Category: Tamil Worship Songs Lyrics

  • Vairaakkiya Vaagnsaiyoetu வைராக்கிய வாஞ்சையோடு

    வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்று
    வானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே!
    வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்
    உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம்

    1. வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போல
      தேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!
      வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்து
      நாமும் கனி கொடுக்கும் மரங்கள் போலவே!
      அணியணியாய் தேவ சேனை பெருகி தேசம் எங்கிலும்
      பணிபுரியும் தேவ இராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்!
    2. கோலியாத்தைப் போல் எதிரிகள் சூழ்ந்து
      வந்து நின்று நிந்தனைகள் செய்தபோதிலும்
      ஆமானைப்போல் சதிகள் செய்து
      ஊழியத்தை வேரறுக்க முனைந்தபோதிலும்
      பதிலளிக்கும் தேவன் முன்னே முழந்தாளிட்டு வேண்டுவோம்!
      எதிரிகளும் ஆண்டவரைப் பணிவார் காணுவோம்!
    3. திறந்தவாசல் இன்று உண்டு
      தேவையுள்ள ஆத்துமாக்கள் எங்கிலும் உண்டு
      திறப்பின் முன் நின்று சிலுவை நோக்கி
      தேசத்தைத் திருப்புவோம் சுதந்தரிப்போமே
      கிரயமின்றி பாவமீட்பை இந்தியர்கள் பெற்றிட
      கிரயம் செலுத்தும் வீரராக எழும்புவோம் நாமே

    Vairaakkiya Vaagnsaiyoetu Lyrics in English
    vairaakkiya vaanjaiyodu seyalpaduvaen entu
    vaanam poomi thantha thaevan vaakkaliththaarae!
    veennaana thikil kalakkam sorvu neengi yaavarum
    unnmaiyodu thaevanaith thuthiththu paaduvom

    1. vaeril thulirkkum ilam thalir pola
      thaeva janam naam elumpiduvomae!
      vaerkal aalam sella maelae valarnthu
      naamum kani kodukkum marangal polavae!
      anniyanniyaay thaeva senai peruki thaesam engilum
      pannipuriyum thaeva iraajjiyam virainthu perukidum!
    2. koliyaaththaip pol ethirikal soolnthu
      vanthu nintu ninthanaikal seythapothilum
      aamaanaippol sathikal seythu
      ooliyaththai vaerarukka munainthapothilum
      pathilalikkum thaevan munnae mulanthaalittu vaennduvom!
      ethirikalum aanndavaraip pannivaar kaanuvom!
    3. thiranthavaasal intu unndu
      thaevaiyulla aaththumaakkal engilum unndu
      thirappin mun nintu siluvai Nnokki
      thaesaththaith thiruppuvom suthantharippomae
      kirayaminti paavameetpai inthiyarkal pettida
      kirayam seluththum veeraraaka elumpuvom naamae
  • Vaikkaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே

    வாய்க்கால்கள் ஓரத்திலே
    நடப்பட்ட மரம் நானே
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    இலையுதிரா மரம் நான் – 2

    செய்வதெல்லாம் வாய்க்கும்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
    பசுமை எப்போதுமே
    தப்பாமல் கனி கொடுப்பே-2

    எப்போதும் பசுமை
    தப்பாமல் கனிகள் – 2

    கர்த்தரின் திரு வேதத்தில்
    இன்பம் தினம் காண்பேன் – 2
    இரவு பகல் எப்போதும் (நான்)
    தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

    நீதிமான் செல்லும் வழிகள்
    கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
    துன்மார்க்கர் பாதையெல்லாம்
    அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

    துன்மார்க்கர் ஆலோசனை
    கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
    பொல்லாரின் சொற்கள்படி
    நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்


    Vaikkaalgal Orathilae Lyrics in English
    vaaykkaalkal oraththilae
    nadappatta maram naanae
    en vaerkal thannnneerukkul
    ilaiyuthiraa maram naan – 2

    seyvathellaam vaaykkum
    vetti mael vetti kaannpaen – 2
    pasumai eppothumae
    thappaamal kani koduppae-2

    eppothum pasumai
    thappaamal kanikal – 2

    karththarin thiru vaethaththil
    inpam thinam kaannpaen – 2
    iravu pakal eppothum (naan)
    thiyaanam seythiduvaen – 2 – eppothum

    neethimaan sellum valikal
    karththaro thinam paarkkiraar – 2
    thunmaarkkar paathaiyellaam
    alivilthaan mutiyum – 2 -eppothum

    thunmaarkkar aalosanai
    kaelaamal vaalnthiruppaen – 2
    pollaarin sorkalpati
    nadavaamal thinam vaalvaen – 2 -eppothum

  • Vaigaraiyil Umakkaaga வைகறையில் உமக்காக

    வைகறையில் உமக்காக
    வழி மேல் விழி வைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா

    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்

    உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
    பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
    நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
    குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்

    ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
    உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
    நீர்தானே எனது உரிமைச் சொத்து
    எனக்குரிய பங்கும் நீர்தானய்யா

    படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
    அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
    என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
    என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

    காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
    நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
    எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
    ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்


    Vaigaraiyil Umakkaaga Lyrics in English
    vaikaraiyil umakkaaka
    vali mael vili vaiththu
    kaaththirukkinten iraivaa

    en jepam kaettu pathil thaarum
    perumoochchaைp paarththu manam irangum

    um illam vanthaen um kirupaiyinaal
    payapakthiyodu panninthu konntaen
    niraivaana makilchchi um samookaththil
    kuraiyillaatha paerinpam um paathaththil

    aatchi seyyum aalunar neerthaanayyaa
    ummaiyanti vaetru oru selvam illaiyae
    neerthaanae enathu urimaich soththu
    enakkuriya pangum neerthaanayyaa

    padukuliyil paathaalaththil vidamaattir
    alinthu poka anumathiyum tharamaattir
    en ithayam pooriththu thullukintathu
    en udalum paathukaappil ilaippaaruthu

    kaalaithorum thirupthiyaakkum um kirupaiyaal
    naalellaam kalikoornthu makilnthiruppaen
    eppothum en munnae neerthaanayyaa
    orupothum asaivura vidamaattir

  • Vaetha Puththakamae வேத புத்தகமே

    வேத புத்தகமே, வேத புத்தகமே,
    வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

    1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
      பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத
    2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
      பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத
    3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
      இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத
    4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
      உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத

    Vaetha Puththakamae Lyrics in English
    vaetha puththakamae, vaetha puththakamae,
    vaetha puththakamae, vilai petta selvam neeyae.

    1. paethaikalin njaanamae, – periya thiraviyamae,
      paathaikku naltheepamae, – paakyar virumpun thaenae! — vaetha
    2. ennai enakkuk kaatti – en nilaimaiyai maattip,
      ponnulakaththaik kaattip – pokum vali solvaayae. — vaetha
    3. thunpakaalam aaruthal – unnaalvarum nisamae
      inpamaakunj saaventay – entum nampina paerkkae. — vaetha
    4. panniru maathangalum – pariththunnnalaam unkani;
      unnaith thiyaanippavar – uyarkathi sernthiduvaar. — vaetha
  • Vaeru Oru Aasai Illa வேறு ஒரு ஆசை இல்ல

    வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
    உம்மைத் தவிர உம்மைத் தவிர

    1. உம் பாதம் பணிந்து நான்
      உம்மையே தழுவினேன்
    2. இருள் நீக்கும் வெளிச்சமே
      எனை காக்கும் தெய்வமே
    3. மனம் இரங்கினீரே
      மறுவாழ்வு தந்தீரே
    4. சுகம் தந்தீரையா
      பெலன் தந்தீரையா
    5. இரக்கத்தின் சிகரமே
      இதயத்தின் தீபமே
    6. செய்த நன்மை நினைத்து
      துதித்துப் பாடி மகிழ்வேன்Vaeru Oru Aasai Ill

    Vaeru Oru Aasai Illa Lyrics in English
    vaetru oru aasai illa Yesu raajaa
    ummaith thavira ummaith thavira

    1. um paatham panninthu naan
      ummaiyae thaluvinaen
    2. irul neekkum velichchamae
      enai kaakkum theyvamae
    3. manam irangineerae
      maruvaalvu thantheerae
    4. sukam thantheeraiyaa
      pelan thantheeraiyaa
    5. irakkaththin sikaramae
      ithayaththin theepamae
    6. seytha nanmai ninaiththu
      thuthiththup paati makilvaenVaeru Oru Aasai Illa
  • Vaeru Jenmam Vaenum வேறு ஜென்மம் வேணும் மனம்

    வேறு ஜென்மம் வேணும், – மனம்
    மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

    1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
      தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு
    2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
      தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு
    3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
      வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு
    4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
      மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு
    5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
      சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு
    6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
      விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

    Vaeru Jenmam Vaenum, Lyrics in English
    vaetru jenmam vaenum, – manam
    maaruthalaakiya ullath thooymai ennum.

    1. kootru parisuththar maarilaa thaevanin
      thaeruthalaana vinnpaetru pera ingae; – vaeru
    2. paavasupaavamum jeeviyamum maarath
      thaevanin saayalai maevuvathaakiya; – vaeru
    3. maanidarin apimaanaththinaalalla,
      vaanavarin arul thaanamaaka varum; – vaeru
    4. ontana ratchakar ventiyathai nampi,
      mantaduvorukku ontuvathaakiya; – vaeru
    5. mainthar kedaamal ukanthu eetaeravae,
      sontha makanthanaith thantha pithaa arul; – vaeru
    6. mannnninil paththaraay nannnni nadakkavum,
      vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeru
  • Vaentuthal Kaettitum வேண்டுதல் கேட்டிடும்

    கேளுமே வேண்டுதல்

    1. வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா
      உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் – 2
      பரலோக பாக்கியம் தந்திடவே
      வாசல் திறந்திடுமே – 2

    கேளுமே வேண்டுதல்
    இந்நேரமே வந்திடுமே – 2

    1. இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது
      பதில் தருவேன் என்று உரைத்தவரே
      வாக்கு மாறாத என் ஆண்டவரே
      வாக்கை நிறைவேற்றுமே – 2
    2. என் பாவங்கள் யாவும் போக்கிடவே
      உம் திரு உதிரத்தின் வல்லமையை – 2
      அனுதின வாழ்வில் கண்டிடவே
      விசுவாசம் தந்திடுமே – 2
    3. ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே
      உமது வசனத்தால் நிறைத்திடுமே – 2
      பரிசுத்த ஆவியின் வல்லமையால்
      என்னை நிறைத்திடுமே – 2

    Vaentuthal Kaettitum Lyrics in English
    kaelumae vaennduthal

    1. vaennduthal kaetdidum en ratchakaa
      unthan sannithiyil varukiraen naan – 2
      paraloka paakkiyam thanthidavae
      vaasal thiranthidumae – 2

    kaelumae vaennduthal
    innaeramae vanthidumae – 2

    1. Yesuvin naamaththil kaetkumpothu
      pathil tharuvaen entu uraiththavarae
      vaakku maaraatha en aanndavarae
      vaakkai niraivaettumae – 2
    2. en paavangal yaavum pokkidavae
      um thiru uthiraththin vallamaiyai – 2
      anuthina vaalvil kanntidavae
      visuvaasam thanthidumae – 2
    3. aaththumaavin thaakam theerththidavae
      umathu vasanaththaal niraiththidumae – 2
      parisuththa aaviyin vallamaiyaal
      ennai niraiththidumae – 2
  • Vaelaikaaran Kangal Than வேலைக்காரன் கண்கள் தன்

    வேலைக்காரன் கண்கள் -தன்
    எஜமான் கரம் நோக்கும்
    தேவா எனக்காய் எல்லம் செய்யும்
    உம் கரத்தை என்றும் நோக்குவேன்

    நீதியின் வலது கரம்
    நீதிமானை என்றும் தாங்கிடுமே
    விழுகையில் வியாதியின் நேரங்களில்
    வழுவாது உம் கரம் தாங்கிடுமே

    கடலும் ஆறும் தடையில்லை
    ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
    தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
    ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்

    சத்துவமுள்ள உந்தன் கரம்
    நித்தம் காத்து வழி நடத்திடுமே
    உம் கரம் பற்றியே என்றுமே நான்
    பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே


    Vaelaikaaran kangal than Lyrics in English
    vaelaikkaaran kannkal -than
    ejamaan karam Nnokkum
    thaevaa enakkaay ellam seyyum
    um karaththai entum Nnokkuvaen

    neethiyin valathu karam
    neethimaanai entum thaangidumae
    vilukaiyil viyaathiyin naerangalil
    valuvaathu um karam thaangidumae

    kadalum aarum thataiyillai
    aanndavar karam ennotirunthaal
    thataikalai akattum neer munnae sella
    jeyaveeranaay naanum um pin varuvaen

    saththuvamulla unthan karam
    niththam kaaththu vali nadaththidumae
    um karam pattiyae entumae naan
    paththiramaay ippoovil nadappaenae

  • Vaazhvin Muthanmai Iyaesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

    எல்லாம் இயேசுவுக்கே

    1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
      வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

    நானும் என் எல்லாமும்
    இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கு

    1. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
      அறிந்தோர் அவரை சொல்லவில்லை
    2. இயேசுவை அறியாதோர் மனம்மாற
      சகல ஜாதியும் அடிபணிய
    3. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
      மீட்கப்பட்டோர் இணைந்து வாழ
    4. உயிருள்ளளவும் உண்மை ஆள
      மரணம் வரினும் மலையாய் நிற்க

    Vaazhvin Muthanmai Iyaesuvukkae Lyrics in English
    ellaam Yesuvukkae

    1. vaalvin muthanmai Yesuvukkae
      vaalvin mulumaiyum Yesuvukkae

    naanum en ellaamum
    Yesuvukku suviseshaththirku

    1. thoyntha janangal maeyppanillai
      arinthor avarai sollavillai
    2. Yesuvai ariyaathor manammaara
      sakala jaathiyum atipanniya
    3. sapaikal peruki valarnthonga
      meetkappattaோr innainthu vaala
    4. uyirullalavum unnmai aala
      maranam varinum malaiyaay nirka
  • Vaazhthiduvom Nam Vazhthiduvom வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம்

    பல்லவி

    வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம்

    இயேசுவின் நாமத்தை

    இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே

    எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே

    தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே

    ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

    ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

    வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை

    கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே

    ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

    ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே


    Vaazhthiduvom Nam Vazhthiduvom Lyrics in English
    pallavi

    vaalththiduvom naam vaalththiduvom naam

    Yesuvin naamaththai

    intum entum ontakak kootippaatiyae

    ellaiyillaa anpai avar entum eevaarae

    thollaiyillaa vaalvai nam thaasarkgeevaarae

    aahaa haa ontakak kooti naam paadiduvomae

    oho ho ho ontakak kooti naam paadiduvomae

    vaetham thaeti kanndu nam Yesu naatharai

    geetham paati kanndu naam pottiduvomae

    aahaa haa ontakak kooti naam paadiduvomae

    oho ho ho ontakak kooti naam paadiduvomae