- ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
- அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் - நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் - அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் - என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார்
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு – 2
மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்
வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்
- காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார் – 2
ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்
கழிவு நீரால் மனிதன் கெடுத்தான் – 2 - ஆவியான தேவன் அசைவாடி வந்த உலகம்
இயேசு சிந்திய இரத்தம் சுத்தமாகும் வையம் – 2
வார்த்தையாகி வாழ்வை தந்தார்
மனிதன் வாழ்வில் புதுமை தந்தார் – 2
வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுயநலமின்றி சுகமாய் வாழலாம் – 2
Kaadugal Uyirgalin Veedu
Marangalai Alipadhu Yaaru – 2
Malai Thuliyaalae Pasumaiyai Varaindhaar
Iyarkayin Vadivil Imaigalai Thirandhaar
Vaanam Boomi Yaavum Alagaai Dhevan Padaithaar
Vaalum Manidhan Suyanalathaalae Ellamae Keduthaan
- Kaatrai Thendralaaki Yen Paatai Paada Veithaar
Moochudan Kaatrai Serthu Mudichondru Pottaar – 2
Aatru Neerai Alli Koduthaar
Kalivu Neeraal Manidhan Keduthaan – 2 - Aaviyaana Dhevan Asaivaadi Vandha Ulagam
Yesu Sindhiya Ratham Suthamaagum Vaiyam – 2
Vaarthaiyaagi Vaalvai Thandhaar
Manidhan Vaalvil Pudhumai Thandhaar – 2
Vaanam Boomi Yaavum Alagaai Dhevan Padaithaar
Vaalum Manidhan Suyanalamindri Sugamaai Valalaam – 2
Leave a Reply
You must be logged in to post a comment.