Category: Tamil Worship Songs Lyrics

  • Undhan Maha Parisutha உந்தன் மஹா பரிசுத்த

    உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
    என்னையும் அழைத்து செல்லும்

    உம் பரிசுத்த ரத்தத்தினாலே
    என்னை கழுவிடும்

    உம் பரிசுத்த ரத்தத்தினாலே
    தூய்மை ஆக்கிடும்
    உள்ளே அழைத்துச் செல்லும்
    உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
    உம் மகிமை காண்பித்திடும்
    உம்மை போல் மாற்றிடும்


    Undhan Maha Parisutha Lyrics in English
    unthan mahaa parisuththa sthalaththukkullae
    ennaiyum alaiththu sellum

    um parisuththa raththaththinaalae
    ennai kaluvidum

    um parisuththa raththaththinaalae
    thooymai aakkidum
    ullae alaiththuch sellum
    um pirasannaththaal nirappidum
    um makimai kaannpiththidum
    ummai pol maattidum

  • Undhan Kayangal உந்தன் காயங்கள்

    உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
    உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ
    எனக்காக உலகில் வந்தவரே
    எந்தன் பாவம் போக்க மரித்தவரே
    உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
    உம்மை போல உலகில் யாருமில்லை

    சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ
    நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை துறந்தீரோ
    உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
    உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்

    உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
    உந்தன் பாசம் பிரியாமல் நான் விலகி சென்றேனே
    தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட
    எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட


    Undhan kayangal Lyrics in English
    unthan kaayangal enthan paavangalo
    unthan vaethanaikal enthan meeruthalo
    enakkaaka ulakil vanthavarae
    enthan paavam pokka mariththavarae
    unthan anpai solla vaarththai illai
    ummai pola ulakil yaarumillai

    settil kidantha enakkaaka saapam aaneero
    naattam pitiththa enakkaaka um alakai thurantheero
    unthan raththam sinthi en paavam kaluvineer
    ummai paliyaay thanthu en paathai maattineer

    unthan naesam ariyaamal naan thooram sentenae
    unthan paasam piriyaamal naan vilaki sentenae
    thaeti vantheer ennaiyum vaala vaiththeeda
    enthan paara siluvaiyai neer sumanthida

  • Undhan Aaviyai Neer Ootrum உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

    உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
    உந்தன் விடுதலை நீர் தாரும்
    உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
    ஊற்றுமே (2)

    ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
    தந்திட வேண்டுமே உம் அக்கினி

    Verse 1

    உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
    என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
    உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
    ஊற்றுமே (2)
    – ஊற்றிட வேண்டுமே
    ழு ழுழுழுழு
    ழுழுழு ழுழுழுழு
    ழு ழுழுழுழு
    ழுழுழு ழுழுழுழு ( 2)
    – ஊற்றிட வேண்டுமே

    வானம் திறந்து ஊற்றும்
    உம் வல்லமை நீர் ஊற்றும்
    என் வாழ்க்கையை நீர் மாற்றும்
    ஊற்றுமே (2)

    ஊற்றிட வேண்டுமே ஏன்னை நிரப்பிட வேண்டுமே
    தந்திட வேண்டுமே உம் அக்கினி

    -வானம்


    Undhan Aaviyai Neer Ootrum Lyrics in English

    unthan aaviyai neer oottum
    unthan viduthalai neer thaarum
    unthan aaviyai neer oottum
    oottumae (2)

    oottida vaenndumae ennai nirappida vaenndumae
    thanthida vaenndumae um akkini

    Verse 1

    unthan akkiniyai neer oottum
    ennai akkini pilampaay maattum
    unthan akkiniyai neer oottum
    oottumae (2)
    – oottida vaenndumae
    lu lulululu
    lululu lulululu
    lu lulululu
    lululu lulululu ( 2)
    – oottida vaenndumae

    vaanam thiranthu oottum
    um vallamai neer oottum
    en vaalkkaiyai neer maattum
    oottumae (2)

    oottida vaenndumae aennai nirappida vaenndumae
    thanthida vaenndumae um akkini

    -vaanam

  • Unakkum Enakkum உனக்கும் எனக்கும்

    பிறருக்காக வாழுங்கள்

    உனக்கும் எனக்கும் தேவன் தந்த
    காலம் அல்லவா .. இதை
    உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!
    பிறருக்காக வாழும் வாழ்க்கை
    உன்னதம் அல்லவா .. இதை
    அறிந்து உணர்ந்து வாழும்போது
    இலாபம் அல்லவா!

    1. வந்துபோன மனிதர் எல்லாம்
      உலகம் நினைப்பதில்லை
      மரித்தும் பேசும் மனிதர் உண்டு
      என்றும் அவர்கள் கொஞ்சமே
      தியாகத்தோடு தீபமாக
      வாழ்ந்த தேவ மனிதரை
      இதிகாசம் மறந்ததாக
      சேதி ஒன்றும் இல்லையே!
    2. அருவி போன்ற ஆசீர்வாதம்
      பெற்று மகிழ வாருங்கள்
      ஆவியாலே உள்ளம் பொங்கி
      துள்ளி சேவை செய்யுங்கள்
      பிறருக்காக சேவை செய்து
      மகிழ்ச்சி வெள்ளமாகுங்கள்
      திரள் ஜனத்தை சிலுவை பக்கம்
      கொண்டு வந்து சேருங்கள்

    Unakkum Enakkum Lyrics in English
    pirarukkaaka vaalungal

    unakkum enakkum thaevan thantha
    kaalam allavaa .. ithai
    unaraamal jeevippathu paavam allavaa!
    pirarukkaaka vaalum vaalkkai
    unnatham allavaa .. ithai
    arinthu unarnthu vaalumpothu
    ilaapam allavaa!

    1. vanthupona manithar ellaam
      ulakam ninaippathillai
      mariththum paesum manithar unndu
      entum avarkal konjamae
      thiyaakaththodu theepamaaka
      vaalntha thaeva manitharai
      ithikaasam maranthathaaka
      sethi ontum illaiyae!
    2. aruvi ponta aaseervaatham
      pettu makila vaarungal
      aaviyaalae ullam pongi
      thulli sevai seyyungal
      pirarukkaaka sevai seythu
      makilchchi vellamaakungal
      thiral janaththai siluvai pakkam
      konndu vanthu serungal
  • Unakkule Irukindra Unn Yesu உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு

    உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு
    என்றும் பெரியவரே
    நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    1. இல்லையென்ற நிலை வந்ததோ
      இருப்பதுபோல் அழைக்கும் தேவன்
      பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
      பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
    2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
      சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
      வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
      வலக்கரம் தாங்குவார் கலங்காதே
    3. நம்பிக்கை இல்லா நிலையானதோ
      விசுவாசம் உன்னில் குறைவானதோ
      அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
      அதிசயம் செய்வார் நீ கலங்காதே
    4. மதுரமான வாழ்வு கசப்பானதோ
      ஒளி வரும் நேரம் இருளானதோ
      ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
      யாவையும் செய்வார் கலங்காதே
    5. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
      பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ
      பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
      பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
    6. செங்கடல் உனக்கு முன்னானதோ
      சேனைகளெல்லாம் பின்னானதோ
      சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
      சேதமின்றி காப்பார் கலங்காதே

    Unakkule Irukindra Unn Yesu Lyrics in English
    unakkullae irukkinta un Yesu
    entum periyavarae
    nee ariyaathathum unakkettathathumaana
    periya kaariyangal seythiduvaar

    1. illaiyenta nilai vanthatho
      iruppathupol alaikkum thaevan
      periyavar unakkullae irukkintar
      paarththukkolvaar nee kalangaathae
    2. soolnilai ellaam ethiraanatho
      suttaththaar unnil pakaiyaanaaro
      vallavar unakkullae irukkintar
      valakkaram thaanguvaar kalangaathae
    3. nampikkai illaa nilaiyaanatho
      visuvaasam unnil kuraivaanatho
      arputhar unakkullae irukkintar
      athisayam seyvaar nee kalangaathae
    4. mathuramaana vaalvu kasappaanatho
      oli varum naeram irulaanatho
      jeevanulla thaevan irukkintar
      yaavaiyum seyvaar kalangaathae
    5. peruvellam mothi atikkintatho
      perungaattil padaku thavikkintatho
      periyavar unakkullae irukkintar
      paarththukkolvaar nee kalangaathae
    6. sengadal unakku munnaanatho
      senaikalellaam pinnaanatho
      senaiyin karththar irukkintar
      sethaminti kaappaar kalangaathae
  • Unakku Virothamai உனக்கு விரோதமாய்

    உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
    வாய்க்காதே வாய்க்காதே
    ஒரு வழியாய் வருவான்
    எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
    வெட்கப்பட்டு போவதில்லையே – நீ

    எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
    கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
    துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
    கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை

    ராஜா இயேசு நம்ம பக்கமே
    அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
    வெற்றி – 5,
    வெற்றியே – 2

    எதிர்த்து வரும் எரிகோவை
    தகர்த்தெறியும் வல்லமை
    தடுத்து நிற்கும் சாத்தானை
    முறித்தெரியும் வல்லமை
    அக்கினியில் நடந்தாலும்
    எரிந்திடாத வல்லமை
    தண்ணீரிலே நடந்தாலும்
    மூழ்கிடாத வல்லமை


    Unakku virothamai Lyrics in English
    unakku virothamaay elumpum aayutham
    vaaykkaathae vaaykkaathae
    oru valiyaay varuvaan
    ethiri aelu valiyaay oduvaan
    vetkappattu povathillaiyae – nee

    eppakkam nerukkinaalum odungi nee povathillai
    kalakkamatainthaalum manamurivataivathillai
    thunpappaduththinaalum kaividappaduvathillai
    geelae vilunthaalum matinthu naan povathillai

    raajaa Yesu namma pakkamae
    avar senai entum namma pakkamae
    vetti – 5,
    vettiyae – 2

    ethirththu varum erikovai
    thakarththeriyum vallamai
    thaduththu nirkum saaththaanai
    muriththeriyum vallamai
    akkiniyil nadanthaalum
    erinthidaatha vallamai
    thannnneerilae nadanthaalum
    moolkidaatha vallamai

  • Unakkoruvar Irukirar உனக்கொருவர் இருக்கின்றார்

    உனக்கொருவர் இருக்கின்றார்
    உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
    உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
    நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்

    சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
    சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
    சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
    சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
    (உனக்கொருவர்)

    ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
    ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
    தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
    அஞ்சிடாதே மகனே மகளே என்று
    உன்னை தேற்றிட்வே
    (உனக்கொருவர்)

    வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
    வேண்டாத வார்த்தைகளைச்
    சொல்லிப் புண்படுத்துவார்கள்
    வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
    வாழத்தான் வேண்டும் என்று
    வியாதியிலே சுகம் தரவே
    (உனக்கொருவர்)

    கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
    கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
    இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
    கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம
    கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
    உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
    சொல்வதெல்லாம் சும்மாங்க
    யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
    ஜனங்களின் பாவம் நீக்கி
    இரட்சிக்க வந்த தெய்வமுங்க
    (உனக்கொருவர்)


    Unakkoruvar Irukirar Lyrics in English

    unakkoruvar irukkintar
    unnai visaarikkath thutikkintar
    unnaiyum ennaiyum yaesu naesikkiraar
    nammai ullang kaikalil varainthirukkiraar

    saathi sanam maranthittalum maranthidaathavar
    sothikalin pithaavaam yaesuvaanavar
    soolnilaikal maarinaalum yaesu unnai marappathillai
    siluvaiyil jeevan vidum naeraththilum verukkavillai (unakkoruvar)

    aakaathavan entu unnai yaar thallinaalum
    aapirakaamin thaevan ummaith thalliduvaaro
    thanjam entu varupavaraith thallaatha naesaravar
    anjidaathae makanae makalae entu
    unnai thaettitvae (unakkoruvar)

    viyaathiyasthan entu unnai othukki vaippaarkal
    vaenndaatha vaarththaikalaich
    sollip punnpaduththuvaarkal
    vaalvathaa saavathaa entu nee aluthu pulampiduvaay
    vaalaththaan vaenndum entu
    viyaathiyilae sukam tharavae (unakkoruvar)

    kashtppadum pothu namakku uthavuvaarillai
    kadanpatta pothu athaith theerppavarillai
    ishdappatta theyvangalellaam
    kumpittup paarththaachchu- namma
    kashdangalai theerkka avai munvaravillai
    ulakaththil theyvangal unndentu
    solvathellaam summaanga
    yaesukkiristhu oruvarae meyyaana theyvamunga
    janangalin paavam neekki
    iratchikka vantha theyvamunga (unakkoruvar)

  • Unakkoru Nanban உனக்கொரு நண்பன்

    உனக்கொரு நண்பன் இல்லையென்று
    ஏங்குகின்றாயோ இப்பூவிலே

    அன்னையைப் போல ஆதரிப்பார்
    அல்லும் பகலும் காத்திருப்பார்
    நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
    சோராமல் என்றும் வாழ்ந்திடவே

    தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
    தேவன் உன்னை கைவிடமாட்டார்
    தம் செல்வம் போல ஆதரிப்பார்
    கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்

    உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
    அரவணைக்க ஒரு தகப்பனுண்டு


    Unakkoru nanban Lyrics in English
    unakkoru nannpan illaiyentu
    aengukintayo ippoovilae

    annaiyaip pola aatharippaar
    allum pakalum kaaththiruppaar
    nee kirupaiyil vaala vali vakuththaar
    soraamal entum vaalnthidavae

    thakappanum thaayum kaivittalum
    thaevan unnai kaividamaattar
    tham selvam pola aatharippaar
    kannmannipola unnai paathukaappaar

    unakkoru nannpan Yesuvunndu
    aravannaikka oru thakappanunndu

  • Unakkagavae Naan Kaathirukiren உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

    பல்லவி
    உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
    உள்ளத்தையே நீ தருவாயா-[3]

    உனக்காகவே நான் வந்தேனே…
    உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்….
    உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்.

    அனுபல்லவி

    உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
    உனக்காகவே நான் உனக்காகவே….

    உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்)

    சரணங்கள்

    1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…
      துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…
      நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்….
      கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்]
    2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….
      உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….
      உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)

    Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன் Lyrics in English
    Unakkagavae Naan Kaathirukiren

    pallavi
    unakkaakavae naan kaaththirukkiraen……
    ullaththaiyae nee tharuvaayaa-[3]

    unakkaakavae naan vanthaenae…
    unakkaakavae naan siluvai samanthaen….
    unakkaakavae naan mariththaenae…unakkaakavae naan uyirththelunthaen.

    anupallavi

    unakkaakavae meenndum varukiraen…
    unakkaakavae naan unakkaakavae….

    unakkaakavae unakkaakavae unakkaakavae naan unakkaakavae.-(unakkaakavae naan kaaththirukkiraen)

    saranangal

    1. paavaththai ellaam manniththaenae…
      thukkaththai ellaam sumanthaenae…
      Nnoykal ellaam kunamaakkinaen….
      kannnneerai ellaam thutaiththittaenae….- [unakkaakavae meenndum varukiraen]
    2. unakkaaka paadukal aettukkonntaen….
      unakkaaka kaayangal aettuk konntaen….
      unakkaaka thiyaakam seythittaenae… unakkaaka muttilum arppanniththaen…- (unakkaakavae meenndum varukiraen)
  • Unakkaay Mariththaen உனக்காய் மரித்தேன்

    உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
    உயிரோடெழுந்தேன் இதோ
    ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2)

    சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி
    துதியே கனமே மகிமை செலுத்து! (2)
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2)

    1. வாக்கு மாறாதவரே இயேசு
      சொல் தவறாதவரே
      சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே
    2. சுத்த திருச்சபையே பறை
      சாற்றிடு நற்செய்தியை
      சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே
    3. பாலகர் வாயினிலே – துதி
      பாடல்கள் முழங்குதே
      போற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே — சீயோனே
    4. தள்ளினோம் ஆகாதென்றே – ஆனார்
      தலைக்கு மூலைக்கல்லாய்
      ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம் — சீயோனே
    5. அன்றாடகம் என்னுடன் – பேசி
      அன்பாய் விசாரிக்கின்றார்
      என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே — சீயோனே
    6. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
      நல்ல மார்க்கமிதுவே
      நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் — சீயோனே

    Unakkaay Mariththaen Lyrics in English
    unakkaay mariththaen aanaalum sathaa kaalamum
    uyirodelunthaen itho
    jeevikkiraen entarae – Yesu (2)

    seeyonae! kempeeri! saalaemae! nee sthoththari
    thuthiyae kanamae makimai seluththu! (2)
    en meetpar uyirotirukkintar! aamen allaelooyaa! (2)

    1. vaakku maaraathavarae Yesu
      sol thavaraathavarae
      sonnapati antu uyirththelunthaarae — seeyonae
    2. suththa thiruchchapaiyae parai
      saattidu narseythiyai
      saavaiyum, paeyaiyum, Nnoyaiyum jeyiththaar — seeyonae
    3. paalakar vaayinilae – thuthi
      paadalkal mulanguthae
      pottip paadum vaayai adakkak koodaathae — seeyonae
    4. thallinom aakaathente – aanaar
      thalaikku moolaikkallaay
      sthiramaay karththar mael vaalkkaiyaik kattuvom — seeyonae
    5. antadakam ennudan – paesi
      anpaay visaarikkintar
      ennodu jeevikka Yesu uyirththaarae — seeyonae
    6. nampikkaiyulla valla – jeeva
      nalla maarkkamithuvae
      naamum uyirththu nam karththaraich seruvom — seeyonae