Category: Tamil Worship Songs Lyrics

  • Marida Em Ma Nesare மாறிடா எம்மா நேசரே ஆ

    மாறிடா எம்மா நேசரே- ஆ
    மாறாதவர் அந்பெந்நாளுமே
    கல்வாரிச் சிலுவை மீதிலே
    காணுதே இம்மா அன்பிதே – ஆ

    ஆ! இயேசுவின் மகா அன்பிதே
    அதன் ஆழம் அறியலாகுமோ
    இதற்கிணையேதும் வேறில்லையே
    இணை ஏதும் வேறில்லையே

    1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
      பாரில் உன்னைத் தேடி வந்தாரே
      நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
      நேசனாக மாற்றிடவே
    2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
      உள்ளம் போல் நேசித்ததினால்
      அல்லல் யாவும் அகற்றிடவே
      ஆதி தேவன் பலியானாரே
    3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
      தேவனின் விண் சாயல் அணிய
      ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
      ஆவலாய் அவரைச் சந்திக்க
    4. நியாய விதி தினமதிலே – நீயும்
      நிலையாகும் தைரியம் பெறவே
      பூரணமாய் அன்பு பெருக
      புண்ணியரின் அன்பு வல்லதே
    5. பயமதை நீக்கிடுமே – யாவும்
      பாரினிலே சகித்திடுமே
      அது விசுவாசம் நாடிடுமே
      அன்பு ஒருக்காலும் ஒழியாதே

    Marida Em Ma Nesare Lyrics in English

    maaridaa emmaa naesarae- aa
    maaraathavar anpennaalumae
    kalvaarich siluvai meethilae
    kaanuthae immaa anpithae – aa

    aa! Yesuvin makaa anpithae
    athan aalam ariyalaakumo
    itharkinnaiyaethum vaerillaiyae
    innai aethum vaerillaiyae

    1. paaviyaaka irukkaiyilae – anpaal
      paaril unnaith thaeti vanthaarae
      neesan entunnaith thallaamalae
      naesanaaka maattidavae
    2. ullaththaal avaraith thallinum – tham
      ullam pol naesiththathinaal
      allal yaavum akattidavae
      aathi thaevan paliyaanaarae
    3. aaviyaal anpaip pakirnthida – thooya
      thaevanin vinn saayal anniya
      aaviyaalae anpaich sorinthaar
      aavalaay avaraich santhikka
    4. niyaaya vithi thinamathilae – neeyum
      nilaiyaakum thairiyam peravae
      pooranamaay anpu peruka
      punnnniyarin anpu vallathae
    5. payamathai neekkidumae – yaavum
      paarinilae sakiththidumae
      athu visuvaasam naadidumae
      anpu orukkaalum oliyaathae
  • Maravaar Yesu Maravaar மறவார் இயேசு மறவார்

    மறவார் இயேசு மறவார்
    ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
    மறவார் இயேசு மறவார்
    உன்னை உருவாக்கின இயேசு மறவார்

    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்

    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கி நடத்திட மறவார்
    எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்

    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலைமாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்


    Maravaar Yesu Maravaar Lyrics in English

    maravaar Yesu maravaar
    oru imaip poluthilum unnai maravaar
    maravaar Yesu maravaar
    unnai uruvaakkina Yesu maravaar

    alaiththavar unnai maravaar
    apishaekam seythavar maravaar
    manithanin anpu nilaimaarinaalum
    makimaiyin thaevan unnai maravaar

    tharisanam thanthavar maravaar
    thaangi nadaththida maravaar
    eppakkam nerukkangal unai soolntha pothum
    eliyaavin thaevan unnai maravaar

    vaakkuththaththam thanthavar maravaar
    unakku valikaatti nadaththida maravaar
    vaanamum poomiyum nilaimaarinaalum
    vaarththaiyai niraivaetta maravaar

  • Maravaamal Ninaitheeraiya மறவாமல் நினைத்தீரையா

    மறவாமல் நினைத்தீரையா
    மனதார நன்றி சொல்வேன்
    இரவும் பகலும் எனை நினைத்து
    இதுவரை நடத்தினீரே

    நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
    கோடி கோடி நன்றி ஐயா

    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
    எப்படி நான் நன்றி சொல்வேன்

    பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
    சுகமானேன் சுகமானேன்
    தழும்புகளால் சுகமானேன்
    என் குடும்ப மருத்துவர் நீரே

    தடைகளை உடைத்தீரையா
    தள்ளாடவிடவில்லையே
    சோர்ந்து போன நேரமெல்லாம்
    தூக்கி என்னை சுமந்து
    வாக்கு தந்து தேற்றினீரே…


    Maravaamal Ninaitheeraiya Lyrics in English

    maravaamal ninaiththeeraiyaa
    manathaara nanti solvaen
    iravum pakalum enai ninaiththu
    ithuvarai nadaththineerae

    nanti nanti aiyaa aa…. aa….
    koti koti nanti aiyaa

    epinaesar neerthaanaiyaa
    ithuvarai uthavineerae
    elroyee elroyee ennaiyum kannteerae
    eppati naan nanti solvaen

    pelaveena naerangalil pelan thantheeraiyaa
    sukamaanaen sukamaanaen
    thalumpukalaal sukamaanaen
    en kudumpa maruththuvar neerae

    thataikalai utaiththeeraiyaa
    thallaadavidavillaiyae
    sornthu pona naeramellaam
    thookki ennai sumanthu
    vaakku thanthu thaettineerae…

  • Maranthedathe Nee Mannan Yesuvin மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

    மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
    மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

    சரணங்கள்

    1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
      பட்டண வீதியில் அலைகின்றார்
      பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்
      பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை
    2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
      வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
      வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
      வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை
    3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
      அற்புத அன்பினை அறியாரே
      அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்
      அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

    Maranthedathe Nee Mannan Yesuvin Lyrics in English

    maranthidaathae nee, mannavan Yesuvin
    maannpinaik koora, maranthidaathae nee

    saranangal

    1. paalaivanamathil vaalukintar – silar
      pattana veethiyil alaikintar
      paar pukalumpati nadakkintar – silar
      pakalira vethilum ulaikkintar – ivarkalai
    2. vaana mettum vannna maalikaiyil – silar
      vaanaram vaalnthidum kaanakaththil
      vattaா nathikalil meen pitippaar – silar
      vayal velikalil payiridukintar – ivarkalai
    3. parpala thaesaththil vaalupavar – palar
      arputha anpinai ariyaarae
      aththanai paerumae arinthidavae – thinam
      arivikka Yesunnai alaikkintar – ivarkalai
  • Maranathai Jeithavar மரணத்தை ஜெயித்தவர்

    மரணத்தை ஜெயித்தவர்
    பாதாளம் வென்றவர்
    உம்மையே ஆராதிப்பேன்

    கரம்பிடித்து தூக்கினீர்
    பாவசேற்றிலிருந்தென்னை
    உம்மையே ஆராதிப்பேன்

    எனக்காய் நீர் மரித்தீரே
    என் பாவம் போக்கினீரே
    உம்மையே ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    தூயவரே உம்மை ஆராதிப்பேன்
    என்றுமே

    உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன்
    என்றுமே


    Maranathai jeithavar Lyrics in English

    maranaththai jeyiththavar
    paathaalam ventavar
    ummaiyae aaraathippaen

    karampitiththu thookkineer
    paavasettilirunthennai
    ummaiyae aaraathippaen

    enakkaay neer mariththeerae
    en paavam pokkineerae
    ummaiyae aaraathippaen

    aaraathippaen naan aaraathippaen
    thooyavarae ummai aaraathippaen
    entumae

    ummai aaraathi aaraathi aaraathippaen
    entumae

  • Maraname Un Koor Enge மரணமே உன் கூர் எங்கே ?

    மரணமே உன் கூர்; எங்கே ?
    பாதாளமே உன் ஜெயம் எங்கே?
    மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு
    எனக்குள் வந்துவிட்டர்
    சாவை அழித்து அழியா வாழ்வை
    எனக்குத் தந்துவிட்டார்

    1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு
      சாவாலே வென்றுவிட்டார்
      மரண பயத்தினால் வாடும் மனிதரை
      விடுவித்து மீட்டுக் கொண்டார்
      பயமில்லையே மரணபயமில்லையே
      ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்
    2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
      அழியாமை அணிந்து கொள்ளும்
      சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
      சாவாமை அணிந்து கொள்ளும்
    3. இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
      ஆளுகை செய்திடவே
      இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
      இன்றைக்கும் ஜீவிக்கிறார்
    4. கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
      கர்த்தர் இயேசு வந்திடுவார்
      கிறிஸ்துவுக்கள் வாழ்வோர் (மரித்தோர்)
      எதிர் கொண்டு சென்றிடுவோம்
    5. பூமிக்குரிய கூடாரமான இவ்வீடு அழிந்தாலும்
      பரமன் கட்டிய நிலையான வீடு
      பரலோகத்தில் உண்டு

    Maraname Un Koor Enge Lyrics in English

    maranamae un koor; engae ?
    paathaalamae un jeyam engae?
    maranaththai jeyiththa mannavan Yesu
    enakkul vanthuvittar
    saavai aliththu aliyaa vaalvai
    enakkuth thanthuvittar

    1. saavukku athipathi saaththaanai-Yesu
      saavaalae ventuvittar
      marana payaththinaal vaadum manitharai
      viduviththu meettuk konndaar
      payamillaiyae maranapayamillaiyae
      jeyam eduththaar Yesu jeyam eduththaar
    2. alivukkuriya ivvudal oru naal
      aliyaamai anninthu kollum
      saavukkuriya ivvudal oru naal
      saavaamai anninthu kollum
    3. iranthor maelum vaalvor maelum
      aalukai seythidavae
      Yesu mariththu uyirththu elunthaar
      intaikkum jeevikkiraar
    4. kattalai pirakka thoothan kural olikka
      karththar Yesu vanthiduvaar
      kiristhuvukkal vaalvor (mariththor)
      ethir konndu sentiduvom
    5. poomikkuriya koodaaramaana ivveedu alinthaalum
      paraman kattiya nilaiyaana veedu
      paralokaththil unndu
  • Maranam Varuthu Un Mudivum மரணம் வருது உன் முடிவும் வருது

    மரணம் வருது
    உன் முடிவும் வருது
    மரிக்கும் முன்னே
    மனந்திரும்பு

    1. சொத்துபத்து சேர்த்தது போதும்
      சொகுசாக வாழ்ந்தது போதும்
      சோம்பேறியாய் இருந்தது போதும்
      மனந்திரும்பு..
      வேதவாக்கு நிறைவேறும் காலம்
      வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்
      வேகமாக தேவன் வரும் நேரம்
      மனந்திரும்பு மனந்திரும்பு
      மனந்திரும்பு மனந்திரும்பு
    2. ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்
      பாதியிலே வழிதப்பி நடந்தாய்
      உண்மையான ஊழியத்தை துறந்தாய்
      மனந்திரும்பு
      அவனவன் செயலுக்கு தக்கதாய்
      அவனவனுக்கு தேவன் தருவார்
      தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்
      மனந்திரும்பு மனந்திரும்பு
      மனந்திரும்பு மனந்திரும்பு
    3. ரட்சிப்புக்கு நாள் குறித்திடாதே
      இன்றுதானே ரட்சணிய நாளே
      காலம் போனால் மீண்டும் வந்திடாதே
      மனந்திரும்பு
      ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே – நீ
      பாவியென்று பரன் சொல்லும் முன்னே
      லேவியனாய் மாறிவிட நினைத்தால்
      மனந்திரும்பு மனந்திரும்பு
      மனந்திரும்பு மனந்திரும்பு

    Maranam Varuthu Un Mudivum Lyrics in English

    maranam varuthu
    un mutivum varuthu
    marikkum munnae
    mananthirumpu

    1. soththupaththu serththathu pothum
      sokusaaka vaalnthathu pothum
      sompaeriyaay irunthathu pothum
      mananthirumpu..
      vaethavaakku niraivaerum kaalam
      vaethanaikal aarampikkum kaalam
      vaekamaaka thaevan varum naeram
      mananthirumpu mananthirumpu
      mananthirumpu mananthirumpu
    2. aathiyilae konnda anpai maranthaay
      paathiyilae valithappi nadanthaay
      unnmaiyaana ooliyaththai thuranthaay
      mananthirumpu
      avanavan seyalukku thakkathaay
      avanavanukku thaevan tharuvaar
      thanndanaikku thappiththida ninaiththaal
      mananthirumpu mananthirumpu
      mananthirumpu mananthirumpu
    3. ratchippukku naal kuriththidaathae
      intuthaanae ratchanniya naalae
      kaalam ponaal meenndum vanthidaathae
      mananthirumpu
      aavi unnai pirinthidum munnae – nee
      paaviyentu paran sollum munnae
      laeviyanaay maarivida ninaiththaal
      mananthirumpu mananthirumpu
      mananthirumpu mananthirumpu
  • Maranam Thuthiyathu Baadhalam மரணம் துதியாது பாதாளம் துதியாது

    மரணம் துதியாது பாதாளம் துதியாது
    உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்

    1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
      நீர் உண்மையுள்ளவர்
      நீர் வாக்கு மாறாதவர்-2
      போற்றுவேன் புகழுவேன்
      வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
    2. நீர் மகிமையானவர்
      நீர் மகத்துவமானவர்
      நீர் அருமையானவர்
      நீர் அழகில் சிறந்தவர்
      போற்றுவேன் புகழுவேன்
      வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

    Maranam Thuthiyathu Baadhalam Lyrics in English

    maranam thuthiyaathu paathaalam thuthiyaathu
    uyirotirukkiravanae ummai entum thuthippaen

    1. unnathamaanavar – neer uththamamaanavar
      neer unnmaiyullavar
      neer vaakku maaraathavar-2
      pottuvaen pukaluvaen
      vaalththuvaen ummai vananguvaen – allaelooyaa
    2. neer makimaiyaanavar
      neer makaththuvamaanavar
      neer arumaiyaanavar
      neer alakil siranthavar
      pottuvaen pukaluvaen
      vaalththuvaen ummai vananguvaen – allaelooyaa
  • Manuvaayinaar Mahathva னுவாயினார் மஹத்வ ராஜன்

    மனுவாயினார் மஹத்வ ராஜன்
    மனுவாயினார் (2)

    1. பரலோகம் திறந்திட
      பரன் ஆவி இறங்கிட
      தேவ அருள் பொங்க
      பாவ இருள் நீங்க
      மன்னுயிர்கள் தேவ
      மன்னிப்பை பெற்றிட
    2. நோய் , பிணி தீர்த்திட
      பேய்த்திரள் நடுங்கிட
      அன்னை போல் அணைத்து
      அன்பர்களைக் காக்க
      தன்னையே பலியாக
      அன்புடன் ஈந்திட
    3. சாவின் கசப்பு மாற
      தவிப்பு, கண்ணீர் நீங்க
      மரணம் தனை வென்று
      மறுவாழ்வு ஈந்திட
      விண் வீட்டில் தம்முடன்
      மண்னோர் நாம் வாழ்ந்திட

    Manuvaayinaar Mahathva Lyrics in English

    manuvaayinaar mahathva raajan
    manuvaayinaar (2)

    1. paralokam thiranthida
      paran aavi irangida
      thaeva arul ponga
      paava irul neenga
      mannuyirkal thaeva
      mannippai pettida
    2. Nnoy , pinni theerththida
      paeyththiral nadungida
      annai pol annaiththu
      anparkalaik kaakka
      thannaiyae paliyaaka
      anpudan eenthida
    3. saavin kasappu maara
      thavippu, kannnneer neenga
      maranam thanai ventu
      maruvaalvu eenthida
      vinn veettil thammudan
      mannnor naam vaalnthida
  • Manthaiyil Saeraa Aatukalae மந்தையில் சேரா ஆடுகளே

    மந்தையில் சேரா ஆடுகளே
    எங்கிலும் கோடி கோடி உண்டே
    சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
    தேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில்

    அழைக்கிறார் இயேசு
    அவரிடம் பேசு நடத்திடுவார்

    1. காடுகளில் பல நாடுகளில்
      என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
      பாடுபட்டேன் அதற்காகவுமே
      தேடுவோர் யார் என் ஆடுகளை?
    2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
      என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
      அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
      இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
    3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
      என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
      என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
      அதை உன்னிடம் கேட்கிறேன் – தரவேண்டும்

    Manthaiyil Saeraa Aatukalae Lyrics in English

    manthaiyil seraa aadukalae
    engilum koti koti unntae
    sinthaiyil aanma paaram konntae
    thaeduvom vaareer thiruchchapaiyae – manthaiyil

    alaikkiraar Yesu
    avaridam paesu nadaththiduvaar

    1. kaadukalil pala naadukalil
      en janam sitharunndu saakuvathaa?
      paadupattaen atharkaakavumae
      thaeduvor yaar en aadukalai?
    2. sollappattiraatha idangal unndu
      ennai angu solla ingu aatkal unndu
      alaippup pettaோr yaarum purappaduveer
      ithu aanndavar kattalai geelppativeer
    3. enakkaayp paesida naavu vaenndum
      ennaippol alainthida kaalkal vaenndum
      ennil anpukoora aatkal vaenndum
      athai unnidam kaetkiraen – tharavaenndum