Category: Tamil Worship Songs Lyrics

  • Indha Naal Ratchippuk Ketra Nul Nal இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

    பல்லவி

    இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,

    ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

    அனுபல்லவி

    சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

    பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

    சரணங்கள்

    1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவ
      சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் — இந்நாள்
    2. வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்
      மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே — இந்நாள்
    3. உலகச் சிநேகம் வெகு கேடு – அதற்
      குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு — இந்நாள்
    4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு – அவர்
      இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு — இந்நாள்
    5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே – பவ
      இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே — இந்நாள்
    6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு – அவர்
      கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு — இந்நாள்
    7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் – உனைப்
      பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் — இந்நாள்
    8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி – நித்திய
      வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி — இந்நாள்
    9. ஏசுபெருமானை நீ நம்பு – அவர்
      என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு — இந்நாள்

    Indha Naal Ratchippuk Ketra Nul Nal Lyrics in English

    pallavi

    innaal ratchippuk kaetta nal naal,

    aetta nal naal , aetta nal naal

    anupallavi

    sonnaar kiristhunakkuk kirupaiyaich sorinthu

    paadanu pavangalai olippomo? – yootha

    saranangal

    1. santhoshanthanaich solla vanthaen – thaeva
      samaathaana vaarththaiyaip pelanaakath thanthaen — innaal
    2. vaatith thikaiththup pulampaathae – unthan
      manathil avisuvaasam vaiththuk kalangaathae — innaal
    3. ulakach sinaekam veku kaedu – athar
      kudanthaip padaamal jeeva maarkkaththaiththaedu — innaal
    4. intun iratchakaridam thirumpu – avar
      iyattum sampoorana jeevanai virumpu — innaal
    5. inimaelaakattum , en raெnnnnaathae – pava
      ichchaைk kutpattal , thirumpa onnnnaathae — innaal
    6. kiris thaesuvai uttuppaaru – avar
      kirupaiyaaych sinthina raththaththaich seru — innaal
    7. paavangal arach suththikarippaar – unaip
      parisuththa vasthiraththaal alangarippaar — innaal
    8. makimai niraintha kireedanj sooti – niththiya
      vaalvai arulvaar unakkinpang konndaati — innaal
    9. aesuperumaanai nee nampu – avar
      ententaikkum unak kiratchippin kompu — innaal
  • Indha Mannil Vanthu Mannan Yesu இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு

    இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்
    இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)
    இறைவாக்கினர்கள் சொன்னபடி
    பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்
    போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்

    மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்
    மாடுகள் அடையும் தொழுவத்திலே -2
    மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
    Happy Christmas – 2 Happy Happy Christmas

    புவியில் நன்மனம் கொண்டவர்கள்
    நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
    அமைதியின் வேந்தன் அவனியிலே -2
    அழகிய குழந்தையாய் உதித்தாரே


    Indha Mannil Vanthu Mannan Yesu Lyrics in English

    intha mannnnil vanthu mannan Yesu piranthaar
    ingu naamum kooti paattuppaati makilvom (2)
    iraivaakkinarkal sonnapati
    pirantha nam Yesuvaip pottiduvom
    pottiduvom naam pottiduvom

    maarkali iravin kulirinilae maamari makanaay vanthuthiththaar
    maadukal ataiyum tholuvaththilae -2
    manitharul maannikkam piranthaarae
    Happy Christmas – 2 Happy Happy Christmas

    puviyil nanmanam konndavarkal
    nenjinil nimmathi kanntidavae
    amaithiyin vaenthan avaniyilae -2
    alakiya kulanthaiyaay uthiththaarae

  • Indha Mangalam Selikavea Kirubai இந்த மங்களம் செழிக்கவே – கிருபை

    இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
    எங்கள் திரித்துவ தேவனே
    சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
    கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

    1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
      ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
      நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
      நிற்க உலகத்தில் விடுத்தாய்
      மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
      ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
    2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
      துக்குள் எலியேசா் கொண்டனன்
      முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
      சக்கியமதாகக் கண்டனன்
      பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
      தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
    3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
      சுத்த சுவிசேட நேசனே
      பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
      அற்ற கிறிஸ்தேசுராஜனே
      வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
      புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

    Indha Mangalam Selikavea Kirubai Lyrics in English

    intha mangalam selikkavae – kirupai seyyum
    engal thiriththuva thaevanae
    suntharak kaanaavin manappanthalil sentam manaththai
    kantharasamaakach seytha vinthai pol, ingaeyum vanthu

    1. aathiththoduth thanpai eduththaay manudarthammai
      aanum pennnumaakap pataiththaay
      neethi varam naalungaொduththaay – pettup peruki
      nirka ulakaththil viduththaay
      maathavaa் panniyum vaetha pothanae anthappati un
      aatharavaik konndu athan neethiyai nampippurintha
    2. thakka aapirakaamum vinndanan – athanai mana
      thukkul eliyaesaa் konndanan
      mukya aaraan nilaththanntinan – ninaiththapati
      sakkiyamathaakak kanndanan
      pakkuvam uraiththidaa repaekkaalum eesaakkuvukku
      thakka manavaaliyaakath thanthu thayai seythaarpola
    3. saththiya vaethaththin vaasanae – arulupari
      suththa suviseda naesanae
      paktharkal pava vimosanae – paluthanuvum
      atta kiristhaesuraajanae
      vettiyaal yaakkopuvukku muttilum aliththa paeraay
      puththira sampanthunndaakki niththiya supa sopanamaay
  • Inba yesuvin inaiyilla இன்ப இயேசுவின் இணையில்லா

    இன்ப இயேசுவின் இணையில்லா
    நாமத்தை புகழ்ந்து
    இகமதில் பாடிட தருணமிதே
    இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
    இன்றும் என்றென்றும் அவர்
    துதி சாற்றிடுவேன்

    நித்தியமான பர்வதமே
    உந்தனில் நிலைத்திருப்பேன்
    நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
    நித்தம் நடத்திகிறீர் – என்னையும்
    உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
    உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

    பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
    ஆழ்ந்து நான் மாள்கையிலே
    பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
    பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
    பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிக
    பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

    மானானது நீரோடைகளை
    வாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்
    ஆத்துமா உம்பொன் முகம் காணவே
    வாஞ்சித்து கதறிடுதே
    வானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்
    வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

    ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
    அன்பரை உளம் கனிந்தே
    அற்புத ஜெயம் ஈந்தீரே
    அளவில்லாத ஜீவனை அளித்தே
    அல்லேலூயா துதி கன மகிமை – உம்
    நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்


    Inba yesuvin inaiyilla Lyrics in English

    inpa Yesuvin innaiyillaa
    naamaththai pukalnthu
    ikamathil paatida tharunamithae
    Yesuvaip pol oru naesarillai
    intum ententum avar
    thuthi saattiduvaen

    niththiyamaana parvathamae
    unthanil nilaiththiruppaen
    neekkidaathennai tholin mael sumanthae
    niththam nadaththikireer – ennaiyum
    um janamaay ninaiththae eentheer
    unnatha velippaduththal niraivaay

    paavaththil veelnthu maayaiyilae
    aalnthu naan maalkaiyilae
    pirinthu thaeva anpinaik kaattiyae
    patchamaay pirintheduththeer
    paaril parisuththaraakutharkaay – mika
    paraloka nanmaikalaal niraintheer

    maanaanathu neerotaikalai
    vaanjiththuk katharumaap pol – en
    aaththumaa umpon mukam kaanavae
    vaanjiththu kathariduthae
    vaanilum inthap poomilum neer – en
    vaanjaikal theerppavaraay ninaiththae

    aarpparippotae sthoththirippom
    anparai ulam kaninthae
    arputha jeyam eentheerae
    alavillaatha jeevanai aliththae
    allaelooyaa thuthi kana makimai – um
    naamaththirkae nitham saattiduvom

  • Inba yesu raja vai இன்ப இயேசு ராஜாவை

    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

    இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
    கறை திரை அற்ற பரிசுத்தரோடு
    ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2

    தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
    நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
    அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

    முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
    வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

    என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
    எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

    ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
    ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
    அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
    ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே


    Inba yesu raja vai Lyrics in English

    inpa Yesu raajaavai naan paarththaal pothum
    makimaiyil avarodu naan vaalnthaal pothum -2
    niththiyamaam motcha veettil sernthaal pothum
    allaelooyaa koottaththil naan makilnthaal pothum

    Yesuvin iraththaththaalae meetkappattu
    vasanamaam vaeliyaalae kaakkappattu
    karai thirai atta parisuththarodu
    aelai naan pon veethiyil ulaaviduvaen -2

    thootharkal veennaikalai meettum pothu
    niraivaana jeya kosham mulangum pothu
    allaelooyaa geetham paatik konndu
    anparaam Yesuvodu akamakilvaen

    mutkireedam soottappatta thalaiyaip paarppaen
    porkireedam sootti naanum pukalnthiduvaen
    vaarinaal atippatta moothukaip paarththu
    ovvoru kaayangalaay muththam seyvaen

    ennullam nantiyaal nirainthiduthae
    enthanin paakkiya veettaை ninaikkaiyilae
    allaelooyaa aamen allaelooyaa
    varnnikka enthan naavu pothaathaiyaa

    aahaa! ekkaalam entu mulangidumo
    aelai en aaval entu theerththidumo
    appaa! en kannnneer entu thutaikkiraaro
    aavalaay aengiduthae enathullamae

  • Inba nathiye thentral இன்ப நதியே தென்றலே

    இன்ப நதியே தென்றலே காற்றே
    அக்கினி தழலே வெண்புறாவே

    ஜீவ நதியாய் நீர் வாருமே
    தென்றல் காற்றாய் நீர் வாருமே
    அக்கினி தழலாய் நீர் வாருமே
    வெண்புறாவாய் நீர் வாருமே

    வானத்துப் பனியாய் நீர் வாருமே
    ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
    சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
    இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே

    ஆனந்த தைலமாய் வாருமே
    ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
    நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
    ஆறுதலாய் நீர் வாருமே


    Inba nathiye thentral Lyrics in English

    inpa nathiyae thentalae kaatte
    akkini thalalae vennpuraavae

    jeeva nathiyaay neer vaarumae
    thental kaattaாy neer vaarumae
    akkini thalalaay neer vaarumae
    vennpuraavaay neer vaarumae

    vaanaththup paniyaay neer vaarumae
    njaanaththin pirappidamae vaarumae
    siluvai sumanthu thavippavarkku
    ilaippaarum nathiyaay neer vaarumae

    aanantha thailamaay vaarumae
    aarokkiya nathiyaay neer vaarumae
    nerukkappatta em ullangalil
    aaruthalaay neer vaarumae

  • Inainthiduvom Iraimakkalae Yesuvin இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின்

    இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

    சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

    கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

    மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

    மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்

    குடும்பமாய் இணைக்கின்றது

    நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2)

    பலியினில் கலந்து உறவினில் இணைய

    நம்மையே அழைக்கின்றது –இன்று (2) –கூடிடுவோம்

    இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

    பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது (2)

    சோதனை வென்று சாதனை படைக்க

    ஆற்றல் தருகின்றது –நமக்கு (2) –கூடிடுவோம்


    Inainthiduvom Iraimakkalae Yesuvin Lyrics in English

    innainthiduvom iraimakkalae Yesuvin sannithiyil

    sumaikalaith thaangi sukamae kodukkum Yesuvin paliyinilae innaivom Yesuvin panniyinilae

    koodiduvom kudumpamaay koodiduvom

    maariduvom iraisamookamaay maariduvom

    moovoru kadavulin mutivillaa pirasannam

    kudumpamaay innaikkintathu

    nammaik kudumpamaay innaikkintathu (2)

    paliyinil kalanthu uravinil innaiya

    nammaiyae alaikkintathu –intu (2) –koodiduvom

    Yesuvil vaalnthida vaalvaiyae paliyaakka

    paathai kaattukintathu puthiya paathai kaattukintathu (2)

    sothanai ventu saathanai pataikka

    aattal tharukintathu –namakku (2) –koodiduvom

  • Inaiilla namam yesuvin இணையில்லா நாமம் இயேசுவின்

    இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
    இன்பமே தங்கும் இதயமே பொங்கும்
    இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்

    பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்
    பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்
    சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம்
    சந்தம் ஓங்கிடும் நாமம்

    லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்
    கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்
    ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்
    ஜீவனோடெழுந்தவர் நாமம்
    அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே
    அணைந்திடா ஒளி திருனாமம்

    அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்
    அன்பின் சொருபி இயேசுவின் நாமம்
    வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்
    வேதனை தாங்கிடும் நாமம்
    இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்
    இன்றும்மை அழைத்திடும் நாமம்

    அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்
    அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்
    விண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம்
    மண்ணுலகோர் நம்பும் நாமம்
    மிகச்சீக்கிரம் வருவேன் என்றும் வாக்குரைத்த
    மீட்பர் நல் மேய்ப்பரின் நாமம்


    Inaiilla namam yesuvin Lyrics in English

    innaiyillaa naamam Yesuvin naamam
    inpamae thangum ithayamae pongum
    innalkal theerum en manam maarum

    paavaththin koorai muriththidum naamam
    paadukal aetta Yesuvin naamam
    saapappisaasai jeyiththavar naamam
    santham ongidum naamam

    lokaththin aasai veruththidum naamam
    kokaththai meetkum Yesuvin naamam
    jeevanaik koduththa iratchakar naamam
    jeevanodelunthavar naamam
    athai yaar maraiththiduvaar manukkula vilakkae
    annainthidaa oli thirunaamam

    anndiduvorai annaiththidum naamam
    anpin sorupi Yesuvin naamam
    vaennduthal kaetkum vallavar naamam
    vaethanai thaangidum naamam
    ithai nampiyae vaarum paavangal theerum
    intummai alaiththidum naamam

    aliyaamai jeevan aliththidum naamam
    arputham seyyum Yesuvin naamam
    vinnnulakinilae serththidum naamam
    mannnulakor nampum naamam
    mikachchaீkkiram varuvaen entum vaakkuraiththa
    meetpar nal maeypparin naamam

  • Immatum Jeevan Thantha இம்மட்டும் ஜீவன் தந்த

    1. இம்மட்டும் ஜீவன் தந்த
      கர்த்தாவை அத்தியந்த
      பணிவோடுண்மையாக
      இஸ்தோத்திரிப்போமாக.
    2. நாள் பேச்சைப்போல் கழியும்
      தண்ணீரைப்போல் வடியும்;
      இதோ, இந்தாள் வரைக்கும்
      இவ்வேழை மண் பிழைக்கும்.
    3. அநேக விதமான
      இக்கட்டையும், உண்டான
      திகிலையும் கடந்தோம்;
      கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.
    4. அடியார் எச்சரிப்பும்
      விசாரிப்பும் விழிப்பும்,
      தயாபரா, நீர் தாமே
      காக்காவிட்டால் வீணாமே.
    5. தினமும் நவமான
      அன்பாய் நீர் செய்ததான
      அநுக்ரகத்துக்காக
      துதி உண்டாவதாக.
    6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
      நொந்தாலும், உம்மைச் சார்ந்து
      நிலைக்கிறதற்காக
      திடன் அளிப்பீராக.
    7. மா ஜன சேதத்துக்கும்,
      உண்டான போர்களுக்கும்
      ஓர் முடிவு வரட்டும்,
      நொறுங்கினதைக் கட்டும்.

    8.சபையை ஆதரித்து,
    அன்பாய் ஆசீர்வதித்து,
    எல்லாருக்கும் அன்றன்றும்
    அருள் உதிக்கப்பண்ணும்.

    1. பொல்லாரைத் தயவாக
      திருப்பிக்கொள்வீராக;
      இருளிலே திரியும்
      ஜனத்துக்கொளி தாரும்.
    2. திக்கற்றவரைக் காரும்,
      நோயாளிகளைப் பாரும்,
      துக்கித்தவரைத் தேற்றும்,
      சாவோரைக் கரையேற்றும்.
    3. பரத்துக்கு நேராக
      நடக்கிறதற்காக,
      அடியாரை எந்நாளும்
      தெய்வாவியாலே ஆளும்.
    4. அடியார் அத்தியந்த
      பணிவாய்க் கேட்டுவந்த
      வரங்களை அன்பாக
      தந்தருளுவீராக.

    Immatum Jeevan Thantha Lyrics in English

    1. immattum jeevan thantha
      karththaavai aththiyantha
      pannivodunnmaiyaaka
      isthoththirippomaaka.
    2. naal paechchaைppol kaliyum
      thannnneeraippol vatiyum;
      itho, inthaal varaikkum
      ivvaelai mann pilaikkum.
    3. anaeka vithamaana
      ikkattaைyum, unndaana
      thikilaiyum kadanthom;
      karththaavin meetpaik kanntoom.
    4. atiyaar echcharippum
      visaarippum vilippum,
      thayaaparaa, neer thaamae
      kaakkaavittal veennaamae.
    5. thinamum navamaana
      anpaay neer seythathaana
      anukrakaththukkaaka
      thuthi unndaavathaaka.
    6. thunnaalil naangal thaalnthu
      nonthaalum, ummaich saarnthu
      nilaikkiratharkaaka
      thidan alippeeraaka.
    7. maa jana sethaththukkum,
      unndaana porkalukkum
      or mutivu varattum,
      norunginathaik kattum.

    8.sapaiyai aathariththu,
    anpaay aaseervathiththu,
    ellaarukkum antantum
    arul uthikkappannnum.

    1. pollaaraith thayavaaka
      thiruppikkolveeraaka;
      irulilae thiriyum
      janaththukkoli thaarum.
    2. thikkattavaraik kaarum,
      Nnoyaalikalaip paarum,
      thukkiththavaraith thaettum,
      saavoraik karaiyaettum.
    3. paraththukku naeraaka
      nadakkiratharkaaka,
      atiyaarai ennaalum
      theyvaaviyaalae aalum.
    4. atiyaar aththiyantha
      pannivaayk kaettuvantha
      varangalai anpaaka
      thantharuluveeraaka.
  • Immattum Kirubai Thantha Deva இம்மட்டும் கிருபை தந்த தேவா

    பல்லவி

      இம்மட்டும் கிருபை தந்த தேவா
    
      இனி மேலும் கிருபை தாரும் மூவா
    
      இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
    
      இயேசு நீர் என்னில் உருவாகவே – உம்மை காணவே

    சரணங்கள்

    1. சோதிக்கப்பட்ட தூய தேவா

    சோதனையில் பெலன் தாரும் மூவா

    துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே

    இன்ப ஒளி என்னில் வீசியே

    இருள் நீக்குமே – இம்

    1. பக்தியில்லை நான் ஆராதிக்க

    யுக்தியில்லை உம்மை துதிக்க

    சத்திய ஆவியின் வல்லமையால்

    சக்தியைத் தாரும் உத்தமராய்

    உம்மை துதிக்க – இம்

    1. நன்றியால் உள்ளம் பூரிக்குதே

    என்றும் நின் கிருபை பொழிவதினால்

    அன்றுன் உதிரம் சிந்தினதால்

    இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்

    புரண்டோடுதே – இம்

    1. சத்துருவான சாத்தான் என்னை

    நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே

    சாத்தானை ஜெயம் பெற்றிடவே

    சத்திய ஆவி வல்லமையை

    என்னில் ஊற்றும் – இம்

    1. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்

    ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க

    உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்

    உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்

    அல்லேலூயா – இம்


    Immattum Kirubai Thantha Deva Lyrics in English

    pallavi

      immattum kirupai thantha thaevaa
    
      ini maelum kirupai thaarum moovaa
    
      intum entum ummil naan nirkavae
    
      Yesu neer ennil uruvaakavae - ummai kaanavae

    saranangal

    1. sothikkappatta thooya thaevaa

    sothanaiyil pelan thaarum moovaa

    thunpangal thollaikal soolkaiyilae

    inpa oli ennil veesiyae

    irul neekkumae – im

    1. pakthiyillai naan aaraathikka

    yukthiyillai ummai thuthikka

    saththiya aaviyin vallamaiyaal

    sakthiyaith thaarum uththamaraay

    ummai thuthikka – im

    1. nantiyaal ullam poorikkuthae

    entum nin kirupai polivathinaal

    antun uthiram sinthinathaal

    intum um anpu peruvellamaay

    puranntooduthae – im

    1. saththuruvaana saaththaan ennai

    niththam nerungi aeykkaiyilae

    saaththaanai jeyam pettidavae

    saththiya aavi vallamaiyai

    ennil oottum – im

    1. jepaththin aavi en akaththil oottum

    jepaththinaal ulakai naan jeyikka

    unnathaa ulakai neer jeyiththeer

    um naamaththinaalae naan jeyippaen

    allaelooyaa – im