Category: Tamil Worship Songs Lyrics

  • Kan Chimittum Natchathiram கண் சிமிட்டும் நட்சத்திரம்

    பல்லவி

    கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்

    கண்டிடாத நட்சத்திரம் (2)

    அனுபல்லவி

    வழியாக வந்தவரைக் காணவே

    வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

    சரணங்கள்

    1. ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத இராஜன் பிறந்தார் என்றார் ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு ஏமாற்றம் அடைந்தார் தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத் தாரகை நின்றிடவே தாழ்மையின் கோலத்தில் மன்னவனை மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக
    2. பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து தூயப் பாலனைப் பணிந்தனரே பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று மா பாக்கியம் அடைந்தனரே உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே வழி காட்டுவோம் வாருங்கள் இயேசுவுக்காய் பிரகாசிப்போம் நல் பாக்கியம் பெற்றிடுவோம் – வழியாக

    Kan Chimittum Natchathiram Lyrics in English

    pallavi
    kann simittum natchaththiram – entum
    kanntidaatha natchaththiram (2)

    anupallavi

    valiyaaka vanthavaraik kaanavae

    vali kaatti sellum natchaththiram – kann simittum

                saranangal
    1. njaaniyar kanndu athisayiththaar – yootha iraajan piranthaar entar aerothin maalikai sentatainthaar – angu aemaattam atainthaar thaaveethin oorin saththiraththil ath thaarakai nintidavae thaalmaiyin kolaththil mannavanai maattuth tholuvinil kanndanarae – valiyaaka
    2. pon vellaip polam thoopam thanthu thooyap paalanaip panninthanarae parisuththa iraajanaip panninthu nintu maa paakkiyam atainthanarae ulakellaam Yesuvaik kanntidavae vali kaattuvom vaarungal Yesuvukkaay pirakaasippom nal paakkiyam pettiduvom – valiyaaka
  • Kalyanamaam Kalyaanam கல்யாணமாம் கல்யாணம்

    கல்யாணமாம் கல்யாணம்
    கானாவூரு கல்யாணம்
    கர்த்தர் இயேசு கனிவுடனே
    கலந்து கொண்ட கலியாணம்

    விருந்தினர் விரும்பியே
    அருந்த ரசமும் இல்லையே
    அதை அறிந்த மரியாளும்
    ஆண்டவரிடம் சொன்னாளே

    கருணை வள்ளல் இயேசுவும்
    கனிவாய் நீரை ரசமதாய்
    மாற்றி அனைவர் பசியையும்
    ஆற்றி அருளை வழங்கினார்

    இல்லறமாம் பாதையில்
    இல்லை என்னும் வேளையில்
    சொல்லிடுவீர் அவரிடம்
    நல்லறமாய் வாழுவீர்


    Kalyanamaam Kalyaanam Lyrics in English

    kalyaanamaam kalyaanam
    kaanaavooru kalyaanam
    karththar Yesu kanivudanae
    kalanthu konnda kaliyaanam

    virunthinar virumpiyae
    aruntha rasamum illaiyae
    athai arintha mariyaalum
    aanndavaridam sonnaalae

    karunnai vallal Yesuvum
    kanivaay neerai rasamathaay
    maatti anaivar pasiyaiyum
    aatti arulai valanginaar

    illaramaam paathaiyil
    illai ennum vaelaiyil
    solliduveer avaridam
    nallaramaay vaaluveer

  • Kalvariyin karunai ithae கல்வாரியின் கருணையிதே

    கல்வாரியின் கருணையிதே
    காயங்களில் காணுதே
    கர்த்தன் இயேசு பார் உனக்காய்
    கஷ்டங்கள் சகித்தாரே

    விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
    விலாவினின்று பாயுதே
    விலையேறப் பெற்றோனாய்
    உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

    பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
    இவ்வன்புக் கிணையாகுமோ
    அன்னையிலும் அன்பு வைத்தே
    தம் ஜீவனை ஈந்தாரே

    சிந்தையிலே பாரங்களும்
    நிந்தைகள் ஏற்றவராய்
    தொங்குகின்றார் பாதகன் போல்
    மங்கா வாழ்வளிக்கவே

    எந்தனுக்காய் கல்வாரியில்
    இந்தப் பாடுகள் பட்டீர்
    தந்தையே உம் அன்பினையே
    சிந்தித்தே சேவை செய்வேன்

    மனுஷனை நீர் நினைக்கவும்
    அவனை விசாரிக்கவும்
    மண்ணில் அவன் எம்மாத்திரம்
    மன்னவா உம் தயவே


    Kalvariyin karunai ithae Lyrics in English

    kalvaariyin karunnaiyithae
    kaayangalil kaanuthae
    karththan Yesu paar unakkaay
    kashdangal sakiththaarae

    vilaiyaerap petta thiruraththamae -avar
    vilaavinintu paayuthae
    vilaiyaerap pettaோnaay
    unnai maatta vilaiyaaka eenthanarae

    pon velliyo mannnnin vaalvo
    ivvanpuk kinnaiyaakumo
    annaiyilum anpu vaiththae
    tham jeevanai eenthaarae

    sinthaiyilae paarangalum
    ninthaikal aettavaraay
    thongukintar paathakan pol
    mangaa vaalvalikkavae

    enthanukkaay kalvaariyil
    inthap paadukal pattir
    thanthaiyae um anpinaiyae
    sinthiththae sevai seyvaen

    manushanai neer ninaikkavum
    avanai visaarikkavum
    mannnnil avan emmaaththiram
    mannavaa um thayavae

  • Kalvariyil thongukinrar un கல்வாரியில் தொங்குகின்றார் உன்

    கல்வாரியில் தொங்குகின்றார்
    உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
    உந்தன் சிலுவை ஏற்றனரே

    வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
    வியாகுலம் அடைந்தாரே இயேசு
    உனக்காக தந்தையே உம் சித்தம்
    என்று இயேசு கதறினாரே

    சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
    நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
    வாரினால் அடிபட்டார்
    கோரமான காட்சியானார்

    மாசற்ற தேவனே மகிமை யாவும்
    துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
    பாவத்தை போக்கியே
    நீதிக்கு பிழைக்க செய்தார்

    கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
    உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
    சுகமே அடைவாய்
    தழும்பாலே குணமடைவாய்

    எத்தனை துன்பங்கள்
    என்னையும் மீட்கவே
    தியாக பாதை இயேசு காட்டினார்
    நித்தமும் அவரின் பின்னே
    சென்று வாழ்ந்திடுவாய்


    Kalvariyil thongukinrar un Lyrics in English

    kalvaariyil thongukintar
    un paavam neekka thammaith thanthaar
    unthan siluvai aettanarae

    vaervaiyum iraththamaaka aaththumaa
    viyaakulam atainthaarae Yesu
    unakkaaka thanthaiyae um siththam
    entu Yesu katharinaarae

    sirasinil mulmuti sivappangi thariththoraay
    ninthai yaavum unakkaay aettaாrae
    vaarinaal atipattar
    koramaana kaatchiyaanaar

    maasatta thaevanae makimai yaavum
    thuranthoraay neesa kurusil Yesu thonginaar
    paavaththai pokkiyae
    neethikku pilaikka seythaar

    kaikalil kaalkalil iraththamum vatiyuthae
    unthan Nnoykal yaavum aettaாrae
    sukamae ataivaay
    thalumpaalae kunamataivaay

    eththanai thunpangal
    ennaiyum meetkavae
    thiyaaka paathai Yesu kaattinaar
    niththamum avarin pinnae
    sentu vaalnthiduvaay

  • Kalvariye Kalvariye Oppadra கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

    கல்வாரியே கல்வாரியே
    ஒப்பற்ற கல்வாரியே
    கல்மனம் மாற்றிடும்
    கனிவுள்ள கல்வாரியே

    தேவனின் நித்ய அன்பு
    இயேசுவில் தொனிக்கின்றதே
    வேதனையின் இரத்தம் தாரையாய்
    சிந்துது மானிடனே உனக்காய்

    காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
    கண்டத்தை இரட்சிக்கவே
    நாயகனை நம்பி ஜீவனுக்குள்
    செல்ல தீயனைத் தள்ளிவிடு

    பாவத்தை மட்டுமல்ல உன்
    நோயையும் நீக்கிடுமே
    பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
    பட்சமாய் அவரண்டை வா

    சாத்தானின் தலையையும்
    சிலுவையில் நசுக்கினார்
    சகலத்தையும் ஜெயித்தவர்
    சீக்கிரம் வருகிறார்


    Kalvariye Kalvariye Oppadra Lyrics in English

    kalvaariyae kalvaariyae
    oppatta kalvaariyae
    kalmanam maattidum
    kanivulla kalvaariyae

    thaevanin nithya anpu
    Yesuvil thonikkintathae
    vaethanaiyin iraththam thaaraiyaay
    sinthuthu maanidanae unakkaay

    kaayangal ainthathuvum ainthu
    kanndaththai iratchikkavae
    naayakanai nampi jeevanukkul
    sella theeyanaith thallividu

    paavaththai mattumalla un
    Nnoyaiyum neekkidumae
    payaththai neekki visuvaasam konndu
    patchamaay avaranntai vaa

    saaththaanin thalaiyaiyum
    siluvaiyil nasukkinaar
    sakalaththaiyum jeyiththavar
    seekkiram varukiraar

  • Kalvariye Kalvariye Karunaiyin கல்வாரியே கல்வாரியே கருணையின்

    கல்வாரியே கல்வாரியே
    கருணையின் உறைவிடம் கல்வாரியே

    பாவங்கள் போக்கி விட்டீர்
    பாதாளம் வென்று விட்டீர்
    பாவபாரம் நீக்கி விட்டீர்
    பாசமாய் மீட்டு கொண்டீர்

    சாபங்கள் தொலைத்து விட்டீர்
    சாத்தானை ஜெயித்து விட்டீர்
    மரண பயம் நீக்கி விட்டீர்
    மகிமையை அணிந்து கொண்டீர்

    பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
    பெலவீனம் சுமந்து விட்டீர்
    தழும்புகளால் குணமாக்கினீர்
    தடைகளை அகற்றி விட்டீர்


    Kalvariye Kalvariye Karunaiyin Lyrics in English

    kalvaariyae kalvaariyae
    karunnaiyin uraividam kalvaariyae

    paavangal pokki vittir
    paathaalam ventu vittir
    paavapaaram neekki vittir
    paasamaay meettu konnteer

    saapangal tholaiththu vittir
    saaththaanai jeyiththu vittir
    marana payam neekki vittir
    makimaiyai anninthu konnteer

    paadukal aettuk konnteer
    pelaveenam sumanthu vittir
    thalumpukalaal kunamaakkineer
    thataikalai akatti vittir

  • Kalvariye Kalvariye Kal Manam கல்வாரியே கல்வாரியே கல் மனம்

    கல்வாரியே கல்வாரியே
    கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

    1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
      பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
    2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
      ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே
    3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
      பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே
    4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
      கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
    5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
      கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
    6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
      பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே
    7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
      எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

    Kalvariye Kalvariye Kal Manam Lyrics in English

    kalvaariyae kalvaariyae
    kal manam urukkidum kalvaariyae – en

    1. paavi thuroki sanndaalan naanaayinum
      paathakam pokkip parivudan iratchiththa – kalvaariyae
    2. paaviyai meetkavae naayakan Yesu tham
      jeevanin iraththaththaich sinthina unnatha – kalvaariyae
    3. naathan enakkaaka aatharavattaோraayp
      paathakar maththiyil paathakan pol thongum – kalvaariyae
    4. mulmuti sootiyae koor aanni meethilae
      kallanai pola en naayakan thongidum – kalvaariyae
    5. sarvam pataiththaalum sorloka naayakan
      karmaththin kolamaay nirpathaik kaannpaeno – kalvaariyae
    6. ennnum nanmai aethum ennilae illaiyae
      pinnai aen naesiththeer ennai en pon naathaa – kalvaariyae
    7. ivvitha anpai naan engumae kaanneenae
      evvitham ithargeedu aelai naan seykuvaen – kalvaariyae
  • Kalvari ratham enakkaga கல்வாரி இரத்தம் எனக்காக

    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

    அல்லேலூயா அல்லேலூயா

    கைகளில் ஆணிகளோ
    எனக்காக அடிக்கப்பட்டீர்
    எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

    முட்கிரீடம் தரித்தவராய்
    சிலுவையில் அறைந்தனரே
    சிலுவையில் தொங்கினாரே இயேசு

    உடைந்த உள்ளத்தோடு
    சிலுவையில் மரித்தீரே
    எனக்காய் மரித்தீரே இயேசு


    Kalvari ratham enakkaga Lyrics in English

    kalvaari iraththam enakkaaka sinthi
    kalvaari iraththaththaal kaluvukinteer

    allaelooyaa allaelooyaa

    kaikalil aannikalo
    enakkaaka atikkappattir
    enakkaaka iraththam sinthineer Yesu

    mutkireedam thariththavaraay
    siluvaiyil arainthanarae
    siluvaiyil thonginaarae Yesu

    utaintha ullaththodu
    siluvaiyil mariththeerae
    enakkaay mariththeerae Yesu

  • Kalvari Pookalai Em Karangalil Yenthi கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி

    கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2

    காணிக்கை உமக்களிக்க – 2

    குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்

    இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

    இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை

    உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)

    கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்

    இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

    நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை

    வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)

    அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்

    ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்


    Kalvari Pookalai Em Karangalil Yenthi Lyrics in English

    kalvaari pookkalai em karangalil aenthi vanthom – 2

    kaannikkai umakkalikka – 2

    kuyilena paakkalai surangalil thoduththu vanthom

    ithaya kaannikkai umakkalikka -2 thaevaa

    ithaya yaalin iniya osai umakku kaannikkai

    uthayam thaedum viliyin oliyum umakku kaannikkai (2)

    kalmalaiyil karam viriththu unnai eenthathaal

    intu kasinthuruki paliyil rasamaay emmaith tharukintom

    nintunilaikkum peyarum pukalum umakku kaannikkai

    ventu sirakkum thiranum arivum umakku kaannikkai (2)

    anpin amuthaay appam athilae eenthathaal – ullam

    ontinnainthu ulaippin payanaay emmaith tharukintom

  • Kalvari Nayagane Kangalil கல்வாரி நாயகனே கண்களில்

    கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
    கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
    உமக்கே ஸ்தோத்திரம் – 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    1. என்னை இழுத்துக் கொள்ளும்
      ஓடி வந்திடுவேன்
      அறைக்குள் அழைத்துச் செல்லும்
      அன்பில் களிகூறுவேன்
    2. திராட்சை இரசம்பார்க்கிலும்
      இனிமையானவரே
      ஊற்றுண்ட பரிமளமே
      உலகெல்லாம் உம் மணமே
    3. இடக்கையால் தாங்குகிறீர்
      வலக்கையால் தழுவுகிறீர்
      எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
    4. உம் மீது கொண்ட நேசம்
      அக்கினி ஜீவாலையன்றோ
      தண்ணீரும் வெள்ளங்களும்
      தணிக்க முடியாதையா

    Kalvari Nayagane Kangalil Lyrics in English

    kalvaari naayakanae kannkalil nirainthavarae
    karampitiththavarae kaividaa kanmalaiyae
    umakkae sthoththiram – 2
    uyirulla naalellaam
    umakkae sthoththiram

    1. ennai iluththuk kollum
      oti vanthiduvaen
      araikkul alaiththuch sellum
      anpil kalikooruvaen
    2. thiraatchaை irasampaarkkilum
      inimaiyaanavarae
      oottunnda parimalamae
      ulakellaam um manamae
    3. idakkaiyaal thaangukireer
      valakkaiyaal thaluvukireer
      enakku uriyavarae ithayam aalpavarae
    4. um meethu konnda naesam
      akkini jeevaalaiyanto
      thannnneerum vellangalum
      thannikka mutiyaathaiyaa