Category: Tamil Worship Songs Lyrics

  • Isravele unnai kakkum இஸ்ரவேலே உன்னை காக்கும்

    இஸ்ரவேலே உன்னை காக்கும் தேவன்
    உறங்குவதில்லை தூங்குவதில்லை
    இனியும் கலங்குவதேன் – நீயும்

    பார்வோனின் சேனைகள்
    உன்னை தொடர்ந்து வந்த போது
    தம் கரத்தால் செங்கடலை பிளந்தாரே
    இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
    அவர் மாறிடாரே

    வனாந்திர யாத்திரையில்
    நீயும் சோர்ந்து போகையிலே
    தம் சமுகம் உன்னுடனே இருந்ததே
    இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
    அவர் விலகிடாரே


    Isravele unnai kakkum Lyrics in English

    isravaelae unnai kaakkum thaevan
    uranguvathillai thoonguvathillai
    iniyum kalanguvathaen – neeyum

    paarvonin senaikal
    unnai thodarnthu vantha pothu
    tham karaththaal sengadalai pilanthaarae
    isravaelaik kaakkiravar nam thaevanae
    avar maaridaarae

    vanaanthira yaaththiraiyil
    neeyum sornthu pokaiyilae
    tham samukam unnudanae irunthathae
    isravaelaik kaakkiravar nam thaevanae
    avar vilakidaarae

  • Isravel en Janamey இஸ்ரவேல் என் ஜனமே

    இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
    இடறிட வேண்டாம் ஏகோவா
    உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம்

    1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்
    உன் பக்கமே யுண்டு
    தாங்கும் கிருபை
    தயவு இரக்கம் தாராளமாயுண்டு

    2.பார்வோன் கைக்குவிடுத்து
    மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி
    ஆரோன் மோசே என்னும்
    நல்ல ஆசாரியர் உண்டு

    3.செங்கடலில் வழி திறந்த
    சீயோன் நாயகனே பங்கமின்றி
    பாலைவனத்தில் பராமரித்தாரே

    4.சத்துருக்களை சிதற அடித்து
    சர்வ வல்ல தேவன்
    யுத்தத்தில் உன் முன்னே
    நின்று ஜெயமெடுத்தாரே

    5.பயப்படாதே சிறுமந்தையே
    பார் நான் உன் மேய்ப்பன்
    தயங்காதே மனம் கலங்காதே

    உன் தேவன் தினம் காப்பேன்


    Isravel en Janamey Lyrics in English

    isravael en janamae entum
    idarida vaenndaam aekovaa
    un theyvamaanaal aethum payam vaenndaam

    1.ongum puyamum palaththa karamum
    un pakkamae yunndu
    thaangum kirupai
    thayavu irakkam thaaraalamaayunndu

    2.paarvon kaikkuviduththu
    meetta paskaa aattukkutti
    aaron mose ennum
    nalla aasaariyar unndu

    3.sengadalil vali thirantha
    seeyon naayakanae pangaminti
    paalaivanaththil paraamariththaarae

    4.saththurukkalai sithara atiththu
    sarva valla thaevan
    yuththaththil un munnae
    nintu jeyameduththaarae

    5.payappadaathae sirumanthaiyae
    paar naan un maeyppan
    thayangaathae manam kalangaathae
    un thaevan thinam kaappaen

  • Isravaelin Thuthikalil Vaasam Seyyum இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்

    இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
    எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
    ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
    ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்

    இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
    உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
    உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்

    1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
      காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
      சிறையிருப்பை மாற்றி தந்தீர்
      சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் — இனி
    2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
      யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
      பயப்படாதே முன் செல்லுகிறேன்
      என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் — இனி
    3. எதிரியின் படை எம்மை சூழும்போது
      ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
      பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
      எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்— இனி

    Isravaelin Thuthikalil Vaasam Seyyum Lyrics in English

    isravaelin thuthikalil vaasam seyyum
    engal thaevan neer parisuththarae
    oho.. vaakkukal pala thanthu alaiththuvantheer
    oru thanthai pola emmai thookki sumantheer

    ini neer maathramae engal sonthamaaneer
    ummai aaraathippom aarpparippom
    um naamaththinaal entum jeyameduppom

    1. ethirkaalam illaamal aengi nintom
      kaalaththaip pataiththavar thaetivantheer
      siraiyiruppai maatti thantheer
      sirumaiyin janam emmai uyarththivaiththeer — ini
    2. sengadalaik kanndu sornthuponom
      yorthaanin nilai kanndu anji nintom
      payappadaathae mun sellukiraen
      enturaiththu emmai nadaththivantheer — ini
    3. ethiriyin patai emmai soolumpothu
      ongiya puyang konndu yuththam seytheer
      paadach seytheer thuthikkach seytheer
      erikovin mathilkalai itikkach seytheer— ini
  • Isravaelin Thaevanai இஸ்ரவேலின் தேவனை

    ஹேப்பி கிறிஸ்மஸ்

    இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
    துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

    Merry Merry Christmas
    Happy Happy Happy Christmas-2

    1. இருளின் அதிகாரத்தினால் நாம்
      அடிமைகளாயிருந்தோம்
      அன்பின் குமாரன் தியாகத்தினால்
      நாம் விடுதலையாக்கப்பட்டோம்
      தம் அன்பின் ஜனத்திரளாக
      நம்மை சேர்த்துக்கொண்டாரே
      பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
      அன்பின் இலவச பரிசாக அளித்தாரே

    2.சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
    திருச்சபையின் தலையானார்
    சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாகும்
    ஆதியும் தற்சொரூபமும் அவரே
    சமாதானம் தருபவரே
    பூலோகம் மேலோகம் யாவுமே
    ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே


    Isravaelin Thaevanai Lyrics in English

    haeppi kirismas

    isravaelin thaevanai Yesu iraajan paalakanai
    thuthipaaduvom avarai vaalththi thuthimalar thooviduvom

    Merry Merry Christmas
    Happy Happy Happy Christmas-2

    1. irulin athikaaraththinaal naam
      atimaikalaayirunthom
      anpin kumaaran thiyaakaththinaal
      naam viduthalaiyaakkappattaோm
      tham anpin janaththiralaaka
      nammai serththukkonndaarae
      paava mannippu meetpu ellaamae
      anpin ilavasa parisaaka aliththaarae

    2.sarva sirushtikkum munthinavar
    thiruchchapaiyin thalaiyaanaar
    sakala paripooranamum avarukkul vaasamaakum
    aathiyum tharsoroopamum avarae
    samaathaanam tharupavarae
    poolokam maelokam yaavumae
    ontay innainthae vaalnthidum seekkiramae

  • Isravaelai Aalbavare இஸ்ரவேலை ஆள்பவரே

    இஸ்ரவேலை ஆள்பவரே
    யேஹோவா எங்கள் தேவனே
    நீரே சர்வ வல்லவர்
    நீரே சர்வ ஆளுநர்

    கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர்
    சீறிட்ட அலைகளை சிதறடித்தீர்
    தத்தளிப்பை கடக்க செய்தீர்
    அக்கரை காண செய்தீர்

    நீரே சர்வ வல்லவர்
    நீரே சர்வ ஆளுநர்

    அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர்
    கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர்
    நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர்
    வல்ல புயத்தால் தாங்கினீர்

    எனது கொம்பை நீர் உயரச்செய்தீர்
    பலவானின் வில்லை முறியடித்தீர்
    தள்ளாடின என்னை இடைக்கட்டினீர்
    தலைத்தோங்கி நிற்கச் செய்தீர்


    Isravaelai Aalbavare Lyrics in English

    isravaelai aalpavarae
    yaehovaa engal thaevanae
    neerae sarva vallavar
    neerae sarva aalunar

    kalangarai vilakkai pol uyarththi vaiththeer
    seeritta alaikalai sitharatiththeer
    thaththalippai kadakka seytheer
    akkarai kaana seytheer

    neerae sarva vallavar
    neerae sarva aalunar

    ataippatta vaasalai thiranthu vaiththeer
    karampitiththu ennai nadaththi senteer
    naan unakku thunnai nirpaen entu sonneer
    valla puyaththaal thaangineer

    enathu kompai neer uyarachcheytheer
    palavaanin villai muriyatiththeer
    thallaatina ennai itaikkattineer
    thalaiththongi nirkach seytheer

  • Isravaelae Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி

    இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
    எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
    என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
    என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

    1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
      என் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றது
      எப்படி கைவிடுவேன்
      எப்படி கைநெகிழ்வேன் – உன்னை
    2. நானே தான் உன்னை குணமாக்கினேன்
      ஏனோ நீ அறியாமல் போனாயோ
    3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
      கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்
    4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்
      பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
    5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;
      பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

    Isravaelae Unnai Eppadi Lyrics in English

    isravaelae unnai eppatik kaividuvaen
    eppiraayeemae unnai eppatik kainekilvaen
    en makanae unnai eppatik kaividuvaen
    en makalae unnai eppatik kainekilvaen

    1. en ithayam unakkaay aengukintathu
      en irakkam pongipongi valikintathu
      eppati kaividuvaen
      eppati kainekilvaen – unnai
    2. naanae thaan unnai kunamaakkinaen
      aeno nee ariyaamal ponaayo
    3. kaiyilae aenthi nadaththukiraen
      karampitiththu nadakka unnaip palakkukiraen
    4. parivu ennum kayirukalaal pinnaiththuk konntaen
      pakkam saaynthu unavu naan oottukiraen
    5. mutivillaatha anpu naan kaattiyullaen;
      paeranpaal unnai eerththuk konntaen
  • Isravaelae Payappadaathae இஸ்ரவேலே பயப்படாதே

    இஸ்ரவேலே பயப்படாதே
    நானே உன் தேவன்

    வழியும் சத்தியமும்
    ஜீவனும் நானே

    1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே
      உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
      ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
      கைவிடமாட்டேன் — வழியும்
    2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
      உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
      ஒருபோதும் நான் மறப்பதில்லை
      மறந்து போவதில்லை — வழியும்
    3. துன்பநேரம் சோர்ந்து விடாதே
      ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
      சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
      எழுந்து ஒளி வீசு — வழியும்
    4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
      எரிந்து நீயும் போகமாட்டாய்
      ஆறுகளை நீ கடக்கும் போது
      மூழ்கி போக மாட்டாய் — வழியும்

    Isravaelae Payappadaathae Lyrics in English

    isravaelae payappadaathae
    naanae un thaevan

    valiyum saththiyamum
    jeevanum naanae

    1. unnai naanae therinthu konntaenae
      un peyar solli naan alaiththaenae
      oru pothum naan kaividamaattaen
      kaividamaattaen — valiyum
    2. thaay maranthaalum naan maravaenae
      ullangaiyil thaangi ullaen
      orupothum naan marappathillai
      maranthu povathillai — valiyum
    3. thunpanaeram sornthu vidaathae
      jeevakireedam unakkuth tharuvaen
      seekkiram varuvaen alaiththuch selvaen
      elunthu oli veesu — valiyum
    4. theeyin naduvae nee nadanthaalum
      erinthu neeyum pokamaattay
      aarukalai nee kadakkum pothu
      moolki poka maattay — valiyum
  • Isravaelae Karththarai Nampu இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

    இஸ்ரவேலே
    கர்த்தரை நம்பு (3)
    இஸ்ரவேலே
    அவர் உன் துணையும் கேடகமானவர்

    1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
      குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
      பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
      உட்கார செய்பவர் உனக்கு உண்டு
    2. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
      ஆறுகளை நீ கடக்கும் போதும்
      அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
      ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
    3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
      அவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
      உள்ளங்கையில் வரைந்தவர்
      அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

    Isravaelae Karththarai Nampu Lyrics in English

    isravaelae
    karththarai nampu (3)
    isravaelae
    avar un thunnaiyum kaedakamaanavar

    1. puluthiyilirunthu thookki viduvaar
      kuppaiyilirunthu uyarththiduvaar
      pirapukkalaeாdum raajaakkalaeாdum
      utkaara seypavar unakku unndu
    2. akkini meethu nee nadakkum paeாthum
      aarukalai nee kadakkum paeாthum
      akkini pattaாthu aarukal puralaathu
      aanndavar unnaeாdu iruppathaalae
    3. avar unnai vittu vilakuvathillai
      avar unnai entum kaividuvathum illai
      ullangaiyil varainthavar
      avar unnai entum marappathillai
  • Isravael Ennum Naattinilae இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே

    1. இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
      பெத்லகேம் என்னும் ஊரினிலே
      பிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார்
      பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார்

    உன்னதத்தில் மகிமை
    பூமியிலே சமாதானம்
    மனுஷர் மேல் பிரியம்
    மனுஷர் மேல் பிரியம்

    1. கன்னிமரியின் தாய்மையிலே
      தாவீது இராஜா வம்சத்திலே
      பிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார்
      பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார்
      – உன்னதத்தில்
    2. சத்திரத்தில் இடம் இல்லையே
      மெத்தையோ தொழுமுன்னணையே
      பிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்
      பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
      – உன்னதத்தில்

    Isravael Ennum Naattinilae Lyrics in English

    1. isravael ennum naattinilae
      pethlakaem ennum oorinilae
      piranthaar (4) thaeva kumaaran piranthaar
      piranthaar (4) Yesu kiristhu piranthaar

    unnathaththil makimai
    poomiyilae samaathaanam
    manushar mael piriyam
    manushar mael piriyam

    1. kannimariyin thaaymaiyilae
      thaaveethu iraajaa vamsaththilae
      piranthaar (4) athisayamaanavar piranthaar
      piranthaar (4) munnorin maesiyaa piranthaar
      – unnathaththil
    2. saththiraththil idam illaiyae
      meththaiyo tholumunnannaiyae
      piranthaar (4) sirushtippin thaevan piranthaar
      piranthaar (4) karththaathi karththar piranthaar
      – unnathaththil
  • Isaravelin Devane Satha இஸ்ரவேலின் தேவனே சதா

    இஸ்ரவேலின் தேவனே
    சதாகாலமும் உள்ளவரே
    உள்ளங்கையில்
    என்னை வரைந்தவரே
    என்னை உயர்த்தி வைத்தவரே

    நன்றி சொல்லுவேன் நாதன்
    இயேசுவின் நாமத்திற்கே

    கடந்த ஆண்டு முழுவதும் என்னை
    கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே
    இனிமேலும் என்னை நடத்திடுவார்
    கடைசி வரைக்கும் கூட இருப்பார்

    அவர் உண்மை உள்ளவரே
    அவர் அன்பு மாறாததே

    தாயின் கருவில் உருவான நாள்முதல்
    கருத்துடன் என்னை காத்தவரே
    கிருபையாய் என்னை நடத்தினீரே
    ஆசீர்வதித்தவரே

    உங்க கிருபை மாறாததே
    என்றும் உயர்ந்தது
    உம் கிருபை

    வெட்கப்பட்ட இடங்களெல்லாம் என்
    தலையை உயர்த்தினீரே
    என்னோடு இருந்து நடத்தினீரே என்னை
    உயரத்தில் வைத்தவரே
    உங்க நாமம் அதிசயமே சர்வ வல்லவர்
    என் இயேசுவே

    தாழ்வில் கிடந்த என்னையும் நோக்கி
    தயவாய் தூக்கி வைத்தவரே
    மரண இருளிள் நடக்கின்றபோது என்னை
    பாதுகாப்பவரே
    சேனைகளின் தேவன் நீரே
    எல்ஷடாய் உம் நாமமே


    Isaravelin Devane Satha Lyrics in English

    isravaelin thaevanae
    sathaakaalamum ullavarae
    ullangaiyil
    ennai varainthavarae
    ennai uyarththi vaiththavarae

    nanti solluvaen naathan
    Yesuvin naamaththirkae

    kadantha aanndu muluvathum ennai
    kannnnin mannipol ennai kaaththavarae
    inimaelum ennai nadaththiduvaar
    kataisi varaikkum kooda iruppaar

    avar unnmai ullavarae
    avar anpu maaraathathae

    thaayin karuvil uruvaana naalmuthal
    karuththudan ennai kaaththavarae
    kirupaiyaay ennai nadaththineerae
    aaseervathiththavarae

    unga kirupai maaraathathae
    entum uyarnthathu
    um kirupai

    vetkappatta idangalellaam en
    thalaiyai uyarththineerae
    ennodu irunthu nadaththineerae ennai
    uyaraththil vaiththavarae
    unga naamam athisayamae sarva vallavar
    en Yesuvae

    thaalvil kidantha ennaiyum Nnokki
    thayavaay thookki vaiththavarae
    marana irulil nadakkintapothu ennai
    paathukaappavarae
    senaikalin thaevan neerae
    elshadaay um naamamae