Category: Song Lyrics

  • தேவனே என் தேவனே Devanae En Devanae

    தேவனே என் தேவனே
    என்னையே தருகிறேன்
    உந்தன் பின் நான் வந்திட (சென்றிட)
    அர்ப்பணிக்கின்றேன் – 2

    என் முழுமையும் அது உமக்கு தான்
    தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
    புதிதாக்கும் புதிதாக்கும் – 2 – தேவனே

    உம் பணி செய்திட தான்
    என்றென்றும் விரும்புகிறேன்
    அதற்கான தகுதிகளை
    நீரே தாருமையா – 2

    என் ஜீவன் இருக்கும் மட்டும்
    உம் சேவை செய்திடனும் – 2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக் கொள்ளும் – 2 – என் முழுமையும்

    உம் கரத்தினில் நான் இருக்க
    மனதார விரும்புகின்றேன்
    நீர் விரும்பும் பாத்திரமாய்
    வனைந்தென்னை மாற்றுமையா – 2

    என் ஜீவன் இருக்கும் மட்டும்
    உம் சேவை செய்திடனும் – 2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக் கொள்ளும் – 2 – என் முழுமையும்


    Devanae En Devanae
    Ennaiyae Tharugiraen
    Unthan Pinnaal Vanthida
    Arpanikindraen – 2

    En Muzhumaiyum Athu Umakku Thaan
    Deva Neer Eduthukollum
    Ennai Padaikiraen Padaikiraen
    Puthithaakkum Puthithaakkum – 2 – Devanae

    Um Pani Seithida Thaan
    Endrendrum Virumbugiraen
    Atharkaana Thaguthigalai
    Neerae Tharumaiyya – 2

    En Jeevan Erukkum Mattum
    Um Sevai Seithidanum – 2
    Tharugiraen Tharugiraen
    Yetrukollum – 2 – En Muzhumaiyum

    Um Karathil Naan Erukka
    Manathaara Virumbugiraen
    Neer Virumbidum Paathiramaai
    Vanaithennai Maatrumaiya – 2

    En Jeevan Erukkum Mattum
    Um Sevai Seithidanum – 2
    Tharugiraen Tharugiraen
    Yetrukollum – 2 – En Muzhumaiyum


  • ஏஷுவா… ஏஷுவா Yeshuva… Yeshuva

    ஏஷுவா… ஏஷுவா…
    ஏஷுவா… ஏஷுவா…

    இயேசுவே இயேசுவே
    இயேசுவே உம் அருகினிலே
    ஆவலாய் வருகின்றேன் – 2

    எந்நேரமும் எந்தன் சுவாசம்
    உம்மையே துதித்திடுமே
    எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
    உந்தன் மகிமையை பாடிடுமே
    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே


    Yeshuva… Yeshuva…
    Yeshuva… Yeshuva…

    Yesuvae Yesuvae
    Yesuvae Um Aruginilae
    Aavalaai Varugindraen – 2

    Ennaeramum Endhan Suvaasam
    Ummaiyae Thudhithidumae
    Ennaalumae Enthan Vaazhkkai
    Undhan Magimaiyai Paadidumae
    Yesuvae Yesuvae
    Yesuvae Yesuvae


  • கல்வாரி மாமலை ஓரம் Kalvaari Maa Maalaiyoram

    கல்வாரி மாமலை ஓரம் கொடும்
    கோர காட்சி கண்டேன்
    கண்ணில் நீர் வடிந்திடுததே
    எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ

    எருசலேமின் வீதிகளில்
    ரத்த வெள்ளம் கோலமிட
    திருக்கோலம் நிந்தனையா
    உருக் குலைந்து சென்றனரே

    சிலுவை தன் தோள் அதிலே
    சிதறும் தன் வேர்வையிலே
    சிறுமை அடைந்தவராய்
    நிந்தனை பல சகித்தார்


    Kalvaari Maa Maalaiyoram
    Kodunra Kaatchi Kandaen
    Kannil Neer Valinthiduthae
    Enthan Meetpar Yesu Atho

    Yerusalaemin Veethikalil
    Iratha Vellam Kolamida
    Thirukolam Ninthanaiyaal
    Urukulainthu Sentanarae

    Siluvai Than Tholathilae
    Sitharum Than Vaervaiyilae
    Sirumai Adainthavaraai
    Ninthanai Pala Sakithaar


  • எல்லா நாமத்திற்கு மேலானவர் Ella Naamathirkkum Melanavar

    எல்லா நாமத்திற்கு மேலானவர்
    எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் – 2

    உம்மை போல் வேறு தெய்வம் இல்லை
    உம்மை போல் வேறு தெய்வம் இல்லை – 2

    பாத்திரர் நீரே
    இயேசுவே நீர் பாத்திரரே – 2

    உயிருள்ள நாமம் மேலான நாமம்
    ஜீவனுள்ள நாமம் , இயேசுவின் நாமம் – 3
    இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே – 3

    பரிசுத்தரே படைத்தவரே
    பரிகாரியே எங்கள் இயேசுவே – 2


    Ella Naamathirkkum Melanavar
    Ella Magimaikum Neer Paathirar – 2

    Ummai Pol Veru Dheivam Illai
    Ummai Pol Veru Dheivam Illai – 2

    Paathirar Neere
    Yesuve Neer Paathirare – 2

    Uyirulla Naamam Maelana Naamam
    Jeevanulla Naamam, Yesuvin Naamam – 3
    Yesuvae Meetparae Jeevanae Engal Rajanae – 3

    Parisutharae Padaithavarae
    Parigaariyae Engal Yesuvae – 2


  • உம்மை நேசிப்பேன் Ummai Naesipaen

    உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்
    உம்மை நேசிப்பேன் இயேசுவே – 2

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் இயேசுவே – 2

    உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
    உம்மை நம்புவேன் இயேசுவே – 2

    நான் வாழுவேன் நான் வாழுவேன்
    நான் வாழுவேன் இயேசுவே – 2 உமக்காய்

    உம்மை சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்
    உம்மை சேவிப்பேன் இயேசுவே – 2


    Ummai Naesipaen Ummai Naesipaen
    Ummai Naesipaen Yesuvae – 2

    Aarathipaen Aarathipaen
    Aarathipaen Yesuvae – 2

    Ummai Nambuvaen Ummai Nambuvaen
    Ummai Nambuvaen Yesuvae – 2

    Naan Vaazhuvaen Naan Vaazhuvaen
    Naan Vaazhuvaen Yesuvae – 2 – Umakaai

    Ummai Saevipaen Ummai Saevipaen
    Ummai Saevipaen Yesuvae – 2


  • மாட்சிமை மாட்சிமை Maatchimai Maatchimai

    மாட்சிமை மாட்சிமை
    கல்வாரி சிலுவை என்னை கண்டதே
    கல்வாரி அன்பு என்னை மீட்டதே – 2

    மாட்சிமை மாட்சிமை
    உம் கிருபை என்னை அணைத்து கொண்டதே
    உம் பிரசன்னத்தால் முடிகொண்டீரே – 2

    மாட்சிமை மாட்சிமை
    உம் கிருபை என்னை நிற்க செய்ததே
    உம் தயவால் என்னை உயர்த்தி வைத்தீரே – 2

    மாட்சிமை மாட்சிமை
    எம்மிடம் ஒன்றும் இல்லை ஐயா
    வரும் கையனாய் என்னை அர்பணிக்கின்றேன் – 2


    Maatchimai Maatchimai
    Kalvaari Siluvai Ennai Kandathae
    Kalvaari Anbu Ennai Meetathae – 2

    Maatchimai Maatchimai
    Um Kirubai Ennai Anaithu Kondathae
    Um Prasanathal Mudikondeerae – 2

    Maatchimai Maatchimai
    Um Kirubai Ennai Nirkka Seithathae
    Um Thayavaal Ennai Uyarthi Vaitherae – 2

    Maatchimai Maatchimai
    Emmidam Ondrum Ellai Aiyya
    Vaerum Kaiyanaai Ennai Arpanikindraen – 2


  • என் ஆத்துமா பாடும் இரட்சகர் En Aathuma Paadum Ratchagar Devanae

    என் ஆத்துமா பாடும் இரட்சகர் தேவனே
    நீர் எத்தனை பெரியவர்
    என் ஆத்துமா பாடும் இரட்சகர் தேவனே
    நீர் எத்தனை பெரியவர்

    Then Sings My Soul,
    My Savior God, To Thee,
    How Great Thou Art!
    How Great Thou Art! – 2


    En Aathuma Paadum Ratchagar Devanae
    Neer Ethanai Periyavar
    En Aathuma Paadum Ratchagar Devanae
    Neer Ethanai Periyavar

    Then Sings My Soul,
    My Savior God, To Thee,
    How Great Thou Art!
    How Great Thou Art! – 2


  • இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் Yesuvae Ummai Uyarththiduvaen

    இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
    என் நேசரே உம்மைப் பாடுவேன்
    நீர் செய்த எல்லா நன்மைகட்காக
    உமக்கே ஆராதனை

    உமக்கே ஆராதனை – ஐயா
    உமக்கே ஆராதனை

    நீர் தான் என் தஞ்சமே
    நீர் தான் என் கோட்டையே
    துன்ப வேளையில் தூக்கி என்னை
    தோளில் சுமந்தவரே

    நீரே என் ஆதாரமே
    நீரே என் துனையாளரே
    சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
    கிருபை ஈந்தவரே

    நீர் தான் என் பெலன்
    நீர் தான் என் சுகமே
    கண்ணீர் துடைத்து கவலை போக்கி
    ஆறுதல் அளிப்பவரே


    Yesuvae Ummai Uyarththiduvaen
    En Naesarae Ummai Paaduvaen
    Neer Seytha Ellaa Nanmaikatkaaka
    Umakkae Aaraathanai

    Umakkae Aaraathanai – Aiyaa
    Umakkae Aaraathanai

    Neer Thaan En Thanjamae
    Neer Thaan En Kottayae
    Thunpa Vaelaiyil Thookki Ennai
    Tholil Sumanthavarae

    Neerae En Aathaaramae
    Neerae En Thunaiyaalarae
    Sornthidum Naeram Saarnthida Unthan
    Kirupai Eenthavarae

    Neer Thaan En Pelan
    Neer Thaan En Sukamae
    Kannnneer Thutaiththu Kavalai Pokki
    Aaruthal Alippavarae


  • அவர் அழைப்பை அனுசரிப்பேன் Avar Azhaipai Anusarippaen

    அவர் அழைப்பை அனுசரிப்பேன்
    அவர் அழைப்பை அனுசரிப்பேன்
    அவர் அழைப்பை அனுசரிப்பேன்
    தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

    தொண்டு செய்வேன் என்றும்
    தொண்டு செய்வேன் என்றும்
    தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

    நகரானாலும் கிராமமானாலும்
    தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
    தொண்டு செய்வேன் என்றும்

    வாழ்வானாலும் சவானாலும்
    தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
    தொண்டு செய்வேன் என்றும்


    Avar Azhaipai Anusarippaen
    Avar Azhaipai Anusarippaen
    Avar Azhaipai Anusarippaen
    Thondu Seivaen En Aandavarkkae

    Thondu Seivaen Endrum
    Thondu Seivaen Endrum
    Thondu Seivaen En Aandavarkkae

    Nagaraanaalum Gramamaanaalum
    Thondu Seivaen En Aandavarkkae
    Thondu Seivaen Endrum

    Vaazhvaanaalum Savaanaalum
    Thondu Seivaen En Aandavarkkae
    Thondu Seivaen Endrum


  • எங்கள் தரிசனத்தில் Engal Darisanathil

    எங்கள் தரிசனத்தில் எந்த ஊழியத்தில்
    நிறைவேற்றிடும் ஆவியானவரே

    தரிசனம் தந்தவரே
    நிறைவேற்றிட உதவிடுமே

    நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
    மீண்டும் தந்திடுமே
    நாங்கள் மறந்து போன தரிசனத்தை
    மீண்டும் புதுப்பித்திடும்

    எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
    நோக்கத்தை நேராக்கிடும்
    உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
    காத்துக் கொள்ளும் தெய்வமே

    நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
    தந்தீரே ஊழியத்தை
    உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
    பெலத்தால் நிரப்பிடுமே


    Engal Darisanathil Entha Uzhiyathil
    Niraivaettidum Aaviyaanavarae

    Tharisanam Thanthavarae
    Niraivaettida Uthavidumae

    Naangal Ilanthu Pona Unthan Vallamaiyai
    Meendum Thanthidumae
    Naangal Maranthu Pona Tharisanaththai
    Meendum Puthuppiththidum

    Engal Paarvaiyai Oru Visai Thelivaakkidum
    Nnokkaththai Naeraakkidum
    Unthan Siththaththai Vittu Vilakidaamal
    Kaaththuk Kollum Deivamae

    Naangal Unnmaiyullavarkalentu Nampi
    Thantheerae Uzhiyathai
    Unnmaiyaay Seythida Vaanjikkirom
    Belathal Nirappidumae