட்சிக்கவே இயேசு பிறந்தாரே
    மனிதரின் பாவத்தை
    நீக்க வந்தாரே – 2

    இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
    நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2

    பலன் இயேசு பிறந்தாரே
    ஹல்லேலூயா
    உலகத்தை இரட்சிக்க உதித்தாரையா – 2
    அன்பை வெளிப்படுத்த பிறந்தாரே
    நமக்கு அன்பின் ரூபமாய் வந்தாரையா – 2


    Christmas Kondattam
    Yesu Pirantharae
    Halle….. Hallelujah – 2
    Aaa….Aaa Jolly Jolly
    Oh…Oh… Christmas Christmas – 2
    Yesu Pirantharae Hallelujah
    Nam Yesu Pirantharae Hallelujah – 2

    Vanathil Thorum Nachathiram
    Yesuvin Pirapai Valikathiyathae
    Yesu Piranthathinal Santhosam Vanthathu
    Yesu Piranthathinal Samathanam Vanthathu – 2

    Yesu Pirantharae Hallelujah
    Nam Yesu Pirantharae Hallelujah – 2

    Christmas Vanthalae
    Ananthamae….. Rachagar
    Pirantharae Santhosame – 2
    Manitharae Rachikavae Yesu Pirantharae
    Manitharin Pavathai
    Nekka Vantharae – 2

    Yesu Pirantharae Hallelujah
    Nam Yesu Pirantharae Hallelujah – 2

    Palan Yesu Pirantharae
    Hallelujah
    Ollakathai Rachikavae Othitharaiyaa – 2
    Anbai Vaelupadutha Pirantharae
    Namaku Anbin Ruvamai Vanthraiyaa – 2


  • ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Aatam Aadi Kondaduvom

    ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
    பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2
    பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
    ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம் – 2

    ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
    பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2

    நம் பாவங்களை போக்கினார்
    சாபங்களை நீக்கினார்
    பரிசுத்தமாய் மாற்றினாரே
    பாடிடுவோம் – 2

    எனக்காக பிறந்தாரே
    எனக்காக மரித்தாரே
    மூன்றாம் நாள் உயிர்த்தாரே
    நான் வாழவே – 2


    Aatam Aadi Kondaduvom
    Palagan Yesuvai Pugazhnthiduvom -2
    Parisutha Devan Paril Vantharae
    Oorengum Poi Paraisatriduvom -2

    Aatam Aadi Patu Padi
    Palagan Yesuvai Pugazhnthiduvom – 2

    Nam Pavaingalai Pokinar
    Saabangalai Neekinar
    Parisuthamai Matrinarae
    Paadiduvom – 2

    Yenakaga Pirantharae
    Yenakaga Maaritharae
    Moondram Naal Uirtharae
    Naan Vazhavae – 2


  • ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai

    ஆராதனை ஆராதனை
    அப்பா என் இயேசுவுக்கே – 2

    எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனை
    எங்கள் சேனை அதிபதியே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

    வான சிநேகிதரே ஆராதனை
    பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

    இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
    இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை


    Aarathanai Aarathanai
    Appa En Iyesuvukke – 2

    Engkal Jeya Kiristhuve Aarathanai
    Engkal Senai Athipathiye Aarathanai
    Aarathanai Sthuthi Aarathanai
    Aarathanai Sthoththira Aarathanai

    Vana Sinekithare Aarathanai
    Parinthu Pesum Kiristhuve Aarathanai
    Aarathanai Sthuthi Aarathanai
    Aarathanai Sthoththira Aarathanai

    Isravelin Nampikkaiye Aarathanai
    Isravelin Aaruthale Aarathanai
    Aarathanai Sthuthi Aarathanai
    Aarathanai Sthoththira Aarathanai


  • சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம் Saastrangaamai Vilugindrom

    சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம்
    மாபெரும் தேவனை பணிகின்றோம்
    சிங்காசனத்தின் முன்பாக
    ஸ்தோத்திர பலிகள் செய்கின்றோம்

    ஆதியும் அந்தமும் நீர்தானே
    தாவீதின் மைந்தன் நீர்தானே
    ஜோதிகளின் பிதா நீர்த்தனே
    இருந்தவர் இருப்பவர் வருபவர் நீர்தானே

    ஆம் ஆமென் அல்லேலூயா

    ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு
    கேரூபீன் சேராபீன் சேனைகளோடு
    சேரக்கூடாது ஒளியோடு
    நீதிமான்கள் கூட்டங்களோடு
    மஹா மஹா பரிசுத்தர் நீர்தானே
    ராஜா ராஜா ராஜாதி ராஜாவே

    சர்வ வல்லவரின் சிங்காசனம்
    நான்கு ஜீவன்களின் அலங்காரம்
    ஜீவனின் தோற்றம் அக்கினியே
    மின்னல்கள் தோன்றி ஓடிடுமே
    ஜீவதிபதியே இறங்குவார்
    அசைவாடும் ஆவியாய் இறங்குவார்

    மகிழ்ந்து பாடிடும் வறண்ட நிலம்
    காட்டு புஷ்பங்களும் செழித்தோங்கும்
    கர்த்தர் மகிமையும் காணப்படும்
    தள்ளாடும் முழங்கால்கள் பெலன் அடையும்
    ஆனந்தம் பரமாந்தமே
    சகலத்துக்கும் நன்றி இயேசுவே


    Saastrangaamai Vilugindrom
    Maaperum Thevanai Panikindrom
    Singasanathin Munpaaga
    Sthothira Paligal Seigindrom

    Aadhiyum Andhamum Neerthaanae
    Thaveethin Mynthan Neerthaanae
    Jothigalin Pitha Neerthanae
    Irunthavar Iruppavar Varubavar Neerthanae

    Aam Amen Hallelujah

    Aayiram Aayiram Thoothargalodu
    Cerubin Serabin Senaigalodu
    Sera Kodaatha Oliyodu
    Neethinmaangalin Kootangalodu
    Maha Maha Parisuthar Neerthanae
    Raja Raja Rajathi Rajave

    Sarva Vallavarin Singasanam
    Naangu Jeevangalin Alangaaram
    Jeevanin Thottram Akkiniye
    Minnalgal Thondri Oodiduthe
    Jeevathipatheye Iranguvaar
    Asaivaadum Aaviyai Iranguvaar

    Magilthu Paadidum Varanda Nilam
    Kaatu Pushpangalum Selithongum
    Karthar Magimaiyum Kaanapadum
    Thalladum Mulangaalum Belan Adaiyum
    Aanantham Paramaanthame
    Sagalathirkkum Nandri Yesuve