Blog

  • Iraivarththai Akilaththai இறைவார்த்தை அகிலத்தை

    இறைவார்த்தை அகிலத்தை
    வெல்லும்
    என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்
    எரிந்தே ஜொலிக்கும்
    ஆல்போல் அது தழைக்கும்
    அலைபோல அது பரவும்
    ஆதவனின் சுடர்போல
    அகிலம் எட்டும்
    ஆகாயம் தொடுந்தூரம்
    தேவ புகழ் ஓங்கும் (2)

    அற்புதம் அது தொடர்கதைதான்
    ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் (2)

    1. சீடர்களாய் ஆர்ப்பரிக்கும்
      கூட்டம் பெருகும் (2)
      தியாக குணம் சபைதோறும்
      வளர்ந்தென்றும் ஓங்கும் (2
      அன்பும் அர்ப்பணமும்
      செழித்தோங்கிடும்
      தாயகம் அசைந்திடும்
      தேவனின் வார்த்தை
      பலன் தந்திடும் – நம் (2)
    2. நண்பர்களாய் நற்செய்தி
      சுமந்தெங்கும் செல்ல (2)
      ஜெபதூபம் அணையாமல்
      வருகை மட்டும் நிலவ (2)
      விண்மீன்களாய் சபைகள் பெருக
      அகிலமே தலை வணங்கும்
      தேவனின்நாமம் மகிமைப்படும்-
      நம்(2)
    3. ஒலி அலையாய் ஒளி அலையாய்
      உமது நாமம் பரவும்! (2)
      நன்நடத்தை வாழ் மொழியால்
      உமது அழகு விளங்கும் (2)
      சாட்சியிடும்
      வாழ்க்கையினால்
      சத்தியம் ஊடுருவும்
      தேவனின்ஆட்சி

    செழித்தோங்கிடும் -நம் (2)


    Iraivarththai Akilaththai Lyrics in English

    iraivaarththai akilaththai
    vellum
    entumilanenjam Yesuvukkaay
    erinthae jolikkum
    aalpol athu thalaikkum
    alaipola athu paravum
    aathavanin sudarpola
    akilam ettum
    aakaayam thodunthooram
    thaeva pukal ongum (2)

    arputham athu thodarkathaithaan
    aanndavar arangaettukintar (2)

    1. seedarkalaay aarpparikkum
      koottam perukum (2)
      thiyaaka kunam sapaithorum
      valarnthentum ongum (2
      anpum arppanamum
      seliththongidum
      thaayakam asainthidum
      thaevanin vaarththai
      palan thanthidum – nam (2)
    2. nannparkalaay narseythi
      sumanthengum sella (2)
      jepathoopam annaiyaamal
      varukai mattum nilava (2)
      vinnmeenkalaay sapaikal peruka
      akilamae thalai vanangum
      thaevaninnaamam makimaippadum-
      nam(2)
    3. oli alaiyaay oli alaiyaay
      umathu naamam paravum! (2)
      nannadaththai vaal moliyaal
      umathu alaku vilangum (2)
      saatchiyidum
      vaalkkaiyinaal
      saththiyam ooduruvum
      thaevaninaatchi
      seliththongidum -nam (2)
  • Iraivanai nambi irukkiraen இறைவனை நம்பியிருக்கிறேன்

    இறைவனை நம்பியிருக்கிறேன்
    எதற்கும் பயப்படேன்
    இவ்வுலகம் எனக்கெதிராய்
    என்ன செய்ய முடியும்

    பயம் என்னை ஆட்கொண்டால்
    பாடுவேன் அதிகமாய்
    திருவசனம் தியானம் செய்து
    ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்

    அச்சம் மேற்கொள்ளாது
    இறை அமைதி என்னை காக்கும்
    இவ்வுலகம் எனக்கெதிராய்
    என்ன செய்ய முடியும்

    என் சார்பில் இருக்கின்றீர்
    என்பதை நான் அறிந்து கொண்டேன்
    எதிராக செயல்படுவோர்
    திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்

    சாவினின்று என் உயிரை
    மீட்டீரே கிருபையினால்
    உம்மோடு நடந்திடுவேன்
    உயிர்வாமும் நாட்களெல்லாம்

    துயரங்களின் எண்ணிக்கையை
    கணக்கெடுக்கும் தகப்பன் நீர் -என்
    கண்ணீரைத் தோற்பையில்
    சேர்த்து வைத்துப் பதில் தருவீர்

    மறக்கவில்லை என் பொருத்தனைகள்
    செலுத்துகிறேன் நன்றி பலி
    காலடிகள் இடறாமல்
    காத்தீரே நன்றி ஜயா


    Iraivanai nambi irukkiraen Lyrics in English

    iraivanai nampiyirukkiraen
    etharkum payappataen
    ivvulakam enakkethiraay
    enna seyya mutiyum

    payam ennai aatkonndaal
    paaduvaen athikamaay
    thiruvasanam thiyaanam seythu
    jeyameduppaen nichchayamaay

    achcham maerkollaathu
    irai amaithi ennai kaakkum
    ivvulakam enakkethiraay
    enna seyya mutiyum

    en saarpil irukkinteer
    enpathai naan arinthu konntaen
    ethiraaka seyalpaduvor
    thirumpuvaarkal pinnittu – achcham

    saavinintu en uyirai
    meettirae kirupaiyinaal
    ummodu nadanthiduvaen
    uyirvaamum naatkalellaam

    thuyarangalin ennnnikkaiyai
    kanakkedukkum thakappan neer -en
    kannnneeraith thorpaiyil
    serththu vaiththup pathil tharuveer

    marakkavillai en poruththanaikal
    seluththukiraen nanti pali
    kaalatikal idaraamal
    kaaththeerae nanti jayaa

  • Iraivan Thantha Varththai இறைவன் தந்த வார்த்தை

    பல்லவி

    இறைவன் தந்த வார்த்தை
    இயேசுவின் வடிவானதே – அவர்
    பேசும் எந்த சொல்லும்
    வாழ்வின் வழியானதே

    சரணங்கள்

    1. யாவீரு மகளான சிறுமியும்
      நாயீனூர் விதவையின் மைந்தனும்
      லாசரு எனும் ஓர் நண்பனும்
      உயிரோடு எழுந்திட உதவினார்
      ஒளியும் வாய்மையும் இயேசுவே
      வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்
    2. தொழு நோய் கொடுமைகள் தீரவே
      அழிவின் பேய்கள் ஓடவே
      உடலின் குறைகள் மாறவே
      இறைவன் இயேசு உதவினார்
      ஒளியும் வாய்மையும் இயேசுவே
      வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

    Iraivan Thantha Varththai Lyrics in English

    pallavi

    iraivan thantha vaarththai
    Yesuvin vativaanathae – avar
    paesum entha sollum
    vaalvin valiyaanathae

    saranangal

    1. yaaveeru makalaana sirumiyum
      naayeenoor vithavaiyin mainthanum
      laasaru enum or nannpanum
      uyirodu elunthida uthavinaar
      oliyum vaaymaiyum Yesuvae
      valiyum vaalvum Yesuvae – iraivan
    2. tholu Nnoy kodumaikal theeravae
      alivin paeykal odavae
      udalin kuraikal maaravae
      iraivan Yesu uthavinaar
      oliyum vaaymaiyum Yesuvae
      valiyum vaalvum Yesuvae – iraivan
  • Iraivan Ennai Kakkintar இறைவன் என்னை காக்கின்றார்

    இறைவன் என்னை காக்கின்றார்

    குறை ஒன்றும் எனக்கு இல்லையே

    மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து

    சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன்

    புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள

    பாலும் தேனும் நிறைந்த கானான் (2)

    அழைத்து சென்று களைப்பை ஆற்றி

    புத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன்

    தீமை துன்பம் நெருங்க விடாமல்

    அறனும் கோட்டையும் புகலிடமான(2)

    வார்த்தை கேடயம் கவசமாக

    காத்து வருகின்றார்(2)-இறைவன்

    இருளும் பள்ளமும் எதிரியுமான

    எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)

    வாழ்வின் வழியை எனக்கு காட்டி

    சீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன்


    Iraivan Ennai Kakkintar Lyrics in English

    iraivan ennai kaakkintar

    kurai ontum enakku illaiyae

    makilchchi oottum idaththil vaiththu

    sirakukal nilalil kaakkintar (2)-iraivan

    pullum maeychchalum aruviyum ulla

    paalum thaenum niraintha kaanaan (2)

    alaiththu sentu kalaippai aatti

    puththuyir oottukintar (2) –iraivan

    theemai thunpam nerunga vidaamal

    aranum kottaைyum pukalidamaana(2)

    vaarththai kaedayam kavasamaaka

    kaaththu varukintar(2)-iraivan

    irulum pallamum ethiriyumaana

    erikko yorthaan thataikalai maatti(2)

    vaalvin valiyai enakku kaatti

    seeyonil serkkintar(2)-iraivan

  • Iraivan Enadhu Meetpaanar இறைவன் எனது மீட்பானார்

    இறைவன் எனது மீட்பானார்
    அவரே எனக்கு ஒளியானார்
    அவரைக் கொண்டு நான் வாழ
    எவரைக்கண்டும் பயமில்லை

    வாழ்வில் இறைவன் துணையானார்
    வாடும் எனக்கு உயிரானார்
    தீயோர் என்னை வளைத்தாலும்
    தீமை அணுக விட மாட்டார் (2)

    ஒன்றே இறைவா வேண்டுகிறேன்
    ஒன்றே அடியேன் தேடுகிறேன்
    தேவன் உமது திருமுன்னே
    நாளும் வாழ அருள்வாயே (2)


    Iraivan Enadhu Meetpaanar Lyrics in English

    iraivan enathu meetpaanaar
    avarae enakku oliyaanaar
    avaraik konndu naan vaala
    evaraikkanndum payamillai

    vaalvil iraivan thunnaiyaanaar
    vaadum enakku uyiraanaar
    theeyor ennai valaiththaalum
    theemai anuka vida maattar (2)

    onte iraivaa vaenndukiraen
    onte atiyaen thaedukiraen
    thaevan umathu thirumunnae
    naalum vaala arulvaayae (2)

  • Iraivan Azhaikkintar Iniya இறைவன் அழைக்கின்றார் இனிய

    இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

    இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் – 2

    பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி – 2

    பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே – 2

    அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து – 2

    இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் – 2

    இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் – 2

    எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே – 2


    Iraivan Azhaikkintar Iniya Lyrics in English

    iraivan alaikkintar iniya unavirku

    iraikulamae naam innainthae sentiduvom – 2

    panniru seedarkalai panthiyilae amarththi – 2

    paatham kaluvinaar panninthu vaalnthidavae – 2

    appaththai kaiyeduththuanpudanae koduththu – 2

    ithu en udal entar ellorum unnnumentar – 2

    irasaththaik kaiyeduththu en iraththam enturaiththaar – 2

    ellorum parukuveer ennaalum vaalnthidavae – 2

  • Iraiva Unthan Paatham Varugindren இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

    இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
    என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)
    மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
    காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து
    இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
    என்னையே உனக்காகத் தருகின்றேன்

    1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
      உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)
      விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு
      நலிந்தவரின் துணையிருப்பேன்
      இதுவே நான் தரும் காணிக்கையே
      இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
      என்னையே உனக்காகத் தருகின்றேன்
    2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்
      இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)
      பலியை அல்ல இரக்கத்தையே என்னில்
      விரும்புகின்ற இறைமகனே
      உன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா

    Iraiva Unthan Paatham Varugindren Lyrics in English

    iraivaa unthan paatham varukinten
    ennaiyae unakkaakath tharukinten (2)
    malarkalil vilunthu manamena nulainthu
    kaattinil kalanthu kanivodu panninthu
    iraivaa unthan paatham varukinten
    ennaiyae unakkaakath tharukinten

    1. pasi ullorkku unavaaka naaniruppaen
      utai illaatha eliyorkku utaiyalippaen (2)
      vilunthavaraith thookkiduvaen ingu
      nalinthavarin thunnaiyiruppaen
      ithuvae naan tharum kaannikkaiyae
      iraivaa unthan paatham varukinten
      ennaiyae unakkaakath tharukinten
    2. iruppavar koduppathil inpamenna kaiyil
      iruppathaik koduppathae inpamentay (2)
      paliyai alla irakkaththaiyae ennil
      virumpukinta iraimakanae
      unnaippol naanum uruvaakida – iraivaa
  • Iraiva Nee Oru Sangeetham இறைவா நீ ஒரு சங்கீதம்

    இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்

    இணைந்தே பாடிடும் என் கீதம்

    உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்

    என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

    புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்

    இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2

    பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்

    பாடலால் என்னகம் இணைந்திடுமே

    எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்

    எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா

    காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி

    வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2

    கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ

    தோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2

    நாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை

    நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்

    தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்

    தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்

    அருளாளன் நீயின்றி அழகேது என்னில்

    அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2


    Iraiva Nee Oru Sangeetham Lyrics in English

    iraivaa nee oru sangaீtham – athil

    innainthae paadidum en geetham

    un karam thavalum thiruyaalisai – athil

    en manam meetdidum thamil aelisai

    pullaangulalena thaniththirunthaen – athil

    isaiyaay en manam pukunthiduvaay – 2

    paaviyen nenjamum thuyil kalaiyum – puthup

    paadalaal ennakam innainthidumae

    erikinta sudaraaka vinnmeenkal un vaanil

    enai intu thiriyaaka aettaாyo iraivaa

    kaattaாki oottaாki kaarmaeka malaiyaaki

    vaalvaaki valiyaaki vaaraayo iraivaa – 2

    kallilum mullilum kaal nadanthaalum – nee

    tholinil sumanthae valinadanthaay – 2

    naathaa un vaarththaikal vaanamutham – 2 ennai

    naalellaam vaalvikkum thaenamutham

    thol meethu thaalaattum thaayaakum theyvam

    thaal potti nintalae nooraakum selvam

    arulaalan neeyinti alakaethu ennil

    athai naanum ataiyaamal vitivaethu mannnnil – 2

  • Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

    இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

    திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி

    வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே – 2

    மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே – 2

    புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே

    விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்

    இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் –வாராய்

    மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே – 2

    திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்

    பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்

    மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் –வாராய்


    Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani Lyrics in English

    iraimakkal akamakilnthu varukinta thiruppavani

    thiruchchapai innainthu kiristhuvodu tharumae thiyaakappali

    vaaraay iraithirukkulamae vaalvaay paerudanae – 2

    malarudan serum yaavumae manam pettu vaalthal neethiyae – 2

    puvivaalvai naamum tharavae iraimaannpai inte peravae

    viraivaay varuvom thaevan arul peruvom

    iraivan nilalil vaalvin porul peruvom –vaaraay

    makilvudan paadum vaelaiyae manangalin sorvai neekkumae – 2

    thiruvaalvai thaeti peruvom maraivaalvin nanmai ataivom

    pannivaay kulamaay Yesu patham innaivom

    maraiyin valiyil vaetha oli peruvom –vaaraay

  • Iradsanyam magimai இரட்சண்யம் மகிமை

    இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
    இயேசுவுக்கு சொந்தமல்லவா
    ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
    தருகின்ற தேவன் அல்லவா

    பாடி ஸ்தோத்தரிப்பேன்
    சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
    உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

    சாரோனின் ரோஜா நீரே
    சீயோனில் பெரியவரே
    சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
    பாடுவேன் அல்லேலூயா

    காருண்யம் உள்ளவரே
    கரம் பற்றி நடத்திடுமே
    கண்மணிபோல காத்திட்டதாலே
    பாடுவேன் அல்லேலூயா

    சாலோமின் ராஜா நீரே
    சமாதான காரணரே
    ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
    பாடுவேன் அல்லேலூயா

    மரணத்தை வெண்றவரே
    மறைவிடமானவரே
    வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
    பாடுவேன் அல்லேலூயா


    Iradsanyam magimai Lyrics in English

    iratchannyam makimai thuthikanam vallamai
    Yesuvukku sonthamallavaa
    aaviyin vallamai kirupai mael kirupai
    tharukinta thaevan allavaa

    paati sthoththarippaen
    sangaீrththanam pannnniduvaen
    ummil entum makilnthiduvaen

    saaronin rojaa neerae
    seeyonil periyavarae
    saaththaanai jeyikka saththuvam alippeer
    paaduvaen allaelooyaa

    kaarunnyam ullavarae
    karam patti nadaththidumae
    kannmannipola kaaththittathaalae
    paaduvaen allaelooyaa

    saalomin raajaa neerae
    samaathaana kaaranarae
    shaalom entalae samaathaanam thaanae
    paaduvaen allaelooyaa

    maranaththai vennravarae
    maraividamaanavarae
    vasanaththai anuppi kunamaakkuveerae
    paaduvaen allaelooyaa