Category: Tamil Worship Songs Lyrics

  • Messiah Yesu Nayanar மேசியா ஏசு நாயனார்

    மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Messiah yesu nayanar Lyrics in English maesiyaa aesu naayanaar emaimeetkavae…

  • Mesiyave Mesiyave Boologam Vantheere மேசியாவே மேசியாவே பூலோகம் வந்தீரே

    மேசியாவே மேசியாவேபூலோகம் வந்தீரேநாங்களுந்தான் பாடணும்நாங்களுந்தான் ஆடணும்உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும் பெத்தலகேம் என்னும் ஊரினிலேஇரட்சகர் மனுவாக மலர்ந்ததாலேவானவர்கள் வாழ்த்திடவேவையகமும் மகிழ்ந்திடவேகொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே பூலோக மாந்தர்க்கு நற்செய்தியேசந்தோஷம் சமாதானம் பெருகிடவேகந்தைத்துணி முன்னணையில்இறைமைந்தன் உறங்கிடவேஅன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவேஉரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலேஎண்ணில்லா நன்மைகள்என்றென்றும் கிடைத்திடவேமன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே Mesiyave…

  • Mesiyaa Thaan Porandhaachu மேசியா தான் பொறந்தாச்சு

    மேசியா தான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்க (2)மனிதர் நம்மை மீட்கமேன்மை யாவும் துறந்தார் (2)மகிழ்ச்சியின் பண்டிகையைஆனந்தமாய் கொண்டாடுவோம் (2) ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹாஹாப்பி கிறிஸ்துமஸ் (2)மேசியா தான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்க (2) பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவேபெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரேதரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையேடும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2மேசியா தான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்க…

  • Mesiya Yesu Raja மேசியா இயேசு ராஜா

    மேசியா இயேசு ராஜா – அவர்மீண்டும் வருகிறார் எந்தன் ஆவல் தீர்க்கஅவர் சீக்கிரம் வருகிறார்அவர் முகமே நான் கண்டிடுவேன்அவரோடு நானும் சென்றிடுவேன்மகிமை மகிமை அந்த நாள் மகிமை தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்சந்தோஷமாகவே மாறியே போகும்தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்மகிமையாய் அன்று மாற்றிடுமேஇன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்றமகிமைக்கு ஈடாய் ஆகுமோ இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்இனியும் தாமதம் செய்யாரேஅவர் சொன்னபடியே வந்திடுவார்அந்த நாளில் அவரை கண்டு நானும்ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன் எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தைகண்டு…

  • Meiyaana Dhraatchaichedi மெய்யான திராட்சைசெடி

    மெய்யான திராட்சைசெடிநீரே என் இயேசுவேஉம்மில் நிலைத்திருக்கும்கொடியாய் என்னை வனையுமே (2) கனிதர வேண்டுமேகனிதர வேண்டுமேஉவர்ப்பாய் அல்லமதுரமாக நாளும் (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்வார்த்தையால் சுத்தம் செய்யும் (2) கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னைசுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2) உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்றுஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர காத்து கொள்ளும் காத்து கொள்ளும்…

  • Mei Jothiyam Nal Meetpare மெய் ஜோதியாம் நல் மீட்பரே

    மெய் ஜோதியாம் நல் மீட்பரே,நீர் தங்கினால் ராவில்லையே;என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். என்றைக்கும் மீட்பர் மார்பிலே,நான் சாய்வது பேரின்பமே;என்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். என்னோடு தங்கும் பகலில்,சுகியேன் நீர் இராவிடில்;என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல் வல்ல மீட்பரே,உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே. வியாதியஸ்தர், வறியோர்,ஆதரவற்ற சிறியோர்,புலம்புவோர் எல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும். பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும். Mei Jothiyam Nal Meetpare…

  • Mei Bakthare Neer Vilithelumbum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

    மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்குஅற்புத காட்சி காண விரைந்து,யோசேப்புடன்…

  • Megangaludane Varugiraar Kangal மேகங்களுடனே வருகிறார்

    மேகங்களுடனே வருகிறார்கண்கள் யாவும் அவரைக் காணும்குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)வருகிறார் வருகிறார் வருகிறார்இயேசு வருகிறார்ஹலேலூயா ஹலேலூயாஹலேலூயா இயேசு வருகிறார் (2) இருந்தவரும் இருக்கின்றவரும்வருபவரும் சர்வ வல்லவர் (2)இயேசுவே உமக்கே மகிமைஇராஜனே உமக்கே மகிமை (2)ஹலேலூயா ஹலேலூயாஹலேலூயா இயேசு வருகிறார் (2)– மேகங்களுடனே அல்பாவும் ஒமேகாவும்ஆதியும் அந்தமுமானவர் (2)இயேசுவே உமக்கே மகிமைஇராஜனே உமக்கே மகிமை (2)ஹலேலூயா ஹலேலூயாஹலேலூயா இயேசு வருகிறார் (2)– மேகங்களுடனே முந்தினவரும் பிந்தினவரும்மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (2)இயேசுவே உமக்கே மகிமைஇராஜனே உமக்கே மகிமை (2)ஹலேலூயா…

  • Megangalil Aaravarathodu மேகங்களில் ஆரவாரத்தோடு

    மேகங்களில் ஆரவாரத்தோடுதோன்றப் போகிறவரே – வாரும்!இயேசுவே விரைவில் வாரும்!விரைவில் விரைவில் நீர் வாரும்!வாரும்! வாரும்! நீர் வாரும்விரைவில் விரைவில் நீர் வாரும்! எக்காள தொனியோடே வாரும்இயேசு வேந்தனே வாரும்-2ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில் கருணையின் கடலே வாரும்கண்ணிமைப் பொழுதில் மாற்றமறுரூபமாக்கிட வாரும்மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில் மகிமையின் மன்னவா வாரும்நடுவானில் உம்மோடு சேரஆயத்தமாகவே நாங்கள்வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில் மேகங்களில் ஆரவாரத்தோடுதோன்றப் போகிறவரே…

  • Megangal Naduve Vali Pirakkum மேகங்கள் நடுவே வழி பிறக்கும்

    1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்பூதங்கள் கடந்து கடந்து வரும்தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் வானத்தில் வானத்தில் நடுவானத்தில் இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் 2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்கர்த்தரின் வருகை நாளின்போதுபறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 4.திருடன் வருகை போலிருக்கும்தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்காலையோ மாலையோ நள்ளிரவோபறந்திடுவேன் நான்…