Category: Tamil Worship Songs Lyrics

  • Kuyavane um kaiyil kaliman naan குயவனே உம் கையில் களிமண் நான்

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே

    என்னைத் தருகிறேன் தருகிறேன்
    உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
    படைக்கிறேன் உம் பாதத்தில்

    உம் சேவைக்காக என்னை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம் போல்
    எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
    உருவாக்குமே உருவாக்குமே

    உமக்காகவே நான் வாழ்ந்திட
    வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
    சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
    உருவாக்குமே உருவாக்குமே

    உம் வருகையில் உம்மோடு நான்
    வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
    உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
    உருவாக்குமே உருவாக்குமே


    Kuyavane um kaiyil kaliman naan Lyrics in English

    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum
    en siththam alla um siththam naathaa
    tharukiraen um kaiyilae

    ennaith tharukiraen tharukiraen
    um karaththil ennaip pataikkiraen
    pataikkiraen um paathaththil

    um sevaikkaaka ennai tharukiraen
    vanainthidum um siththam pol
    enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
    uruvaakkumae uruvaakkumae

    umakkaakavae naan vaalnthida
    vanainthidum um siththam pol -um
    siththam seythidavae um saththam kaettidavae
    uruvaakkumae uruvaakkumae

    um varukaiyil ummodu naan
    vanthida ennai maattumae oyvinti
    ummaip paada oyaamal ummaith thuthikka
    uruvaakkumae uruvaakkumae

  • Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae குயவனே, குயவனே படைப்பின் காரணனே

    1. குயவனே, குயவனே படைப்பின் காரணனே
      களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

    வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
    வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
    என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

    1. இறைவனே, இறைவனே இணையில்லாதவனே
      குறை நிறைந்த என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

    விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவார் இல்லையே
    விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப்போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே

    1. மேய்ப்பனே, மேய்ப்பனே மந்தையை காப்பவனே
      மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

    மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கை பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே
    காணாமல் போன பாத்திரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
    வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும் பாதையில் நடத்திடுமே


    Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae Lyrics in English

    1. kuyavanae, kuyavanae pataippin kaarananae
      kalimannnnaana ennaiyumae kannnnokki paarththidumae

    verumaiyaana paaththiram naan veruththu thallaamalae
    nirampi valiyum paaththiramaay vilangach seyyumae
    vaethaththil kaanum paaththiram ellaam Yesuvai pottiduthae
    ennaiyum avvitha paaththiramaay vanainthu kollumae

    1. iraivanae, iraivanae innaiyillaathavanae
      kurai niraintha ennaiyumae kannnnokki paarththidumae

    vilaipokaatha paaththiram naan virumpuvaar illaiyae
    vilaiyillaa um kirupaiyaal ukanthathaakkidumae
    thataikal yaavum neekki ennaith thammaippol maattidumae
    utaiththu ennai unthanukkae udamaiyaakkidumae

    1. maeyppanae, maeyppanae manthaiyai kaappavanae
      maarkkam akanta ennaiyumae kannnnokki paarththidumae

    mannnnaasaiyil naan mayangiyae meyvali vittakanten
    kannpona pokkai pinpattiyae kanntaen illai inpamae
    kaannaamal pona paaththiram ennaith thaetivantha theyvamae
    vaalnaalellaam um paatham sellum paathaiyil nadaththidumae

  • Kuyavanae Um Kaiyil குயவனே உம் கையில்

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும் -2
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே -2

    1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
      உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
      படைக்கிறேன் உம் பாதத்தில் -2
    2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
      வனைந்திடும் உம் சித்தம்போல்
      எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
      உருவாக்குமே உருவாக்குமே -2
    3. உமக்காகவே நான் வாழ்ந்திட
      வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
      சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
      உருவாக்குமே உருவாக்குமே -2
    4. உம் வருகையில் உம்மோடு நான்
      வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
      உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
      உருவாக்குமே உருவாக்குமே -2

    Kuyavanae Um Kaiyil Lyrics in English

    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum -2
    en siththam alla um siththam naathaa
    tharukiraen um kaiyilae -2

    1. ennaith tharukiraen tharukiraen
      um karaththil ennaip pataikkiraen
      pataikkiraen um paathaththil -2
    2. um sevaikkaaka enai tharukiraen
      vanainthidum um siththampol
      enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
      uruvaakkumae uruvaakkumae -2
    3. umakkaakavae naan vaalnthida
      vanainthidum um siththampol – um
      siththam seythidavae um saththam kaettidavae
      uruvaakkumae uruvaakkumae -2
    4. um varukaiyil ummodu naan
      vanthida enai maattumae – oyvinti
      umaip paada oyaamal umaith thuthikka
      uruvaakkumae uruvaakkumae -2
  • Kuutissaeruveer Onraakath கூடிச்சேருவீர் ஒன்றாக

    கல்வாரிக்கருகில் வாரீர்

    கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
    உள்ளத்தில் இயேசுவின் பால்
    அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்
    கல்வாரிக்கருகில் கூடுவீர்

    1. சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்
      உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்
      துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
      அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால்
    2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
      விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்
      அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்
      கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால்
    3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள் மட்டும்
      மிஷனெரிகள் என்ற வார்த்தை பேசப்படட்டும்
      தியாகம் புரிவோர் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
      இயேசுவின் உள்ளம் அதனால் ப10ரிப்பாகட்டும் – ஆகையால்

    Kuutissaeruveer Onraakath Lyrics in English

    kalvaarikkarukil vaareer

    kootichchaேruveer ontakath thaetich selluveer
    ullaththil Yesuvin paal
    anpu konntoor yaarum kooduveer
    kalvaarikkarukil kooduveer

    1. siruvar naduvar muthuvar yaavarum sernthu koodattum
      ullam mattum oru ennnaththaal porunthi nirkattum
      thuthiyin geetham eluppi ontayp paatich sellattum
      anthakaara sakthi yaavum asainthu oliyattum – aakaiyaal
    2. kalvaarik karukil vanthor anpaal niraivaar
      vikarpaminti evaridamum seeraayp palakuvaar
      anpu nerukki aeva avar sevai seyvaar
      kalvaariyil anpai anti yaathu kaanuvaay? – aakaiyaal
    3. Yesuvai ariyaar ulakil nilavum naal mattum
      mishanerikal enta vaarththai paesappadattum
      thiyaakam purivor maelum maelum elumpi varattum
      Yesuvin ullam athanaal pa10rippaakattum – aakaiyaal
  • Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

    கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்?

    கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
    நீ ஏன் கலங்குகிறாய்?
    கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
    நீ ஏன் பதறுகிறாய்?

    நீ மேலானவைகளைத் தேடு
    நித்தியர் இயேசுவை நாடு! – 2

    1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
      புயல் வந்தால் சரிந்திடுமே
      நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
      நித்திய வாழ்வில்தானே
    2. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
      சுகித்து நீ வாழ்கிறாயோ?
      சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
      உன்னையும் சந்திக்குமே

    Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Lyrics in English

    koodaaravaasiyae nee aen kalangukiraay?

    koodaaravaasiyae niththiyar irukkaiyil
    nee aen kalangukiraay?
    kadanthidum kaalam kalainthidum vaesham
    nee aen patharukiraay?

    nee maelaanavaikalaith thaedu
    niththiyar Yesuvai naadu! – 2

    1. nee vaalum vaalkkai manal veeduthaanae
      puyal vanthaal sarinthidumae
      nilaiyaana nakaram namakkingu illai
      niththiya vaalvilthaanae
    2. selvam sukamodum paer pukalodum
      sukiththu nee vaalkiraayo?
      santhaekam illai maranam orunaal
      unnaiyum santhikkumae
  • Kuutaaram Athu Thaevanin Vaasasthalam கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்

    தேவன் தங்கும் வாசஸ்தலம்

    கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
    கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்

    திசையெங்கிலும் அது பரவிடும்
    திருச்சபை விரைந்தே பெருகிடும்
    தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்

    1. அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
      அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
      அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
      அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
      வானுலக ஆட்சியை விளம்பட்டும்
    2. கடலதின் நீராய் திரளட்டும்
      சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
      ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
      சத்தியம் உலகை அசைக்கட்டும்
      சத்துவம் அதனால் அதிரட்டும்
    3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
      தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
      இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
      சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
      ஆண்டவர் மகிமை பெருகட்டும்

    Kuutaaram Athu Thaevanin Vaasasthalam Lyrics in English

    thaevan thangum vaasasthalam

    koodaaram athu thaevanin vaasasthalam
    koodaaram athu thaeva pirasannaththin nilalaattam

    thisaiyengilum athu paravidum
    thiruchchapai virainthae perukidum
    thaevanin janaththaal nirampidum

    1. athan thiraikal neenndu viriyattum
      athan munaikal aalam sellattum
      akantu aalpol thalaikkattum
      anaivarum vanthangu othungattum
      vaanulaka aatchiyai vilampattum
    2. kadalathin neeraay thiralattum
      sudarvidum oliyaay veesattum
      jaathikal thaevanaip panniyattum
      saththiyam ulakai asaikkattum
      saththuvam athanaal athirattum
    3. visuvaasak kudumpangal palukattum
      tham sontha janaththai meetkattum
      ilainjarkal elunthu sellattum
      suvisesham akilaththai vellattum
      aanndavar makimai perukattum
  • Kuur Aani Thaekam Paaya கூர் ஆணி தேகம் பாய

    1. கூர் ஆணி தேகம் பாய
      மா வேதனைப்பட்டார்
      பிதாவே, இவர்கட்கு
      மன்னிப்பீயும் என்றார்
    2. தம் ரத்தம் சிந்தினோரை
      நல் மீட்பர் நிந்தியார்
      மா தெய்வ நேசத்தோடு
      இவ்வாறு ஜெபித்தார்.
    3. எனக்கே அவ்வுருக்கம்
      எனக்கே அச்செபம்
      அவ்வித மன்னிப்பையே
      எனக்கும் அருளும்

    Kuur Aani Thaekam Paaya Lyrics in English

    1. koor aanni thaekam paaya
      maa vaethanaippattar
      pithaavae, ivarkatku
      mannippeeyum entar
    2. tham raththam sinthinorai
      nal meetpar ninthiyaar
      maa theyva naesaththodu
      ivvaatru jepiththaar.
    3. enakkae avvurukkam
      enakkae achchepam
      avvitha mannippaiyae
      enakkum arulum
  • Kutram Neega Kaluvineere குற்றம் நீங்க கழுவினீரே

    குற்றம் நீங்க கழுவினீரே
    சுற்றி வருவேன் உம்மையே
    பற்றிக் கொண்டேன் உம் வசனம்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன்
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    1.இரக்கம் கண்முன்னே
    உம் வாக்கு என் நாவில்
    நான் ஏன் கலங்கணும்
    நன்றி கூறுவேன்
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    2.மகிமை மேகத்திற்குள்
    மறைந்து நான் வாழ்கிறேன்
    இரட்சகர் இயேசு தான்
    எப்போதும் என்முன்னே
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    3.உம்மையே நம்பியுள்ளேன்
    உம்மோடு தான் நடப்பேன்
    தடுமாற்றம் எனக்கில்லை
    தள்ளாடுவதும் இல்லை
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்
    குற்றம் நீங்க கழுவினீரே
    சுற்றி வருவேன் உம்மையே
    பற்றிக் கொண்டேன் உம் வசனம்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன்


    Kutram Neega Kaluvineere Lyrics in English

    kuttam neenga kaluvineerae
    sutti varuvaen ummaiyae
    pattik konntaen um vasanam
    vetti mael vetti kaannpaen
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal

    1.irakkam kannmunnae
    um vaakku en naavil
    naan aen kalanganum
    nanti kooruvaen
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal

    2.makimai maekaththirkul
    marainthu naan vaalkiraen
    iratchakar Yesu thaan
    eppothum enmunnae
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal

    3.ummaiyae nampiyullaen
    ummodu thaan nadappaen
    thadumaattam enakkillai
    thallaaduvathum illai
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal
    kuttam neenga kaluvineerae
    sutti varuvaen ummaiyae
    pattik konntaen um vasanam
    vetti mael vetti kaannpaen

  • Kuthookalam Niraintha Nannaal குதூகலம் நிறைந்த நன்னாள்

    குதூகலம் நிறைந்த நன்னாள்
    நடுவானில் மின்னிடுமே
    இதுவரை இருந்த துன்பமில்லை
    இனி என்றுமே ஆனந்தம்

    1. தள கர்த்தனாம் இயேசு நின்று
      யுத்தம் செய்திடுவார் நன்று
      அவர் ஆவியினால் புது பெலனடைந்து
      ஜெயகீதங்கள் பாடிடுவோம் — குதூகலம்
    2. புவி மீதினில் சரீர மீட்பு
      என்று காண்போம் என ஏங்கும்
      மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
      மணவாட்டியாய்ச் சேர்த்திடவே — குதூகலம்
    3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
      அவர் வருகையை எதிர் நோக்கி
      நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
      நாம் ஆயத்தமாகிடுவோம் — குதூகலம்
    4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
      சீயோன் நகர்தனிலே சேர்க்க
      அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
      அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் — குதூகலம்
    5. தேவ தூதர்கள் கானமுடன்
      ஆரவார தொனி கேட்கும்
      அவர் கிருபையினால் மறுரூபமாக
      நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் — குதூகலம்

    Kuthookalam Niraintha Nannaal Lyrics in English

    kuthookalam niraintha nannaal
    naduvaanil minnidumae
    ithuvarai iruntha thunpamillai
    ini entumae aanantham

    1. thala karththanaam Yesu nintu
      yuththam seythiduvaar nantu
      avar aaviyinaal puthu pelanatainthu
      jeyageethangal paadiduvom — kuthookalam
    2. puvi meethinil sareera meetpu
      entu kaannpom ena aengum
      mana makilnthidavae avar vanthiduvaar
      manavaattiyaaych serththidavae — kuthookalam
    3. jepa vilippudan vaanjaiyaaka
      avar varukaiyai ethir Nnokki
      nava erusalaemaay thooyaalangirthamaay
      naam aayaththamaakiduvom — kuthookalam
    4. jeeva oli veesum karkalaaka
      seeyon nakarthanilae serkka
      arul suranthirunthaar naamam varainthirunthaar
      avar makimaiyil aarpparippom — kuthookalam
    5. thaeva thootharkal kaanamudan
      aaravaara thoni kaetkum
      avar kirupaiyinaal maruroopamaaka
      nammai inithudan serththiduvaar — kuthookalam
  • Kuthookalam Konndaattamae குதூகலம் கொண்டாட்டமே

    குதூகலம் கொண்டாட்டமே
    என் இயேசுவின் சந்நிதானத்தில்
    ஆனந்தம் ஆனந்தமே
    என் அப்பாவின் திருப்பாதத்தில்

    1. பாவமெல்லாம் பறந்தது
      நோய்களெல்லாம் தீர்ந்தது
      இயேசுவின் இரத்தத்தினால்
      கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
      பரிசுத்த ஆவியினால்
    2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
      தேவாலயம் நாமே
      ஆவியான தேவன் அச்சாரமானார்
      அதிசயம் அதிசயமே
    3. வல்லவர் என் இயேசு
      வாழ வைக்கும் தெய்வம்
      வெற்றிமேலே வெற்றி தந்தார்
      ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
      ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
    4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
      நேசர் வருகின்றார்
      ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
      மகிமையில் பிரவேசிப்போம்

    Kuthookalam Konndaattamae Lyrics in English

    kuthookalam konndaattamae
    en Yesuvin sannithaanaththil
    aanantham aananthamae
    en appaavin thiruppaathaththil

    1. paavamellaam paranthathu
      Nnoykalellaam theernthathu
      Yesuvin iraththaththinaal
      kiristhuvukkul vaalvu kirupaiyaal meetpu
      parisuththa aaviyinaal
    2. thaevaathi thaevan thinamthorum thangum
      thaevaalayam naamae
      aaviyaana thaevan achchaாramaanaar
      athisayam athisayamae
    3. vallavar en Yesu
      vaala vaikkum theyvam
      vettimaelae vetti thanthaar
      orumanamaay kooti osannaa paati
      oorellaam kotiyaettuvom
    4. ekkaala saththam, thootharkal koottam
      naesar varukintar
      orunoti poluthil maruroopamaavom
      makimaiyil piravaesippom