Category: Tamil Worship Songs Lyrics

  • Karthar mel barathai கர்த்தர் மேல் பாரத்தை

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
    கலங்கித் தவிக்காதே
    அவரே உன்னை ஆதரிப்பார்
    அதிசயம் செய்வார்

    நீதிமான் தள்ளாட விடமாட்டார்
    நித்தமும் காத்து நடத்திடுவார்

    நம்மைக் காக்கும் தேவனவர்
    நமது நிழலாய் இருக்கின்றவர்

    தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
    அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

    கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
    நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

    வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
    அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

    என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
    இதய விருப்பம் நிறைவேற்றுவார்


    Karthar mel barathai Lyrics in English

    karththar mael paaraththai vaiththu vidu
    kalangith thavikkaathae
    avarae unnai aatharippaar
    athisayam seyvaar

    neethimaan thallaada vidamaattar
    niththamum kaaththu nadaththiduvaar

    nammaik kaakkum thaevanavar
    namathu nilalaay irukkintavar

    thakappanum thaayum kaivittalum
    avarae nammai annaiththuk kolvaar

    karththar nam saarpil irukkumpothu
    namakku ethiraay nirpavan yaar?

    vaalvai karththarukku oppuk koduppom
    avarae ellaam vaaykkach seyvaar

    entum avaril makilnthiruppom
    ithaya viruppam niraivaettuvaar

  • Karthar kirubai enrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

    கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
    என்றென்றும் மாறாதது
    ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
    ஆண்டு நடத்திடுதே

    கர்த்தர் நல்லவர்
    நம் தேவன் பெரியவர்
    பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
    உண்மையுள்ளவர்

    கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
    கரத்தைப் பிடித்து நடத்தினாரே
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
    தோளில் சுமந்து நடத்தினாரே

    வியாதி படுக்கை மரண நேரம்
    பெலனற்ற வேளையில் தாங்கினாரே
    விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
    சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே

    சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
    வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
    வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
    தைரியப்படுத்தி நடத்தினாரே

    கண்ணீர் கவலையாவையும் போக்க
    கர்த்தர் இயேசு வருகின்றாரே
    கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்
    அவரோடு நாமும் பறந்து செல்வோம்


    Karthar kirubai enrumullathu Lyrics in English

    karththar kirupai entumullathu
    ententum maaraathathu
    aanndukal thorum aanndavar kirupai
    aanndu nadaththiduthae

    karththar nallavar
    nam thaevan periyavar
    periyavar, parisuththar kirupaikal nirainthavar
    unnmaiyullavar

    kadantha aanndu muluvathum nammai
    karaththaip pitiththu nadaththinaarae
    thakappan pillaiyai sumappathu pola
    tholil sumanthu nadaththinaarae

    viyaathi padukkai marana naeram
    pelanatta vaelaiyil thaanginaarae
    viduthalai thanthaar pelanum eenthaar
    saatchiyaay nammai niruththinaarae

    sothanai nammai soolnthitta naeram
    valakkaraththaal nammai thaettinaarae
    vaarththaiyai anuppi nammodu paesi
    thairiyappaduththi nadaththinaarae

    kannnneer kavalaiyaavaiyum pokka
    karththar Yesu varukintarae
    kalangida vaenndaam payappada vaenndaam
    avarodu naamum paranthu selvom

  • Karthar karam en கர்த்தர் கரம் என்

    கர்த்தர் கரம் என் மேலங்க
    கடுகளவு பயமில்லங்க

    ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
    இறுதிவரை என்னை நடத்திடுவார்

    ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
    எதிரி வந்தால் எத்திடுவார்

    அணைப்பாரே அரவணைப்பாரே
    அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே

    இரத்தத்தாலே கழுவுகிறார்
    இரட்சிப்பாலே உடுத்துகிறார்

    தாலாட்டுவார் சீராட்டுவார்
    வாலாக்காமல் தலையாக்குவார்

    பறித்துக் கொள்ள முடியாதுங்க
    ஒருவராலும் முடியாதுங்க


    Karthar karam en Lyrics in English

    karththar karam en maelanga
    kadukalavu payamillanga

    aenthiduvaar ennaith thaangiduvaar
    iruthivarai ennai nadaththiduvaar

    ootdiduvaar thaalaatdiduvaar
    ethiri vanthaal eththiduvaar

    annaippaarae aravannaippaarae
    alli alli muththam koduppaarae

    iraththaththaalae kaluvukiraar
    iratchippaalae uduththukiraar

    thaalaattuvaar seeraattuvaar
    vaalaakkaamal thalaiyaakkuvaar

    pariththuk kolla mutiyaathunga
    oruvaraalum mutiyaathunga

  • Karthar Ennai Visarippar கர்த்தர் என்னை விசாரிப்பவர்

    கர்த்தர் என்னை விசாரிப்பவர்
    கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
    கர்த்தர் என்னை உயர்த்துபவர்
    கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

    1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
      அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
      எந்தன் கவலை பாரத்தை முற்றும்
      அவர் மீது வைத்திடுவேன் நான்.
    2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
      மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
      எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
      அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.
    3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
      உனது துணை நான் என்று சொல்லி
      வழக்காடுவோர் அனைவரையுமே
      வெட்கப்பட்டு போகச் செய்வாரே.
    4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
      எந்தன் குறைகளை எல்லாமே
      கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
      நிறைவாக்குவாரே கவலை ஏன்?

    Karthar Ennai Visarippar Lyrics in English

    karththar ennai visaarippavar
    karththar ennai aatharippavar
    karththar ennai uyarththupavar
    karththar ennaith thappuvippavar.

    1. peyaraich sollik kooppittu ennai
      avar niththam nadaththich selvathaal
      enthan kavalai paaraththai muttum
      avar meethu vaiththiduvaen naan.
    2. thaevan enthan patchaththil irukka
      manithan enakku ennathaan seyvaan?
      enthan kannnneeraith tham thuruththiyil
      avarin kanakkil vaiththullaar allo.
    3. valathu karaththaip pitiththu ennaiyum
      unathu thunnai naan entu solli
      valakkaaduvor anaivaraiyumae
      vetkappattu pokach seyvaarae.
    4. thaevan thamathu aisuvariyaththinaal
      enthan kuraikalai ellaamae
      kiristhu Yesuvukkul makimaiyil
      niraivaakkuvaarae kavalai aen?
  • Karthar enakai yavaiyum கர்த்தர் எனக்காய் யாவையும்

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார்

    சொன்னதை செய்யும்வரை அவர்
    என்னைக் கைவிடுவதில்லை

    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை

    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே


    Karthar enakai yavaiyum Lyrics in English

    karththar enakkaay yaavaiyum
    seythu mutippaar

    sonnathai seyyumvarai avar
    ennaik kaividuvathillai

    karththar enakkaay karththar enakkaay
    yaavaiyum seythu mutippaar
    karththar enakkaay karththar enakkaay
    malaikalai peyarppaarae

    neer sonnathu nadakkumo
    enta santhaekam illai
    neer ninaiththathu nilainirkumo
    enta payamum illai

    en ninthanai nirantharam
    illai enteerae
    naan ilanthathaith thirumpavum
    tharuvaen enteerae

  • Karthar En Pakkamagil கர்த்தர் என் பக்கமாகில்

    1. கர்த்தர் என் பக்கமாகில்
      எனக்கு பயம் ஏன்?
      உபத்திரவம் உண்டாகில்
      மன்றாடிக் கெஞ்சுவேன்;
      அப்போதென்மேலே வந்த
      பொல்லா வினை எல்லாம்
      பலத்த காற்றடித்த
      துரும்புபோல ஆம்.
    2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
      மேலான கர்த்தரே;
      அதாலே பக்தர் யாரும்
      திடன்கொள்வார்களே;
      நான் ஏழைப் பலவீனன்,
      வியாதிப்பட்டோனே;
      அவரில் சொஸ்தம்இ ஜீவன்
      சமஸ்தமும் உண்டே.
    3. தெய்வாவி என்னில் தங்கி
      என்னை நடத்தவே,
      பயம் எல்லாம் அடங்கி
      திடனாய் மாறுதே;
      அப்பாவே என்று சொல்ல,
      அவர் என் நெஞ்சுக்கே
      ஆற்றல் சகாயம்செய்ய
      என் ஆவி தேறுதே.
    4. என் உள்ளமே களிக்கும்
      துக்கிக்கவேண்டுமோ?
      கர்த்தர் என்மேல் உதிக்கும்
      பகலோன் அல்லவோ?
      பரத்தில் வைக்கப்பட்ட
      அநந்த பூரிப்பே
      என் ஆவிக்கு பலத்த
      திடன் உண்டாக்குமே.

    Karthar En Pakkamagil Lyrics in English

    1. karththar en pakkamaakil
      enakku payam aen?
      upaththiravam unndaakil
      mantatik kenjuvaen;
      appothenmaelae vantha
      pollaa vinai ellaam
      palaththa kaattatiththa
      thurumpupola aam.
    2. en nenjin asthipaaram
      maelaana karththarae;
      athaalae pakthar yaarum
      thidankolvaarkalae;
      naan aelaip palaveenan,
      viyaathippattaோnae;
      avaril sosthami jeevan
      samasthamum unntae.
    3. theyvaavi ennil thangi
      ennai nadaththavae,
      payam ellaam adangi
      thidanaay maaruthae;
      appaavae entu solla,
      avar en nenjukkae
      aattal sakaayamseyya
      en aavi thaeruthae.
    4. en ullamae kalikkum
      thukkikkavaenndumo?
      karththar enmael uthikkum
      pakalon allavo?
      paraththil vaikkappatta
      anantha poorippae
      en aavikku palaththa
      thidan unndaakkumae.
  • Karthar en nambikkai கர்த்தர் என் நம்பிக்கை

    கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
    கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
    அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
    ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

    அல்லேலூயா அல்லேலூயா 4

    வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
    பாதாளக் கட்டுகள் கழன்று போனது
    பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
    கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

    சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
    சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
    சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
    சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே


    Karthar en nambikkai Lyrics in English

    karththar en nampikkai thurukamaanavar
    kanmalai kottaைyum iratchippumaanavar
    ataikkalam pukalidam kaedakam entar
    aapaththu naalil en apayamumaavaar

    allaelooyaa allaelooyaa 4

    vaanam asainthathu poomi athirnthathu
    paathaalak kattukal kalantu ponathu
    paarthalaththin raajan uyirththelunthaarae
    karththar karththar entu poomi mulanguthae

    samuththiraththin mael athikaaramutaiyavar
    sannithi pirakaaraththin akkiniyaanavar
    singaanam entumaay veettirukkavae
    siluvaiyil mariththu uyirththelunthaarae

  • Karthar En Munbaaga கர்த்தர் என் முன்பாக

    கர்த்தர் என் முன்பாக போவார்
    கர்த்தர் என் முன்பாக போவார்
    கொனலான வழியை செவ்வையாக்கி
    கர்த்தர் என் முன்பாக போவார்

    பயப்படாதே என்று சொன்னார்
    திகையாதே என்று சொன்னார்
    நானே உன் தேவன்
    உன்னை பலப்படுத்தி
    வலகரத்தால் நடத்திடுவேன்

    சர்ப்பத்தின் மேல் அதிகாரம்
    தேள்களின் மேல் அதிகாரம்
    சத்துருவின் செயலை மேற்க்கொள்ள
    அதிகாரம் எனக்கு தந்தார்

    உனக்கு விரோதமாக
    மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை
    உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
    ஒருவரும் எதிர்ப்பதில்லை


    Karthar En Munbaaga Lyrics in English

    karththar en munpaaka povaar
    karththar en munpaaka povaar
    konalaana valiyai sevvaiyaakki
    karththar en munpaaka povaar

    payappadaathae entu sonnaar
    thikaiyaathae entu sonnaar
    naanae un thaevan
    unnai palappaduththi
    valakaraththaal nadaththiduvaen

    sarppaththin mael athikaaram
    thaelkalin mael athikaaram
    saththuruvin seyalai maerkkolla
    athikaaram enakku thanthaar

    unakku virothamaaka
    manthiramillai kurisolluthalumillai
    uyirodu irukkum naatkalellaam
    oruvarum ethirppathillai

  • Karthar en meipar கர்த்தர் என் மேய்ப்பர்

    கர்த்தர் என் மேய்ப்பர்
    நான் தாழ்ச்சியடையேன்
    அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

    என் துக்கம் மாற்றுவார்
    என் தேவனை அறிவார்
    அவர் சர்வ வல்ல தேவனே
    அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
    எல்லாம் அவராலே கூடும்
    அவரால் எல்லாம் கூடும்

    சிறையிருப்பை மாற்றுவார்
    தாழ்ப்பாள்களை உடைப்பார்
    அவர் சேனைகளின் கர்த்தரே
    அவர் அற்புதத்துன் தேவன்
    அதிசயம் செய்வார்
    அவராலே எல்லாம் கூடும்
    எல்லாம் அவராலே கூடும்


    Karthar en meipar Lyrics in English

    karththar en maeyppar
    naan thaalchchiyataiyaen
    avar ennai kaappaar aenthi sumappaar

    en thukkam maattuvaar
    en thaevanai arivaar
    avar sarva valla thaevanae
    avaraal koodaathathu ontumae illai
    ellaam avaraalae koodum
    avaraal ellaam koodum

    siraiyiruppai maattuvaar
    thaalppaalkalai utaippaar
    avar senaikalin karththarae
    avar arputhaththun thaevan
    athisayam seyvaar
    avaraalae ellaam koodum
    ellaam avaraalae koodum

  • Karthar en belanum கர்த்தர் என் பெலனும்

    கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
    நான் நம்பும் கன்மலையுமானாவர்
    கர்த்தர் என் கிருபை என்றைக்கும்
    நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    அவர் கரமும் அவர் புயமும்
    மகிமையும் மகத்துவமும்
    அதிசயங்கள் செய்தது
    கிருபையும் சத்தியமும் இரக்கமும்
    அவர் அன்பும் வழி நடத்தியது

    அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
    என் நேசர் பரிசுத்தர்
    தாழ்ச்சியடைகிலேனே
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    ஆலயத்தில் தங்குவதை
    வாஞ்சித்தே நாடிடுவேன்


    Karthar en belanum Lyrics in English

    karththar en pelanum en geethamum
    naan nampum kanmalaiyumaanaavar
    karththar en kirupai entaikkum
    naan paaduvaen naan pottiduvaen

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allaelooyaa

    avar karamum avar puyamum
    makimaiyum makaththuvamum
    athisayangal seythathu
    kirupaiyum saththiyamum irakkamum
    avar anpum vali nadaththiyathu

    avar maeyppar avar meetpar
    en naesar parisuththar
    thaalchchiyataikilaenae
    jeevanulla naatkalellaam
    aalayaththil thanguvathai
    vaanjiththae naadiduvaen