Author: admin

  • Kithiyoen Veeramaay Ezhunthaan கிதியோன் வீரமாய் எழுந்தான்

    உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ

    1. கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா
      கோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயா
      பாத்திரம் தீவட்டி எக்காளம் – அல்லேலூயா
      முன்னூறு பேர் கூட்டம்

    வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்
    ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

    1. பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயா
      ஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயா
      பெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயா
      கர்த்தருடைய பட்டயம்
    2. கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே
      கிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவே
      கிறிஸ்து இராஜாவின் யுத்தமே – தூய தூய
      ஆவியால் மட்டும் ஆகுமே
    3. அன்பின் இயேசுவே இராஜாவே – ஏழை எனக்கே
      பெலனும் ஒளியும் அருளும் – வேண்டுகின்றேனே
      எண் திசையிலும் இருளை – உம்மால் எதிர்த்து
      பெறுவேன் நீதிக் கிரீடமே
    4. சிலுவை வீரரே எழும்பும் – அல்லேலூயா
      சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா
      உலகின் திசைகள் எங்குமே – அல்லேலூயா
      செல்லுவோம் அனுப்புவோமே!

    Kithiyoen Veeramaay Ezhunthaan Lyrics in English

    unakku irukkira intha pelaththotae po

    1. kithiyon veeramaay elunthaan – allaelooyaa
      koththiraththirkaaka elunthaan – allaelooyaa
      paaththiram theevatti ekkaalam – allaelooyaa
      munnootru paer koottam

    ventanar! ventanar! karththar senai ventanar
    jeyiththaar Yesuvae avarae entum jeyippaar

    1. pattayap palakkam ariyaan – allaelooyaa
      jepikka mattumae arivaan – allaelooyaa
      pettaாn kithiyon pattayam – allaelooyaa
      karththarutaiya pattayam
    2. karththarin pattayam pettaாl inte neeyae
      kithiyon polavae maaruvaay – unnmai ithuvae
      kiristhu iraajaavin yuththamae – thooya thooya
      aaviyaal mattum aakumae
    3. anpin Yesuvae iraajaavae – aelai enakkae
      pelanum oliyum arulum – vaenndukintenae
      enn thisaiyilum irulai – ummaal ethirththu
      peruvaen neethik kireedamae
    4. siluvai veerarae elumpum – allaelooyaa
      siluvai poraattam thuvangum allaelooyaa
      ulakin thisaikal engumae – allaelooyaa
      selluvom anuppuvomae!
  • Kithiyoen Nee Kithiyoen Nee கிதியோன் நீ கிதியோன் நீ

    கிதியோன் நீ கிதியோன் நீ
    தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ
    வாலிபனே வாலிபனே
    ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

    1. உணவுக்கு போராடும் தேசத்திலே
      உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனே
      விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
      விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி
    2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
      விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
      கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
      நாடு நலம் பெற ஜெபிக்கணுமே
    3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
      பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு
      மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு
      புளியாத அப்பமாக மாறிவிடு
    4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ
      எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
      படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
      பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

    Kithiyoen Nee Kithiyoen Nee Lyrics in English

    kithiyon nee kithiyon nee
    thaevanaal alaikkappattu anuppapattavan nee
    vaalipanae vaalipanae
    ooliyam seythida nee oppukkoduppaayaa

    1. unavukku poraadum thaesaththilae
      unnmai theyvaththai nee sollanumae vaalipanae
      vilaichchalai kedukkinta ethirikalai
      virattanumae Yesu naamam solli
    2. thariththira aavikalaith thuraththanumae
      vikkiraka aavikalai virattanumae
      karththar manam iranga katharanumae
      naadu nalam pera jepikkanumae
    3. suyam enta mannpaanndam utaiththuvidu
      payam inti thiruvasanam arikkaiyidu
      maamsaththaip paliyaaka oppukkodu
      puliyaatha appamaaka maarividu
    4. irukkinta pelaththotae purappattuppo
      ethiriyai thorkatiththu janangalai meetpaay
      pataiththavar unakkullae iruppathanaal
      paraakkiramasaaliyae payamae vaenndaam
  • Kirusthukul Valum Ennaku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
    எப்போதும் வெற்றி உண்டு
    வெற்றி உண்டு -3

    1. என்னென்ன துன்பம் வந்தாலும்
      நான் கலங்கிடவே மாட்டேன்
      யார் என்ன சொன்னாலும்
      நான் சோர்ந்து போகமாட்டேன்
    2. என் ராஜா முன்னே செல்கிறார்
      வெற்றிப் பவனி செல்கிறார்
      குருத்தோலை கையில் எடுத்து
      நான் ஓசன்னா பாடிடுவேன்
    3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
      என் நேசர் பறித்துக் கொண்டார்
      சிலுவையில் அறைந்து விட்டார்
      காலாலே மிதித்து விட்டார்
    4. பாவங்கள் போக்கிவிட்டார்
      சாபங்கள் நீக்கி விட்டார்
      இயேசுவின் தழும்புகளால்
      சுகமானேன் சுகமானேன்
    5. மேகங்கள் நடுவினிலே
      என் நேசர் வரப்போகிறார்
      கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
      கண்ணீரெல்லாம் துடைப்பார்

    Kirusthukul Valum Ennaku Lyrics in English

    kiristhuvukkul vaalum enakku
    eppothum vetti unndu
    vetti unndu -3

    1. ennenna thunpam vanthaalum
      naan kalangidavae maattaen
      yaar enna sonnaalum
      naan sornthu pokamaattaen
    2. en raajaa munnae selkiraar
      vettip pavani selkiraar
      kuruththolai kaiyil eduththu
      naan osannaa paadiduvaen
    3. saaththaanin athikaaramellaam
      en naesar pariththuk konndaar
      siluvaiyil arainthu vittar
      kaalaalae mithiththu vittar
    4. paavangal pokkivittar
      saapangal neekki vittar
      Yesuvin thalumpukalaal
      sukamaanaen sukamaanaen
    5. maekangal naduvinilae
      en naesar varappokiraar
      karampitiththu alaiththuch selvaar
      kannnneerellaam thutaippaar
  • Kirupaiyae Kirupaiyae கிருபையே கிருபையே

    கிருபையே கிருபையே
    நித்தம் என்னை சுமந்தது
    உம் கிருபையே

    கிருபையே கிருபையே
    நித்தம் என்னை சுமந்தது
    உம் கிருபையே

    வாழ முடியுமா
    என நினைத்த வேளையுண்டு
    என்ன செய்வேனோ
    என பயந்த நேரமுண்டு

    என்னை நினைத்தீரையா
    வாழ வைத்தீரையா
    என்னை நினைத்தீரையா
    தூக்கி சுமந்தீரையா
    (கிருபையே கிருபையே..)

    வாழ முடியுமா
    என பயந்த நேரமுண்டு
    என்ன செய்வேனோ
    என நினைத்த வேளையுண்டு

    தூக்கி சுமந்தீரையா
    வாழ வைத்தீரையா
    தூக்கி சுமந்தீரையா
    வாழ வைத்தீரையா
    (கிருபையே கிருபையே..)


    Kirupaiyae Kirupaiyae Lyrics in English

    kirupaiyae kirupaiyae
    niththam ennai sumanthathu
    um kirupaiyae

    kirupaiyae kirupaiyae
    niththam ennai sumanthathu
    um kirupaiyae

    vaala mutiyumaa
    ena ninaiththa vaelaiyunndu
    enna seyvaeno
    ena payantha naeramunndu

    ennai ninaiththeeraiyaa
    vaala vaiththeeraiyaa
    ennai ninaiththeeraiyaa
    thookki sumantheeraiyaa
    (kirupaiyae kirupaiyae..)

    vaala mutiyumaa
    ena payantha naeramunndu
    enna seyvaeno
    ena ninaiththa vaelaiyunndu

    thookki sumantheeraiyaa
    vaala vaiththeeraiyaa
    thookki sumantheeraiyaa
    vaala vaiththeeraiyaa
    (kirupaiyae kirupaiyae..)

  • Kirupai Erakkam Nirainthavoor கிருபை இரக்கம் நிறைந்தவோர்

    கிருபை இரக்கம் நிறைந்தவோர்
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் என்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே
    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால்
    பொங்கி வழியிதே
    என்ன என் பாக்கியமிதே

    1. நம்மைப் போலவே
      சோதிக்கப்பட்டும் நாதனோர்
      பாவமும் அற்றவராய்
      நாளும் நம் குறைகள் கண்டுருகும்
      நல்ல ஆசாரியர் நமக்குண்டே
    2. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
      நல்கிடுவார் பரிபூரணமாய்
      நாடுவோமே மாறா கிருபையை
      நமக்காயே யவர் ஜீவிப்பதால்
    3. வானங்களின் வழியாய் பரத்தில்
      தானே சென்ற இயேசுவாமெமது
      மா பிரதான ஆசாரியரைப்
      பற்றிடுவோம் நோக்கி
      நம்பிக்கையே
    4. பிதாவண்டை சேரும்
      சுத்தர்கட்காய் சதா பரிந்து
      பேசியே நிற்பார்
      இதோ எம்மையே முற்றுமுடிய
      இரட்சிக்க
      வல்லமையுள்ளவரே

    Kirupai Erakkam Nirainthavoor Lyrics in English

    kirupai irakkam nirainthavor
    kirupaasanam aa thontiduthae
    tharunamaethum enkilum nalla
    sakaayam pettida aettathuvae
    kirupaiyae perukuthae
    kalvaariyinintum paaynthiduthae
    ennullam nantiyaal
    pongi valiyithae
    enna en paakkiyamithae

    1. nammaip polavae
      sothikkappattum naathanor
      paavamum attavaraay
      naalum nam kuraikal kanndurukum
      nalla aasaariyar namakkunntae
    2. nam pelaveenaththil avar pelan
      nalkiduvaar paripooranamaay
      naaduvomae maaraa kirupaiyai
      namakkaayae yavar jeevippathaal
    3. vaanangalin valiyaay paraththil
      thaanae senta Yesuvaamemathu
      maa pirathaana aasaariyaraip
      pattiduvom Nnokki
      nampikkaiyae
    4. pithaavanntai serum
      suththarkatkaay sathaa parinthu
      paesiyae nirpaar
      itho emmaiyae muttumutiya
      iratchikka
      vallamaiyullavarae
  • Kirupai Emmai Suzhnthu Kollum கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும்

    கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் – தம்
    கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
    களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை

    1.யோர்தானைக் கடந்துவந்தோம்- எங்கள்
    இயேசுவின் பெலம் அடைந்தோம்
    சேனையின் கர்த்தர் முன்னேநடந்தார்
    சோர்வின்றி காத்துக் கொண்டார்

    2.தேசமே பயப்படாதே – எங்கள்
    தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின்
    நன்மை சேமம் அருள்வார்
    தாசர்கள் வேண்டிடுவோம்

    3.கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்
    காரியம் செய்திடுவார்
    கால் வைக்கும் தேசம்
    இயேசு தருவார் காத்திருந்தே அடைவோம்

    4.ஆண்டுகள் நன்மையினால் – முடி
    சூண்டு வளம் பெருக
    தேசத்தின் மீதே கண்களை வைத்தே
    பாசமாய் நோக்கிடுவார்

    5.ஜாதி ஜனங்களையும் – வந்து மோதி அசைத்திடுவார்
    காத்துக் கிடக்கும் உள்ளம்
    மகிழும் கர்த்தரே வந்திடுவார்
    தூய கற்புள்ள தேவ சபையாய் விரம் சேர்ந்திடுவோம்


    Kirupai Emmai Suzhnthu Kollum Lyrics in English

    kirupai emmaich soolnthu kollum – tham
    kirupai karththaril makilvom
    kalikoornthiduvom kanndatainthom kirupai

    1.yorthaanaik kadanthuvanthom- engal
    Yesuvin pelam atainthom
    senaiyin karththar munnaenadanthaar
    sorvinti kaaththuk konndaar

    2.thaesamae payappadaathae – engal
    thaevan kiriyai seykintar thaesaththin
    nanmai semam arulvaar
    thaasarkal vaenndiduvom

    3.karththar ivvaanntinilae – perum
    kaariyam seythiduvaar
    kaal vaikkum thaesam
    Yesu tharuvaar kaaththirunthae ataivom

    4.aanndukal nanmaiyinaal – muti
    soonndu valam peruka
    thaesaththin meethae kannkalai vaiththae
    paasamaay Nnokkiduvaar

    5.jaathi janangalaiyum – vanthu mothi asaiththiduvaar
    kaaththuk kidakkum ullam
    makilum karththarae vanthiduvaar
    thooya karpulla thaeva sapaiyaay viram sernthiduvom

  • Kirubasanathandai Odi Vanthen கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

    கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
    கிருபையால் இறங்கிடுமே
    தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே

    உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே

    என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    உம் பெலத்தால் எல்லாம் செய்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே

    சோதனைகள் தாங்க பெலனில்லை
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
    உம் கிருபையால் நிறைத்திடுமே


    Kirubasanathandai Odi Vanthen Lyrics in English

    kirupaasanaththanntai oti vanthaen
    kirupaiyaal irangidumae
    thadumaattamillaamal naan vaalnthida
    um kirupaiyaal niraiththidumae

    um kirupaiyillaiyental naan illai
    athai neer nantay ariveer
    thadumaattamillamal naan vaalnthida
    um kirupaiyaal niraiththidumae

    en suyapelaththaal ontum seythitaen
    athai neer nantay ariveer
    um pelaththaal ellaam seythida
    um kirupaiyaal niraiththidumae

    sothanaikal thaanga pelanillai
    athai neer nantay ariveer
    sornthidaamal jepam aeraெdukka
    um kirupaiyaal niraiththidumae

  • Kirubasanapathiyea um kirubaikal கிருபாசனபதியே உம் கிருபைகள்

    கிருபாசனபதியே உம் கிருபைகள்
    தர வேணுமே ஏழையின் புகலிடமே
    பக்தர்களின் மறைவிடமே

    உந்தனின் பாதம் பணிந்தால்
    முட்கள் கூட பூவாகும்
    சிங்கத்தின் கெபி கூட
    இன்ப வீடாய் மாறிடும்

    வேகத்தை நாம் சுமந்தால்
    சத்திய வேதம் நம்மை சுமக்கும்
    பாதைக்கு வழி காட்டும்
    சோதனையில் ஜெயம் கொடுக்கும்

    சந்தோஷ விண்ணொளியே
    சாந்தத்தின் சொரூபியே
    பொறுமைக்கு அதிபதியே
    என் அருமை இரட்சகரே


    Kirubasanapathiyea um kirubaikal Lyrics in English

    kirupaasanapathiyae um kirupaikal
    thara vaenumae aelaiyin pukalidamae
    paktharkalin maraividamae

    unthanin paatham panninthaal
    mutkal kooda poovaakum
    singaththin kepi kooda
    inpa veedaay maaridum

    vaekaththai naam sumanthaal
    saththiya vaetham nammai sumakkum
    paathaikku vali kaattum
    sothanaiyil jeyam kodukkum

    santhosha vinnnnoliyae
    saanthaththin soroopiyae
    porumaikku athipathiyae
    en arumai iratchakarae

  • Kirubaiyeinal Iratchithire கிருபையினால் இரட்சித்தீரே

    கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
    கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
    கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
    கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

    1. பாவியான என்னை மீட்ட கிருபை
      பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2
    2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
      தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2
    3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
      உருவாக்கி உயர்த்தின கிருபை – 2
    4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
      தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2
    5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
      நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2

    Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே Lyrics in English

    Kirubaiyeinal Iratchithire
    kirupaiyinaal iratchiththeerae iyaesayyaa um
    kirupaiyai paadukirom iyaesayyaa
    kirupai kirupai kirupai thaeva kirupai
    kirupai kirupai kirupai thaeva kirupai

    1. paaviyaana ennai meetta kirupai
      paraman ennaip paadavaiththa kirupai – 2
    2. thaalvilirunthu thookkiyeduththa kirupai
      thayavudanae annaiththukkonnda kirupai – 2
    3. ontumillaa ennai ninaiththa kirupai
      uruvaakki uyarththina kirupai – 2
    4. thakuthiyillaa ennai naesiththa kirupai
      thakuthiyaana ooliyam thantha kirupai – 2
    5. naan nirpathum nadappathum um kirupai
      naan nirmoolamaakaathiruppathum kirupai – 2
  • Kirubaiye Unnai Innal Varaiyum கிருபையே உன்னை இந்நாள் வரையும்

    கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
    என் கிருபையே

    1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
      பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
      பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
      எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே
    2. சோதனையாலே சோர்ந்திடும்போது
      சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
      ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
      ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே
    3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
      ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
      ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
      என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே
    4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
      செப்பமாக உன் கரம் பிடித்தேன்
      ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
      சேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே
    5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
      கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
      என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
      உன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே

    Kirubaiye Unnai Innal Varaiyum Lyrics in English

    kirupaiyae unnai innaal varaiyum kaaththathu
    en kirupaiyae

    1. paathaiyil kashdam anukidum pothu
      pangam varaathu naan unnaith thaanginaen
      pelan eenthaen karaththaal thookkinaen unnai naan
      enthan anpinaal unnai niruththa – kirupaiyae
    2. sothanaiyaalae sornthidumpothu
      sonthamena naan unnaich santhiththaen
      jothiyai un munnil joliththidach seythittaen
      jeyageethangal paadavaiththittaen – kirupaiyae
    3. aekanaay neeyum sanjalaththaalae
      aengumpothu un anntai vanthittaen
      aetta nalthunnaiyai eenthittaen allo naan
      entum unnai en sonthamaakkinaen – kirupaiyae
    4. jeyamaana paathai sentidach seythaen
      seppamaaka un karam pitiththaen
      jeya jeyageethangal thoniththidach seythaenae
      sevai seyyavum kirupai thanthaenae – kirupaiyae
    5. ententumaaka en kirupai kaatta
      konntaen unnai immannnil piriththu
      en arum makanae kaappaenae unnai naan
      un thanthai naan unnai vitaenae – kirupaiyae