Category: Tamil Worship Songs Lyrics

  • Adhi Seekirathil Neegividum Intha அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த

    அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
    இந்த லேசான உபத்திரவம்

    சோர்ந்து போகாதே – நீ

    1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
      புதிதாக்க படுகின்ற நேரமிது — சோர்ந்து
    2. ஈடு இணையில்லா மகிமை
      இதனால் நமக்கு வந்திடுமே — சோர்ந்து
    3. காண்கின்ற உலகம் தேடவில்லை
      காணாதப் பரலோகம் நாடுகிறோம் — சோர்ந்து
    4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
      பாக்கியம் நமக்கு பாக்கியமே — சோர்ந்து
    5. மன்னவன் இயேசு வருகையிலே
      மகிழ்ந்து நாமும் களிகூருவோம் — சோர்ந்து
    6. மகிமையின் தேவ ஆவிதாமே
      மண்ணான நமக்குள் வாழ்கின்றார் — சோர்ந்து

    Adhi Seekirathil Neegividum Intha Lyrics in English

    athi seekkiraththil neengividum
    intha laesaana upaththiravam

    sornthu pokaathae – nee

    1. ullaarntha manithan naalukku naal
      puthithaakka padukinta naeramithu — sornthu
    2. eedu innaiyillaa makimai
      ithanaal namakku vanthidumae — sornthu
    3. kaannkinta ulakam thaedavillai
      kaannaathap paralokam naadukirom — sornthu
    4. kiristhuvin poruttu nerukkappattal
      paakkiyam namakku paakkiyamae — sornthu
    5. mannavan Yesu varukaiyilae
      makilnthu naamum kalikooruvom — sornthu
    6. makimaiyin thaeva aavithaamae
      mannnnaana namakkul vaalkintar — sornthu
  • Adhi Mangala Kaaranane Thuthi அதி-மங்கல காரணனே, துதி

    அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
    வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
    வண்மையே தாரணனே!

    சரணங்கள்

    1. மதி-மங்கின எங்களுக்கும்,
      திதி-சிங்கினர் தங்களுக்கும்
      உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
      தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல
    2. முடி-மன்னர்கள் மேடையும்,
      மிகு-உன்னத வீடதையும் நீங்கி
      மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
      வந்தனையோ தரையில்? — அதி-மங்கல
    3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
      உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
      பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
      பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

    Adhi Mangala Kaaranane Thuthi Lyrics in English

    athi-mangala kaarananae, thuthi-thangiya poorananae, narar
    vaala vinn thuranthor aelaiyaayp pirantha
    vannmaiyae thaarananae!

    saranangal

    1. mathi-mangina engalukkum,
      thithi-singinar thangalukkum
      unin maatchiyum thivviya kaatchiyum
      thontidavaiyaay thungavanae — athi-mangala
    2. muti-mannarkal maetaiyum,
      miku-unnatha veedathaiyum neengi
      maattitaiyae piran thaattitaiyar thola,
      vanthanaiyo tharaiyil? — athi-mangala
    3. theeya-paeyththiral odutharkum,
      umpar-vaaythiral paadutharkum, unaip
      pinpattuvor muttum thunpattu vaalvatharkum
      petta narkolam itho? — athi-mangala
  • Adharisanamana Devanae அதரிசனமான தேவனே

    அதரிசனமான தேவனே
    இணையே இல்லாத மகிமையே
    இருந்தவர் இருப்பவர் வருபவர்
    நீர் ஒருவரே

    ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
    ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே

    எந்தன் வாழ்வின் நீதியே
    இருளினை மேற்கொண்ட வெளிச்சமே
    ஆதியும் அந்தமும் சர்வமும்
    நீர் ஒருவரே


    Adharisanamana Devanae Lyrics in English

    atharisanamaana thaevanae
    innaiyae illaatha makimaiyae
    irunthavar iruppavar varupavar
    neer oruvarae

    ael haakkaathosh parisuththamaanavarae
    ael haakkaathosh makaththuvamanavarae

    enthan vaalvin neethiyae
    irulinai maerkonnda velichchamae
    aathiyum anthamum sarvamum
    neer oruvarae

  • Adarntha Marangalin Idaiyil அடர்ந்த மரங்களின் இடையில்

    அடர்ந்த மரங்களின் இடையில்
    ஒருகிச்சிலி இருக்கும் வண்ணம்
    பரிசுத்தரின் நடுவில் காணுவேன்
    அதி ஸ்ரேஷ்டமாய் இயேசுவையே!

    வாழ்த்துவேன் எந்தன் பிரியனே
    ஜீவ காலமெல்லாம்
    இம்மறு யாத்திரையில் …
    நன்றியோடே நாம் பாடிடுவோம் (2)

    1. பனி நீர் புஷ்பம் சாரோனின்
      ரோஜா பள்ளத் தாக்கினில் லீலி
      அவரே பரிசுத்தரில் பரிசுத்தரே
      பரிபூர்ண நல் சௌந்தரியரே!
    2. ஊற்றுண்ட தைலம்போல் நின்
      நாமம் பாரில் நறுமணம் வீசுவதால்
      பழி தூஷணம்
      நெருக்கங்களில் எந்தன்
      சுகந்தமாய் மாறிட்டாரே!
    3. மனகிலேச தருணம் வருங்கால்
      துக்க சாகரத்தில் மூழ்கும்
      வேளை திருக்கரம் நீட்டி
      எடுத்தவரே பயப்படாதே
      என்றுரைத்தவரே!
    4. திரு இதயம் இன்றே அருள்வாய்
      தேவா நான் இப்போ வந்திடுவேன்
      நான் இருப்பது இருந்த வண்ணம்

    உந்தன் முன்பில் நான் வந்திடுவேன்!


    Adarntha Marangalin Idaiyil Lyrics in English

    adarntha marangalin itaiyil
    orukichchili irukkum vannnam
    parisuththarin naduvil kaanuvaen
    athi sraeshdamaay Yesuvaiyae!

    vaalththuvaen enthan piriyanae
    jeeva kaalamellaam
    immatru yaaththiraiyil …
    nantiyotae naam paadiduvom (2)

    1. pani neer pushpam saaronin
      rojaa pallath thaakkinil leeli
      avarae parisuththaril parisuththarae
      paripoorna nal saunthariyarae!
    2. oottunnda thailampol nin
      naamam paaril narumanam veesuvathaal
      pali thooshanam
      nerukkangalil enthan
      sukanthamaay maarittarae!
    3. manakilaesa tharunam varungaal
      thukka saakaraththil moolkum
      vaelai thirukkaram neetti
      eduththavarae payappadaathae
      enturaiththavarae!
    4. thiru ithayam inte arulvaay
      thaevaa naan ippo vanthiduvaen
      naan iruppathu iruntha vannnam
      unthan munpil naan vanthiduvaen!
  • Adaikkalam Adaikkalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    அடைக்கலம் அடைக்கலமே!

    அனுபல்லவி

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

    சரணங்கள்

    1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
      அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
      மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
      தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
    2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
      மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
      கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
      கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
    3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
      நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
      பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
      எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
    4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
      என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
      அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
      இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

    Adaikkalam Adaikkalame Yesu Naadha Lyrics in English

    ataikkalam ataikkalamae , Yesu naathaa, un
    ataikkalam ataikkalamae!

    anupallavi

    thidanattup pelanattun atiyuttalum aelaikku — ataikkalam

    saranangal

    1. aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
      anpulla pithaa unai vittakantu pirinthaenae;
      mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
      thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam
    2. kattuppadaak kaayamathin ketta ranam polavae
      mattuppadaap paavamathil mayangi uranginaen;
      kettavanae povenak kilaththinum niyaayamae,
      kittivanthalarum aelai kenjuthal kaelayyanae! — ataikkalam
    3. sinthiya uthiramathum ainthu thirukkaayamum
      nonthuru kenathumanach sanjalamakattidum;
      panthamikum paavi entan kenjidung karaththinai
      enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam
    4. ennidaththil varuvorai enthavithamum thallaen
      entu sonna vaakkathanil enakkum pangillaiyo
      antunathu pakkamathil aakiyiruntha kallanukku
      intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam
  • Adaikalame Umathadiai Naane அடைக்கலமே உமதடிமை நானே

    அடைக்கலமே உமதடிமை நானே
    ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
    கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
    நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

    அளவற்ற அன்பினால் அணைப்பவரே
    எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
    மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
    பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே – ஆ

    கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
    சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
    நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
    பக்தரின் பேரின்ப பாக்கியமதே – ஆ

    என்னை என்றும் போதித்து நடத்துபவரே
    கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
    நடக்கும் வழிதனை காட்டுபவரே
    நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே – ஆ

    கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
    கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
    குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
    அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே – ஆ


    Adaikalame Umathadiai Naane Lyrics in English

    ataikkalamae umathatimai naanae
    aarpparippaenae akamakilnthae
    karththar neer seytha nanmaikalaiyae
    niththam niththam naan ninaippaenae

    alavatta anpinaal annaippavarae
    ennnatta nanmaiyaal niraippavarae
    maasillaatha naesarae makimai pirathaapaa
    paasaththaal umpaatham pattiduvaenae – aa

    karththarae um seykaikal periyavaikalae
    suththarae um seyalkal makaththuvamaanathae
    niththiyarae um niyaayangal entum nirkumae
    paktharin paerinpa paakkiyamathae – aa

    ennai entum pothiththu nadaththupavarae
    kannnnai vaiththu aalosanai sollupavarae
    nadakkum valithanai kaattupavarae
    nampi vanthoraik kirupai soolnthu kolluthae – aa

    karam patti nadaththum karththar neerallo
    kooppitta ennaik kunamaakkineerallo
    kuliyil vilaathapati kaaththuk konnteerae
    alukaiyai kalippaaka maatti vittirae – aa

  • Adaikalam Adaikalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    அடைக்கலம் அடைக்கலமே!

    அனுபல்லவி

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

    சரணங்கள்

    1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
      அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
      மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
      தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
    2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
      மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
      கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
      கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
    3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
      நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
      பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
      எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
    4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
      என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
      அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
      இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

    Adaikalam Adaikalame Yesu Naadha Lyrics in English

    ataikkalam ataikkalamae , Yesu naathaa, un
    ataikkalam ataikkalamae!

    anupallavi

    thidanattup pelanattun atiyuttalum aelaikku — ataikkalam

    saranangal

    1. aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
      anpulla pithaa unai vittakantu pirinthaenae;
      mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
      thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam
    2. kattuppadaak kaayamathin ketta ranam polavae
      mattuppadaap paavamathil mayangi uranginaen;
      kettavanae povenak kilaththinum niyaayamae,
      kittivanthalarum aelai kenjuthal kaelayyanae! — ataikkalam
    3. sinthiya uthiramathum ainthu thirukkaayamum
      nonthuru kenathumanach sanjalamakattidum;
      panthamikum paavi entan kenjidung karaththinai
      enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam
    4. ennidaththil varuvorai enthavithamum thallaen
      entu sonna vaakkathanil enakkum pangillaiyo
      antunathu pakkamathil aakiyiruntha kallanukku
      intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam
  • Adaikala Paraiyana Yesuvae அடைக்கலப் பாறையான இயேசுவே

    அடைக்கலப் பாறையான இயேசுவே

    அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)

    நீரே எனது வலிமை நீரே எனது பெருமை

    நீரே எனது வாழ்வு இயேசையா (2)

    தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)

    பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)

    எந்தன் ஆதாரம் நீயல்லவோ –அடைக்கல

    போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)

    உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)

    என்னை மாண்புறச் செய்கின்றீரே –அடைக்கல


    Adaikala Paraiyana Yesuvae Lyrics in English

    ataikkalap paaraiyaana Yesuvae

    aranum kottaைyum aana Yesuvae (2)

    neerae enathu valimai neerae enathu perumai

    neerae enathu vaalvu iyaesaiyaa (2)

    thaayin vayittinilae paathukaappu neeyallo aanndavarae(2)

    pirappilum vaalvilum neerae enakku aathaaram neeyallavo (2)

    enthan aathaaram neeyallavo –ataikkala

    pokum valiyai visaalamaakki en ellaiyaip perithaakkineer (2)

    uyaramaana idaththilae ennai niruththi maannpurach seykinteerae (2)

    ennai maannpurach seykinteerae –ataikkala

  • Abrahamin daevan ஆபிரகாமின் தேவன்

    ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்

    தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
    தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ

    கர்த்தருக்கு பயந்து
    வழிகளில் நடக்கின்ற நீ
    பாக்கியவான் பாக்கியவான்
    உழைப்பின் பயனை நீ
    உண்பது நிச்சயமே நிச்சயமே

    நன்மையும் பாக்கியமும்
    உன் வாழ்வில் நீ காண்பாய்
    செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்

    இல்லத்தில் உன் மனைவி
    கனிதரும் திராட்சைச் செடி
    பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
    பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
    நிச்சயம் நிச்சயமே


    Abrahamin daevan Lyrics in English

    aapirakaamin thaevan eesaakkin thaevan
    yaakkopin thaevan unnai aasirvathippaar

    thakathimi thakajanu thakathimi thakajanu
    thakathimi thakajanu thakathimi thakajanu aa….aa

    karththarukku payanthu
    valikalil nadakkinta nee
    paakkiyavaan paakkiyavaan
    ulaippin payanai nee
    unnpathu nichchayamae nichchayamae

    nanmaiyum paakkiyamum
    un vaalvil nee kaannpaay
    selvamum aasthiyum thaeti varum thinamum
    jeevanulla naatkalellaam
    selippai nee kaannpaay nee kaannpaay

    illaththil un manaivi
    kanitharum thiraatchaைch seti
    pillaikal olivamarak kantukalpol valarvaarkal
    pillaikalin pillaikalai kaannpathu
    nichchayam nichchayamae

  • Abragamin Devane Esakkin Devane ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

    ஆபிரகாமின் தேவனே
    ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

    உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
    ஆனந்தம் அடைந்திடுவேன்

    தானியேலின் தேவன் நீரே
    சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
    தேவாதி தேவனே வாழ்க
    ராஜாதி ராஜாவே வாழ்க

    சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
    அவியாமல் அக்கினியிலே காத்தவரே
    பாதுகாக்கும் இயேசு நாமம்
    பரலோகம் சேர்த்திடும் நாமம்

    பவுலும் சீலாவும் சிறையிலே
    கட்டுகளை அறுத்துக் காத்தவரே
    பரிசுத்த ஆவியே வாழ்க
    திரியேக தேவனே வாழ்க


    Abragamin Devane Esakkin Devane Lyrics in English

    aapirakaamin thaevanae
    eesaakkin thaevanae, yaakkopin thaevareerae

    um naamaththodavae en peyarai innaiyumae
    aanantham atainthiduvaen

    thaaniyaelin thaevan neerae
    singaththin vaayaik kattineerae
    thaevaathi thaevanae vaalka
    raajaathi raajaavae vaalka

    saathraak, maeshaak, aapaethnekovai
    aviyaamal akkiniyilae kaaththavarae
    paathukaakkum Yesu naamam
    paralokam serththidum naamam

    pavulum seelaavum siraiyilae
    kattukalai aruththuk kaaththavarae
    parisuththa aaviyae vaalka
    thiriyaeka thaevanae vaalka