Author: admin

  • Mankalam Mankalam Mankalamae மங்களம் மங்களம் மங்களமே

    மங்களம் மங்களம் மங்களமே (2)

    மணமக்கள் மாண்புரவே
    மணவாழ்வு இன்புரவே
    மணவாளன் இயேசுவின்
    மாசில்லா ஆசியால்
    மணமக்கள் இணைந்திடவே
    ஆ..ஆ..ஆ..

    ஆதாமும் ஏவாளோடும்
    ஆபிரகாம் சாராளோடும்
    ஆதியில் ஆண்டவன்
    அனாதி திட்டம்போல்
    ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
    ஆ..ஆ..ஆ..

    இல்லறம் நிலங்கிடவே
    நல்லறம் தொலங்கிடவே
    வல்லவன் வான்பதன்
    வழிகாட்டும் வார்த்தையில்
    பல்லாண்டு வாழ்ந்திடவே
    ஆ..ஆ..ஆ..


    Mankalam Mankalam Mankalamae Lyrics in English

    mangalam mangalam mangalamae (2)

    manamakkal maannpuravae
    manavaalvu inpuravae
    manavaalan Yesuvin
    maasillaa aasiyaal
    manamakkal innainthidavae
    aa..aa..aa..

    aathaamum aevaalodum
    aapirakaam saaraalodum
    aathiyil aanndavan
    anaathi thittampol
    aannpennnum sernthidavae
    aa..aa..aa..

    illaram nilangidavae
    nallaram tholangidavae
    vallavan vaanpathan
    valikaattum vaarththaiyil
    pallaanndu vaalnthidavae
    aa..aa..aa..

  • Manithan Yaarenru மனிதன் யாரென்று

    மனிதனை அலட்சியம் செய்யாதே

    மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது
    அவன் உருவம் கண்டு இவன் தான் என்று
    சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2)

    1. மனிதனைப் படைத்த கடவுள் அவனை
      மண்ணென்று சொன்னாரே – அவன்
      மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே
      உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே
      அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று
      முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே
    2. உலகினில் பிறந்த மனிதர் அனைவரும்
      தனித்தனி மனிதர்களே .. இந்த
      மனிதர்கள் கூட்டத்தைத் தேடியே செல்வோர் தேவனின் பிரியர்களே
      பரந்த இத்தேசம் இயேசுவைக் கண்டால் எத்தனை நன்மை பெறும்
      விரைந்தே உழைப்போம் அழுதே ஜெபிப்போம்
      தொழுவோம் அவர் பாதம் இந்த தேசத்திற்கே சேஷமம்

    Manithan Yaarenru Lyrics in English

    manithanai alatchiyam seyyaathae

    manithan yaarentu ulakil yaarukkum theriyaathu
    avan uruvam kanndu ivan thaan entu
    sollividaathae avanaith thallividaathae (2)

    1. manithanaip pataiththa kadavul avanai
      mannnnentu sonnaarae – avan
      mannnnentu kanndum thaetiyae vanthu jeevanaith thanthaarae
      uravum anpum ullavan manithan enpathai maravaathae
      avan palakkam kanndu ivan thaan entu
      mutivu seyyaathae avanai ilanthuvidaathae
    2. ulakinil pirantha manithar anaivarum
      thaniththani manitharkalae .. intha
      manitharkal koottaththaith thaetiyae selvor thaevanin piriyarkalae
      parantha iththaesam Yesuvaik kanndaal eththanai nanmai perum
      virainthae ulaippom aluthae jepippom
      tholuvom avar paatham intha thaesaththirkae seshamam
  • Manitha O Manitha மனிதா ஓ மனிதா

    மனிதா ஓ மனிதா

    நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2

    நினைவில் வை நினைவில் வை

    நினைவில் வை ஓ மனிதா

    இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்

    இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம்

    இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம்

    இருள்தனைக் களைவோம் அருள்தனை அணிவோம்

    கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்

    கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும்

    சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும்

    சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்


    Manitha O Manitha Lyrics in English

    manithaa o manithaa

    nee mannnnaayirukkintay mannnukkae thirumpuvaay -2

    ninaivil vai ninaivil vai

    ninaivil vai o manithaa

    irakkaththin kaalam ithu ena unarvom

    irakkaththin perukkaiyaith thaeti peruvom

    iraivanai ninaippom avar vali nadappom

    irulthanaik kalaivom arulthanai annivom

    kallaana ithayam namakkini vaenndaam

    kadavulin ithayam naam pera vaenndum

    saampalum oruththalum jepa thapam yaavum

    saavinai aliththu vaalvinaik konarum

  • Manitha anbu mari pogum மனித அன்பு மாறிப்போகும்

    மனித அன்பு மாறிப்போகும்
    மாறாத அன்பு இயேசுவின் அன்பு
    நிலையில்லா இந்த உலகிலே
    நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு

    கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
    கடந்து போனால் காணாமல் மறையும்
    பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
    பரமன் இயேசுவின் அன்பை பார்

    பாசம் காட்டி வேஷம் போடும்
    மனிதன் அன்பும் மாயை தானே
    ஆணிகள் ஏற்று அழகை இழந்து
    அன்பர் இயேசுவின் அன்பை பார்

    வாழத்துடிக்கும் மானிடனே
    சாகத் துடித்த இயேசுவைப் பார்
    உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
    உன்னதர் இயேசுவின் அன்பை பார்


    Manitha anbu mari pogum Lyrics in English

    manitha anpu maarippokum
    maaraatha anpu Yesuvin anpu
    nilaiyillaa intha ulakilae
    nilaiththirukkum Yesuvin anpu

    kaanal neeraay kannnukku theriyum
    kadanthu ponaal kaannaamal maraiyum
    pirinthu pokaamal parinthu paesum
    paraman Yesuvin anpai paar

    paasam kaatti vaesham podum
    manithan anpum maayai thaanae
    aannikal aettu alakai ilanthu
    anpar Yesuvin anpai paar

    vaalaththutikkum maanidanae
    saakath thutiththa Yesuvaip paar
    uthiram sinthi uyirai koduththa
    unnathar Yesuvin anpai paar

  • Manidhanin Aalosanai Veenanadhu மனிதனின் ஆலோசனை வீணானது

    மனிதனின் ஆலோசனை வீணானது
    தேவனின் ஆலோசனை மேலானது

    1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
      தேவன் நிறுத்தி வைப்பார்
      நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
      தேவன் நடத்தி வைப்பார்
    2. அறிவினால் உன் பெலத்தினால்
      நடத்திட முடியாது
      ஜெபத்தினால் அவர் கிருபையால்
      நடக்கும் தவறாது
    3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
      மனதிலே எண்ணம் உனக்கு
      நடந்ததும் இனி நடப்பதும்
      இறைவன் மனக்கணக்கு

    Manidhanin Aalosanai Veenanadhu Lyrics in English

    manithanin aalosanai veennaanathu
    thaevanin aalosanai maelaanathu

    1. nadanthidum entu manithan kooruvaan
      thaevan niruththi vaippaar
      niruththuvom entu manithan koorinaal
      thaevan nadaththi vaippaar
    2. arivinaal un pelaththinaal
      nadaththida mutiyaathu
      jepaththinaal avar kirupaiyaal
      nadakkum thavaraathu
    3. ithaich seyvaen naan athaich seyvaen
      manathilae ennnam unakku
      nadanthathum ini nadappathum
      iraivan manakkanakku
  • Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

    மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

    சரணங்கள்

    1. மங்கள நித்திய மங்கள நீ
      மங்கள முத்தியும் நாதனும் நீ
      எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
      உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
      அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம்
    2. மணமகன் …………………………
      மணமகள் ……………………………..
      மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
      பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
      துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம்
    3. சங்கை நித்திய நாதனும் நீ
      பங்கமில் சத்திய போதனும் நீ
      மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
      இத்தரை இத் திருமணத்தின் இருவர்
      ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே — மங்களம்

    Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane Lyrics in English

    mangalam selikka kirupai arulum mangala naathanae

    saranangal

    1. mangala niththiya mangala nee
      mangala muththiyum naathanum nee
      engal pungava nee engal thungava nee
      uththama saththiya niththiya thaththuva meththa makaththuva
      aththanuk kaththanaam aapiraam thaeva nee — mangalam
    2. manamakan …………………………
      manamakal ……………………………..
      maanuvaelarkkum makaanupavarkkum
      pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith
      thuththiyam seythidum saththiya vaetharkkum — mangalam
    3. sangai niththiya naathanum nee
      pangamil saththiya pothanum nee
      mangaa maatchimai nee thangak kaasiyum nee
      iththarai ith thirumanaththin iruvar
      oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae — mangalam
  • Mangalam Satha Jeya மங்களம் சதா ஜெய

    மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
    எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

    அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
    இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

    யேசுநாயாகா – எம் – நேசநாயகா
    மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

    ஞானவாரியே – திரு – வானமாரியே
    ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா


    Mangalam Satha Jeya Lyrics in English

    mangalam sathaa jeya – mangalam vaethaa
    engal thungamangalarkku – mangalam sathaa

    annaiththukkaaththavaa – ula – kanaiththum pataiththavaa
    innaiyillaa pithaavumakku mangalam sathaa

    yaesunaayaakaa – em – naesanaayakaa
    maasillaatha suthanumakku mangalam sathaa

    njaanavaariyae – thiru – vaanamaariyae
    aananthasuththaaviyumakku mangalam sathaa

  • Mangala Geethangal Paadiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்

    மங்கள கீதங்கள் பாடிடுவோம்
    மணவாளன் இயேசு மனமகிழ
    கறை திரை நீக்கி திருச்சபையாக்கி
    காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்

    கோத்திரமே யூதா கூட்டமே
    தோத்திரமே துதி சாற்றிடுவோம்
    புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
    புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்

    ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே
    ராஜாதி ராஜன் இயேசுவோடே
    இன ஜன நாடு தகப்பனின் வீடு
    இன்பம் மறந்து சென்றிடுவோம்

    சித்திர தையலுடை அணிந்தே
    சிறந்த உள்ளான மகிமையிலே
    பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
    பாவைகளாக புறப்படுவோம்

    ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
    அவர் மணவாட்டி ஆக்கினாரே
    விருந்தறை நேச கொடி ஒளி வீசு
    வீற்றிருப்போம் சிங்காசனத்தில்

    தந்தத்தினால் செய்த மாளிகையில்
    தயாபரன் இயேசு புறப்பாடுவார்
    மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
    மன்னன் மணாளன் வந்திடுவர்


    Mangala Geethangal Paadiduvom Lyrics in English

    mangala geethangal paadiduvom
    manavaalan Yesu manamakila
    karai thirai neekki thiruchchapaiyaakki
    kaaththanar karpulla kannikaiyaay

    koththiramae yoothaa koottamae
    thoththiramae thuthi saattiduvom
    puluthiyinintemmai uyarththinaarae
    pukalnthavar naamaththaip pottiduvom

    raaja kumaaraththi sthaanaththilae
    raajaathi raajan Yesuvotae
    ina jana naadu thakappanin veedu
    inpam maranthu sentiduvom

    siththira thaiyalutai anninthae
    sirantha ullaana makimaiyilae
    paluthontumillaa parisuththamaana
    paavaikalaaka purappaduvom

    aarangal pootti alangariththae
    avar manavaatti aakkinaarae
    viruntharai naesa koti oli veesu
    veettiruppom singaasanaththil

    thanthaththinaal seytha maalikaiyil
    thayaaparan Yesu purappaaduvaar
    makil kamal veesa makaththuva naesar
    mannan mannaalan vanthiduvar

  • Manavalan Yesu Varapogirar மணவாளன் இயேசு வரப்போகிறார்

    மணவாளன் இயேசு வரப்போகிறார்
    மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
    ஆயத்தப்படு , ஆயத்தப்படு
    மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

    1. இனி காலம் செல்லாது
      இனியும் தாமதம் ஏன்
      மெய்யாக இயேசு வரப்போகிறார்
      மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2
    2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
      அவரோடு சென்றிடலாம்
      ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
      மறுரூபமாகிடுவோம் – 2
    3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
      சபையிலே தான் தொடங்கும்
      பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
      பரலோகம் சென்றிடலாம் – 2

    Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in English

    Manavalan Yesu Varapogirar
    manavaalan Yesu varappokiraar
    manavaatti sapaiyae nee aayaththappadu
    aayaththappadu , aayaththappadu
    manavaatti sapaiyae nee aayaththappadu – 2

    1. ini kaalam sellaathu
      iniyum thaamatham aen
      meyyaaka Yesu varappokiraar
      meyvaalvu unakkavar tharukiraar – 2
    2. nee aayaththamaayirunthaal – naam
      avarodu sentidalaam
      oru notip poluthinilae – naam
      maruroopamaakiduvom – 2
    3. thaeva niyaayaththeerppu muthalil
      sapaiyilae thaan thodangum
      parisuththa vaalvu thinam vaalnthaal
      paralokam sentidalaam – 2
  • Manavalan Karthar Yesu மணவாளன் கர்த்தர் இயேசு

    மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
    மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

    பிரியமே நீ ரூபவதி
    எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

    1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
      காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
      அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
      திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே
    2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
      பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
      கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
      கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே
    3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
      பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
      தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
      பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

    Manavalan Karthar Yesu Lyrics in English

    manavaalan karththar Yesu varukintarae
    manavaatti santhikka aayaththamthaanaa?

    piriyamae nee roopavathi
    elunthu vaa un naesaraich santhikkavae – manavaalan

    1. kuruvikal paadum saththam engum kaetkuthae
      kaattuppuraa saptham nam thaesam niraiyuthae
      aththimaram kaaykaaykka kaalam vanthathathae
      thiraatchaைk koti poo pooththu vaasam perukuthae – en piriyamae
    2. maarikkaalam sentathu malaiyum vanthathu
      poomiyilae pushpangal pooththuk kulunguthae
      kanmalaiyin sikarangalil thangum puraavae
      karththar Yesu varum naalai sollip paadidu – en piriyamae
    3. saaronin rojaavaam karththar Yesu
      pallaththaakkin leeliyaam paraman Yesu
      thaakam theerkkum jeeva nathi karththar Yesu
      paavam pokkum parikaari paraman Yesu – en piriyamae