Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Piramiththu நான் பிரமித்து

    நான் பிரமித்து நின்று பேரன்பின்
    பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
    என் உள்ளத்தில் மெடீநுச் சமாதானம்
    சம்பூரணமாய் அடைந்தேன்

    மா தூய உதிரத்தால்
    என் பாவம் நீங்கக் கண்டேன்
    இயேசையரின் இரட்சிப்பினால்
    நான் ஆறுதல் கண்டடைந்தேன்

    1. முன்னாளில் இவ்வாறுதல் காண
      ஓயாமல் பிரயாசப்பட்டேன்
      வீண் முயற்சி நீங்கினபோதே
      என் மீட்பரால் அருள் பெற்றேன்
    2. தம் கரத்தை என் மீதில் வைத்து
      நீ சொஸ்தமாவாய் என்றனர்
      நான் அவரின் வஸ்திரம் தொட
      ஆரோக்கியம் அருளினர்
    3. எந்நேரமும் புண்ணிய நாதர்
      என் பக்கத்தில் விளங்குவார்
      தம் முகத்தின் அருள் பிரகாசம்
      என் பேரிலே வீசச் செய்வார்!

    Naan Piramiththu Lyrics in English

    naan piramiththu nintu paeranpin
    piravaakaththai Nnokkip paarththaen
    en ullaththil meteenuch samaathaanam
    sampooranamaay atainthaen

    maa thooya uthiraththaal
    en paavam neengak kanntaen
    iyaesaiyarin iratchippinaal
    naan aaruthal kanndatainthaen

    1. munnaalil ivvaaruthal kaana
      oyaamal pirayaasappattaen
      veenn muyarsi neenginapothae
      en meetparaal arul petten
    2. tham karaththai en meethil vaiththu
      nee sosthamaavaay entanar
      naan avarin vasthiram thoda
      aarokkiyam arulinar
    3. ennaeramum punnnniya naathar
      en pakkaththil vilanguvaar
      tham mukaththin arul pirakaasam
      en paerilae veesach seyvaar!
  • Naan Payapadum Naalinile நான் பயப்படும் நாளினிலே

    நான் பயப்படும் நாளினிலே
    கர்த்தரை நம்பிடுவேன்
    என் கோட்டையும் அரணுமாயிருக்க
    நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

    உங்களில் இருப்பவர் பெரியவரே
    பரிசுத்தமானவரே
    அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
    நித்திய காலமெல்லாம் நம்மையே

    நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
    உறங்குவதும் இல்லை
    அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
    என் கூப்பிடுதல் அவர் செவியினிலே


    Naan Payapadum Naalinile Lyrics in English

    naan payappadum naalinilae
    karththarai nampiduvaen
    en kottaைyum aranumaayirukka
    naan ataikkalam pukunthiduvaen

    ungalil iruppavar periyavarae
    parisuththamaanavarae
    avar kaaththiduvaar entum nadaththiduvaar
    niththiya kaalamellaam nammaiyae

    nammaik kaappavar ayarvathillai
    uranguvathum illai
    avar aalayaththil naan apayamittaen
    en kooppiduthal avar seviyinilae

  • Naan Paavithaan நான் பாவிதான்

    1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்
      மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
      வா என்று என்னை அழைத்தீர்
      என் மீட்பரே, வந்தேன்.
    2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
      கறை பிடித்துக் கெட்டேனே
      என் கறை நீங்க இப்போதே,
      என் மீட்பரே, வந்தேன்.
    3. நான் பாவிதான் – மா பயத்தால்
      திகைத்து, பாவபாரத்தால்
      அமிழ்ந்து மாண்டு போவதால்,
      என் மீட்பரே, வந்தேன்.
    4. நான் பாவிதான் – மெய்யாயினும்
      சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
      அடைவதற்கு உம்மிடம்
      என் மீட்பரே, வந்தேன்.
    5. நான் பாவிதான் – இரங்குவீர்
      அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
      அருளாம் செல்வம் அளிப்பீர்;
      என் மீட்பரே, வந்தேன்.
    6. நான் பாவிதான் – அன்பாக நீர்
      நீங்கா தடைகள் நீக்கினீர்;
      உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
      என் மீட்பரே, வந்தேன்.

    Naan Paavithaan – Aanaalum Neer Lyrics in English

    1. naan paavithaan – aanaalum neer
      maasatta iraththam sinthineer;
      vaa entu ennai alaiththeer
      en meetparae, vanthaen.
    2. naan paavithaan – en nenjilae
      karai pitiththuk kettaenae
      en karai neenga ippothae,
      en meetparae, vanthaen.
    3. naan paavithaan – maa payaththaal
      thikaiththu, paavapaaraththaal
      amilnthu maanndu povathaal,
      en meetparae, vanthaen.
    4. naan paavithaan – meyyaayinum
      seer, naermai, selvam, motchamum
      ataivatharku ummidam
      en meetparae, vanthaen.
    5. naan paavithaan – iranguveer
      annaiththu, kaaththu, ratchippeer,
      arulaam selvam alippeer;
      en meetparae, vanthaen.
    6. naan paavithaan – anpaaka neer
      neengaa thataikal neekkineer;
      umakku sontham aakkineer;
      en meetparae, vanthaen.
  • Naan Paavach Setrinaley Vaazhnthen நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

    நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
    நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா
    பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே

    என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும்
    கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார்

    2.என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர்
    எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம்
    இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே

    3.கார்மேகம் போல்
    என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே
    மூழ்கியே தள்ளும் சமுத்திர
    ஆழம் தூக்கி எறிந்தாரே

    4.இரத்தாம்பரம் பொன் சிவப்பான
    இதய பாவங்களை
    பஞ்சையும் போலவே
    வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்

    5.மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
    மா எண்ணிலா தூரம்
    எந்தன் பாவங்கள் அத்தனை
    தூரம் இயேசு விலக்கினார்

    6.நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
    நான் மறுபடியும் பிறந்தேன்
    தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
    தேடிக்கொண்டேன் பாக்யம்

    7.அங்கேயும் சீயோன்
    மலைமீதே ஆனந்தகீதங்களே
    ஆயிரம் ஆயிரம் தூதர்கள்
    சூழ அன்பரை பாடிடுவேன்


    Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics in English

    naan paavach settinilae vaalnthaen
    naan saapaththilae maanntaen ennnniladangaa
    paavangal pokki iyaesennai meettarae

    en naavilae puthup paattukal ententum
    kavi thangidum maa santhosham marupirappeenthu mana irul neekkinaar

    2.en aathma meetpai arumaiyaay iyaesaanndavar
    ennnninathaal sontha tham jeevanaam
    iraththam enakkaay sinthi iratchiththaarae

    3.kaarmaekam pol
    en paavangal karththar akattinaarae
    moolkiyae thallum samuththira
    aalam thookki erinthaarae

    4.iraththaamparam pon sivappaana
    ithaya paavangalai
    panjaiyum polavae
    vennmaiyumaakki thanjam enakgeenthaar

    5.maerku thisaikkum kilakkukkum
    maa ennnnilaa thooram
    enthan paavangal aththanai
    thooram Yesu vilakkinaar

    6.naan jalaththinaal nal aaviyinaal
    naan marupatiyum piranthaen
    thaevanin raajyam servatharkaaka
    thaetikkonntaen paakyam

    7.angaeyum seeyon
    malaimeethae aananthageethangalae
    aayiram aayiram thootharkal
    soola anparai paadiduvaen

  • Naan Paadum Kaanangalaal நான் பாடும் கானங்களால்

    நான் பாடும் கானங்களால்
    என் இயேசுவைப் புகழ்வேன்
    எந்தன் ஜீவிய காலம் வரை
    அவர் மாறாத சந்தோஷமே – நான்

    1. பாவ ரோகங்கள் மாற்றியே
      எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
      உலகம் வெறுத்தென்னைத் தள்ள
      பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான்
    2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
      யாதொரு பயமுமில்லை
      அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
      தம் கரங்களால் தாங்கிடுவார் — நான்
    3. நல்ல போராட்டம் போராடி
      எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
      விலையேறிய திருவசனம்
      எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்

    Naan Paadum Kaanangalaal Lyrics in English

    naan paadum kaanangalaal
    en Yesuvaip pukalvaen
    enthan jeeviya kaalam varai
    avar maaraatha santhoshamae – naan

    1. paava rokangal maattiyae
      enthan kannnneeraith thutaippavarae
      ulakam veruththennaith thalla
      paaviyam ennai meetteduththeer — naan
    2. ilamaip piraaya veelchchikal illai
      yaathoru payamumillai
      avar snaeka theepaththin valiyil
      tham karangalaal thaangiduvaar — naan
    3. nalla poraattam poraati
      enthan ottaththai mutiththiduvaen
      vilaiyaeriya thiruvasanam
      enthan paathaikkuth theepamaakum — naan
  • Naan Paadi Makizhum நான் பாடி மகிழும்

    நான் பாடி மகிழும் நேரம்
    ஆராதனை நேரம்
    நான் பலி செலுத்தும்
    நேரம் ஆராதனை நேரம்

    இது ஆராதனை நேரம்
    துதி ஆராதனை நேரம்

    முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்
    ஆராதனை நேரம்
    முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்
    ஆராதனை நேரம்

    நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்
    ஆராதனை நேரம்
    நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்
    ஆராதனை நேரம்

    நம் உடமையை கொடுத்து
    மகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்
    நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்
    ஆராதனை நேரம்


    Naan paadi makizhum Lyrics in English

    naan paati makilum naeram
    aaraathanai naeram
    naan pali seluththum
    naeram aaraathanai naeram

    ithu aaraathanai naeram
    thuthi aaraathanai naeram

    mulu ullaththodu anpukkoorum naeram
    aaraathanai naeram
    mulu pelaththodu kooppidum naeram
    aaraathanai naeram

    nam sareeraththai jeevapaliyaaka kodukkum
    aaraathanai naeram
    nal kanikal koduththu thuthikkinta naeram
    aaraathanai naeram

    nam udamaiyai koduththu
    makilkinta naeram aaraathanai naeram
    naam orumanathodu koodidum naeram
    aaraathanai naeram

  • Naan Paada Varuveer Aiya நான் பாட வருவீர் ஐயா

    நான் பாட வருவீர் ஐயா
    நான் போற்ற மகிழ்வீர் ஐயா (2)
    என் வாழ்விலே வந்தீர் ஐயா
    புது வாழ்வு தந்தீர் ஐயா (2)

    1. தாய் தன் பாலனை மறந்தாலும்
      நான் உன்னை மறவேன் என்றவரே (2)
      உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
      எந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2)
    2. இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
      இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (2)
      உந்தன் அன்பை நான் மறப்பேனோ
      ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (2)
    3. மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
      உம் கிருபை என்னை விட்டு விலகாது (2)
      நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
      உந்தன் வாக்குகள் மாறாதது (2)

    Naan Paada Varuveer Aiya Lyrics in English

    naan paada varuveer aiyaa
    naan paeாtta makilveer aiyaa (2)
    en vaalvilae vantheer aiyaa
    puthu vaalvu thantheer aiyaa (2)

    1. thaay than paalanai maranthaalum
      naan unnai maravaen entavarae (2)
      ullangaiyil ennai varaintheerae
      enthan mathilkal umakku munnae (2)
    2. imaip peாluthum ennai maranthaalum
      irakkaththaalae ennai serththu keாlveer (2)
      unthan anpai naan marappaenaeா
      jeeva naalellaam paadiduvaen (2)
    3. malaikal parvathangal vilakinaalum
      um kirupai ennai vittu vilakaathu (2)
      naettum intum entum maaraathavar
      unthan vaakkukal maaraathathu (2)
  • Naan Orupothum Unnai Kaividuvathumillai நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை

    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை
    என்றுறை செய்தேனன்றோ
    கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
    உன்னை காத்திடும் பெலவானன்றோ
    விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
    பயம் வேண்டாம் உன் அருகில் நான்
    என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
    ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

    1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
      என்ன வந்தாலும் பயமே இல்லை
      மாறாத இயேசு உண்டெனக்கு
      மனது ஒருபோதும் கலங்கவில்லையே
      ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
      புயலில் என் கன்மலையே
      என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
      ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்
    2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
      தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
      நல்வசனத்தின் வல்லமையாய்
      வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
      எலியாவின் தேவன் எங்கே என்ற
      அற்புதம் நடந்திடுமே
      என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
      ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

    Naan Orupothum Unnai Kaividuvathumillai Lyrics in English

    naan orupothum unnai kaividuvathumillai
    enturai seythaenanto
    kadal aalaththilum akkini soolaiyilum
    unnai kaaththidum pelavaananto
    visha sarpangalo singa koottangalo
    payam vaenndaam un arukil naan
    enturai seythavarai aaraathippom
    aaviyil aaraathanai – naan orupothum

    1. aaruthal thara oru vaarththai illai
      enna vanthaalum payamae illai
      maaraatha Yesu unndenakku
      manathu orupothum kalangavillaiyae
      aelai enakku ataikkalamae avar
      puyalil en kanmalaiyae
      enturai seythavarai aaraathippom
      aaviyil aaraathanai – naan orupothum
    2. ninthaikal unnai soolkintatho
      tham karangal entum uyarnthidumae
      nalvasanaththin vallamaiyaay
      vallavarin samukam nirainthidumae
      eliyaavin thaevan engae enta
      arputham nadanthidumae
      enturai seythavarai aaraathippom
      aaviyil aaraathanai – naan orupothum
  • Naan Oru Paavi நான் ஒரு பாவி

    நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
    நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
    நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
    நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
    பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
    என்னை நான் வெறுத்து விட்டேன்
    உமது ஆலோசனை பாரம் என்றேன்
    உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்

    சந்தர்ப்பங்களென்றும் சூழ்நிலைகளென்றும்
    பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
    தூண்டிவிட்டார் என்றும்
    மாற்றிவிட்டார் என்றும்
    மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
    நான் செய்த பாவத்துக்கு
    நியாயங்கள் சொன்னேன்
    என்னை இரட்சித்து தேவனிடம்
    காரணம் சொன்னேன்-குற்றங்கள்
    ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
    என்னில் நல்லதோர் குணமுமில்லை

    எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
    வேஷம் போட்டு திரிவதால் தெரிவதில்லை
    சொல்லில் ஒரு வாழ்க்கை
    சொல்லாமல் ஒரு வாழ்க்கை
    மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
    கட்டளை மீறுகின்றேன் அனுதினமும்-ஒரு
    கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
    என்னைப்போல பாவி
    இந்த உலகில் உண்டா-ஐயோ
    எனக்கு மன்னிப்பு உண்டா

    மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
    மன்றாடும் உன்னை என்
    மகனாக்கினேன்
    புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
    பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
    எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
    உன்னை நான் என்னோடு
    சேர்த்துக் கொள்வேன்


    Naan oru paavi Lyrics in English

    naan oru paavi naan oru paavi
    naan seytha paavangal pallaayiram
    naan oru paavi naan oru paavi
    naan seytha paavaththukku naan kaaranam
    paavaththil paavaththil naan vilunthu vittaen
    ennai naan veruththu vittaen
    umathu aalosanai paaram enten
    ummai naan thallivittu thooram senten

    santharppangalentum soolnilaikalentum
    paavam seytha pinnaalae pali sumaththi
    thoonntivittar entum
    maattivittar entum
    mattavarai ennaalum kuttappaduththi
    naan seytha paavaththukku
    niyaayangal sonnaen
    ennai iratchiththu thaevanidam
    kaaranam sonnaen-kuttangal
    oppukkollum manamumillai
    ennil nallathor kunamumillai

    ennnangalukkullae ekkachchakka paavam
    vaesham pottu thirivathaal therivathillai
    sollil oru vaalkkai
    sollaamal oru vaalkkai
    mattavarkal enthan nilai arivathillai
    kattalai meerukinten anuthinamum-oru
    kallaippol maarinathu enthan manamum
    ennaippola paavi
    intha ulakil unndaa-aiyo
    enakku mannippu unndaa

    mannikkaththaanae mannnukku vanthaen
    mantadum unnai en
    makanaakkinaen
    puthiya ithayaththai koduththiduvaen
    paavangal neenga unnai kaluviduvaen
    enathu aaviyinaal nirappiduvaen
    unnai naan ennodu
    serththuk kolvaen

  • Naan Nirpathum Nirmulam நான் நிற்பதும் நிர்மூலமகாததும்

    நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
    தேவ கிருபையே – நான் உயிருடன்
    வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

    கிருபையே தேவ கிருபையே
    தேவ கிருபையே தேவ கிருபையே

    காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்
    மாலையில் காப்புடன் இல்லம்
    வருவதும் கிருபையே
    போக்கிலும் வரத்திலும்
    தொலைதூரப் பயணத்திலும்
    பாதம் கல்லிலே இடறாமல்
    காப்பதும் கிருபையே

    அக்கினி நடுவினிலே – என்னை
    எரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்று
    என்னைக் காப்பதும் கிருபையே – ஆழியின்
    நடுவினிலும் சீறிடும் புயலினிலும்
    நீர்மேல் நடந்து வந்து
    என்னைக் காப்பதும் கிருபையே

    கண்ணீர் கவலைகளில் கஷ்ட
    நஷ்டங்களில் துஷ்டனின் கைக்கு
    விலக்கி மீட்டதும் கிருபையே
    ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்
    மாபெரும் கிருபையே
    எங்கள் தேவ கிருபையே


    Naan nirpathum nirmulam Lyrics in English

    naan nirpathum nirmoolamakaathathum
    thaeva kirupaiyae – naan uyirudan
    vaalvathum sukamudaniruppathum kirupaiyae

    kirupaiyae thaeva kirupaiyae
    thaeva kirupaiyae thaeva kirupaiyae

    kaalaiyil eluvathum karththaraith thuthippathum
    maalaiyil kaappudan illam
    varuvathum kirupaiyae
    pokkilum varaththilum
    tholaithoorap payanaththilum
    paatham kallilae idaraamal
    kaappathum kirupaiyae

    akkini naduvinilae – ennai
    eriththida naernthaalum thoothanaaka nintu
    ennaik kaappathum kirupaiyae – aaliyin
    naduvinilum seeridum puyalinilum
    neermael nadanthu vanthu
    ennaik kaappathum kirupaiyae

    kannnneer kavalaikalil kashda
    nashdangalil thushdanin kaikku
    vilakki meettathum kirupaiyae
    aattith thaettiyae aravannaiththidum
    maaperum kirupaiyae
    engal thaeva kirupaiyae