Author: admin

  • Paaduven Aaduven பாடுவேன் ஆடுவேன்

    பாடுவேன் ஆடுவேன்
    மகிழ் கொண்டாடுவேன்
    நன்மைகள் செய்தாரே
    எந்நாளும் துதிப்பேன்

    அச்சமில்லை பயமும் இல்லையே
    நேசருக்காய் ஆடிப்பாடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா

    இயேசுவின் நாமத்தில்
    சாத்தானை ஜெயிப்பேன்
    கிறிஸ்துவின் இரத்தத்தால்
    நுகங்கள் முறிப்பேன்

    இச்சையை ஜெயிப்பேன்
    எட்டி எட்டி உதைப்பேன்
    கர்த்தரின் பெலத்தால்
    மோட்சம் சேர்வேன்


    Paaduven aaduven Lyrics in English

    paaduvaen aaduvaen
    makil konndaaduvaen
    nanmaikal seythaarae
    ennaalum thuthippaen

    achchamillai payamum illaiyae
    naesarukkaay aatippaaduvaen
    allaelooyaa allaelooyaa

    Yesuvin naamaththil
    saaththaanai jeyippaen
    kiristhuvin iraththaththaal
    nukangal murippaen

    ichchaைyai jeyippaen
    etti etti uthaippaen
    karththarin pelaththaal
    motcham servaen

  • Paaduvaen Um Pugazhai பாடுவேன் உம் புகழை

    பாடுவேன் உம் புகழை பாடுவேன்
    நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

    என்னை கண்ட தெய்வமே
    நான் உம்மை பாடுவேன்
    என்னை காத்த இயேசுவே
    நான் என்றும் பாடுவேன்

    குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    நான் கலங்கிடேன்
    கலங்காதே என்று சொல்லி
    என்னை தேற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை

    எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
    நான் பயப்படேன்
    உந்தன் சிறகுகளால் என்னை
    மூடி என்றும் காத்தீரே
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை

    கண்ணீரின் பள்ளதாக்கில்
    நடந்தாலும் நான் பயந்திடேன்
    என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை


    Paaduvaen Um Pugazhai Paaduvaen
    Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen

    Ennai Kanda Dheivamae
    Nan Ummai Paaduvaen
    Ennai kaatha yesuvae
    Nan endrum paaduvaen

    Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
    Kalangadhae endru solli ennai thaetrineer
    Yesu ennodu irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Yedhirpugal ennai soozhindhalum
    Naan Bayapadaen
    Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae
    Yesu ennodu irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Kanneerin pallathakil nadandhalum
    Naan Bayapadaen
    En kanneerai neer kalipagavae Maatrineer
    Yesu ennodu irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

  • Paaduvaen Photruvaen பாடுவேன் போற்றுவேன்

    பாடுவேன் போற்றுவேன்
    உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
    உம்மை நம்புவேன் நேசிப்பேன்
    உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
    பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்
    பாவத்திலிருந்து மீட்டீரே
    உலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்
    பேர் சொல்லி என்னை அழைத்தீரே

    இயேசுவே என் இயேசுவே
    இனி நான் வாழ்வது உமக்காக

    தேடுவேன் நாடுவேன்
    உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
    உம்மை ஆராதிப்பேன்
    துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்
    நன்மைகள் என்றும் செய்பவரே
    நன்றியுடன் நான் பாடிடுவேன்
    அதிசயமாய் என்னை நடத்தினீரே
    உம் புகழை என்றும் பாடிடுவேன்

    என்னை காக்க மண்ணில் பிறந்தார்
    என்னை மீட்க நீர் வந்தீர்
    என் பாவம் யாவும் போக்க
    எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
    உம்மை போல் தெய்வம் இல்லை
    உன் அன்பிற்கு இணையே இல்லை
    எனக்காய் உம்மைத் தந்தீர்
    சாத்தானின் தலையை வெல்வீர்
    தாயைப்போல் என்னை நேசிக்கும் தேவன்
    உம்மையும் நேசிப்பார் வா வா
    தங்கமோ வெள்ளியோ தேவையில்லை
    உந்தன் உள்ளத்தை மட்டும் தாதா
    எந்நாளும் என்றென்றும்
    என் வாழ்க்கை உமக்காக
    எங்கேயும் எப்போதும்
    என் வாழ்வே இயேசுவுக்காக


    Paaduvaen photruvaen
    uyarthi uyarthi paadi duvaen
    ummai nambhuvaen nesipaen
    Ummakai endrum vazhinduvaen
    Paava Vazhkkai vazhinduvaen
    Paavathil irrundhu meeteerae
    Ullagathin pinnal sendrirundhaen
    peyer solli ennai azhaithirae

    Yesuvae en yesuvae
    ini naan vaazhvadhu ummakkaga

    Thedivaen naaduvaen
    Ummakkai uzhiyam seyidhiduvaen
    Ummai aaradhipaen
    thudhithiduveen ummai endrum uyarthiduvaen
    nanmaigal endrum seybavarae
    Nandriyudan naan padiduvaen
    Adhisayamai ennai nadathinirae
    Um pugazhai endrum padiduvaen

    Rap
    Ennai kaakka mannil pirandhir
    ennai meetka neer vandheer
    En paavam yavum phokka
    Ennakkai siluvaiyil neer marithir
    Ummai pola deivam illai
    Um anbirkku inaiyae illai
    yenakai ummai thantheer
    Saathanin thalaiyai vendreer
    Thaiyai pola ennai nesikum deivam
    Unnayum Nesipaar va va
    Thangamo velliyo thevaiyillai
    Undhan ullathai mattum tha tha
    Ennallum endrendrum
    En vazhkai ummakkaga
    Engayum eppodhum
    En vazhkai yesuvukaga

    There’s no one like Jesus -2

  • Paaduvaen Paravasamaakuvaen பாடுவேன் பரவசமாகுவேன்

    பாடுவேன் பரவசமாகுவேன்
    பறந்தோடும் இன்னலே

    1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
      நிலை கலங்கி ஆழ்த்துகையில்
      அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து
      கடத்தியே சென்ற கர்த்தனை
    2. என்று மாறும் எந்தன் துயரம்
      என்றே மனமும் ஏங்குகையில்
      மாராவின் கசப்பை மதுரமாக்கி
      மகிழ்வித்த மகிபனையே
    3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
      உதவுவாரற்றுப் போகையில்
      கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து
      தாகம் தீர்த்த தயவை
    4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
      பட்டினி சஞ்சலம் நேர்கையில்
      வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
      காணாத மன்னா இயேசுவே
    5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே
      ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
      துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி
      ஜெயகீதம் ஈந்தவரை

    Paaduvaen Paravasamaakuvaen Lyrics in English

    paaduvaen paravasamaakuvaen
    paranthodum innalae

    1. alaiyalaiyaay thunpam soolnthu
      nilai kalangi aalththukaiyil
      alai kadal thaduththu naduvali viduththu
      kadaththiyae senta karththanai
    2. entu maarum enthan thuyaram
      ente manamum aengukaiyil
      maaraavin kasappai mathuramaakki
      makilviththa makipanaiyae
    3. ontumillaa verumai nilaiyil
      uthavuvaarattup pokaiyil
      kanmalai pilanthu thannnneeraich suranthu
      thaakam theerththa thayavai
    4. vanaanthiramaay vaalkkai maari
      pattini sanjalam naerkaiyil
      vaana mannaavaal njaanamaay poshiththa
      kaannaatha mannaa Yesuvae
    5. ennnniranthu ethirppinootae
      aelanamum sernthu thaakkaiyil
      thunpa perukkilum inpamukam kaatti
      jeyageetham eenthavarai
  • Paadum Paadal பாடும் பாடல்

    பாடும் பாடல் இயேசுவுக்காக
    பாடுவேன் நான் எந்த நாளுமே
    என் ராஜா வண்ண ரோஜா
    பள்ளத்தாக்கின் லீலி அவரே

    அழகென்றால் அவர் போலே
    யார்தான் உண்டு இந்த லோகத்தில்
    வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
    என் உள்ளம் மகிழ்வாகுதே

    அன்பினிலே என் நேசர்க்கே
    என்றென்றுமே இணையில்லையே
    என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
    என் நேசர் அன்பில் மகிழ்வேன்

    தெய்வம் என்றால் இயேசுதானே
    சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
    என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
    நான் பாடுவேன் பாமாலைகள்


    Paadum Paadal Lyrics in English

    paadum paadal Yesuvukkaaka
    paaduvaen naan entha naalumae
    en raajaa vannna rojaa
    pallaththaakkin leeli avarae

    alakental avar polae
    yaarthaan unndu intha lokaththil
    vannna maeniyonae ennnnip paatidavae
    en ullam makilvaakuthae

    anpinilae en naesarkkae
    ententumae innaiyillaiyae
    ennai meettidavae tham jeevan thanthaar
    en naesar anpil makilvaen

    theyvam ental Yesuthaanae
    saavai ventu uyirththelunthaarae
    en pon nesarin maarpil saaythonaaka
    naan paaduvaen paamaalaikal

  • Paadiye Paranai Thuthi Maname பாடியே பரனை துதி மனமே துதி மனமே

    பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
    கொண்டாடி துதி தினமே – (2)

    சரணங்கள்

    1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
      நாதனை துதி மனமே
      நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
      நாதனை துதி மனமே
      ஆதரவாய் எம்மை காத்ததினாலே
      தேவனை துதி மனமே — பாடியே
    2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
      நாதனை துதி மனமே
      என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
      நாதனை துதி மனமே
      கானகமதிலே ஜீவ ஊற்றான
      தேவனை துதி மனமே — பாடியே

    Paadiye Paranai Thuthi Maname Lyrics in English

    paatiyae paranai thuthi manamae, thuthi manamae
    konndaati thuthi thinamae – (2)

    saranangal

    1. senta naalellaam karuththudan kaaththa
      naathanai thuthi manamae
      naalukku naalaay seypala nanmaikkaay
      naathanai thuthi manamae
      aatharavaay emmai kaaththathinaalae
      thaevanai thuthi manamae — paatiyae
    2. naanila thanilem paavangal pokkiya
      naathanai thuthi manamae
      entum emmael vaiththa maaridaa anpirkaay
      naathanai thuthi manamae
      kaanakamathilae jeeva oottaாna
      thaevanai thuthi manamae — paatiyae
  • Paadinaal Paaduvaan Yesu Baalanai பாடினால் பாடுவேன் இயேசு பாலனை

    பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
    உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
    தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
    உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்

    1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
      என்னரும் போதனை இயம்பி நின்றிரே
      கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
      கடையர் களித்திட கதி தருவீரே
    2. பாவை உம்மை தொட்டதினாலே
      பறந்து போனதே அவள் தன் நோயும்
      பாவி எந்தன் பாவ வினைகள்
      பறந்து போகுமே உன்னை நினைத்தால்

    Paadinaal Paaduvaan Yesu Baalanai Lyrics in English

    paatinaal paaduvaen Yesu paalanai
    unnaip paatinaal thunpam neengidum
    thaetinaal thaeduvaen Yesu thaevanai
    unnarul naan thaeduvaen thaeduvaen

    1. panniru vayathinil paalakan neerae
      ennarum pothanai iyampi nintirae
      kotaiyil kitaiththa kulir ilaneerae
      kataiyar kaliththida kathi tharuveerae
    2. paavai ummai thottathinaalae
      paranthu ponathae aval than Nnoyum
      paavi enthan paava vinaikal
      paranthu pokumae unnai ninaiththaal
  • Paadi Thuthi Maname பாடித் துதி மனமே

    பாடித் துதி மனமே பரனைக்
    கொண்டாடித் துதி தினமே

    நீடித்த காலமதாகப் பரன் எமை
    நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

    தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
    செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
    மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
    விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

    சொந்த ஜனமாக யூதர் இருந்திட
    தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
    மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
    மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்

    எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
    எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
    எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
    இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை


    Paadi thuthi maname Lyrics in English

    paatith thuthi manamae paranaik
    konndaatith thuthi thinamae

    neetiththa kaalamathaakap paran emai
    naesiththa patchaththai vaasiththu vaasiththu

    theerkkatharisikalaik konndu munnurach
    seppin thaevaparan inthak kaalaththil
    maarkkamathaakak kumaaranaik konndu
    vilakkina anpai vilainthu thiyaaniththup

    sontha janamaaka yoothar irunthida
    tholaiyil kidantha puramaantharaam emai
    manthaiyil serththup paraaparan thammutai
    maintharkalaakkina santhoshaththukkaakap

    eththanai theerkkar anaeka apposthalar
    eththanai pothakarkal iraththach saatchikal
    eththanai vaenndumo aththanaiyum thanthingu
    iththanaiyaayk kirupai vaiththa nam karththanai

  • Paadi Pugalven Naan பாடி புகழ்வேன் நான்

    பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
    அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
    அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்
    அவர் இஸ்ரவேலின் வல்லவரே

    பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா
    கிருபையை புகழ்ந்திடுவேன்

    எளியவனை நீர் உயர்த்திடுவீர்
    ஆயிரமாக பெருக செய்வீர்

    கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
    குறைகள் தீர்த்திட வருபவரே

    பகைகும் ஜனங்களின் நடுவிலே
    பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்


    paadi pukazvaen naan aadi makizvaen

    avar nanmaikalai enkum solluvaen
    appaa samukaththil aadi paadi makiznthiruppaen
    avar isravaelin vallavarae

    paaduvaen allaeluuyaa thuthi allaeluuyaa
    kirupaiyai pukaznthiduvaen

    ealiyavanai neer uyarththiduveer
    aayiramaaka peruka seiveer

    kuuppitta naeraththil pathil aliththu
    kuraikal theerththida varupavarae

    pakaikum janankalin naduvinilae
    panthiyai koduththu uyarththiduveer

  • Paadham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும்

    பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்

    நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற்
    காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய-

    சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
    பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்-

    வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
    ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்-

    போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
    நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்-

    நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல்
    ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்-

    பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
    சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்


    Paadham Ondre Vendum Lyrics in English

    paatham onte vaenndum :-inthap
    paaril enakku mattethum vaenndaam -un

    naathanae, thunga mey-vaethanae ,pongunar

    kaathaludan thuyya-thoothar tholunj seyya-

    seerum puyalinaal-vaarithi pongidap

    paaril nadanthaarpol-neermael nadantha un-

    veesum kamal konnda-vaasanaith thailaththai

    aasaiyudan-mari-poosip pannintha por-

    pokkidamatta em aakkinai yaavaiyum,

    neekkidavae maran-thookki nadantha nar-

    naanilaththor uyar-vaan nilath thaeraval

    aanni thulaiththidath-thaanae koduththa un-

    paatham atainthavark-kaatharavaayp pira

    saatham arul yaesu-naathanae, entum un-