Category: Tamil Worship Songs Lyrics

  • பொன்னான நேரம் Ponnaana naeram

    பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
    இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
    பொன்னான நேரம்

    நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்
    குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
    உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா

    நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
    உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
    உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது

    உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
    மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
    மணவாளன் இயேசுவையே தினம் தேடுது

    உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
    உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
    கடினமான என் இதயம் கரைந்து போகுது


    Ponnaana naeram neer paesum naeram
    inpamaana naeram ummil uravaadum naeram
    ponnaana naeram

    neenga paesunga naan kaetkiraen – um
    kuralai kaetka otooti vanthaenayyaa
    um vaarththai enakku inpamae inpamthaanayyaa

    neenga paesap paesa aaruthal varuthu
    utaintha ullam santhoshaththaal aatippaaduthu
    um thalumpukalaal kaayamellaam aarippokuthu

    um vaarththaiyinaalae manam puthithaakuthu
    mangip pona vaalvu maruroopamaakuthu
    manavaalan Yesuvaiyae thinam thaeduthu

    unthan paathaththil en ullam makiluthu
    ularnthu pona elumpukal uruthiyaakuthu
    katinamaana en ithayam karainthu pokuth


  • காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே Kaatupuraavin saththam kaetkirathae

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2

    தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்

    கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்

    பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே


    Kaatupuraavin saththam kaetkirathae
    En Nesar ennai thedi varuvarendru
    Kaana kuyilin kaanam Isaikindrathae
    Mannavar Singaramaai varuvar endru

    Um varugaivarai naan kathirupaen
    En vili erandal endrum viliththirupaen – 2

    Thayinum melaai unthan anbu ullathae
    Thanthaiyaga neer ennil valginrerae
    Neer enthan naesarthanae
    Neer enthan nanbarthanae
    Endrendrum unthan anbai enavendru nan soluvaen

    Kanavellaam endrum ummaiyae kanginraen
    Ninaivellam endrum ummaiyae sutruthae
    Neerinri naanu millaiyae
    Neerthanae enthan ellai
    Endrendrum enthan naval ummaiyae paadiduvaen

    Poorana aazhagu ullavarum neerthanae
    Ummaku negarai yaarum inguillaiyae
    Neer enthan jeevan thanae
    Naan unthan saayal thanae
    Endrendrum enthan muuchu unthan paeyar solliduthae


  • அர்ப்பணித்தேன் Arpanithaen

    1.அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
    அற்புத நாதா உம் கரத்தில்
    அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
    அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

    அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
    அனைத்தும் அர்ப்பணமே
    என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
    அனைத்தும் கிறிஸ்துவுக்கே

    2.என் எண்ணம்போல நான் அலைந்தேனே
    என்னைத் தடுத்திட்டதாருமில்லை
    உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
    நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

    3.ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
    ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
    வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
    என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

    4.என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
    எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
    நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
    உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்


    1.arppaniththaen Ennai Murrilumaay
    Arputha Naathaa Um Karaththil
    Anaiththum Umakkae Sontham Enru
    Anparae Ennaiyae Thaththam Seythaen

    Anaiththum Kiristhuvukkae – Enthan
    Anaiththum Arppanamae
    En Muzhuththanmaikal Aavalkalum
    Anaiththum Kiristhuvukkae

    2.en Ennampoela Naan Alainthaenae
    Ennaith Thatuththittathaarumillai
    Um Siluvai Anpais Santhiththaenae
    Norunki Veezhnthaenae Um Paathaththil

    3.aimpulankal Yaavum Atankita
    Aimperun Kaayankal Aerra Naathaa
    Vaanpuvi Kirakankal Aalpavarae
    Ennaiyum Aantita Neerae Valloer

    4.en Vaazhvil Izhantha Nanmaikkeetaay
    Egnsiya Naatkalil Uzhaippaenae
    Neer Thantha Eevu Varankal Yaavum
    Um Pani Sirakka Murrum Thanthaen


  • Ennal Ondrum Koodathentru என்னால் ஒன்றும் கூடாதென்று

    என்னால் ஒன்றும் கூடாதென்று
    என்னை நான் தந்து விட்டேன்
    உம்மால் எல்லாம் கூடுமென்று
    உம்மை நான் நம்பியுள்ளேன்

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்லாம் செய்பவரே
    இல்லாதவைகளை இருக்கின்றதாய்
    வரவழைப்பவரே
    ஆபிரகாமுக்கு செய்தவர்
    எனக்கும் செய்ய வல்லவர்

    யெகோவா யீரே
    எல்லாம் பார்த்துகொள்வார்
    தேவையை நிறைவாக்குவார்
    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
    ஏற்றதாய் பெலன் தருவார்
    அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
    என்னையும் மாற்றிடுவார்

    எல்ரோயீ என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே
    கருமுதலாய் என்மேல் கண் வைத்து
    நன்மைகள் செய்பவரே
    ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
    என் கண்ணீர் மாற்றிடுவார்


    Ennal Ondrum English Lyrics
    Ennal Ondrum Koodathentru
    Ennai naan thanthu vittaen
    Ummaal ellaam koodumentru
    Ummai naan nambiyullaen

    Elshadaai sarva vallavarae
    Ellaam seibavarae
    Illaathavaigalai irukintrathaai
    Varavalaippavarae
    Abirahamuku seithavar
    Enakkum seiya vallavar

    Yehovah Yireh ellaam paarthu kolvaar
    Thaevaiyai niraivaakkuvaar
    Kaneerai thuruththiyil eduththu vaithu
    Yetrathaai balan tharuvaar
    Annaalai kalippaay maatrinavar
    Ennaiyum maatriduvaar

    Elroi ennai kaanbavarae
    En kanneer thudaippavarae
    Karu muthalaai en mael kan vaiththu
    Nanmaigal seibavarae
    Agaarain kanneerai maatrinavar
    En kanneer maatriduvaar

  • Yesuvin Anpil Muzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்

    இயேசுவின் அன்பில் மூழ்கவும்
    நேசத்தின் ஆழம் பார்க்கவும்
    இன்னமும் தீரா வாஞ்சையே
    என்னில் உண்டாகுகின்றதே

    ஆட்கொண்டவர் நேசம்
    ஈடேற்றின நேசம்
    இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
    உன்னத அன்பைப் போற்றுவேன்

    1. இயேசுவின் சொல்லும் சித்தமும்
      ஆசையுள்ளோனாய் செய்யவும்
      தேவ ஒத்தாசை நம்புவேன்
      ஆவியின் பேரில் சாருவேன்
    2. நாதரின் இன்ப சத்தமும்
      வேதத்தில் கேட்டு நித்தமும்
      ஆத்தும நன்மை நாடுவேன்
      நீதியின் பாதை செல்லுவேன்
    3. இயேசுவின் இராஜரீகமும்
      ஆசித்த மா செங்கோன்மையும்
      விண்ணிலே தோன்றும் வண்ணமாய்
      மண்ணிலுண்டாகும் மேன்மையாய்

    Yesuvin Anpil Muzhkavum Lyrics in English
    Yesuvin anpil moolkavum
    naesaththin aalam paarkkavum
    innamum theeraa vaanjaiyae
    ennil unndaakukintathae

    aatkonndavar naesam
    eetaettina naesam
    innum menmaelum vaanjippaen
    unnatha anpaip pottuvaen

    1. Yesuvin sollum siththamum
      aasaiyullonaay seyyavum
      thaeva oththaasai nampuvaen
      aaviyin paeril saaruvaen
    2. naatharin inpa saththamum
      vaethaththil kaettu niththamum
      aaththuma nanmai naaduvaen
      neethiyin paathai selluvaen
    3. Yesuvin iraajareekamum
      aasiththa maa sengaோnmaiyum
      vinnnnilae thontum vannnamaay
      mannnnilunndaakum maenmaiyaay
  • Yesuvin Anbinai Arivithida இயேசுவின் அன்பினை அறிவித்திட

    இயேசுவின் அன்பினை அறிவித்திட
    இணைந்தே செயல்படுவோம்
    சுவிசேஷ நற்செய்தி கூறிட
    விரைந்தே புறப்படுவோம் (2)

    நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
    நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
    இயேசுவை அறியட்டுமே (2)

    நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2
    தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2
    இலட்சத்திற்காக பரிதபித்தார்
    கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்

    காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2
    இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2
    இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
    நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்


    Yesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட Lyrics in English
    Yesuvin Anbinai Arivithida
    Yesuvin anpinai ariviththida
    innainthae seyalpaduvom
    suvisesha narseythi koorida
    virainthae purappaduvom (2)

    nam paaratham nam thaayakam karththarai ariyattumae
    nam thaay mannnum nam thalaimuraiyum
    Yesuvai ariyattumae (2)

    ninivaeyin janangalukkaaka nam thaevan parithaviththaar -2
    theerkkan yonaavaiyo avar anuppi echchariththaar -2
    ilatchaththirkaaka parithapiththaar
    kotikatkaaka kalangidaaro (2) – nam paaratham

    kaalangal kadanthiduthae nam vaethamum niraivaeruthae-2
    Yesuvin varukai itho athi sameepamaakirathae -2
    ilainjar koottam Yesuvukkaay
    narseythi sumanthu purappaduvom (2) – nam paaratham

  • Yesuvin Anbai Thiyaanikkaiyil இயேசுவின் அன்பை தியானிக்கையில்

    இயேசுவின் அன்பை தியானிக்கையில்
    கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
    கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
    கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
    கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு
    ஒன்றுமே புரியவில்லை
    எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
    எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்

    மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
    எங்குமே காணவில்லை
    பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
    என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்

    ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
    இயேசு என் வாழ்வில் வந்தார்
    என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
    உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்


    Yesuvin anbai thiyaanikkaiyil Lyrics in English
    Yesuvin anpai thiyaanikkaiyil
    kannkalil kannnneer puranntooduthae
    kallamillaa anthak kalvaari anpu
    kallan en ithayaththaik karaiththittathae
    kallaana en ullam karainthittathae

    paavi en meethu aen intha anpu
    ontumae puriyavillai
    enakkaaka jeevan thantha Yesuvukkaay
    enthanin vaalvai arppannikkiraen

    meyyaana anpai naan thaeti alainthaen
    engumae kaanavillai
    paaviyaay oti naan thirinthitta vaelai
    ennaiyum thammidam serththuk konndaar

    ontukkum uthavaa ennaiyum thaeti
    Yesu en vaalvil vanthaar
    ennaiyum alaiththaar tham sevaikkaay
    unnmaiyaay ooliyam seythiduvaen

  • Yesuvin Anbai Maranthiduvayo இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

    இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

    மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்

    இயேசுவின் அன்பை

    மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2

    மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ –இயேசுவின்

    அளவில்லா அன்பு அதிசய அன்பு

    ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு

    களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2

    கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு –இயேசுவின்

    அலைகடலை விட பரந்த பேரன்பு

    அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு

    மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2

    சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு –இயேசுவின்

    எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு

    எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு

    எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2

    எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு – இயேசுவின்

    கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு

    கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு

    விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2

    விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு –இயேசுவின்


    Yesuvin Anbai Maranthiduvayo Lyrics in English
    Yesuvin anpai maranthiduvaayo

    maranthiduvaayo manithap pannpirunthaal

    Yesuvin anpai

    maranthidaathirukka nee siluvaiyilae avar -2

    mariththuth thongidum kaatchi manathil nillaatho –Yesuvin

    alavillaa anpu athisaya anpu

    aalamakalam neelam ellai kaannaa anpu

    kalangamillaa anpu karunnai ser anpu -2

    kalvaari malai kannnneer sollidum anpu –Yesuvin

    alaikadalai vida parantha paeranpu

    annaimaar anpellaam thiraiyidum anpu

    malaipol elunthannai valaiththidum anpu -2

    silaiyena piramaiyil niruththidum anpu –Yesuvin

    enakkaaka manuvuru thariththa nal anpu

    enakkaaka thannaiyae unavaakkum anpu

    enakkaaka paadukal aetta paeranpu -2

    enakkaaka uyiraiyae thantha thaeva anpu – Yesuvin

    karaikkadangaa anpu kasitharum anpu

    kaithi pol Yesuvae siraiyidum anpu

    vilaiyillaap paliyaaka vilangidum anpu -2

    vivarikka vivarikka virinthidum anpu –Yesuvin

  • Yesuve Yesuve இயேசுவே இயேசுவே

    இயேசுவே இயேசுவே
    என் தேவன் நீரல்லோ
    என் மேய்ப்பர் நீரல்லோ
    இயேசுவே இயேசுவே
    என் கண்ணீரெல்லாம் துடைப்பவரே

    யோபின் சோதனை வந்தாலும்
    அக்கினி நம்மை சூழ்ந்தாலும்
    தேவன் என்னை கைவிட மாட்டார்
    என் கால்கள் தளர்ந்து போனாலும்
    என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும்
    என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார்

    கோலியாத்கள் வந்தாலும்
    சிங்க குகையில் இருந்தாலும் – நான்
    சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன்
    கொடுத்த கர்த்தர் எடுத்தார்
    எல்லாம் எனது நன்மைக்கே
    என் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே

    கெத்செமனேயின் நடுவிலும்
    பிலாத்துவின் வாரிலும் – என்
    தேவன் என்னைக் கைவிடமாட்டார்
    பேதுரு விட்டு விலகினாலும்
    சிலுவையில் என்னை அறைந்தாலும்
    அழைத்த தேவன் உண்மையுள்ளவர்


    Yesuve yesuve Lyrics in English
    Yesuvae Yesuvae
    en thaevan neerallo
    en maeyppar neerallo
    Yesuvae Yesuvae
    en kannnneerellaam thutaippavarae

    yopin sothanai vanthaalum
    akkini nammai soolnthaalum
    thaevan ennai kaivida maattar
    en kaalkal thalarnthu ponaalum
    en nannparkal ennai veruththaalum
    en naesar ennaith thaangi nadaththuvaar

    koliyaathkal vanthaalum
    singa kukaiyil irunthaalum – naan
    saampalilirunthu aluthu pulampuvaen
    koduththa karththar eduththaar
    ellaam enathu nanmaikkae
    en kannnneerellaam avar pannikkae

    kethsemanaeyin naduvilum
    pilaaththuvin vaarilum – en
    thaevan ennaik kaividamaattar
    paethuru vittu vilakinaalum
    siluvaiyil ennai arainthaalum
    alaiththa thaevan unnmaiyullavar

  • Yesuve Vazhi Sathyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே ஒளி நித்யம் தேவன்

    1. புது வாழ்வு எனக்கு தந்தார்
      சமாதானம் நிறைவாய் அளித்தார்
      பாவங்கள் யாவும் மன்னித்தார்
      சாபங்கள் யாவும் தொலைத்தார்
    2. கல்வாரி மீதில் எனக்காய்
      தம் உதிரம் சிந்தி மரித்தார்
      மூன்றாம் நாளில் உயிர்த்தார்
      உன்னதத்தில் அமர்ந்தார்
    3. நல் மேய்ப்பனாக காத்தார்
      எனை தமையனாகக் கொண்டார்
      என் நண்பனாக வந்தார்
      என் தலைவனாக நின்றார்
    4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
      மணவாளனாக வருவார்
      என்னை அழைத்துக் கொள்வார்
      வானில் கொண்டு செல்வார்

    Yesuve Vazhi Sathyam Jeevan Lyrics in English

    Yesuvae vali saththiyam jeevan
    Yesuvae oli nithyam thaevan

    1. puthu vaalvu enakku thanthaar
      samaathaanam niraivaay aliththaar
      paavangal yaavum manniththaar
      saapangal yaavum tholaiththaar
    2. kalvaari meethil enakkaay
      tham uthiram sinthi mariththaar
      moontam naalil uyirththaar
      unnathaththil amarnthaar
    3. nal maeyppanaaka kaaththaar
      enai thamaiyanaakak konndaar
      en nannpanaaka vanthaar
      en thalaivanaaka nintar
    4. maekangal meethil ornaal
      manavaalanaaka varuvaar
      ennai alaiththuk kolvaar
      vaanil konndu selvaar