Author: admin

  • Kavalai Kollathirungal Uyir Vaala கவலை கொள்ளாதிருங்கள் உயிர் வாழ

    கவலை கொள்ளாதிருங்கள்
    உயிர் வாழ எதை உண்போம்
    உடல் மூட எதை உடுப்போம்-என்று

    1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
      விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
      பரமபிதா ஊட்டுகிறார்
      மறப்பாரோ மகனே (ளே)
    2. கவலைப்படுவதினால்
      நமது உயரத்திலே
      ஒரு முழம் கூட்ட முடியுமா
      புதுபெலன் பெறவும் கூடுமா
    3. நாளை தினம் குறித்து
      நம்பிக்கை இழக்காதே
      நாளைக்கு வழி பிறக்கும் – நீ
      இன்றைக்கு நன்றி சொல்லு
    4. தகப்பனின் விருப்பத்தையும்
      அவரது ஆட்சியையும்
      தேடுவோம் முதலாவது -நம்
      தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
    5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
      உழைப்பதில்லை, நூற்பதில்லை
      உடுத்துகிறார் நம் தகப்பன்
      உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ

    Kavalai Kollathirungal Uyir Vaala Lyrics in English

    kavalai kollaathirungal
    uyir vaala ethai unnpom
    udal mooda ethai uduppom-entu

    1. parakkum paravaikal paarungal
      vithaippathumillai, aruppathillai
      paramapithaa oottukiraar
      marappaaro makanae (lae)
    2. kavalaippaduvathinaal
      namathu uyaraththilae
      oru mulam kootta mutiyumaa
      puthupelan peravum koodumaa
    3. naalai thinam kuriththu
      nampikkai ilakkaathae
      naalaikku vali pirakkum – nee
      intaikku nanti sollu
    4. thakappanin viruppaththaiyum
      avarathu aatchiyaiyum
      thaeduvom muthalaavathu -nam
      thaevaikalai santhippaar – uyir vaala
    5. kaattu malarkal kavaniyungal
      ulaippathillai, noorpathillai
      uduththukiraar nam thakappan
      unakku avar athikam seyvaar – uyirvaala
  • Kattum Karthave Neer Kattum Karthave கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே

    கட்டும் கர்த்தாவே நீர்
    கட்டும் கர்த்தாவே
    அறுந்து போகாத கயிற்றால்
    கட்டும் கர்த்தாவே நீர்
    கட்டும் கர்த்தாவே நீர்
    கட்டும் எங்களை அன்பால்

    தேவன் ஒருவராம்
    இராஜனும் ஒருவரே
    சரீரம் ஒன்றுதானே
    பாடுவோம் ஆதலால்

    Bind us together Lord
    Bind us together with
    Cords that cannot be broken
    Bind us together Lord
    Bind us together Lord
    Bind us together with love

    There is only one God
    There is only one King
    There is only one Body
    That is why we sing


    Kattum Karthave Neer Kattum Karthave Lyrics in English

    kattum karththaavae neer
    kattum karththaavae
    arunthu pokaatha kayittaாl
    kattum karththaavae neer
    kattum karththaavae neer
    kattum engalai anpaal

    thaevan oruvaraam
    iraajanum oruvarae
    sareeram ontuthaanae
    paaduvom aathalaal

    Bind us together Lord
    Bind us together with
    Cords that cannot be broken
    Bind us together Lord
    Bind us together Lord
    Bind us together with love

    There is only one God
    There is only one King
    There is only one Body
    That is why we sing

  • Katti Pidithen Unthan கட்டிப்பிடித்தேன் உந்தன்

    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
    கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
    இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
    இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
    இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

    1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
      உம் வேதம் ஏந்த வேண்டும்
      தப்பாமல் உம் விருப்பம்
      எப்போதும் செய்ய வேண்டும்
    2. பழிக்கு பழி வாங்கும்
      பகைமை ஒழிய வேண்டும்
      மன்னிக்கும் மனப்பான்மை
      தேசத்தில் மலர வேண்டும்
    3. பிரிந்த குடும்பமெல்லாம்
      மறுபடி இணைய வேண்டும்
      பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
      களிப்பாய் மாற வேண்டும்
    4. வீடு இழந்தவர்கள்
      இடங்கள் பெயர்ந்தவர்கள்
      மறுவாழ்வு பெற வேண்டும்
      மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

    Katti Pidithen Unthan Lyrics in English

    kattippitiththaen unthan paathaththai
    kannnneeraal nanaikkinten karththaavae
    ilangaiyilae yuththangal oya vaenndumae
    ilairellaam Yesuvukkaay vaalavaenndum
    irangum aiyaa manam irangumaiyaa

    1. thuppaakki aenthum kaikal
      um vaetham aentha vaenndum
      thappaamal um viruppam
      eppothum seyya vaenndum
    2. palikku pali vaangum
      pakaimai oliya vaenndum
      mannikkum manappaanmai
      thaesaththil malara vaenndum
    3. pirintha kudumpamellaam
      marupati innaiya vaenndum
      pettaோrin kannnneer ellaam
      kalippaay maara vaenndum
    4. veedu ilanthavarkal
      idangal peyarnthavarkal
      maruvaalvu pera vaenndum
      makilchchiyaal nirampa vaenndum
  • Katthum Alaikadal Oorathilae கத்தும் அலைகடல் ஓரத்திலே

    அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்

    இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா

    ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே

    இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

    கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே – 2

    சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே

    ஆரோக்கியம் தந்தவளே அம்மா – 2

    வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே

    உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே – 2

    சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே – 2

    இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே

    இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

    நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி

    நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி – 2

    முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே – 2

    சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே

    சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ


    Katthum Alaikadal Oorathilae Lyrics in English

    antu siluvaiyilae nee sinthiya kannnneer

    intu puviyellaam neelkadalaay aanathammaa

    ontuthaan theyvamena ulakirkuk kaattidavae

    iraivanaik kulanthaiyaay itaiyil sumanthavalae

    kaththum alaikadal oraththilae anpuththaangiyae vanthavalae – 2

    siththam irangiyae vaelainakar vanthae

    aarokkiyam thanthavalae ammaa – 2

    viththakan Yesuvaip pettaval neeyae

    uththamarkkellaam nee uttaval thaayae – 2

    saththiya sanmaarkkam thalaikkach seythaayae – 2

    iththarai mael innal theerppaval neeyae

    iththarai mael innal theerppaval nee

    niththam un thaal thaeti varuvaarkal koti

    nenjaெllaam iniththidum suvaiyaakap paati – 2

    mukthikku valisonna iraimakan thaayae – 2

    saththiyam valinthodum niraikudam neeyae

    saththiyam valinthodum niraikudam nee

  • Kattadam Katdidum கட்டடம் கட்டிடும்

    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
    கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

    சுத்தியல் வைத்து அடித்தல்ல
    ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

    1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
      ஒவ்வொரு செயலாம் கற்களாலே
      உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
      பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம்
    2. கைவினை அல்லா வீடொன்றை
      கடவுளின் பூரண சித்தப்படி
      கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
      கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம்
    3. பாவமா மணலில் கட்டப்பட்ட
      பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
      ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
      அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம்

    Kattadam Katdidum Lyrics in English

    kattadam katdidum sirpikal naam
    katdiduvom kiristhaesuvukkaay

    suththiyal vaiththu atiththalla
    rampaththaal maraththai aruththalla

    1. ovvoru naalum katdiduvom
      ovvoru seyalaam karkalaalae
      uththamar Yesuvin asthipaaram
      paththiramaaka thaangiduvaar — kattadam
    2. kaivinai allaa veetontai
      kadavulin poorana siththappati
      katdidum siriya sirpikal naam
      katdiduvomae niththiyaththirkaay — kattadam
    3. paavamaa manalil kattappatta
      parpala veedukal veelnthidumae
      aavalaay Yesuvin vaarththai kaetpom
      avarae moolaikkal aakiduvaar — kattadam
  • Katta Patta Manitharellam கட்டப்பட்ட மனிதரெல்லாம்

    கட்டப்பட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயப்பட்ட மனிதரெல்லாம்
    கர்த்தர் உம்மை காண வேண்டும்
    தேவா… தேவா…

    1. எழுப்புதல் தீ பரவட்டுமே
      எங்கும் பற்றி எரியட்டுமே
    2. அறியாமை இருள் விலகி
      அதிசய தேவனை காண வேண்டும்
    3. பாவங்கள் சாபங்கள்
      பாரத தேசத்தில் மறைய வேண்டும்
    4. இமயம் முதல் குமரி வரை
      இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
    5. உண்மையான ஊழியர்கள்
      உலகம் எங்கும் செல்ல வேண்டும்
    6. சபைகளெல்லாம் தூய்மையாகி
      சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

    Katta Patta Manitharellam Lyrics in English

    kattappatta manitharellaam
    kattavilkkappada vaenndum
    kaayappatta manitharellaam
    karththar ummai kaana vaenndum
    thaevaa… thaevaa…

    1. elupputhal thee paravattumae
      engum patti eriyattumae
    2. ariyaamai irul vilaki
      athisaya thaevanai kaana vaenndum
    3. paavangal saapangal
      paaratha thaesaththil maraiya vaenndum
    4. imayam muthal kumari varai
      Yesuvin iraththam paaya vaenndum
    5. unnmaiyaana ooliyarkal
      ulakam engum sella vaenndum
    6. sapaikalellaam thooymaiyaaki
      saatchi vaalvu vaala vaenndum
  • Katru Thanthu Nadathugireer கற்றுத் தந்து நடத்துகிறீர்

    கற்றுத் தந்து நடத்துகிறீர்
    கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
    ஆவியானவரே தூய ஆவியானவரே

    1. என்றென்றைக்கும் எங்களுடன்
      எப்போதும்கூட இருக்கின்றீர்
      சத்திய ஆவியானவரே
      சாட்சியாய் வாழச் செய்பவரே
    2. போதிக்கின்றீர் சத்தியங்களை
      நினைவூட்டுகின்றீர் வசனங்களை
      அனைத்தையும் சொல்லித் தருகின்ற
      ஆலோசகர் நீர்தானய்யா
    3. தேவனுக்குகந்த பலியாக
      அர்ப்பண வாழ்வு நான் வாழ
      மகிமைமேல் மகிமை தருகின்றீர்
      மறுரூபமாக்கி மகிழ்கின்றீர்
    4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
      உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
      நற்செய்தி அருளும் நாயகரே
      உற்சாகப்படுத்தும் உன்னதரே
    5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்
      வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
      தினம் தினம் தேற்றும் துணையாளரே
      எனையாண்டு நடத்தும் மணவாளரே
    6. உலகம் உம்மை அறிவதில்லை
      பெற்றுக் கொள்ள முடிவதில்லை
      எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
      இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

    Katru Thanthu Nadathugireer Lyrics in English

    kattuth thanthu nadaththukireer
    kanntiththu unarththi pothikkireer
    aaviyaanavarae thooya aaviyaanavarae

    1. ententaikkum engaludan
      eppothumkooda irukkinteer
      saththiya aaviyaanavarae
      saatchiyaay vaalach seypavarae
    2. pothikkinteer saththiyangalai
      ninaivoottukinteer vasanangalai
      anaiththaiyum sollith tharukinta
      aalosakar neerthaanayyaa
    3. thaevanukkukantha paliyaaka
      arppana vaalvu naan vaala
      makimaimael makimai tharukinteer
      maruroopamaakki makilkinteer
    4. ooliyam seyya piriththeduththu
      ulakengum thoothu anuppukireer
      narseythi arulum naayakarae
      ursaakappaduththum unnatharae
    5. mulu unnmai Nnokki nadaththukireer
      varappokum anaiththum therivikkireer
      thinam thinam thaettum thunnaiyaalarae
      enaiyaanndu nadaththum manavaalarae
    6. ulakam ummai arivathillai
      pettuk kolla mutivathillai
      engalukkul neer jeevikkinteer
      ithayath thutippaay iyangukinteer
  • Kathiravan Thondrum Kaalaiyethe கதிரவன் தோன்றும் காலையிதே

    கதிரவன் தோன்றும் காலையிதே
    புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
    துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
    கதிரவன் தோன்றும் காலையிதே

    1. வான சுடர்கள் கானக ஜீவன்
      வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
      காற்று பறவை ஊற்று நீரோடை
      கர்த்தருக்கே கவி பாடிடுதே
    2. காட்டில் கதறி கானக ஓடை
      கண்டடையும் வெளி மான்களை போல்
      தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
      தற்பரன் யேசுவை தேடிடுவோம்
    3. காலை விழித்தே கர்த்தரின் சாயல்
      கண்களும் செவியும் காத்திருக்கும்
      பாதம் அமர்ந்து தேவனை ருசித்து
      கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்

    Kathiravan Thondrum Kaalaiyethe Lyrics in English

    kathiravan thontum kaalaiyithae
    puthiya kirupai polinthiduthae – nal
    thuthi seluththiduvom Yesuvukkae
    kathiravan thontum kaalaiyithae

    1. vaana sudarkal kaanaka jeevan
      vaalththidavae paran maatchimaiyae
      kaattu paravai oottu neerotai
      karththarukkae kavi paadiduthae
    2. kaattil kathari kaanaka otai
      kanndataiyum veli maankalai pol
      thaakam theerkkum jeeva thannnneeraam
      tharparan yaesuvai thaediduvom
    3. kaalai viliththae karththarin saayal
      kannkalum seviyum kaaththirukkum
      paatham amarnthu thaevanai rusiththu
      geethangal paatiyae makilnthiduvaen
  • Kathavukalae Thiravunkal கதவுகளே திறவுங்கள்

    இயேசு இராஜா வருகிறார்

    கதவுகளே திறவுங்கள் இராஜா வருகின்றார்!
    நிலைகளே உயருங்கள் தேவன் வருகின்றார்!
    சாத்தானை வென்றவர் மீண்டும் வருகின்றார்!
    நீங்காத கர்த்தர் இயேசு வேகம் வருகின்றார்!

    உள்ளம் இல்லம் ஜாதி ஜனம்
    உலகம் எங்கும் ஆட்சி செய்ய – கதவுகளே

    1.மேடுபள்ளம் திசையெங்கும் சமமாகிடும்
    கோணலானவை அனைத்தும் சீராகிடும்
    தேவ மகிமை தேசமெங்கும் வெளியாகிடும்
    கடவுளாட்சி ப10மியெங்கும் நனவாகிடும்

    1. சாத்தானின் அதிகாரம் செல்லாதினி
      அவன் ஆட்டம் பூமிதனில் நிலைக்காதினி
      அவன் வலிமை ஆயுதங்கள் பலிக்காதினி
      திசையெங்கும் நிரூபிப்போம் துணிவோடினி
    2. கர்த்தரன்றி பூமிதனில் தேவன் யாருண்டு?
      அவர் ஞானம் முன்நிற்க தர்க்கம் ஏதுண்டு?
      அவர் ஆற்றல் நிகராக யார்தானுண்டு?
      கர்த்தரின்றி மீட்புக்கு வழியேதுண்டு?
    3. சகோதர சமத்துவம் தழைத்தோங்கிடும்
      தேவப்பிதா சொந்தங்கள் தலை நிமிர்ந்திடும்
      சிலுவைதரும் சன்மானம் பிய10லாவனம்
      தலைவணங்கும் மனிதருக்கு அவர் சீதனம்

    Kathavukalae Thiravunkal Lyrics in English

    Yesu iraajaa varukiraar

    kathavukalae thiravungal iraajaa varukintar!
    nilaikalae uyarungal thaevan varukintar!
    saaththaanai ventavar meenndum varukintar!
    neengaatha karththar Yesu vaekam varukintar!

    ullam illam jaathi janam
    ulakam engum aatchi seyya – kathavukalae

    1.maedupallam thisaiyengum samamaakidum
    konalaanavai anaiththum seeraakidum
    thaeva makimai thaesamengum veliyaakidum
    kadavulaatchi pa10miyengum nanavaakidum

    1. saaththaanin athikaaram sellaathini
      avan aattam poomithanil nilaikkaathini
      avan valimai aayuthangal palikkaathini
      thisaiyengum niroopippom thunnivotini
    2. karththaranti poomithanil thaevan yaarunndu?
      avar njaanam munnirka tharkkam aethunndu?
      avar aattal nikaraaka yaarthaanunndu?
      karththarinti meetpukku valiyaethunndu?
    3. sakothara samaththuvam thalaiththongidum
      thaevappithaa sonthangal thalai nimirnthidum
      siluvaitharum sanmaanam piya10laavanam
      thalaivanangum manitharukku avar seethanam
  • Kathai Onnu Solla Poraenga கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

    பல்லவி

      கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
    
      இயேசு சொன்னக் கருத்தை அதில்
    
      நல்லாவே கேளுங்க                         – கதைஒண்ணு

    சரணங்கள்

    1. இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு – கதை ஒண்ணு
    2. மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம் மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர் தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார் தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார் – கதை ஓண்ணு
    3. நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய் நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார் பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார் – கதை ஒண்ணு

    Kathai Onnu Solla Poraenga Lyrics in English

    pallavi

      kathai onnnu sollap poraenga
    
      Yesu sonnak karuththai athil
    
      nallaavae kaelunga                         – kathaionnnu

    saranangal

    1. itaiyarukku sontham aadukal nooru intha ooril avarukku nallothorup paeru kaalaiyilae manthaip pokum alakinaip paaru kaadu maedu sellum avai saththaththinaik kaelu – kathai onnnu
    2. maalai vantha pothu aadu ontaik kaannom maedu pallam thaannti thaetich sentar maeyppar thappippona aattaை anguk kanndu makilnthaar thattik koduththu athanaiyae thiruppik konndu vanthaar – kathai onnnu
    3. naathar Yesu meetpar nalla maeyppar arivaay naalum poluthum nammai nantay avar maeyppaar paavakkaattil odum unnai ennaith thaeti paasaththudan alaiththu parama nanmaiyum tharuvaar – kathai onnnu