Category: Tamil Worship Songs Lyrics

  • Kondaduvom naam கொண்டாடுவோம் நாம்

    கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
    பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
    எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
    யேகோவா தேவனைக் கொண்டாடுவோம்

    பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
    பாடிக் கொண்டாடுவோம்
    தீயவன் நடுவில் வருவதில்லை
    கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம்

    அகமகிழ்வோம் அகக்களிப்போம்
    ஆனந்த சத்தமிடுவோம்

    நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
    என்று நாம் உயர்த்திடுவோம்
    கர்த்தரின் மகிமை மேகம் போல
    இறங்கட்டும் இந்நாளிலே

    அசைக்க முடியா கூடாரமாவோம்
    அமைதியின் இல்லமாவோம்
    நோயாளி என்று சொல்வதில்லை
    குற்றங்கள் நீங்கியதே

    இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
    பிரமாணம் இதுதானே
    எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
    கட்டளையாய் கொடுத்தார்

    பழைய புளித்த மாவை அகற்றி
    தூக்கி எறிந்திடுவோம்
    துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
    அசுத்தம் அகற்றிடுவோம்

    எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
    முழங்கினார் சிலுவையிலே
    சாவுக்கு அதிபதி சாத்தானை
    சாவாலே வென்றுவிட்டார்


    Kondaduvom naam Lyrics in English

    konndaaduvom naam konndaaduvom
    panntikaikal naam konndaaduvom
    ekkaalam oothi aelu naatkalum
    yaekovaa thaevanaik konndaaduvom

    palikal seluththi parisuththar samookaththil
    paatik konndaaduvom
    theeyavan naduvil varuvathillai
    karththaro jeyam eduththaar -nam

    akamakilvom akakkalippom
    aanantha saththamiduvom

    nallavar karththar kirupaiyullavar
    entu naam uyarththiduvom
    karththarin makimai maekam pola
    irangattum innaalilae

    asaikka mutiyaa koodaaramaavom
    amaithiyin illamaavom
    Nnoyaali entu solvathillai
    kuttangal neengiyathae

    isravael janaththukku thaevan thantha
    piramaanam ithuthaanae
    ekipthu thaesam vittu purappadumpothu
    kattalaiyaay koduththaar

    palaiya puliththa maavai akatti
    thookki erinthiduvom
    thurkkunam pollaappu thavirththiduvom
    asuththam akattiduvom

    ellaam mutinthathu entu iratchakar
    mulanginaar siluvaiyilae
    saavukku athipathi saaththaanai
    saavaalae ventuvittar

  • Kondaaduvom Yesu Raajavai; Magilchiyode Avar கொண்டாடுவோம் இயேசு ராஜாவை

    மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
    ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
    கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
    கெம்பீரமாய் துதித்திடுவோம்

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

    1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
      நேசக் கரம் கொண்டு காத்தீரையா
      சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்
      உன்னை மறவேன் என்றீரையா
      உம் கிருபை விலகாததே
      உம் வாக்கும் மாறாததே
    2. பகைஞர் முன்பு பந்தியொன்றை
      ஆயத்தம் செய்து வைத்தீரையா
      அநுகூலமான அற்புதம் ஒன்றை
      யாவரும் காண செய்தீரையா
      உம் கிருபை விலகாததே
      உம் வாக்கும் மாறாததே
    3. ஆதி அன்பை முற்றும் மறந்து
      தூரமாகச் சென்றேனைய்யா
      தேடி வந்து வாக்குத்தந்து
      மறுபடி வாழச் செய்தீரைய்யா
      உம் கிருபை விலகாததே
      உம் வாக்கும் மாறாததே

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்


    Kondaaduvom Yesu Raajavai; Magilchiyode Avar Lyrics in English

    makilchchiyotae avar sannithi munnae
    aanantha saththaththotae aaraathanai
    karangalai uyarththi kuralkalai eluppi
    kempeeramaay thuthiththiduvom

    konndaaduvom Yesu raajaavai
    konndaaduvom seytha nanmaiyai
    konndaaduvom Yesu raajaavai
    konndaaduvom nanti solluvom
    konndaaduvom nanti solluvom

    1. kora payangara puyalkal naduvinil
      naesak karam konndu kaaththeeraiyaa
      sonnathaich seythu mutikkum varaiyil
      unnai maravaen enteeraiyaa
      um kirupai vilakaathathae
      um vaakkum maaraathathae
    2. pakainjar munpu panthiyontai
      aayaththam seythu vaiththeeraiyaa
      anukoolamaana arputham ontai
      yaavarum kaana seytheeraiyaa
      um kirupai vilakaathathae
      um vaakkum maaraathathae
    3. aathi anpai muttum maranthu
      thooramaakach sentenaiyyaa
      thaeti vanthu vaakkuththanthu
      marupati vaalach seytheeraiyyaa
      um kirupai vilakaathathae
      um vaakkum maaraathathae

    konndaaduvom Yesu raajaavai
    konndaaduvom seytha nanmaiyai
    konndaaduvom Yesu raajaavai
    konndaatiyae nanti solluvom
    konndaatiyae nanti solluvom

  • Kolkothave Kolai Marame கொல்கொதாவே கொலை மரமே

    கொல்கொதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே
    கோர மனிதர் கொலை செய்தார்
    கோர காட்சி பார் மனமே

    கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
    கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
    எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
    எந்தன் ஜீவ நாயகா

    என்னை மீட்ட கொலை மரமே
    அன்னையே நான் என்ன செய்வேன்
    என்னை உமக்கே ஒப்புவித்தேன்
    என்றென்றுமாய் நான் வாழ

    வானம் பூமி ஒன்றாய் இணைந்த
    வல்ல தேவன் உமக்கே சரணம்
    வாடி வாடி கொலை மரத்தில்
    நிற்கும் காட்சி பார் மனமே


    Kolkothave Kolai Marame Lyrics in English

    kolkothaavae kolai maramae
    kora maranam paaraay manamae
    kora manithar kolai seythaar
    kora kaatchi paar manamae

    kanthai anninthaar ninthai sumanthaar
    kallaar naduvil kolai maraththil
    enthanai meetka iththanaip paataen
    enthan jeeva naayakaa

    ennai meetta kolai maramae
    annaiyae naan enna seyvaen
    ennai umakkae oppuviththaen
    ententumaay naan vaala

    vaanam poomi ontay innaintha
    valla thaevan umakkae saranam
    vaati vaati kolai maraththil
    nirkum kaatchi paar manamae

  • Kolkathaa Meattinilea Kodura Paavi கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி

    கொல்கொதா மேட்டினிலே

    கொடூர பாவி எந்தனுக்காய்

    குற்றமில்லாத தேவ குமாரன்

    குருதி வடிந்தே தொங்கினார்

    பாவ சாபங்கள் சுமந்தாரே

    பாவியை மீட்க பாடுபட்டார்

    பாவமில்லாத தேவகுமாரன்

    பாதகன் எனக்காய் தொங்கினார்

    மடிந்திடும் மன்னுயிர்க்காய்

    மகிமை யாவும் இழந்தோராய்

    மாசில்லாத தேவகுமாரன்

    மூன்றாணி மீதினில் தொங்கினார்

    இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட

    இரட்சிப்பின் நதி என்னில் பாய

    ஆதரவில்லா தேவகுமாரன்

    அகோரக் காட்சியாய் தொங்கினார்

    கல்வாரி காட்சி இதோ

    கண்டிடுவாயே கண்கலங்க

    கடின மனமும் உருகிடுமே

    கர்த்தரின் மாறாத அன்பி னிலே

    உள்ளமே நீ திறவாயோ

    உருகும் சத்தம் நீ கேளாயோ

    உன் கரம் பற்றி உன்னை நடத்த

    உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்


    Kolkathaa Meattinilea Kodura Paavi Lyrics in English

    kolkothaa maettinilae

    kotoora paavi enthanukkaay

    kuttamillaatha thaeva kumaaran

    kuruthi vatinthae thonginaar

    paava saapangal sumanthaarae

    paaviyai meetka paadupattar

    paavamillaatha thaevakumaaran

    paathakan enakkaay thonginaar

    matinthidum mannuyirkkaay

    makimai yaavum ilanthoraay

    maasillaatha thaevakumaaran

    moontanni meethinil thonginaar

    iraththaththin peruvellam oda

    iratchippin nathi ennil paaya

    aatharavillaa thaevakumaaran

    akorak kaatchiyaay thonginaar

    kalvaari kaatchi itho

    kanndiduvaayae kannkalanga

    katina manamum urukidumae

    karththarin maaraatha anpi nilae

    ullamae nee thiravaayo

    urukum saththam nee kaelaayo

    un karam patti unnai nadaththa

    un nenjai aavalaay thattukiraar

  • Kolkathaa Malai Meethilae கொல்கதா மலை மீதிலே

    கொல்கதா மலை மீதிலே
    சிலுவை சுமந்தேகினார்
    உன்னத பிதாவின் சித்தமாய்
    உத்தமர் இரத்தம் சிந்தினார்

    1. அந்தோ எருசலேமே
      ஆண்டவர் பவனி வந்தார்
      அந்த நாளை நீ மறந்தாய்
      அன்பரோ கண்ணீர் சிந்தினார் — கொல்கதா
    2. மேனியில் கசையடிகள்
      எத்தனை வசை மொழிகள்
      அத்தனையும் அவர் உனக்காய்
      அன்புடன் சுமந்து சகித்தார் — கொல்கதா

    3.உத்தம தேவ மைந்தனே
    சுத்தமாய் இரத்தம் சிந்தியே
    நித்திய வாழ்வு தனையே
    நீசனாம் எனக்களித்தார் — கொல்கதா

    1. வஞ்சக உலகினிலே
      வணங்கா கழுத்துடனே
      வழிபோகும் மானிடனே
      வந்திடாயோ இயேசுவண்டை — கொல்கதா

    Kolkathaa Malai Meethilae Lyrics in English

    kolkathaa malai meethilae
    siluvai sumanthaekinaar
    unnatha pithaavin siththamaay
    uththamar iraththam sinthinaar

    1. antho erusalaemae
      aanndavar pavani vanthaar
      antha naalai nee maranthaay
      anparo kannnneer sinthinaar — kolkathaa
    2. maeniyil kasaiyatikal
      eththanai vasai molikal
      aththanaiyum avar unakkaay
      anpudan sumanthu sakiththaar — kolkathaa

    3.uththama thaeva mainthanae
    suththamaay iraththam sinthiyae
    niththiya vaalvu thanaiyae
    neesanaam enakkaliththaar — kolkathaa

    1. vanjaka ulakinilae
      vanangaa kaluththudanae
      valipokum maanidanae
      vanthidaayo Yesuvanntai — kolkathaa
  • Kolkathaa Kolaimaram கொல்கதா கொலைமரம்

    கொல்கதா கொலைமரம்
    பார்க்கவே பரிதாபம்
    துங்கன் இயேசு நாதனார்
    தொங்கும் காட்சி பார் இதோ!

    1. கை காலை ஆணி பீறிட்டே
      குருதி புரண்டு ஓடிற்றே
      முள்ளினால் ஓர் கிரீடமே
      சூட்டினார் மா பாதகர்
    2. கல்வாரி நாதர் இயேசுவை
      பற்றி நீயும் வந்திட்டால்
      தூசியான உன்னையும்
      மேசியா கைத் தூக்குவார்

    Kolkathaa Kolaimaram Lyrics in English

    kolkathaa kolaimaram
    paarkkavae parithaapam
    thungan Yesu naathanaar
    thongum kaatchi paar itho!

    1. kai kaalai aanni peerittae
      kuruthi puranndu otitte
      mullinaal or kireedamae
      soottinaar maa paathakar
    2. kalvaari naathar Yesuvai
      patti neeyum vanthittal
      thoosiyaana unnaiyum
      maesiyaa kaith thookkuvaar
  • Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்

    கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
    பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
    நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

    வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
    வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
    அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா

    என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
    என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2
    மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்

    என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
    மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2
    தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்


    Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham Lyrics in English

    kolkathaa maettinilae sinthineer um thooya iraththam
    paavaththin sanmaanamaana en saapaththai
    neeraaka aettathellaam kodu paathakan enakkaaka

    vaa en kalvaari naayakaa un kirupai polinthidavaa
    vaa karunnaiyin thirukkumaraa un anpaal annaiththidavaa
    antha alaku thaevanae umathu saayalai ennilum uduththidavaa

    en paavaththaal thaevanae ummaith thuranthaen
    en meeruthalaal veennaaka kettalainthaen – 2
    maayai athin mayakkaththinaal valithappi seeralinthaen

    en thurokamae veliyae solli oppukkonntaen
    mananthirunthiyae Yesuvotinnaiththukkonntaen – 2
    theyvaththin mannippinaal nedunal vaalvu petten

  • Kolgatha Malaimel Thondruthor Siluvai கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை

    1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
      அல்லல் பழிப்பின் சின்னமதாம்
      நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
      நேசிப்பேன் அத்தொல் சிலுவையை

    பல்லவி

    அந்தச் சிலுவையை நேசிப்பேன்
    பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
    தொல் சிலுவையை நான் பற்றுவேன்
    பின் அதால் க்ரீடத்தை அணிவேன்

    1. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
      உலகோர் பழித்த குருசை
      கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
      கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை
    2. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
      நேசர் மாண்ட சிலுவையதோ !
      தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
      அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை
    3. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
      மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
      பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
      பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை

    Kolgatha Malaimel Thondruthor Siluvai Lyrics in English

    1. kolkothaa malaimael thontuthor siluvai
      allal palippin sinnamathaam
      neesap paavikatkaay naesar maanndaarathil
      naesippaen aththol siluvaiyai

    pallavi

    anthach siluvaiyai naesippaen
    pelan oynthu naan saakum varai
    thol siluvaiyai naan pattuvaen
    pin athaal kreedaththai annivaen

    1. thaevaattuk kuttitham maatchimai veruththu
      ulakor paliththa kurusai
      kalvaari malaikkae sumanthaar enakkaay
      kavarntha thennullath thaiyathu — anthach siluvaiyai
    2. en paavam mannikka ennaich suththamaakka
      naesar maannda siluvaiyatho !
      thooya raththam thoyntha anthach siluvaiyin
      alakeththanai maatchimai paar ! — anthach siluvaiyai
    3. kurusin ilivai makilvaay sumanthae
      maenmai paaraattuvaen ninthaiyil
      pinnaal motchalokil naesar koottich sentu
      pangalippaar tham makimaiyil — anthach siluvaiyai
  • Koenalum Maarupaatumaana கோணலும் மாறுபாடுமான

    கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
    குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
    இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
    ஆயத்தம் ஆயத்தமாவோம்

    1. முணுமுணுக்காமால் வாதாடாமல்
      அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
    2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு
      சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்
    3. இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே – அவர்
      இருப்பது போல அவரைக் காண்போம்
    4. அற்பமான நம் சரீரங்களை
      மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
    5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
      பெருமையடைவோம் அவர் வருகையிலே
    6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
      வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

    Koenalum Maarupaatumaana Lyrics in English

    konalum maarupaadumaana ulakaththil
    kuttamatta kulanthaikalaay vaalnthiduvom
    iraajaa varukiraar viraivil varukiraar
    aayaththam aayaththamaavom

    1. munumunukkaamaal vaathaadaamal
      anaiththaiyum seythu naam munnaeruvom
    2. jeeva vaarththaikal pitiththuk konndu
      sudarkalaay ulakilae oliveesuvom
    3. Yesuvaip pol iruppom varukaiyilae – avar
      iruppathu pola avaraik kaannpom
    4. arpamaana nam sareerangalai
      makimaiyin sareeramaay maattiduvaar
    5. verumanae veennaay odavillai enta
      perumaiyataivom avar varukaiyilae
    6. paralokaththil irunthu iratchakar Yesu
      varuvathai ethirpaarththu kaaththiruppom
  • Koedi Koedi Nandri Daddy கோடி கோடி நன்றி டாடி

    நேற்றைய துயரமெல்லாம்
    இன்று மறைந்ததையா
    நிம்மதி பிறந்ததையா
    அது நிறந்தர மானதையா

    கோடி கோடி நன்றி டாடி
    கோடி கோடி நன்றி டாடி
    கோடி கோடி நன்றி டாடி
    நல்லவரே உமக்குத்தான்
    அதிகாலை ஆனந்தமே
    என் அப்பா உம் திருப்பாதமே

    இரவெல்லாம் காத்தீர்
    இன்னும் ஓர் நாள் தந்தீர்
    (என்னை) மறவாதே என் நேசரே
    உறவாடி மகிழ்ந்திடுவேன்


    Koedi Koedi Nandri Daddy Lyrics in English

    naettaைya thuyaramellaam
    intu marainthathaiyaa
    nimmathi piranthathaiyaa
    athu niranthara maanathaiyaa

    koti koti nanti daati
    koti koti nanti daati
    koti koti nanti daati
    nallavarae umakkuththaan
    athikaalai aananthamae
    en appaa um thiruppaathamae

    iravellaam kaaththeer
    innum or naal thantheer
    (ennai) maravaathae en naesarae
    uravaati makilnthiduvaen