Category: Tamil Worship Songs Lyrics

  • நீர் தான் என்னை ஆளும் Neer Than Ennai Allum

    நீர் தான் என்னை ஆளும் தகப்பன்
    என்னோடு என்றும் வாழும் தகப்பன் – 2
    எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர்
    என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் – 2

    சிறந்தவர் உயர்ந்தவர்
    அவர் என்றென்றும் அன்பானவர்

    அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே
    அளவில்லா அன்பு கூர்ந்தார்
    உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரே
    குறையில்லா கிருபை தந்தார்
    கையோடு கை சேர்த்து நடப்பவர்
    என்னை மார்போடு அணைத்திட்டாரே – 2

    பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்
    வெளிச்சமாய் எனை மாற்றினார்
    செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்
    குறைவெல்லாம் நிறைவாக்கினார்
    உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்
    அவர் என்னுள்ளே வாசமானார் – 2


    Neer Than Ennai Allum Thagappan
    Ennoodu Entrum Vaazhum Thagappan – 2
    Ennakkullae Vaazhum Christhthu Avar
    Ennai Uyarththida Uthavum Aavi Avar – 2

    Siranthavar Uyarnthavar
    Avar Entrentrum Anbaanavar

    Anaiththittaarae Aravanaiththittaarae
    Alavilla Anbu Koornthaar
    Uyarththittarar Karam Pidiththittaarae
    Kuraiyilla Kirubai Thanthaar
    Kaiyoodu Kai Serththu Nadappavar
    Ennai Maarboedu Anaiththittaarae – 2

    Paarththirunthaen Mugham Paarththirunthaen
    Velichchamaai Enai Maatrinaar
    Sevikoduththaar Anbaal Sevi Koduththaar
    Kuraivellaam Niraivaakkinaar
    Ulagaththai Jeyiththidum Belan Thanthaar
    Avar Ennullae Vaasamaanaar – 2


  • கிறிஸ்து என் ஜீவன் Kiristhu En Jeevan

    கிறிஸ்து என் ஜீவன்
    கவலைன்னு ஒரு நாளும் சொன்னதில்லை
    அவரே என் வாழ்வு
    குறைவுன்னு ஒரு நாளும் சொன்னதில்லை – 2
    முதலில் ராஜ்ஜியம் தேடும் போது
    எல்லாம் கூடவே கொடுக்கப்படும்
    சிறுக அல்ல கொஞ்சம் அல்ல
    எல்லாம் நிறைவாய் கொடுக்கப்படும்
    ஆமா

    பயமுமில்லை இனி கவலை இல்ல
    கிருபையினால் எல்லாம் வந்திடுமே – 2

    தெரிந்து கொண்டார் அவர் கிருபையினால்
    செய்து விட்டார் எல்லாம் ரத்தத்தினால் – 2
    எதிர் காலம் குறித்து கவலை இல்ல
    நான் ராஜாவின் கோட்டைக்குள்ளேயே
    எங்கேயும் தேடி தேடி நான் அலைவதில்லை
    நான் ராஜாவின் பக்கத்துல

    பயமுமில்லை இனி கவலை இல்ல
    கிருபையினால் வந்திடுமே – 2

    உயர்த்தினாரே அவர் கிருபையினால்
    கழுவினாரே அவர் ரத்தத்தினால் – 2
    எல்லாமென் எனக்குள்ளேயே வச்சுட்டாரே
    என் மனசுல தச்சுட்டாரே
    எதிரியை குறித்து எண்ணம் எண்ணம் இல்ல
    அவன் ராஜாவின் காலின் கீலே

    பயமுமில்லை இனி கவலை இல்ல
    கிருபையினால் வந்திடுமே
    பயமுமில்லை இனி கவலை இல்ல
    கிருபையினால் எல்லாம் வந்திடுமே

    Christ En Lifeu
    Sarrownu ஒரு நாளும் சொன்னதில்லை
    Jesus Christ Is My King
    Emptynu ஒரு நாளும் சொன்னதில்லை


    Kiristhu En Jeevan
    Kavalanu Oru Naalum Sonathilla
    Avare En Vaazhvu
    Kuraivunu Oru Naalum Sonnathilla – 2
    Muthalil Rajjiyam Thedum Pothu
    Ellaam Koodavae Kodukkappadum
    Siruka Alla Konjam Alla
    Ellaam Niraivaai Kodukkappadum
    Aama

    Bayamumilla Ini Kavala Illa
    Kirubainaal Ellaam Vanthidumae – 2

    Therinthu Kondaar Avar Kirubainaal
    Seithu Vittaar Ellaam Rathathinaal – 2
    Ethir Kaalam Kurithu Kavala Illa
    Naan Raajavin Kottaikullae
    Enkeyum Thedi Thedi Naan Alaivathilla
    Naan Raajavin Pakkathula

    Bayamumilla Ini Kavala Illa
    Kirubainaal Vanthidumae – 2

    Uyarthinaarae Avar Kirubainaal
    Kaluvinaarae Avar Rathathinaal – 2
    Ellaamen Enakkullae Vatchuttarae
    En Manasula Thatchutaarae
    Ethiriyai Kurithu Ennam Ennam Illa
    Avan Raajavin Kaalin Keelae

    Bayamumilla Ini Kavala Illa
    Kirubainaal Vanthidumae
    Bayamumilla Ini Kavala Illa
    Kirubainaal Ellaam Vanthidumae

    Christ En Lifeu
    Sarrownu Oru Naalum Sonnathilla
    Jesus Christ Is My King
    Emptynu Oru Naalum Sonnathilla


  • கழுகுக்கு ஒப்பான Kazhugukku Oppaana

    கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
    என்னை மீண்டும் உயர்த்திடுவார்
    பெரிதானாலும் சிறிதானாலும்
    எந்தன் காரியம் நிறைவேற்றுவார் – 2

    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
    என்றும் உயரே பறந்திடுவேன் – 2

    என்னை காண்பவர் என்னோடுண்டு
    என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன்

    கன்மலையாம் கிறிஸ்தேசுவே
    எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன் – 2
    சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
    அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன் – 2

    என்னை காண்பவர் என்னோடுண்டு
    என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன்

    வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே
    எதிரியின் தலை மேலே நடப்பேனே – 2
    அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
    அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார் – 2

    என்னை காண்பவர் என்னோடுண்டு
    என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன்

    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் – 4


    Kazhugukku Oppaana Belathodu
    Ennai Meendum Uyarththiduvaar
    Perithaanalum Sirithaanaalum
    Enthan Kaariyam Niraivetruvaar – 2

    Paranthiduven Naan Paranthiduvaen
    Endrum Uyare Paranthiduvaen – 2

    Ennai Kanbavar Ennodundu
    Ennai Kappavar Ennodundu – 2-Paranthiduvaen

    Kanmalayaam Kiristhesu
    Enakkullae Iruppathaal Kalangidaen – 2
    Sarpankalai Kalaal Mithithiduvaen
    Athai Uyarae Kondu Sendru Sitharadippaen – 2

    Ennai Kanbavar Ennodundu
    Ennai Kappavar Ennodundu – 2-Paranthiduvaen

    Vallamayin Raajjiyam Enakkullae
    Ethiriyin Thalai Melae Nadappene – 2
    Arputhankal En Vaazhvil Seithi divakar
    Anuthinam Avar Kirubayaal Thaangiduvaar – 2

    Ennai Kanbavar Ennodundu
    Ennai Kappavar Ennodundu – 2-Paranthiduvaen

    Singa Kebiyo Soolai Neruppo
    Avar Ennai Kaaththiduvaar – 4


  • எனக்குள்ளே இருப்பவர் Enakkullae Iruppavar

    எனக்குள்ளே இருப்பவர்
    எல்லோரிலும் பெரியவர்
    எனக்குள்ளேயே இருப்பவர்
    சர்வ வல்லவர் – 2

    நான் நம்பும் கேடகம் நீரே
    நான் பார்க்கும் கன்மலை நீரே – 2
    ஆர்பரிப்போம் நம் ததேவனை
    ஆர்பரிப்போம் நம் ராஜனை
    ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
    ராஜாதி ராஜன் நீரே – 2

    எனக்குள்ளே இருப்பவர்
    வாக்குத்தத்தம் பண்ணினவர்
    எனக்குள்ளேயே இருப்பவர்
    செய்ய வல்லவர் – 2


    Enakkullae Iruppavar
    Ellorilum Periyavar
    Enakkullae Iruppavar
    Serva Vallavar – 2

    Naan Nambum Kedagam Neerae
    Naan Paarkkum Kanmalai Neerae – 2
    Aarparippom Nam Dhaevanai
    Aarparippom Nam Raajanai
    Aarparippom Karththaathi Karthar
    Raajaathi Raajan Neerae – 2

    Enakkullae Iruppavar
    Vaakkuthaththam Panninavar
    Enakkullae Iruppavar
    Seiya Vallavar – 2


  • மெளனமாய் இருக்காதே Maunamaay Irukkaathae

    மெளனமாய் இருக்காதே
    மெளனமாய் இருக்காதே

    இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
    மெளனமாய் இருக்காதே – 2

    அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
    அறுவடை இழப்பாயே
    ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
    இரட்சிப்புத்தான் வருமோ? – 2

    பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
    எது உன்னை இழுக்கிறது
    கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
    வெறுங்கையாய் நிற்பாயோ – 2

    இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
    இது தான் இது தானே
    இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
    இரட்சிப்புதான் வருமோ – 2


    Maunamaay Irukkaathae
    Nee Maunamaay Irukkaathae

    Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram
    Maunamaay Irukkaathae – 2

    Aruvatai Kaalaththil Maunamaayirunthaal
    Aruvatai Ilappaayae
    Aanndavar Kaalaththil Maunamaayirunthaal
    Iratchippuththaan Varumo? – 2

    Pakattu Vaalvo Paramanin Anpo
    Ethu Unnai Ilukkirathu
    Kanakku Kaetkum Karththar Varuvaar
    Verungaiyaay Nirpaayo – 2

    Inthiyaa Yesuvai Arinthidum Kaalam
    Ithu Thaan Ithu Thaanae
    Intha Kaalaththil Maunamaay Irunthaal
    Iratchipputhaan Varumo – 2


  • கலங்கிடாதே நீ திகைத்திடாதே Kalangidaathae Nee Thigaiththidaathae

    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே – 2
    கலங்கிடாதே

    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
    மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
    மலைகள் விலகி அகன்று போனாலும்
    மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே

    அலைகள் மோதி படகு அசைந்தால்
    அமைதி தரவே வந்திடுவான்
    அமைதி தரவே வந்திடுவான்

    கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
    கண்ணீர் உந்தன் உணவானாலும்
    கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
    கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே

    உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டான்
    உனக்காகவே மனம் உருகியே நின்றான்
    உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்
    உனக்காக யாவையும் செய்து முடிப்பான்


    Kalangidaathae Nee
    Thigaiththidaathae Naan
    Kaakkum Dhaevan Yendraarae – 2
    Kalangidaathae

    Manithargal Anbu Maraindhu Ponaalum
    Maanilaththor Unnai Marandhu Ponaalum
    Malaigal Vilagi Agandru Ponaalum
    Maaridaadhor Undhan Aadhaaram Naanae

    Alaigal Modhi Padagu Asaindhaal
    Amaidhi Tharavae Vandhiduvaen
    Amaidhi Tharavae Vandhiduvaen

    Kavalaiyaal Ullam Kalangi Ponaalum
    Kanneer Undhan Unavaanaalum
    Kashtangal Unnai Soozhndhu Kondaalum
    Karam Pidiththae Unnai Nadaththiduvaenae

    Undhanin Kanneer Thuruththiyai Kandaen
    Unakkagavae Manam Urugiyae Nindraen
    Undhanai Yendhan Karamadhil Varaindhaen
    Unakkaaga Yaavaiyum Seidhu Mudipaen


  • உம் அன்பின் வல்லமை Um Anbin Vallamai

    உம் அன்பின் வல்லமை
    என் இதயத்தில் பெருகுதே
    சுவிசேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்
    உம் சிலுவையின் வல்லமை
    என் இதயத்தில் எரியுதே
    உம் கிருபையால் நான்
    இன்றும் ஓடுகிறேன்

    சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை – 2
    அவருக்காய் என்றும் வாழுவேன்
    அவர் நாமம் என்றும் சொல்லுவேன்
    வெட்கப்படேன் நான் – ஹே ஹே
    வெட்கப்படேன் நான் – ஹே ஹே

    உலகத்துக்கு சொல்லுவேன்
    என் சத்தத்தை உயர்த்தியே
    இயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே
    நீ பயப்பட ஒன்றும் இல்லை
    ஆவர் வல்லமையால் முன் செல்வேன்
    இயேசு நம்மை நடத்திடுவார் – சுவிசேஷம்


    Um Anbin Vallamai
    En Edhayathil Peruguthe
    Suvisheshathirkai Naan Vetkapaden
    Um Siluvayin Vallamai
    En Idhayathil Eriyuthe
    Um Kirubaiyal Naan
    Endum Oodugiren

    Suvishesham Kurithu Vetkapaduvathillai – 2
    Aavarukai Endrum Vaalven
    Aavar Naamam Endrum Soluven
    Vetkapaden Naan – Hai Hai
    Vetkapaden Naan – Hai Hai

    Ullagathuku Solluven
    En Sathathai Uyarthiye
    Yesuvin Anbu Ennai Nerukiduthe
    Nee Bayapada Ondrum Illai
    Aavar Valamaiyal Munn Seluven
    Yesu Nammai Nadathiduvaar – Suvishesham


  • வழிதவறி போன நண்பா Vazhi Thavari Pona Nanba

    வழிதவறி போன நண்பா கலங்காதே
    வழி மாறி போன மனமே திகையாதே – 2

    மறவாதே ஓ நண்பனே
    உனக்காய் இயேசு காத்திருக்கிறார்
    மனம் திரும்பு நீ நண்பனே
    உன் நினைவாய் அவர் இருக்கிறார் – 2

    உலகம் உன்னை அழைத்ததோ
    நீ நினைத்த யாவும் தோல்வியோ
    நீ நம்பிய அனைவரும் மறந்தனரோ
    இனி சாவே மேல் என் நினைத்தாயோ – 2

    உறவுகள் உன்னை மறந்ததோ
    நீ செய்த நன்மைகள் புதைந்ததோ
    உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ
    இனி தஞ்சம் யார் என்ன தவித்தாயோ – 2

    உன்னை என்றும் நேசிக்கும்
    தகப்பன் ஒருவர் இருக்கிறார்
    உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து
    நீ இருப்பதுபோல் உன்னை நேசிக்கிறார் – 2

    ஒரு முறை இயேசுவை கூப்பிடு
    உன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
    ஒரு முறை நீ கூப்பிடு
    உன் கவலைகள் யாவையும் நீக்குவார்
    ஒரு முறை இயேசுவை கூப்பிடு
    உன் கரம்பிடித்து அவர் தூக்குவார்
    ஒரு முறை நீ கூப்பிடு
    புது மனிதனாய் அவர் மாற்றுவார்


    Vazhi Thavari Pona Nanba Kalangadhae
    Vazhi Maari Pona Manamae Thigaiyadhae – 2

    Maravadhae O Nanbanae
    Unakkaai Yesu Kaathirukkiraar
    Manam Thirumbu Nee Nanbanae
    Un Ninaivaai Avar Irukkiraar – 2

    Ulagam Unnai Azhaithatho
    Nee Ninaitha Yaavum Thozhviyo
    Nee Nambina Anaivarum Marandhanaro
    Ini Saavae Maelena Ninaithayo – 2

    Uravugal Unnai Marandhadho
    Nee Seidha Nanmaigal Pudhaindhatho
    Un Thaayum Thandhayum Veruthanaro
    Ini Thanjam Yaarena Thavithayo – 2

    Unnai Endrum Nesikka
    Thagappan Oruvar Irukkiraar
    Un Paavangal Anaithayum Manniththu
    Nee Iruppadhupol Unnai Nesikkiraar – 2

    Oru Murai Yesuvai Kooppidu
    Un Kanneer Yaavaiyum Thudaithiduvaar
    Orumurai Nee Koopidu
    Un Kavalaigal Yaavaiyum Neekkuvaar
    Oru Murai Yesuvai Kooppidu
    Un Karampidithu Avar Thookkuvaar
    Oru Murai Nee Kooppidu
    Pudhu Manidhanai Avar Maattruvaar


  • என் பெலனே என் En Belaney En

    என் பெலனே என் துருகமே
    உம்மை ஆராதிப்பேன்
    என் அரணும் என் கோட்டையுமே
    உம்மை ஆராதிப்பேன் – 2

    ஆராதிப்பேன் என் இயேசுவையே
    நேசிப்பேன் என் நேசரையே – 2

    என் நினைவும் ஏக்கமும்
    என் வாஞ்சையும் நீரே
    என் துணையும் தஞ்சமும்
    என் புகலிடம் நீரே – 2 – ஆராதிப்பேன்

    என் தாயும் என் தகப்பனும்
    என் ஜீவனும் நீரே
    என்னை தாங்கும் சொந்தமும்
    என் நண்பரும் நீரே – 2 – ஆராதிப்பேன்


    En Belaney En Thurugame
    Ummai Aarathipen
    En Aranum En Kottayume
    Ummai Aarathipen – 2

    Aarathipen En Yesuvaiye
    Nesipen En Nesaraiye – 2

    En Neenaivum Yekamum
    En Vanjayum Neere
    En Thunaiyum Thanjamum
    En Pugalidam Neere- 2 – Aarathipen

    En Thayum En Thagapanum
    En Jeevanum Neere
    Ennai Thangum Sonthamum
    En Nanbarum Neere – 2 – Aarathipen


  • சேற்றில் இருந்தேன் பாவ Saettril irundhen Paava

    சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
    என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
    நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
    என்னையும் அவர் தூக்கி எடுத்தார்

    அவர் என்றும் வாழ்க – 3
    அவர் என்றென்றும் வாழ்க

    இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
    நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே
    நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
    பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே – அவர்

    இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
    நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே
    தரித்திர பாதையில் நான் இருந்தேன்
    என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே – அவர்

    மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன்
    என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே
    எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
    எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே – அவர்


    Saettril irundhen Paava Kattil Irundhaen
    Ennaiyum Avar Thookki Yeduthar
    Naan Saettril irundhen Paava Kattil Irundhaen
    Ennaiyum Avar Thookki Yeduthar

    Avar Endrum Vazhga – 3
    Avar Endrendrum Vaazhga

    Ini Vaazha Mudiyumo Endru Ninaithaen
    Nee Vaazha Pirandhavan Endru Sonnarae
    Naan Vazhi Theriyamal Thavithirundhaen
    Pirar Vazhikaattida Ennai Azhaithittarae – Avar

    Irulai Kandu Naan Bayandhirundhaen
    Nadupagalin Sooriyanaai Maattrinarae
    Dharithira Paadhayil Naan irundhaen
    Ennai Sarithiram Padaikka Azhaithittarae – Avar

    Maranathin Paadhayil Nadandhirundhaen
    Ennai Jeevapadhayil Nadathi Sendrarae
    Edhir Kaalam Kuriththu Naan Bayandhirundhaen
    Edhir Paara Vaazhkkayai Enakku Thandharae – Avar