Category: Tamil Worship Songs Lyrics

  • Valipokker Yenge Pogirir வழிப்போக்கர் எங்கே போறீர்

    1. வழிப்போக்கர் எங்கே போறீர்?
      கையிலே கோல் பிடித்தே?
      பிரயாணம் போறோம் எங்கள்
      ராஜாவின் சொற்படிக்கே
      காடு மேடு ஓடை தாண்டி
      எங்கள் ராஜன் நகர் நோக்கி
      எங்கள் ராஜன் நகர் நோக்கி
      போறோம் இன்ப நாட்டுக்கே
    2. வழிப்போக்கர் யாது நாடி
      போகிறீர் மேலோகத்தில்?
      வெள்ளை அங்கி வாடா க்ரீடம்
      பெறுவோம் அத்தேசத்தில்
      ஜீவ ஆற்றில் தாகம் தீர்ப்போம்
      தேவனோடென்றென்றும் வாழ்வோம்
      தேவனோடென்றென்றும் வாழ்வோம்
      இன்ப மோட்ச லோகத்தில்
    3. வழிப்போக்கர் உங்களோடே
      வரலாமா நாங்களும்?
      வாரும்! வாரும்! கூடவாரும்
      மனமுள்ளோர் யாவரும்
      வல்ல மீட்பர் நம்மைக் காப்பார்
      பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
      பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
      மோட்ச வாழ்வைத் தரவும்

    Valipokker Yenge Pogirir Lyrics in English

    1. valippokkar engae poreer?
      kaiyilae kol pitiththae?
      pirayaanam porom engal
      raajaavin sorpatikkae
      kaadu maedu otai thaannti
      engal raajan nakar Nnokki
      engal raajan nakar Nnokki
      porom inpa naattukkae
    2. valippokkar yaathu naati
      pokireer maelokaththil?
      vellai angi vaadaa kreedam
      peruvom aththaesaththil
      jeeva aattil thaakam theerppom
      thaevanodententum vaalvom
      thaevanodententum vaalvom
      inpa motcha lokaththil
    3. valippokkar ungalotae
      varalaamaa naangalum?
      vaarum! vaarum! koodavaarum
      manamullor yaavarum
      valla meetpar nammaik kaappaar
      pinpu vaalththi nammaich serppaar
      pinpu vaalththi nammaich serppaar
      motcha vaalvaith tharavum
  • Valibane Valibane Valibathilum வாலிபனே வாலிபனே வாலிபத்திலும்

    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)
    ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்
    நிகரில்லா நேசனை நீ தேடிவா (2)
    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

    1. உற்றாரும் தள்ளினாலும் பெற்றாரும் பேசினாலும்
      ஃபிரெண்ட்ஸ் உன்னை ஏசினாலும் அவர் பக்கம்வா (2)
      சோர்வான நேரத்தில் கவலையின் சாலையில்
      மனம்நொந்த வேளையில் அவர் பக்கம்வா
      அன்போடு அணைப்பார்
      பண்போடு பேசுவார் பறிவாய் விசாரித்து
    2. உன்னைத் தேற்றுவார்
      ஹிஸ் லவ் ஃபார் யூ இஸ் கிரேட்
      ரெஸ்ட் ஆல் திங்க்ஸ் ஆர் வேஸ்ட்
      அன்பின் உருவாம் இயேசுவே
      உமதன்பை என்றும் கூறுவேன்
      பண்பாய் பறிவாய் நீர் என்னை தேற்றிட மாறிற்று எல்லாம் ஈஸி
      ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்
      நிகரில்லா நேசனை நீ தேடிவா

    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை
    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

    1. படிப்பறிவும் இல்லையோ வேலையில்லாத் தொல்லையோ
      இழிவான வாழ்க்கை என்ற எண்ணமோ (2)
      வசதிகள் இருந்தாலும் இல்லாமல் போனாலும்
      வா என்றே அழைக்கும் அவர் பக்கம்வா
      பாதைகள் திறப்பார் புது வாழ்வை அளிப்பார்
      புகலிடம் ஆனதால் அவர் பக்கம்வா
      அவர் திறக்கக் கூடாத வழியுமில்லை
      யில் இல்லாத ஆசியில்லை
      ஆஸ் யூ வைட் அப்பான் ஹிஸ் நேம்
      ஹீ’ஸ் கோன்ன லிஃப்ட் அப் யுர் நேம்
      அவர் நாமம் நம்பி நாமும் வந்திட நம்பிக்கை பிறக்குது
      நோ மோர் பிராபிளம்ஸ்

    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)
    ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்
    நிகரில்லா நேசனை நீ தேடிவா (2)
    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)


    Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (2)
    He is so amazing His love is surprising
    Nigarillaa naesanai nee thaedivaa (2)
    Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

    1. Utraarum thallinaalum petraarum paesinaalum
      Friends unnai aesinaalum avar pakkamvaa (2)
      Soarvaana naerathil kavalaiyin saalaiyil
      Manamnondha vaelaiyil avar pakkamvaa
      Anybody anai par
      Panboadu paesuvaar parivaai visaarithu
      Unnai thaetruvaar
    2. His love for you is great
      Rest all things are waste
      Anbin uruvaam yaesuvae
      Umadhanbai endrum kooruvaen
      Panbaai parivaai neer ennai thaetrida maaritru ellaam easy
      He is so amazing His love is surprising
      Nigarillaa naesanai nee thaedivaa

    Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai
    Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

    1. Padiparivum illaiyao vaelaiyillaa thollaiyoa
      Izhivaana vaazhkai endra ennamoa (2)
      Vasadhigal irundhaalum illaamal poanaalum
      Vaa endrae azhaikkum avar pakkamvaa
      Paadhaigal thirapaar pudhu vaazhvai alipaar
      Pugalidam aanadhaal avar pakkamvaa
      Avar thirakakkoodaadha vazhiyumillai
      Kaiyil illaadha aasiyillai
      As you wait upon His name
      He’s gonna lift up your name
      Avar naamam nambi naamum vandhida nambikkai pirakkudhu
      No more problems

    Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (2)
    He is so amazing His love is surprising
    Nigarillaa naesanai nee thaedivaa (2)
    Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (2)

  • Valibane Kanikaye வாலிபனே கன்னிகையே

    வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
    வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

    1. நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
      புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
      சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
      சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே
    2. ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
      ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
      தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
      தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே
    3. சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
      சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
      கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
      கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே
    4. பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
      தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
      கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
      புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே
    5. வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
      இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
      காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
      கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

    Valibane Kanikaye – வாலிபனே கன்னிகையே Lyrics in English
    Valibane Kanikaye
    vaalipanae kannikaiyae mayangi vidaathae!
    vaalipaththil sirushtikarai maranthu vidaathae!

    1. Nnovaa kaala makkalellaam purakkanniththaarae
      purannduvantha vellaththaalae alinthu vittarae
      sothomaippol komoraavaippol paavam seyyaathae
      sutterikkum akkiniyaal saampalaakaathae
    2. aevaalaippol ichchaைyilae veelnthuvidaathae
      aemaattum pisaasukku idam kodukkaathae
      theenaalaip pol oorai sutta aasaippadaathae
      theettup pattu alinthiduvaay maranthuvidaathae
    3. simsonaip pol sittinpaththil seeraliyaathae
      siriththu unnai mayakkum intha ulakai nampaathae
      kadamaiyinai maranthu vitta thaaveethai pola
      kanappoluthil paavaththilae vilunthuvidaathae
    4. paethurupol Yesuvai nee maruthalikkaathae
      thomaavaip pol avisuvaasam avarmael kollaathae
      karththarai nee maranthu vittu kaalam thallaathae
      puththiyillaa kannnnikaippol kathavaith thattathae
    5. vaalipaththil sirushtikarai ninaiththiduvaayae
      illaiyental iratchippinti alinthiduvaayae
      kaalam ithu kataisi kaalam unarnthiduvaayae
      karththar Yesu varumunnae thirumpiduvaayae
  • Vali Thirapaare Devan வழி திறப்பாரே

    வழி திறப்பாரே
    தேவன் வழி திறப்பாரே
    நான் அறிந்திராத வழிகளில்
    எனக்காக புது பாதைகள்
    என்றும் நடத்திடுவார்
    நம்மை அனைத்து காத்திடுவார்
    நாள் தோறும் என்னை தெற்றியே
    நடத்துவார் நம்மை, வழி திறப்பாரே

    வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரே
    வறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்
    இப்புவி ஒழிந்தாலும்
    தேவ வார்த்தை அழியாதே
    புதியதோர் காரியம் செய்வார்


    Vali Thirapaare Devan – வழி திறப்பாரே தேவன் Lyrics in English
    Vali Thirapaare Devan

    vali thirappaarae
    thaevan vali thirappaarae
    naan arinthiraatha valikalil
    enakkaaka puthu paathaikal
    entum nadaththiduvaar
    nammai anaiththu kaaththiduvaar
    naal thorum ennai thettiyae
    nadaththuvaar nammai, vali thirappaarae

    vanaantharaththil valipirakka seyvaarae
    varannda poomiyil aarukal kaannpaen
    ippuvi olinthaalum
    thaeva vaarththai aliyaathae
    puthiyathor kaariyam seyvaar

  • Vali Sonnavar Valiyumaanavar வழி சொன்னவர் வழியுமானவர்

    வழி சொன்னவர் வழியுமானவர்
    வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
    வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
    உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

    மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
    விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
    சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
    ராஜாதி ராஜனவர் – இயேசு

    1.இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
    இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
    இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
    இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
    இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

    2.இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
    இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
    இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
    இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
    இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)


    Vali Sonnavar Valiyumaanavar Lyrics in English
    vali sonnavar valiyumaanavar
    vali saththiyam jeevanumaay vanthavar
    vaarththai entavar vaarththaiyaanavar
    ulakinilae oliyaaka uthiththavar – ivarae

    mannnnor pottum mannaathi mannan
    vinnnnor pottum thaevaathi thaevan
    saantor pottum thooyaathi thooyan
    raajaathi raajanavar – Yesu

    1.Yesuvae theyvam – orae oru theyvam
    Yesuvae thaevan – meyyaana thaevan
    Yesuvae theyvam – thaeti vantha theyvam
    Yesuvae thaevan – meetka vantha thaevan
    Yesuvae raajaa – raajaathi raajaa (2)

    2.Yesuvae iratchakar – uyir thantha iratchakar
    Yesuvae aanndavar – uyirththeluntha aanndavar
    Yesuvae karththanaam – karththaathi karththanaam
    Yesuvae raajanaam – raajaathi raajanaam
    Yesuvae raajaa – raajaathi raajaa (2)

  • Valakamal Ennai Thalaiyakuveer வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

    வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
    நம்பிடு என்னை முழுவதுமாய்
    பெரிய காரியம் செய்திடுவேன்

    யேகோவா நிசியே நீர் என் தேவனே
    யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்

    செங்கடலை நீர் பிளந்தீரே
    வழியை உண்டாக்கி நடத்தினீரே
    யோர்தான் வெள்ளம் போல வந்தாலும்
    எரிகோ தடையாக நின்றாலும்

    தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
    சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு
    தேவையை சந்திக்கும் தேவன் நீரே
    உதவி செய்திடுவீர்


    valakamal ennai thalaiyakuveer Lyrics in English
    vaalaakkaamal ennai thalaiyaakkuveer
    geelaakkaamal ennai maelaakkuveer
    nampidu ennai muluvathumaay
    periya kaariyam seythiduvaen

    yaekovaa nisiyae neer en thaevanae
    yaekovaa nisiyae neer vetti tharuveer

    sengadalai neer pilantheerae
    valiyai unndaakki nadaththineerae
    yorthaan vellam pola vanthaalum
    eriko thataiyaaka nintalum

    thaevaikal aayiram en vaalvilae
    sornthu povathillai neer ennodu
    thaevaiyai santhikkum thaevan neerae
    uthavi seythiduveer

  • Valaigal Kizhiyathakka வலைகள் கிழியத்தக்க

    வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
    கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2)
    ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
    ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2)
    வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
    கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2)

    1. இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் (2)
      நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே (2)
      இயேசு தான் ரட்சகர் என்று (2)

    ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
    ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2)
    ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் (2)
    வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
    கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்

    1. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
      வல்லமையால் நிறைந்தவராய் (2)
      நிழல் பட்டால் அதிசயம்
      ஆடை தொட்டால் உடல் சுகம் (2)
      அண்டாடம் நடந்திடுதே – சபையிலே -ஒருமனமாய்
    2. ஆவியினால் நிறைந்திடுவோம்
      பேதுரு போல் அறிக்கை செய்வோம் (2)
      மனிதர் மீட்படைய வேறொரு நாமம் இல்ல (2)
      என்று நாம் முழங்கிடுவோம் (2) -ஒருமனமாய்

    Valaigal Kizhiyathakka Lyrics in English

    valaikal kiliyaththakka padavukal amilaththakka
    koottalikku kodukkaththakka meenkal kaannpom (2)
    orumanamaay ursaakamaay valaikal veesuvom
    oorengum naadengum narseythi solvom (2)
    valaikal kiliyaththakka padavukal amilaththakka
    koottalikku kodukkaththakka meenkal kaannpom (2)

    1. Yesu thaan ratchakar Yesu thaan ulakin meetpar (2)
      nam thaesam ariyanumae naavukal sollanumae (2)
      Yesu thaan ratchakar entu (2)

    orumanamaay ursaakamaay valaikal veesuvom
    oorengum naadengum narseythi solvom (2)
    aalakkadalilae athikamaay meen pitippom (2)
    valaikal kiliyaththakka padavukal amilaththakka
    koottalikku kodukkaththakka meenkal kaannpom

    1. sthaevaan seythaar arputhangal
      vallamaiyaal nirainthavaraay (2)
      nilal pattal athisayam
      aatai thottal udal sukam (2)
      anndaadam nadanthiduthae – sapaiyilae -orumanamaay
    2. aaviyinaal nirainthiduvom
      paethuru pol arikkai seyvom (2)
      manithar meetpataiya vaeroru naamam illa (2)
      entu naam mulangiduvom (2) -orumanamaay
  • Valai Veesuvoem வலை வீசுவோம்

    ஆழத்திலே வலையை வீசுங்கள்

    வலை வீசுவோம் – 2
    ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
    சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
    நம்மையே பலி எனப் படைப்போம்

    1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
      ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
      நல்கிடும் நாதர்
      சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்
    2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
      ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
      ஜனங்கள் செவிகள்
      ஆவியின் உணவால் நிரம்பும்
    3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி
      மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
      அவரின் ஒளியில்
      இருளின் காலமும் முடியும்
    4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
      பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
      தாங்குவோர் ஜெபிக்க
      ஸ்தோத்திர தொனி வானை முட்டும்

    Valai Veesuvoem Lyrics in English
    aalaththilae valaiyai veesungal

    valai veesuvom – 2
    aalam sella aanndavar alaikkum
    sollirkuk kanamum sella arppanamum
    nammaiyae pali enap pataippom

    1. ennthisai engum Yesuvin seythi
      aekida naam jepippom nalvaram aelum
      nalkidum naathar
      sollirku veku kanam koduppom
    2. inthiyaa engum panthikal vaikka
      aannaiyittar Yesu aavalaay nirkum
      janangal sevikal
      aaviyin unavaal nirampum
    3. paarinil kiriyai seythidum aavi
      mael veettil vantha aavi jothiyaay eriyum
      avarin oliyil
      irulin kaalamum mutiyum
    4. Yesuvin naamam thonikkum vaelai
      paeyin kottaை utaiyum veerarkal sella
      thaanguvor jepikka
      sthoththira thoni vaanai muttum
  • Vakku Panninavar Maridar வாக்குப் பண்ணினவர் மாறிடார்

    வாக்குப் பண்ணினவர் மாறிடார்
    வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
    சோர்ந்து போகாதே – நீ
    சோர்ந்து போகாதே
    உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

    அவர் மனிதனல்லவே
    பொய் சொல்வதில்லையே
    அவர் உண்மையுள்ளவர்
    வாக்கு மறப்பதில்லையே
    வாக்குத் தந்தவர் சிறந்தவர்
    சிறந்ததைத் தருபவர்
    ஏமாற்றங்கள் இல்லையே

    காலங்கள் கடந்ததோ
    தாமதம் ஆனதோ
    வாக்குத் தத்தங்கள் – உன்
    வாழ்வினில் தொலைந்ததோ
    வாக்குத் தந்தவர் சிறந்தவர்
    சிறந்ததைத் தருபவர்
    ஏமாற்றங்கள் இல்லையே


    Vakku panninavar maridar Lyrics in English
    vaakkup pannnninavar maaridaar
    vaakkuththaththam niraivaettuvaar
    sornthu pokaathae – nee
    sornthu pokaathae
    unnai alaiththavar unnmaiyullavar

    avar manithanallavae
    poy solvathillaiyae
    avar unnmaiyullavar
    vaakku marappathillaiyae
    vaakkuth thanthavar siranthavar
    siranthathaith tharupavar
    aemaattangal illaiyae

    kaalangal kadanthatho
    thaamatham aanatho
    vaakkuth thaththangal – un
    vaalvinil tholainthatho
    vaakkuth thanthavar siranthavar
    siranthathaith tharupavar
    aemaattangal illaiyae

  • Vaitheerae Mutruppulliyai வைத்தீரே முற்று புள்ளியை

    வைத்தீரே முற்று புள்ளியை
    என் கஷ்ட நஷ்டங்களுக்கு
    இனி கண்ணீர் இல்லை
    கவலை இல்லை
    சந்தோஷம் எந்தன் வாழ்விலே

    கைகளை தட்டி பாடுவேன் ஆடி
    கொண்டாடுவேன் கர்த்தர்
    நல்லவர் என்று பாடிடுவேன்

    1. வியாதி வேதனை எல்லாம்
      மறைந்ததே என்னைவிட்டு
      சுகமானேனே உம் தலும்புகளால்
      பரிகாரி இயேசு நீரே
    2. மரணத்தின் வலிமை முற்றும்
      அழித்தார் தம் மரணத்தினால்
      வென்றேழுந்தார் ஜெயவேந்தனாய்
      சாகாமை நான் பெற்றிட
    3. ஆசீர்வாதம் என் மேலே
      சாபம் எனக்கில்லையே – கர்த்தரின்
      ஐஸ்வர்யத்தை கொண்டுவருமே
      கர்த்தரின் ஆசீர்வாதமே

    Vaitheerae Mutruppulliyai Lyrics in English

    vaiththeerae muttu pulliyai
    en kashda nashdangalukku
    ini kannnneer illai
    kavalai illai
    santhosham enthan vaalvilae

    kaikalai thatti paaduvaen aati
    konndaaduvaen karththar
    nallavar entu paadiduvaen

    1. viyaathi vaethanai ellaam
      marainthathae ennaivittu
      sukamaanaenae um thalumpukalaal
      parikaari Yesu neerae
    2. maranaththin valimai muttum
      aliththaar tham maranaththinaal
      ventelunthaar jeyavaenthanaay
      saakaamai naan pettida
    3. aaseervaatham en maelae
      saapam enakkillaiyae – karththarin
      aisvaryaththai konnduvarumae
      karththarin aaseervaathamae