Author: admin

  • என் மேல் நினைவானவர் En Mel Ninaivaanavar

    என் மேல் நினைவானவர்
    எனக்கெல்லாம் தருபவர்
    என் பக்கம் இருப்பவர்
    இம்மானுவேல் அவர் – 2

    என் மேல் கண் வைத்தவர்
    கண் மணி போல் காப்பவர்
    கை விடாமல் அணைப்பவர்
    இம்மானுவேல் அவர் – 2

    ஆலோசனை தருபவர்
    அற்புதங்கள் செய்பவர்
    அடைக்கலமானவர்
    இம்மானுவேல் அவர் – 2

    சுகம் பெலன் தருபவர்
    சோராமல் காப்பவர்
    சொன்னதை செய்பவர்
    இம்மானுவேல் அவர் – 2

    என் இயேசுவே என் இயேசுவே
    என் இயேசுவே
    இம்மானுவேல் நீரே – 2


    En Mel Ninaivaanavar
    Enakkellam Tharubavar
    En Pakkam Iruppavar
    Immanuvel Avar – 2

    En Mel Kan Vaiththavar
    Kan Mani Pol Kaappavar
    Kai Vidaamal Anaippavar
    Immanuvel Avar – 2

    Aaloosanai Tharubavar
    Arputhangal Seibavar
    Adaikkalamaanavar
    Immanuvel Avar – 2

    Sugam Belan Tharubavar
    Soraamal Kappavar
    Sonnathai Seibavar
    Immanuvel Avar – 2

    En Yesuve En Yesuve En Yesuve
    Immanuvel Neere – 2


  • பெலனான என் இயேசுவே Belanaana En Yesuve

    பெலனான என் இயேசுவே
    உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் – 2
    நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய
    முடியாதைய்யா முடியாதைய்யா – 2

    என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
    உம் பெலத்தால் என்னை நிரப்புமே
    என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே
    உம் பெலத்தில் என்னை நிறுத்துமே – 2

    அன்பான என் இயேசுவே
    உம் அன்பினால் நான் வாழ்கிறேன் – 2
    அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ
    முடியாதையா முடியாதையா – 2

    நிறைவான என் இயேசுவே
    உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் – 2
    நீர் இல்லையென்றால் என் குறைகள் மாற
    முடியாதையா முடியாதையா – 2


    Belanaana En Yesuve
    Um Belaththinaal Naan Vazhgiren – 2
    Neerindri Ennaal Ondrume Seyya
    Mudiyaathayyaa Mudiyaathayya – 2

    Ennai Nirappume Ennai Nirappume
    Um Belaththaal Ennai Nirappume
    Ennai Niruththume Ennai Niruththume
    Um Belaththaal Ennai Niruththume – 2

    Anbaana En Yesuve
    Um Anbinaal Naan Vaazhgiren – 2
    Anbillai Endraal Naan Uyir Vaazha
    Mudiyaathtayyaa Mudiyaathayyaa – 2

    Niraivaana En Yesuve
    Um Niraivinaal Naan Vaazhgiren – 2
    Neerillai Endraal En Kuraigal Maara
    Mudiyaathayyaa Mudiyaathayyaa – 2


  • ராஃபா யேகோவா நீர் Raafa Yeghova Neer

    ராஃபா யேகோவா நீர் என்றென்றும் உயர்ந்தவர்
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2
    என்னை தேற்றும் தெய்வமே
    எந்தன் மீட்பர் இயேசுவே – 2

    யேகோவா ராஃபா என்று நான் அழைக்க
    சுகம் தந்தீர் நன்றி ஐயா – 2
    கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே
    கண்ணின் மணிபோல் என்னை காப்பவரே

    யேகோவா நிசியே என்று நான் அழைக்க
    வெற்றி தந்தீர் நன்றி ஐயா – 2
    சோர்ந்த நேரத்தில் என்னை தேற்றினீரே – 2

    யேகோவா ஈரே என்று நான் அழைக்க
    என்னை கண்டீரே நன்றி ஐயா – 2
    இரவும் பகலும் என்னை காண்பவரே
    இரவும் பகலும் என்னை காப்பவரே


    Raafa Yeghova Neer Endrendrum Uyarndhavar
    Parisuthar Parisuthar Parisuthar – 2
    Ennai Thaetrum Dheivamae
    Endhan Meetpar Yesuvae – 2

    Yeghova Raafa Endru Naan Azhaika
    Sugam Thandeer Nandri Aiyaa – 2
    Kannin Manipol Ennai Kaathavarae
    Kannin Manipol Ennai Kaapavarae

    Yeghova Nissiye Endru Naan Azhaika
    Vetri Thandheer Nandri Aiyaa – 2
    Sorndha Naerathil Ennai Thaettrinirae – 2

    Yeghova Eerae Endru Naan Azhaika
    Ennai Kandeerae Nandri Aiyaa – 2
    Iravum Pagalum Ennai Kaanbavarae
    Iravum Pagalum Ennai Kaapavarae


  • இயேசு கதவைத் திறந்தால் Yehsu Kathavai thiranthal

    இயேசு கதவைத் திறந்தால்
    யாராலும் அடைக்க முடியவில்லை
    இயேசு கதவை அடைத்தால்
    யாராலும் திறக்க முடியவில்லை – 2
    திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
    எனக்காய் கதவை திறந்திடுவார்
    அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
    எதிரியின் கதவை அடைத்திடுவார் – 2

    சத்துரு ஒரு வழியாய் வந்தால்
    ஏழு வழியாய் ஓடிப்போவான்
    துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்
    கிருபையால் என்னை தாங்கிடுவார் – 2 – இயேசு

    வெண்கலக்கதவுகளை உடைத்து
    பாதைகளெல்லாம் சமமாக்குவார்
    எரிகோவின் மதிலும் யோர்தானும்
    ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் – 2 – இயேசு


    Yehsu Kathavai thiranthal
    Yaraalum adaika mudiyavillai
    Yeshu Kathavai adaithaal
    Yaraalum thirakka mudiyavillai -2
    Thiranthiduvar Kathavai thiranthiduvaar
    Yenakkai Kathavai thiranthiduvar
    Adaithiduvar Kathavai adaithiduvaar
    Ethiriyin Kathavai adaithiduvaar – 2

    Sathuru oru vazhiyaai vanthaal
    Ezhu vazhiyaai Oodip povaan
    Thunbangal nerudum velaigallil – Avar
    Kirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu

    Vengalak Kathavugalai udaithu
    Pathaigalellam samamakkuvar
    Yerigovin Mathilum Yorthanum
    Ovvonraai Vazhi matruduvaar – 2 – Yesu


  • உன் தலையை உயர்த்துவார் Un Thalaiyai Uyarthuvaar

    உன் தலையை உயர்த்துவார்
    உன்னை நிலை நிறுத்திடுவார்
    உன் தடைகளை தகர்த்திடுவார்
    உனக்கு முன்னே நடந்திடுவார் – 2

    புது கிருபைகள் புது நன்மைகள்
    இந்த ஆண்டிலும் காண செய்வாரே
    வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே – 2

    உன்னை மகிமைப்படுத்துவார்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை மகிழ்ச்சியாக்குவார்
    நீ தலை குனிந்து போவதில்லை – 2
    நீ தலை குனிந்து போவதில்லையே

    துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
    இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார் – 2
    இதுவரை உன்னை நடத்தின தேவன்
    இனியும் உன்னை மறப்பதில்லை – 2

    உன்னை மகிமைப்படுத்துவார்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை மகிழ்ச்சியாக்குவார்
    நீ தலை குனிந்து போவதில்லை – 2
    நீ தலை குனிந்து போவதில்லையே

    புது கிருபைகள் புது நன்மைகள்
    இந்த ஆண்டிலும் காண செய்வாரே
    வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே – 2

    உன்னை மகிமைப்படுத்துவார்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை மகிழ்ச்சியாக்குவார்
    நீ தலை குனிந்து போவதில்லை – 2
    நீ தலை குனிந்து போவதில்லையே


    Un Thalaiyai Uyarthuvaar
    Unnai Nilai Niruthiduvaar
    Un Thadaigalai Thagarthiduvaar
    Unaku Munae Nadanthiduvaar – 2

    Pudhu Kirubaigal Pudhu Nanmaigal
    Indha Aandilum Kana Seivarae
    Vakuthathangal Niraiveridum Avaralae – 2

    Unnai Magimaipaduthuvaar
    Nee Vetkapatu Povathilai
    Unnai Magizhchiyakuvaar
    Nee Thalaiguninthu Povathilai – 2
    Nee Thalaiguninthu Povathilaiyae

    Thunbathai Kanda Natkalukidai
    Rettipaga Unnai Uyarthiduvaar – 2
    Ithu Varai Unnai Nadathina Dhevan
    Inium Unnai Marapathilai

    Unnai Magimaipaduthuvaar
    Nee Vetkapatu Povathilai
    Unnai Magizhchiyakuvaar
    Nee Thalaiguninthu Povathilai – 2
    Nee Thalaiguninthu Povathilaiyae

    Pudhu Kirubaigal Pudhu Nanmaigal
    Indha Aandilum Kana Seivarae
    Vakuthathangal Niraiveridum Avaralae – 2

    Unnai Magimaipaduthuvaar
    Nee Vetkapatu Povathilai
    Unnai Magizhchiyakuvaar
    Nee Thalaiguninthu Povathilai – 2
    Nee Thalaiguninthu Povathilaiyae


  • சர்வ வல்லவரே நீர் Sarva Vallavare Neer

    சர்வ வல்லவரே நீர் என்றும் உயந்தவரே
    எந்தன் அடைக்கலம் நீரே
    வாக்கு தந்தவரே நீர் உண்மை உள்ளவரே
    எந்தன் நம்பிக்கை நீரே

    எல் – ஷடாய் சர்வ வல்லவர்
    எல் – ஷடாய் நீர் உயர்ந்தவர்
    எல் – ஷடாய் நீர் பெரியவர்
    நீரே – 2

    பெலவீன நேரத்தில் உன் பெலனை கண்டனே
    சோர்ந்துபோன நேரத்தில் நீர் என்னை உயர்த்தினீரே – 2
    என் பெலனே என் துதியே
    என் ஜெயமே நீரே – 2

    ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை தேடி வந்தீரே
    மறக்கப்பட்ட நேரத்தில் என்னை நினைத்தீரே – 2
    என் அன்பே என் உயிரே
    என் உறவே நீரே – 2

    கைவிடப்பட்ட நேரத்தில் நீர் என் கரம் பிடித்தீரே
    ஒன்னுமில்ல நேரத்தில் என்னை ஆசிர்வதித்தீரே – 2
    என் அழகே என் இயேசுவை
    உம்மை நேசிப்பேன் என்றுமே


    Sarva Vallavare Neer Endrum Uyanthavare
    Endhan Adaikalam Neerae
    Vaku Thandhavare Neer Unmai Ullavare
    Endan Nambikai Neerae

    El Shadaai Sarve Vallavar
    El Shadaai Neer Uyarnthaver
    El Shadaai Neer Periyavar
    Neerae – 2

    Belavina Nerathil Un Belanai Kandane
    Sorthupona Nerathil Neer Ennai Uyarthineerae – 2
    En Belanae En Thuthiyae
    En Jayamae Neerae – 2

    Odhukapatta Nerathil Ennai Thedi Vandeerae
    Marakapata Nerathil Ennai Ninaithirae – 2
    En Anbe En Uyirae
    En Uravai Neerae – 2

    Kaividapata Nerathil Neer En Karam Piditherae
    Onumila Nerathil Ennai Ashirvadithirae – 2
    En Alagai En Yesuvai
    Ummai Nessipean Endrumai


  • பரிசுத்த ஸ்தலத்திலே Parisutha Sthalathilae

    பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே
    உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2

    நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
    உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2
    நீர் பரிசுத்தர்

    கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்
    கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2
    அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்
    அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே

    யாரை நான் அனுப்புவேன் என்றவரே
    என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2
    உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே
    உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே


    Parisutha Sthalathilae veetrirukkum Devanae
    Ummai kandida thozhuthida vaanjikkiren Deivamae-2

    Neere Parisuthar Neerae Parisuthar
    Unthan magimayale boomi nirambitrae
    Neer parisuthar

    kandathaal athamaanaen endru anjinen
    Karayaana enthan paavam athamaakkineer-2
    Asuththanaai vaazhntha ennai parisuththanaakineer
    Arul vaakku enthan naavil vaiththavarae-2 -Parisutha sthalathile

    yarai naan anuppuven endravarae
    Ennayum anuppidum um sevaikkaai-2
    Umakkaga vazhvathe enathu vaanjayae
    Um sitham pol ennai nadathidumae-2-Parisuththa sthalathilae


  • Ondrum illadha ஒன்றும் இல்லாத

    ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே – 2
    தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே

    நன்றி நன்றி நன்றி அய்யா – 2
    வாழ்நாள் முழுவதுமாய் – 4

    மறவேன் உந்தன் கிருபையை (இரக்கத்தை) நான்
    தருவேன் என்னை முழுவதுமாய் – 2 மீண்டும்
    மீண்டும் இடறி விழுந்தாலும் கரம் நீட்டி என்னையும் தூக்கினீரே
    உங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும் கரங்களினால் என்னை மீட்டவரே

    நன்றி நன்றி நன்றி அய்யா – 2
    வாழ்நாள் முழுவதுமாய் – 4

    சிலுவை அன்பை பார்த்ததினால் பிழைத்து கொண்டேன் கிருபையினால்
    ரத்தம் சிந்தி மீட்டதினால் நிலை நிற்கிறேன் கிருபையினால்
    உங்க கூட எப்போதும் உறவாட ஆவியினால் என்னை நிரப்பிடுமே
    உங்க கூட என்றென்றும் நடந்திட மகிமையினால் என்னை நிரப்பிடுமே

    நன்றி நன்றி நன்றி அய்யா – 2
    வாழ்நாள் முழுவதுமாய் – 4


    Ondrum illadha ennai um kirubaiyaal azhaithavarae – 2
    Thaguthi illadha ennai um Magimaiyaal uyarthineerae – 2

    Nandri nandri nandri ayya – 2
    Vaazh naal muzhuvathumaai – 4

    Maraven undhan kirubaiyai (irakkathai) naan
    Tharuven ennai muzhuvathumaai – 2
    Meendum meendum idari vizhunthaalum karam
    Neeti ennaiyum thookineerae
    Unga anbin nimitham ennai endrum karangalinaal ennai meetavarae

    Nandri nandri nandri ayya – 2
    Vaazh naal muzhuvathumaai – 4

    Siluvai anbai paarthathinaal Pizhaithu konden kirubaiyinaal
    Tatjana sinthi meetathinaal Nilai nirkiren kirubaiyinaal
    Unga kooda eppodhum uravaada Aaviyinaal ennai nirappidumae
    Unga kooda endrendrum nadanthida magimaiyinaal ennai nirappidumae

    Nandri nandri nandri ayya – 2
    Vaazh naal muzhuvathumaai – 4


  • உனக்காய் வழிகளை Unakkai Vazhigalai

    உனக்காய் வழிகளை
    திறக்கும் ஏல் ஏலோகே
    உனக்காய் அற்புதம்
    செய்யும் ஏல் ஹக்கவத் – 2

    ஏலோகே ஏலோகே
    ஏல் ஏலோகே – 2

    எகிப்தில் வாழ்ந்த எந்தன்
    சிறுமையை பார்த்த எல்ரோயியே – 2
    தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
    என்னையும் சுமந்தீரே – 2

    வெறும் கையனாய் நின்ற என்னை
    வியந்து பார்க்க வைத்தீரய்யா – 2
    கோழியும் தன் செட்டையின் மறைவில்
    மூடுவது போல் மூடினீர் – 2


    Unakkai Vazhigalai
    Thirakkum El Elohe
    Unakkai Arputham
    Seiyum El Hakavod – 2

    Elohe Elohe El Elohe – 2

    Egypthil Vaazhntha Enthan
    Sirumaiyai Paartha El Rohiye – 2
    Thagappan Than Tholil Sumapathu Pola
    Ennayum Sumantheere – 2

    Verumkaiyanai Nindra Ennai
    Viyanthu Paarka Vaitheeraiya – 2
    Kozhiyum Than Settayin Mariavil
    Mooduvathu Pol Moodineer – 2


  • எல்லாமே நீர் இயேசுவே Ellame Neer Yesuvae

    எல்லாமே நீர் இயேசுவே
    எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ – 2

    பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
    பொல்லாப்புக்கு விடுவதில்லை – 2
    மகனாய் ஏற்றுக்கொண்டீரே
    இராஜ வஸ்திரம் தந்தீரே – 2

    மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
    என்னை தேடி வந்து அரவணைத்தீரே – 2
    கரிசனையானவரே- நீர்
    கருணை உள்ளவரே – 2

    எல்லாவற்றையும் நான் இழந்தேனே
    எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர் – 2
    உம் பந்தியில் அமர்ந்துகொள்ள
    அந்த தகுதியை எனக்கு தந்தீரே – 2


    Ellame Neer Yesuvae
    Enekellamae Neer Yesuvae – 2

    Polathavanai Naan Irunthalum
    Pollapuku Vithuvathillai – 2
    Maganai Yettru Kondireh
    Raja Vasthiram Tanthireh – 2

    Manithargal Ennai Talli Vaithalum
    Ennai Theadi Vanthu Aravainaithireh – 2
    Karusanaiyanavarae
    Neer Karunai Ullavarae – 2

    Ellavatraiyum Naan Elanthanae
    Ellavatraiyum Thirumbavum Tanthir – 2
    UmPanthiyil Amarnthukolla
    Thaguthiyai Enekku Tanthir – 2