Category: Tamil Worship Songs Lyrics

  • Iyaesu Iraajanin Thiruvatikku இயேசு இராஜனின் திருவடிக்கு

    பார்போற்றும் தூயா சரணம்

    இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்!
    ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்!

    1. பார்போற்றும் தூய தூய தேவனே
      மெய்ராஜாவே எங்கள் நாதனே
      பயம் நீக்கும் துணையாவும் ஆனீரே
      சரணம்! சரணம்! சரணம்!
    2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே
      இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
      ஏழை என்னை ஆற்றி தேற்றிக் காப்பீரே
      சரணம்! சரணம்! சரணம்!
    3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
      பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
      ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கின்றேன்
      சரணம்! சரணம்! சரணம்!

    Iyaesu Iraajanin Thiruvatikku Lyrics in English

    paarpottum thooyaa saranam

    Yesu iraajanin thiruvatikku saranam saranam saranam!
    aathma naatharin malaratikku saranam saranam saranam!

    1. paarpottum thooya thooya thaevanae
      meyraajaavae engal naathanae
      payam neekkum thunnaiyaavum aaneerae
      saranam! saranam! saranam!
    2. ilaippaaruthal tharum vaenthanae
      innal thunpam neekkum arul naatharae
      aelai ennai aatti thaettik kaappeerae
      saranam! saranam! saranam!
    3. pelaveenam yaavum pokkum vallorae
      pelaneenthu valakkaram pitippeerae
      aavi aathmaa sareeraththaip pataikkinten
      saranam! saranam! saranam!
  • Iyaesu Enthan Vaazhvin Pelanaanaar இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

    இயேசு என் பெலன்

    இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
    எனக்கென்ன ஆனந்தம் 2

    எந்தன் வாலிப காலமெல்லாம்
    எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2
    எந்தன் இதயமே உம்மைப்பாடும்
    எந்தன் நினைவுகள் உமதாகும் 2

    1. பொல்லாத் தீமைகள் அகன்றோட
      எல்லா மாயையும் மறைந்தோட
      உமதாவியின் அருட்காண
      வருங்காலங்கள் உமதாக
    2. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
      எல்லா உரிமையும் எனக்களித்தீர்
      உம் நாமமே தழைத்தோங்க
      நான் வாழ்வேன் உமக்காக
    3. உந்தன் ஊழியம் செய்திடவே
      என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்
      உந்தன் சித்தம் என்னில் விளங்க
      என்னைப் படைக்கிறேன் உமக்காக
    4. உந்தன் ஜீவனை எனக்களித்து
      என்னை ஆசாரியர் ஆக்கினீரே
      எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி
      என் ஓட்டத்தை முடித்திடுவேன

    Iyaesu Enthan Vaazhvin Pelanaanaar Lyrics in English

    Yesu en pelan

    Yesu enthan vaalvin pelanaanaar
    enakkenna aanantham 2

    enthan vaalipa kaalamellaam
    enthan vaalkkaiyin thunnaiyaanaar 2
    enthan ithayamae ummaippaadum
    enthan ninaivukal umathaakum 2

    1. pollaath theemaikal akantoda
      ellaa maayaiyum marainthoda
      umathaaviyin arutkaana
      varungaalangal umathaaka
    2. intha ulakaththai neer pataiththeer
      ellaa urimaiyum enakkaliththeer
      um naamamae thalaiththonga
      naan vaalvaen umakkaaka
    3. unthan ooliyam seythidavae
      ennai umakkenath therinthukonnteer
      unthan siththam ennil vilanga
      ennaip pataikkiraen umakkaaka
    4. unthan jeevanai enakkaliththu
      ennai aasaariyar aakkineerae
      enthan poruppathai niraivaetti
      en ottaththai mutiththiduvaena
  • Iyaesu Enthan Naesarae . இயேசு எந்தன் நேசரே

    இயேசு என் நேசர்

    1. இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே
      பாலர் அவர் சொந்தந்தான்ää தாங்க அவர் வல்லோர்தான்

    இயேசு என் நேசர் இயேசு என் நேசர்
    இயேசு என் நேசர் மெய் வேத வாக்கிதே

    1. என்னை மீட்க மரித்தார் மோட்ச வாசல் திறந்தார்
      எந்தன் பாவம் நீக்குவார் பாலன் என்னை இரட்சிப்பார்
    2. பெலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும்
      இயேசு தாங்கித் தேற்றுவார்ää பாதுகாக்க வருவார்
    3. எந்தன் மீட்பர் இயேசுவேää தாங்குவார் என்னருகே
      நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால்

    Iyaesu Enthan Naesarae Lyrics in English

    Yesu en naesar

    1. Yesu enthan naesarae kanntaen vaetha noolilae
      paalar avar sonthanthaanää thaanga avar vallorthaan

    Yesu en naesar Yesu en naesar
    Yesu en naesar mey vaetha vaakkithae

    1. ennai meetka mariththaar motcha vaasal thiranthaar
      enthan paavam neekkuvaar paalan ennai iratchippaar
    2. pelaveenam Nnovilum entum ennai naesikkum
      Yesu thaangith thaettuvaarää paathukaakka varuvaar
    3. enthan meetpar Yesuvaeää thaanguvaar ennarukae
      naesanaay naan mariththaal motcham serppaar anpinaal
  • Iyaesu Ennoetu Iruppatha இயேசு என்னோடு இருப்பத

    இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
    என்னுள்ளம் துள்ளுதம்மா
    நன்றி என்று சொல்லுதம்மா
    ஆ…ஆ…ஓ…ஓ… லலல்லா – லாலா ம்ம்

    1. கவலை கண்ணீரெல்லாம்
      கம்ப்ளீட்டா மறையுதம்மா
      பயங்கள் நீங்குதம்மா
      பரலோகம் தெரியுதம்மா
      அகிலம் ஆளும் தெய்வம் – என்
      அன்பு இதய தீபம் இயேசு என்னோடு
    2. பகைமை கசப்பு எல்லாம்
      பனிபோல மறையுதம்மா
      பாடுகள் சிலுவை எல்லாம்
      இனிமையாய் தோன்றுதம்மா
    3. உலக ஆசை எல்லாம்
      கூண்டோடே மறையுதம்மா
      உறுவு பாசமெல்லாம்
      குப்பையாய் தோன்றுதம்மா
    4. எரிகோ கோட்டை யெல்லாம்
      இல்லாமல் போகுதம்மா
      எதிர்க்கும் செங்கடல்கள்
      இரண்டாய் பிரியுதம்மா

    Iyaesu Ennoetu Iruppatha Lyrics in English

    Yesu ennodu iruppatha nenachchitta
    ennullam thulluthammaa
    nanti entu solluthammaa
    aa…aa…o…o… lalallaa – laalaa mm

    1. kavalai kannnneerellaam
      kampleetta maraiyuthammaa
      payangal neenguthammaa
      paralokam theriyuthammaa
      akilam aalum theyvam – en
      anpu ithaya theepam Yesu ennodu
    2. pakaimai kasappu ellaam
      panipola maraiyuthammaa
      paadukal siluvai ellaam
      inimaiyaay thontuthammaa
    3. ulaka aasai ellaam
      koonntootae maraiyuthammaa
      uruvu paasamellaam
      kuppaiyaay thontuthammaa
    4. eriko kottaை yellaam
      illaamal pokuthammaa
      ethirkkum sengadalkal
      iranndaay piriyuthammaa
  • Iyaesu Enkal Maeyppar இயேசு எங்கள் மேய்ப்பர்

    1. இயேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார்
      மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார்
      துன்பம் நேரிட்டாலும்ää இன்பம் ஆயினும்
      இயேசுவின்பின் செல்வோம் பாலர் யாவரும்.
    2. நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறிவோம்
      காதுக்கின்பமாக கேட்டுக் களிப்போம்
      கண்டித்தாலும் நேசர் ஆற்றித் தேற்றுவார்
      நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார்.
    3. ஆட்டுக்காக மேய்ப்பர் இரத்தம் சிந்தினார்
      அதில் மூழ்கினோரே தூயர் ஆகுவார்
      பாவ குணம் நீக்கி முற்றும் இரட்சிப்பார்
      திவ்விய தூய சாயல் ஆக மாற்றுவார்.
    4. இயேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷிப்பார்
      ஓனாய்கள் வந்தாலும் தொடவே மாட்டார்
      சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம்
      பாதாளத்தின்மேலும் ஜெயங்கொள்ளுவோம்.

    Iyaesu Enkal Maeyppar Lyrics in English

    1. Yesu engal maeyppar kannnneer thutaippaar
      maarpil serththannaiththu payam neekkuvaar
      thunpam naerittalumää inpam aayinum
      Yesuvinpin selvom paalar yaavarum.
    2. nalla maeyppar saththam nantay arivom
      kaathukkinpamaaka kaettuk kalippom
      kanntiththaalum naesar aattith thaettuvaar
      naangal pinnae sella vali kaattuvaar.
    3. aattukkaaka maeyppar iraththam sinthinaar
      athil moolkinorae thooyar aakuvaar
      paava kunam neekki muttum iratchippaar
      thivviya thooya saayal aaka maattuvaar.
    4. Yesu nalla maeyppar aattaைp poshippaar
      onaaykal vanthaalum thodavae maattar
      saavin pallaththaakkil anjavae maattaோm
      paathaalaththinmaelum jeyangaொlluvom.
  • Iyaesu Enakku Jeevan இயேசு எனக்கு ஜீவன்

    இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
    துதி பாடல் நான் பாடி
    இயேசுவையே போற்றி
    என்றென்றும் வாழ்த்திடுவேன்

    அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4

    1. சமாதானம் தந்தார் இயேசு
      அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
    2. பதுவாழ்வு தந்தார் இயேசு
      அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
    3. விடுதலை தந்தார் இயேசு
      அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
    4. வல்லமை தந்தார் இயேசு
      அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
    5. அபிஷேகம் தந்தார் இயேசு
      அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4

    Iyaesu Enakku Jeevan Lyrics in English

    Yesu enakku jeevan thanthaarae
    thuthi paadal naan paati
    Yesuvaiyae potti
    ententum vaalththiduvaen

    allaelooyaa aamaen allaelooyaa – 4

    1. samaathaanam thanthaar Yesu
      allaelooyaa aamaen allaelooyaa – 4
    2. pathuvaalvu thanthaar Yesu
      allaelooyaa aamaen allaelooyaa – 4
    3. viduthalai thanthaar Yesu
      allaelooyaa aamaen allaelooyaa – 4
    4. vallamai thanthaar Yesu
      allaelooyaa aamaen allaelooyaa – 4
    5. apishaekam thanthaar Yesu
      allaelooyaa aamaen allaelooyaa – 4
  • Iyaesu En Thalaivar இயேசு என் தலைவர்

    இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
    சந்தோஷம் சந்தோஷமே
    இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
    யார் உண்டு சொல் மனமே!

    1. நாள் மட்டும் நடத்தினாரே
      நன்மையால் சூட்டினாரே
      கரம் நீட்டித் தூக்கினாரே
      சுகம் சுகம் அவர் நிழலே
      முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
      எனக்கு ஓர் பொன்நாளே
    2. மாறிடும் மனிதப் பண்பு
      விலகிடும் மனித அன்பு
      போற்றுவார் தூற்றிடுவார்
      இயேசுவோ அன்பில் மாறார்
      மாறும் உலகில் மாறாத இயேசு
      அவரையே நிதம் போற்று
    3. இந்திய தேசம் வர
      இளமையில் எழுந்து நின்றார்
      சிறுவனே உட்கார் என்றார்
      கேரியோ வென்று வந்தார்
      மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
      உற்சாகம் செய்வார் இயேசு
    4. ஆசையாய் ஆதரித்தோர்
      சீற்றத்தால் அகன்றே போனார்
      தேவனோ அவன் அருகில்
      அதோனிராம் ஜட்சன் வென்றார்
      மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
      தேவனைப் பற்றி நீ வாழ்
    5. ஓசன்னா சொன்னோர் எங்கே?
      ஓடினேன் என்றோன் எங்கே?
      சிலுவையின் சுமை தணிக்கப்
      பழகியோர் யாரும் இல்லை
      இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
      அருள் ஈயும் இயேசு நாதா

    Iyaesu En Thalaivar Lyrics in English

    Yesu en thalaivar jeevanin athipar
    santhosham santhoshamae
    ikaththinil avarpol anpathaayk kaappaar
    yaar unndu sol manamae!

    1. naal mattum nadaththinaarae
      nanmaiyaal soottinaarae
      karam neettith thookkinaarae
      sukam sukam avar nilalae
      mukam mukam avaraith tharisikkum naalae
      enakku or ponnaalae
    2. maaridum manithap pannpu
      vilakidum manitha anpu
      pottuvaar thoottiduvaar
      Yesuvo anpil maaraar
      maarum ulakil maaraatha Yesu
      avaraiyae nitham pottu
    3. inthiya thaesam vara
      ilamaiyil elunthu nintar
      siruvanae utkaar entar
      kaeriyo ventu vanthaar
      manithanin sinthai sorpu alikkum
      ursaakam seyvaar Yesu
    4. aasaiyaay aathariththor
      seettaththaal akante ponaar
      thaevano avan arukil
      athoniraam jatchan ventar
      manitharaich saarnthaal mannveedaay povaay
      thaevanaip patti nee vaal
    5. osannaa sonnor engae?
      otinaen enton engae?
      siluvaiyin sumai thannikkap
      palakiyor yaarum illai
      iruthivarai naan um saarpil nirka
      arul eeyum Yesu naathaa
  • Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

    இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
    ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
    இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
    (இயேசு அழைக்கிறார்;…….)

    எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்(1)
    என்றுணர்;ந்து நீ இயேசுவை நோக்கினால்
    எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்
    (இயேசு அழைக்கிறார்;…….)

    கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல்க் காப்பார்(1)
    கார்;மேகம் போன்ற கஸ்டங்கள் வந்தாலும்
    கருத்துடன் உன்னைக் காத்திடவே
    (இயேசு அழைக்கிறார்;…….)

    சோர்;வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்(1)
    அவர்உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
    தாமதமின்றி நீ வந்திடுவாய்
    (இயேசு அழைக்கிறார்;…….)

    சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் (1)
    யாராய் இருந்தாலும் பேதங்கள் இன்றியே
    கிருபையால் அன்பை அளித்திடவே
    (இயேசு அழைக்கிறார்;…….)


    Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar Lyrics in English

    Yesu alaikkiraar Yesu alaikkiraar
    aavalaay unnaith tham karangal neettiyae
    Yesu alaikkiraar Yesu alaikkiraar
    (Yesu alaikkiraar;…….)

    eththunpa naeraththilum aaruthal unakkalippaar(1)
    entunar;nthu nee Yesuvai Nnokkinaal
    ellaiyillaa inpam pettiduvaay
    (Yesu alaikkiraar;…….)

    kannnneerellaam thutaippaarkannmanni polk kaappaar(1)
    kaar;maekam ponta kasdangal vanthaalum
    karuththudan unnaik kaaththidavae
    (Yesu alaikkiraar;…….)

    sor;vataiyum naeraththil pelan unakkalippaar(1)
    avarun velichcham iratchippumaanathaal
    thaamathaminti nee vanthiduvaay
    (Yesu alaikkiraar;…….)

    sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam (1)
    yaaraay irunthaalum paethangal intiyae
    kirupaiyaal anpai aliththidavae
    (Yesu alaikkiraar;…….)

  • Iya um thirunamam ஐயா உம் திருநாமம்

    ஐயா உம் திருநாமம்
    அகிலமெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    கலங்கிடும் மாந்தர்
    கல்வாரி அன்பை
    கண்டு மகிழ வேண்டும்
    கழுவப்பட்டு வாழ வேண்டும்

    இருளில் வாழும் மாந்தர்
    பேரொளியைக் கண்டு
    இரட்சிப்பு அடைய வேண்டும்
    இயேசு என்று சொல்ல வேண்டும்

    சாத்தானை வென்று
    சாபத்தினின்று
    விடுதலை பெற வேண்டும்
    வெற்றி பெற்று வாழ வேண்டும்

    குருடரெல்லாம் பார்க்கணும்
    முடவரெல்லாம் நடக்கணுமே
    செவிடரெல்லாம் கேட்கணுமே
    சுவிஷேசம் சொல்லணுமே


    Iya um thirunamam Lyrics in English

    aiyaa um thirunaamam
    akilamellaam parava vaenndum
    aaruthal um vasanam
    anaivarum kaetka vaenndum

    kalangidum maanthar
    kalvaari anpai
    kanndu makila vaenndum
    kaluvappattu vaala vaenndum

    irulil vaalum maanthar
    paeroliyaik kanndu
    iratchippu ataiya vaenndum
    Yesu entu solla vaenndum

    saaththaanai ventu
    saapaththinintu
    viduthalai pera vaenndum
    vetti pettu vaala vaenndum

    kurudarellaam paarkkanum
    mudavarellaam nadakkanumae
    sevidarellaam kaetkanumae
    suvishaesam sollanumae

  • Iya Neerandru Anna Kaybavin Veetil ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்

    ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
    நையவே பட்டபாடு ஏசையாவே
    கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
    கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

    திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
    இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
    பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
    அருமைப் பொருளதான ஏசையாவே

    முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
    எள்ளளவும் பேசாத ஏசையாவே
    கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
    கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

    கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
    கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
    சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
    சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

    பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
    புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
    அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
    அடியேனைக் காத்தருளும் ஏசையாவே


    Iya Neerandru Anna Kaybavin Veetil Lyrics in English

    aiyaa neerantu annaa kaaypaavin veettil
    naiyavae pattapaadu aesaiyaavae
    kaikal kattappattavo kaalkal thallaatinavo
    kayavarkal thooshiththaaro aesaiyaavae

    thirumukam arul manga senguruthikal ponga
    irular kasthikodukka aesaiyaavae
    porumai anpu thayaalam punithamaaka vilanga
    arumaip porulathaana aesaiyaavae

    mullin mutiyanninthu vallalae entikala
    ellalavum paesaatha aesaiyaavae
    kallan polae pitiththuk kasaiyaal atiththu mikak
    kanmikal seytha paavam aesaiyaavae

    kattaூnnil serththirukkich settalarthaam murukkik
    karvangaொnntae thooshikka aesaiyaavae
    sattumirakkamillaach sanndaalan oti vanthu
    saatik kannaththaraiya aesaiyaavae

    ponnaana maeniyathil puluthi mikappatiya
    punnnniyan neer kalanga aesaiyaavae
    annnalae anparuyya avasthaikalaich sakiththeer
    atiyaenaik kaaththarulum aesaiyaavae