Category: Tamil Worship Songs Lyrics

  • Amma Amuthinum Iniyavalae அம்மா அமுதினும் இனியவளே

    அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே

    அகமே மகிழ்வாய் மரியே –2

    தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே –2

    அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

    அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்

    அவனியிலே அருள்பொழிவாய்

    அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

    அருள்நிறை மாமரியே அமல உற்பவியே –2

    கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே


    Amma Amuthinum Iniyavalae Lyrics in English

    ammaa amuthinum iniyavalae amaliyaay uthiththavalae

    akamae makilvaay mariyae –2

    thaevanaam aanndavaraip poovinil eentavalae –2

    arulinilae urainthavalae atiyavar naavil nirainthavalae

    amaliyaay avathariththaay alakaiyin thalaimithiththaay

    avaniyilae arulpolivaay

    atiyavar thaayaay amainthiduvaay

    arulnirai maamariyae amala urpaviyae –2

    karaipadaa kannikaiyae kaaththiduvaayae emmaiyae

  • Amarinthirupaan அமர்ந்திருப்பேன்

    Amarinthirupaan
    அமர்ந்திருப்பேன் அருகினிலே
    சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
    இயேசையா என் நேசரே
    அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
    நேசிக்கிறேன் உம்மைத்தானே
    நினைவெல்லாம் நீர்தானய்யா
    துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
    உயிருள்ள நாளெல்லாம் – 2


    Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் Lyrics in English

    Amarinthirupaan
    amarnthiruppaen arukinilae
    saaynthiruppaen um tholinilae
    iyaesaiyaa en naesarae
    anpu koorntheer jeevan thantheer
    naesikkiraen ummaiththaanae
    ninaivellaam neerthaanayyaa
    thuthipaati makilnthiruppaen
    uyirulla naalellaam – 2

  • Amala Thayabara Arulkoor Iyya அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா

    பல்லவி

    அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா,

    சரணங்கள்

    1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
      அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த
    2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,
      சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி
    3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
      வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத
    4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
      தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப
    5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
      கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா
    6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
      சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான
    7. கருணாகரா, உப காரா, நிராகரா,
      பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா

    Amala Thayabara Arulkoor Iyya Lyrics in English

    pallavi

    amalaa, thayaaparaa, arulkoor, aiyaa, – kuruparaa,

    saranangal

    1. samayam eeraaror aatru saasthirangal vaetha naankum
      amaiyum thaththuvam thonnnnoor raarum, aarungadantha
    2. antham ati nadu illaatha tharparan aathi,
      suntharam mikum atheetha sothippirakaasa neethi
    3. njaanath raviya vaetha nanmaip parama potha,
      vaanath thaevap rasaatha makimaik kalavillaatha
    4. kaanappadaa aroopa, karunnaich suya soroopa,
      thonappadaa viyaapa, sukirthath thiruth thayaapa
    5. sathya vasana naeyaa, samastha punnya sakaaya,
      karththaththuva upaayaa, karunnai poliyum vaayaa
    6. ellai illaa meynj njaana aeka para vasthaana
      sol arithaam nithaana, thullipath thontam maelaana
    7. karunnaakaraa, upa kaaraa, niraakaraa,
      paramaesuraa, kiru paakaraa, sarvaesuraa
  • Amaithiyin Thaivamae Iraiva அமைதியின் தெய்வமே இறைவா

    அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே

    அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி

    அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி (2)

    நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி

    தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி (2)

    அன்பு மொழியை விதைத்திடுவோர்

    அருளின் பயிரை அறுத்திடுவார் (2) –அமைதி

    உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி

    உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி

    ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்

    வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் (2) –அமைதி


    Amaithiyin Thaivamae Iraiva Lyrics in English

    amaithiyin theyvamae iraivaa en ithayath thalaivanae

    arulvaay arulvaay yaan aengith thaedukinta amaithi

    amaithi amaithi engum entum amaithi (2)

    neethip paathaiyil nadappavar suvaippathu amaithi amaithi

    thiyaakach sikaraththil nilaippavar peruvathu amaithi amaithi (2)

    anpu moliyai vithaiththiduvor

    arulin payirai aruththiduvaar (2) –amaithi

    uravaith thaetiyae urimaikal kaaththaal amaithi amaithi

    uyirai mathiththaal unnmaiyil nilaiththaal amaithi amaithi

    ongum vanmurai oliththiduvom

    veengum aayutham kalainthiduvom (2) –amaithi

  • Amaithiyan Naliravu Silent Night அமைதியான நள்ளிரவு

    1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
      இதில் தான் மா பிதா
      ஏக மைந்தனை லோகத்துக்கு
      மீட்பராக அனுப்பினது
      அன்பின் அதிசயமாம்
      அன்பின் அதிசயமாம்
    2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
      யாவையும் ஆளும் மா
      தெய்வ மைந்தனார் பாவிகளை
      மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
      எத்தனை தாழ்த்துகிறார்
      எத்தனை தாழ்த்துகிறார்
    3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
      ஜென்மித்தார் மேசியா
      தெய்வ தூதரின் சேனைகளை
      நாமும் சேர்ந்து பராபரனை
      பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
      பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்

    Amaithiyan Naliravu Silent Night Lyrics in English

    1. amaithiyaana nalliravu (oppillaa thiru iraa)
      ithil thaan maa pithaa
      aeka mainthanai lokaththukku
      meetparaaka anuppinathu
      anpin athisayamaam
      anpin athisayamaam
    2. amaithiyaana nalliravu (oppillaa thiru iraa)
      yaavaiyum aalum maa
      theyva mainthanaar paavikalai
      meettu vinnnukkuyarththa thammai
      eththanai thaalththukiraar
      eththanai thaalththukiraar
    3. amaithiyaana nalliravu (oppillaa thiru iraa)
      jenmiththaar maesiyaa
      theyva thootharin senaikalai
      naamum sernthu paraaparanai
      poorippaay sthoththarippom
      poorippaay sthoththarippom
  • Amaithi Thaedi Alaiyum Nenjamae அமைதி தேடி அலையும் நெஞ்சமே

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே

    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே – 2

    நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2

    அவரின்றி வேறில்லையே

    போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்

    என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே – 2

    காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து

    அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே – 2

    இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்

    நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே – 2

    பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்

    என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே – 2


    Amaithi Thaedi Alaiyum Nenjamae Lyrics in English

    amaithi thaeti alaiyum nenjamae

    anaiththum ingu avaril thanjamae – 2

    nilaiyaana sontham neengaatha pantham – 2

    avarinti vaerillaiyae

    pottuvaen en thaevanaip paraisaattuvaen

    en naathanai ennaalumae en vaalvilae – 2

    kaadu maedu pallam entu kaalkal sornthu

    alaintha aadu naaduthae athu thaeduthae – 2

    iraivanae en ithayamae intha iyarkaiyin

    nal iyakkamae en thaevanae en thalaivanae – 2

    paranthu virintha ulakam pataiththu sirantha pataippaay

    ennaik kannda thaevanae en jeevanae – 2

  • Amaithi Anbin Swamiye அமைதி அன்பின் ஸ்வாமியே

    அமைதி அன்பின் ஸ்வாமியே

    1. அமைதி அன்பின் ஸ்வாமியே,

    இப்பாரில் யுத்தம் மூண்டதே;

    விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,

    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    1. எம் முன்னோர் காலம் தேவரீர்

    செய்த மா கிரியை நினைப்பீர்;

    எம் பாவம் நினையாதேயும்

    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    1. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;

    கடைப்பிடிப்போம் உம் வாக்கை;

    வீண் ஆகாதே யார் வேண்டலும்;

    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    1. விண் தூதர் தூயோர் அன்பினில்

    இசைந்தே வாழும் மோட்சத்தில்

    உம் அடியாரைச் சேர்த்திடும்;

    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.


    Amaithi Anbin Swamiye Lyrics in English

    amaithi anpin svaamiyae

    1. amaithi anpin svaamiyae,
      ippaaril yuththam moonndathae;
      virotham moorkkam oyththidum,
      paar amarththum, por neekkidum.
    2. em munnor kaalam thaevareer
      seytha maa kiriyai ninaippeer;
      em paavam ninaiyaathaeyum
      paar amarththum, por neekkidum.
    3. neerthaam sakaayam nampikkai;
      kataippitippom um vaakkai;
      veenn aakaathae yaar vaenndalum;
      paar amarththum, por neekkidum.
    4. vinn thoothar thooyor anpinil
      isainthae vaalum motchaththil
      um atiyaaraich serththidum;
      paar amarththum, por neekkidum.
  • Alugai seiypavare abishegam ஆளுகை செய்பவரே அபிஷேகம்

    ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே
    ஆராதனை உமக்கே ஆராதனை

    ஆராதனை ஆராதனை

    அழகிலே சிறந்தவரே ஆராதனை
    அன்பின் பிறப்பிடமே ஆராதனை

    வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனை
    வாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை

    ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனை
    எல்லாம் தருபவரே ஆராதனை

    தாய்போல அணைப்பவரே
    தகப்பனாய் சுமப்பவரே ஆராதனை


    Alugai seiypavare abishegam Lyrics in English

    aalukai seypavarae apishaekam tharupavarae
    aaraathanai umakkae aaraathanai

    aaraathanai aaraathanai

    alakilae siranthavarae aaraathanai
    anpin pirappidamae aaraathanai

    vaalkkaiyin aathaaramae aaraathanai
    vaalvellaam kaappavarae aaraathanai

    aekkangal theerppavarae aaraathanai
    ellaam tharupavarae aaraathanai

    thaaypola annaippavarae
    thakappanaay sumappavarae aaraathanai

  • Alleluyah Alleluyah Paadum அல்லேலூயா அல்லேலூயா பாடும்

    அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க
    கரம் தட்டி கரம் உயர்த்தி பாடிடுவோங்க

    அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா

    தாவீத போல கோலியாத்த முறியடிச்சு
    பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்

    எதிரியான சாத்தானை துதியால முறியடிச்சு
    பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்

    சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவ போல
    நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம்

    ஆபிரகாம போல விசுவசாத்தோட
    பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்


    Alleluyah Alleluyah Paadum Lyrics in English

    allaelooyaa allaelooyaa paadum koottanga
    karam thatti karam uyarththi paadiduvonga

    allaelooyaa o o allaelooyaa

    thaaveetha pola koliyaaththa muriyatichchu
    paadiduvom allaelooyaa paadiduvom

    ethiriyaana saaththaanai thuthiyaala muriyatichchu
    paadiduvom allaelooyaa paadiduvom

    saathraak maeshaak aapaeth naekova pola
    neruppula nadanthaalum paadiduvom

    aapirakaama pola visuvasaaththoda
    paadiduvom allaelooyaa paadiduvom

  • Alleluyaa Ippothu Poor Mudithathe அல்லேலூயா! இப்போது போர்

    1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
      இப்போது போர் முடிந்ததே;
      சிறந்த வெற்றி ஆயிற்றே;
      கெம்பீர ஸ்துதி செய்வோமே.
      அல்லேலூயா!
    2. கொடூர சாவை மேற்கொண்டார்;
      பாதாள சேனையை வென்றார்;
      நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
      அல்லேலூயா!
    3. இந்நாள் எழுந்த வேந்தரே,
      என்றைக்கும் அரசாள்வீரே;
      களித்து ஆர்ப்பரிப்போமே!
      அல்லேலூயா!
    4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
      மரித்துயிர்த்திருக்கிறீர்;
      சாகாத ஜீவன் அருள்வீர்.
      அல்லேலூயா!

    Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics in English

    allaelooyaa! ippothu por

    1. allaelooyaa! allaelooyaa!allaelooyaa!
      ippothu por mutinthathae;
      sirantha vetti aayitte;
      kempeera sthuthi seyvomae.
      allaelooyaa!
    2. kotoora saavai maerkonndaar;
      paathaala senaiyai ventar;
      nam sthoththirap paattaைp peruvaar.
      allaelooyaa!
    3. innaal eluntha vaentharae,
      entaikkum arasaalveerae;
      kaliththu aarpparippomae!
      allaelooyaa!
    4. ellaarum ummaip potta neer
      mariththuyirththirukkireer;
      saakaatha jeevan arulveer.
      allaelooyaa!