Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Yesuvin Oliyil Nadakkiraen நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

    1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்
      என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
      இயேசு ரட்சகர் பின்னே

    நடக்கிறேனே இரட்சகருடனே
    கடக்கிறேனே கரம் பிடித்தே
    விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
    ஒளியில் நடக்கிறேன்

    1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      வான் காரிருள் மூடினும் பயப்படேன்
      சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
      ஆயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
    2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
      வீண் பாரங்களை விடுகிறேனே
      என் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
    3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
      நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே
      தூயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
    4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      முன்னோடின அவரை நோக்குகிறேன்
      என் சிலுவை எடித்துச் செல்வேனே
      என் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே

    Naan Yesuvin Oliyil Nadakkiraen Lyrics in English

    1. naan Yesuvin oliyil nadakkiraen
      iraappakalai olungaay kadakkiraen
      entum nadakkiraen pin thirumpaenae
      Yesu ratchakar pinnae

    nadakkiraenae iratchakarudanae
    kadakkiraenae karam pitiththae
    vilippaayirunthu jeyangaannpaenae
    oliyil nadakkiraen

    1. naan Yesuvin oliyil nadakkiraen
      vaan kaarirul mootinum payappataen
      seeyon geetham paatich selvaenae
      aayan Yesuvin pinnae — nadakkiraenae
    2. naan Yesuvin oliyil nadakkiraen
      vaan aaseervaathangal ataikiraen
      veenn paarangalai vidukiraenae
      en Yesuvin pinnae — nadakkiraenae
    3. naan Yesuvin oliyil nadakkiraen
      maeyppan avar saththam arikiraen
      Nnoy vaayppattalum nadappaenae
      thooyan Yesuvin pinnae — nadakkiraenae
    4. naan Yesuvin oliyil nadakkiraen
      munnotina avarai Nnokkukiraen
      en siluvai etiththuch selvaenae
      en Yesuvin pinnae — nadakkiraenae
  • Naan Yenga Ponaalum நான் எங்கே போனாலும்

    நான் எங்கே போனாலும்
    உங்க நினைப்புலதான் வாழ்வேன்
    நான் என்ன செய்தாலும்
    உங்க நினைப்புலதான் செய்வேன்
    உங்க அன்புதான் என்னை இழுக்குது
    உங்க கிருபைதான் என்னை சூழுது
    அன்புதான் அன்புதான் அன்புதான்
    கிருபைதான் கிருபைதான் கிருபைதான்

    1. உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
      உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
      உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
      எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா
      இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
      உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2
    2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
      சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே
      உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
      எனக்கு நிரந்தர சமாதானமே
      என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்
      நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே
      உம்சித்தம் என் உள்ளத்தில்
      ஆசையாய் எழும்பட்டுமையா

    Naan Yenga Ponaalum Lyrics in English

    naan engae ponaalum
    unga ninaippulathaan vaalvaen
    naan enna seythaalum
    unga ninaippulathaan seyvaen
    unga anputhaan ennai ilukkuthu
    unga kirupaithaan ennai sooluthu
    anputhaan anputhaan anputhaan
    kirupaithaan kirupaithaan kirupaithaan

    1. unga samookaththirku oti vanthompaa
      ummai aaraathikka thuthikka vanthompaa
      unga samookaththirku oti vanthompaa
      enga paarathaththai solla vanthompaa
      intha oru idamthaan en aaruthal
      unga vaarththaithaan en nampikkai -2
    2. en kavalai kannnneer vaethanai ellaam
      sumanthukkonnda Yesuraajaavae
      ummodu innainthu vaalnthaal pothum
      enakku niranthara samaathaanamae
      en kookkuralin jepaththaikkaetpavar
      neer oruvar thaanae Yesuraajaavae
      umsiththam en ullaththil
      aasaiyaay elumpattumaiyaa
  • Naan Vithiyaasamanavan நான் வித்தியாசமானவன்

    நான் வித்தியாசமானவன் -2

    இயேசு என்னை இரட்சித்தார்
    ஒ…ஓ….ஓ….ஓ…
    என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
    ஓ…ஓ…..ஓ……ஓ…..

    இனி வாழ்வது நானல்ல
    இயேசு எனக்குள் வாழ்கிறார்

    ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
    வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

    பாவம் செய்ய முடியாது
    பொய் பேச முடியாது

    இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
    ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

    எனக்காக வாழ முடியாது
    சும்மா இருக்கவும் முடியாது

    பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
    இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்

    இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
    இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்


    Naan vithiyaasamanavan Lyrics in English

    naan viththiyaasamaanavan -2

    Yesu ennai iratchiththaar
    o…o….o….o…
    en paavangal ellaam manniththaar
    o…o…..o……o…..

    ini vaalvathu naanalla
    Yesu enakkul vaalkiraar

    jepam pannnnaamal irukka mutiyaathu
    vaetham vaasikkaamal irukka mutiyaathu

    paavam seyya mutiyaathu
    poy paesa mutiyaathu

    Yesuvai sollaamal irukka mutiyaathu
    ooliyam seyyaamal irukka mutiyaathu

    enakkaaka vaala mutiyaathu
    summaa irukkavum mutiyaathu

    parisuththamaay naan vaalnthiduvaen
    Yesuvai ulakirku kaatdiduvaen

    Yesuvukkaaka vaalnthiduvaen
    Yesuvai uyarththi paadiduvaen

  • Naan Uyirodu Irukkum Naalellam நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

    நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
    உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளளவும் என் தேவனே
    உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

    எனக்காய் மரித்த என் தேவன் நீரே
    உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
    எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2
    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
      வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2
      உந்தன் அன்பு பெரியதே – 4
      ஈடிணையற்றதே
      உந்தன் கிருபை பெரியதே – 4
      கிருபையான இயேசுவே
      நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
      நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
    2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
      பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
      உந்தன் அன்பு பெரியதே – 4
      ஈடிணையற்றதே
      உந்தன் கிருபை பெரியதே – 4
      கிருபையான இயேசுவே
      நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
      நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
    3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
      சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
      உந்தன் அன்பு பெரியதே – 4
      ஈடிணையற்றதே
      உந்தன் கிருபை பெரியதே – 4
      கிருபையான இயேசுவே
      நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
      நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
    உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
    உந்தன் அன்பு பெரியதே – 4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே – 4
    கிருபையான இயேசுவே
    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2


    Naan Uyirodu Irukkum Naalellam Lyrics in English

    naan uyirodu irukkum naalellaam
    ummaip pukalnthu paaduvaen
    naan ullalavum en thaevanae
    ummaik geerththanam pannnuvaen – 2

    enakkaay mariththa en thaevan neerae
    unthan anpai vittu vilaki naan engae povaen
    enthan vaalnaalellaam ummaip pukalnthu paaduvaen
    kataisi moochchilum solvaen Yesu nallavar entu – 2

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    1. ennai vaalavaikka oppukkoduththeer ummaiyae
      vaathikkak koduththeerae thiru udalai enakkaay – 2

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    1. paavaththin mulu uruvamaay neer paavamaaneerae
      pirikkappattirae ennai innaiththidavae

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    1. saapa mulmutiyai um sirasinil sumantheerae
      saapamaayth thongineerae ennai aaseervathikkavae

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    4.enthan anaiththu theemaiyum ummael vanthathaal
    unthan anaiththu nanmaiyum enmael vanthathae

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

  • Naan Unnai Vittu நான் உன்னை விட்டு

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – (2)
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணி போல் உன்னைக் காப்பேன் – (2)

    1. பயப்படாதே நீ மனமே – நான்
      காத்திடுவேன் உன்னை தினமே
      அற்புதங்கள் நான் செய்திடுவேன்
      உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
    2. திகையாதே கலங்காதே மனமே – நான்
      உன்னுடனிருக்க பயமேன்
      கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
      கலலைகள் யாவையும் போக்கிடுவேன்
    3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
      அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
      அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
      ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

    Naan Unnai Vittu Lyrics in English

    naan unnai vittu vilakuvathillai
    naan unnai entum kaividuvathillai – (2)
    naan unnaik kaannkinta thaevan
    kannmanni pol unnaik kaappaen – (2)

    1. payappadaathae nee manamae – naan
      kaaththiduvaen unnai thinamae
      arputhangal naan seythiduvaen
      unnai athisayamaay naan nadaththiduvaen
    2. thikaiyaathae kalangaathae manamae – naan
      unnudanirukka payamaen
      kannnneer yaavaiyum thutaiththiduvaen – un
      kalalaikal yaavaiyum pokkiduvaen
    3. anuthinam ennaith thaediduvaay – naan
      aliththidum pelanaip pettiduvaay
      aththimaram pol seliththiduvaay naan
      aasaiyaay unnna kani koduppaay
  • Naan Unakku Podhithu நான் உனக்கு போதித்து

    நான் உனக்கு போதித்து
    நடக்கும் பாதையை
    நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

    உன்மேல் என் கண் வைத்து
    ஆலோசனை சொல்லுவேன்
    அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு

    ஈசாக்கு விதை விதைத்து
    நூறு மடங்கு அறுவடை செய்தான்
    உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல்

    ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே
    ரெகோபோத் தொடங்கி விட்டது – உனக்கு

    தேசத்தில் பலுகும்படி உனக்கு
    இடம் உண்டாக்கினேன்
    ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல்

    கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார்
    என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்
    இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள்


    Naan unakku podhithu Lyrics in English

    naan unakku pothiththu
    nadakkum paathaiyai
    naalthorum kaattuvaen payappadaathae

    unmael en kann vaiththu
    aalosanai solluvaen
    arivurai naan kooruvaen- unakku

    eesaakku vithai vithaiththu
    nootru madangu aruvatai seythaan
    unnaiyum aaseervathippaen – athu pol

    aesekku sithnaa intodu mutinthathu makanae
    rekopoth thodangi vittathu – unakku

    thaesaththil palukumpati unakku
    idam unndaakkinaen
    rekopoth unakku unndu- intu muthal

    karththar nichchayamaay unnodu irukkiraar
    entu anaekar arinthu kolvaarkal
    ithu muthal anaekar arikkai seyvaarkal

  • Naan Ummai Uruthiyaaka நான் உம்மை உறுதியாக

    நான் உம்மை உறுதியாக
    என்றென்றும் பற்றிடுவேன்
    சமாதானம் பூரணமாய்
    அளித்து என்றும் நடத்திடுவீர்

    1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
      என் ஆவி உம்மைத்தேடும்
      உந்தனின் பாதையில்
      செம்மையாய் நடத்துவீர் — நான்
    2. நல் வாசல்கள் திறந்திட
      உம தாசர் உள்ளே செல்வார்
      தேவனே ராஜனே
      ஜெயமதைத் தந்திடுவீர் — நான்
    3. என் கிரியைகள் அனைத்துமே
      நீர் ஏற்று என்றும் காப்பீர்
      நடத்தியே தாங்குவீர்
      சமாதானம் அருள்வீர் — நான்
    4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
      உம் வல்லமை விளங்கும்
      உம்மையே சார்ந்துமே
      உம் புகழ் சாற்றிடுவோம் — நான்

    Naan Ummai Uruthiyaaka Lyrics in English

    naan ummai uruthiyaaka
    ententum pattiduvaen
    samaathaanam pooranamaay
    aliththu entum nadaththiduveer

    1. en aaththumaavin vaanjai neer
      en aavi ummaiththaedum
      unthanin paathaiyil
      semmaiyaay nadaththuveer — naan
    2. nal vaasalkal thiranthida
      uma thaasar ullae selvaar
      thaevanae raajanae
      jeyamathaith thanthiduveer — naan
    3. en kiriyaikal anaiththumae
      neer aettu entum kaappeer
      nadaththiyae thaanguveer
      samaathaanam arulveer — naan
    4. um kaikal umakkaay ongida
      um vallamai vilangum
      ummaiyae saarnthumae
      um pukal saattiduvom — naan
  • Naan Ummai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

    நான் உம்மைப் பற்றி இரட்சகா
    வீண் வெட்கம் அடையேன்
    பேரன்பைக் குறித்தாண்டவா
    நான் சாட்சி கூறுவேன்

    சிலுவையண்டையில்
    நம்பி வந்து நிற்க்கையில்
    பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
    எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
    பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

    ஆ உந்தன் நல்ல நாமத்தை
    நான் நம்பிச் சார்வதால்
    நீர் கைவிடீர் இவ்வேழையைக்
    காப்பீர் தேவாவியால்

    மா வல்ல வாக்கின் உண்மையைக்
    கண்டுணரச் செய்தீர்
    நான் ஒப்புவித்த பொருளை
    விடாமல் காக்கிறீர்

    நீர் மாட்சியோடு வருவீர்
    அப்போது களிப்பேன்
    ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
    மெய்ப் பாக்கியம் அடைவேன்


    Naan ummai patri ratchaga Lyrics in English

    naan ummaip patti iratchakaa
    veenn vetkam ataiyaen
    paeranpaik kuriththaanndavaa
    naan saatchi kooruvaen

    siluvaiyanntaiyil
    nampi vanthu nirkkaiyil
    paava paaram neengi vaalvatainthaen
    entha naeramum enathullaththilum
    paeraanantham pongip paaduvaen

    aa unthan nalla naamaththai
    naan nampich saarvathaal
    neer kaiviteer ivvaelaiyaik
    kaappeer thaevaaviyaal

    maa valla vaakkin unnmaiyaik
    kanndunarach seytheer
    naan oppuviththa porulai
    vidaamal kaakkireer

    neer maatchiyodu varuveer
    appothu kalippaen
    or vaasasthalam koduppeer
    meyp paakkiyam ataivaen

  • Naan Sugamaaneen நான் சுகமானேன்

    1.நான் சுகமானேன் நான் சுகமானேன்
    புண்ணியரின் காயங்களால்

    ஆ அல்லேலூயா ஆனந்தமே
    ஆ அல்லேலூயா ஆரோக்கியமே

    2.பிள்ளையின் அப்பம்
    பிள்ளையான எனக்கல்லோ

    3.என் நோய்கள் தீர்த்தார்
    சாபமான சிலுவையில்

    4.நான் ஏன் சுமப்பேன்
    எந்தன் இயேசு சுமந்தபின்

    5.யெகோவா தேவன்
    எந்தன் நல்ல பரிகாரி

    6.பரிபூரண ஜீவன்
    பரனீந்த ஜீவனிது

    7.இயேசுவின் இரத்தம்
    பிணி போக்கும் நல்மருந்து

    8.பலவீனன் அல்ல
    பலவான் நான் தேவன் சொன்னார்


    Naan Sugamaaneen Lyrics in English

    1.naan sukamaanaen naan sukamaanaen
    punnnniyarin kaayangalaal

    aa allaelooyaa aananthamae
    aa allaelooyaa aarokkiyamae

    2.pillaiyin appam
    pillaiyaana enakkallo

    3.en Nnoykal theerththaar
    saapamaana siluvaiyil

    4.naan aen sumappaen
    enthan Yesu sumanthapin

    5.yekovaa thaevan
    enthan nalla parikaari

    6.paripoorana jeevan
    paraneentha jeevanithu

    7.Yesuvin iraththam
    pinni pokkum nalmarunthu

    8.palaveenan alla
    palavaan naan thaevan sonnaar

  • Naan Potri Paduvaen நான் போற்றிப் பாடுவேன்

    நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
    துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
    உமக்கே நன்றி இராஜா (4)
    துதிக்குப் பாத்திரரே
    என் துதிக்கு பாத்திரரே

    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
    நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)

    நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
    மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
    உமக்கே நன்றி இராஜா (4)
    மகிமைக்குப் பாத்திரரே
    நீர் மகிமைக்குப் பாத்திரரே

    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
    நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)


    Naan Potri Paduvaen Lyrics in English

    Naan Potri Paduvaen
    naan pottip paaduvaen en Yesu iraajaavai
    thuthikku paaththirarae en thuthikku paaththirarae (2)
    umakkae nanti iraajaa (4)
    thuthikkup paaththirarae
    en thuthikku paaththirarae

    ummai aaraathanai seykiraen
    umakkae aaraathanai seykiraen (2)
    neerae irunthavarae iruppavarae varupavarae (2)

    naan ummaip pukalvaen en jeeva naalellaam
    makimaikkup paaththirarae neer makimaikkup paaththirarae (2)
    umakkae nanti iraajaa (4)
    makimaikkup paaththirarae
    neer makimaikkup paaththirarae

    ummai aaraathanai seykiraen
    umakkae aaraathanai seykiraen (2)
    neerae parisuththarae parisuththarae parisuththarae (2)