Author: admin

  • மேகங்கள் மீதில் Mekangkal mithil

    மேகங்கள் மீதில் வருவார்
    நியாயம் தீர்க்க வருவார்
    கடைசி நாட்கள் நெருங்கிடுதே
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா

    பூமியும் எரிந்து அழிந்து போம்
    வானங்கள் மடிந்து அகன்று போம்
    வருவேன் என்றவர் வந்திடுவாரே
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா

    புதிய பூமி தோன்றுமே
    புதிய வானம் உண்டாகுமே
    இரட்சிக்கப் பட்டோரை சேர்த்திடுவார்
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா

    எக்காளத் தொனியும் கேட்குமே
    ஆராவார சத்தமும் தொனிக்குமே
    தூதர்கள் கூட்டத்தோடு இயேசு வருவார்
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா


    Mekangkal mithil varuvar
    niyayam thirkka varuvar
    kataisi natkal nerungkituthe
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama

    pumiyum erinthu azhinthu pom
    vanangkal matinthu akanru pom
    varuven enravar vanthituvare
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama

    puthiya pumi thonrume
    puthiya vanam untakume
    iratsikkap pattorai serththituvar
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama

    ekkalath thoniyum ketkume
    aaravara saththamum thonikkume
    thutharkal kuttaththotu iyesu varuvar
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama


  • தூய ஆவியே இரங்கும் Thuya aaviye irangkum

    தூய ஆவியே இரங்கும்
    இந்த வேளையில் இரங்கும்
    உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும்

    பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும்
    என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால்

    ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவே
    அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே

    ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவே
    அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே


    Thuya aaviye irangkum
    intha velaiyil irangkum
    unnatha pelanai uurri niraiththitum

    pavaththai unarththum aaviye vanthu irangkitum
    ennil kiriyai seythitum unthan aaviyal

    aaviyin apishekam ventum umakkaka uzhaiththitave
    apishekiththu nirappitum intha nalile

    aaviyin anukirakam ventume um siththam seythitave
    apishekiththu nirappitum intha nalile


  • உயிர்தெழுந்த இயேசுவே Uyirthezhuntha iyesuve

    உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்
    உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன்
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்
    சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

    மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர்
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

    உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர்
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை


    Uyirthezhuntha iyesuve ummaith thuthikkinren
    ulakaththin iratsakare ummaith thuthikkinren
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai
    uyirthezhuntha iyesuve ummaith thuthikkinren
    umakke aarathanai umakke aarathanai
    uyirthezhuntha iyesuve ummaith thuthikkinren

    savai nir venrire saththanai jeyiththire
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai

    maranaththin kurai utaiththu makimaiyal verri siranthir
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai

    uyirotu ezhunthathinal unnathaththil amaras seythir
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai


  • இயேசய்யா உந்தன் Iyesayya unthan

    இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
    ஆசையாய் வருகிறேன்
    உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட
    ஆவலாய் துடிக்கிறேன்

    அதிகாலையில் உமது பிரசன்னம்
    எனக்கு இன்பம் ஆனது
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா

    காலையில் கர்த்தாவே உம்
    கிருபையினால் நிரப்பிடுமே
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா

    காலையில் கர்த்தாவே உம்
    பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா

    காலையில் கர்த்தாவே உம்
    மகிமையினால் நிறைத்திடுமே
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா


    Iyesayya unthan mukaththai theti
    aasaiyay varukiren
    unthan melliya saththam kettita
    aavalay thutikkiren

    athikalaiyil umathu pirasannam
    enakku inpam aanathu
    pesum iyesappa pesum iyesappa

    kalaiyil karththave um
    kirupaiyinal nirappitume
    pesum iyesappa pesum iyesappa

    kalaiyil karththave um
    pirasannaththinal niraiththitume
    pesum iyesappa pesum iyesappa

    kalaiyil karththave um
    makimaiyinal niraiththitume
    pesum iyesappa pesum iyesappa


  • ஜெபிக்க வேண்டுமே Jepikka ventume

    ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே
    அற்புதங்கள் நடக்கும் வரை
    ஜெபிக்க வேண்டுமே
    ஜெபமே ஜெயம் தருமே
    ஜெபமே ஜெயம் தருமே
    ஜெபிக்க வேண்டும் நான்
    ஜெபிக்க வேண்டும்
    ஜெப வீரனாய் என்றும்
    வாழ வேண்டும் – ஜெபிக்க

    நாம் ஜெபித்தால் தடைகள் நீங்கிடுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே

    நாம் ஜெபித்தால் சாத்தான் நெருங்க மாட்டான்
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே

    நாம் ஜெபித்தால் காரியம் வாய்த்திடுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே


    Jepikka ventume
    jepikka ventume
    arputhangkal natakkum varai
    jepikka ventume
    jepame jeyam tharume
    jepame jeyam tharume
    jepikka ventum nan
    jepikka ventum
    jepa viranay enrum
    vazha ventum jepikka

    nam jepiththal thataikal ningkitume
    jepikka ventume thinam jepikka ventume
    jepikka ventume thinam jepikka ventume

    nam jepiththal saththan nerungka mattan
    jepikka ventume thinam jepikka ventume
    jepikka ventume thinam jepikka ventume

    nam jepiththal kariyam vayththitume
    jepikka ventume thinam jepikka ventume
    jepikka ventume thinam jepikka ventume


  • பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam theva pirasannam

    பிரசன்னம் தேவ பிரசன்னம்
    பிரசன்னம் தேவ பிரசன்னமெ
    பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே
    உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை
    நிறைத்து நடத்துமே

    மகிமையின் பிரசன்னமே
    பரலோக பிரசன்னமே
    ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால்
    ஆவியில் அனல் பெறவே

    உடைத்து நொறுக்கிடுமே
    உந்தன் உன்னத பிரசன்னத்தால்
    பரம தரிசன பிரசன்னத்தால்
    என்னை மறுரூபமாகிடுமே

    வல்லமையின் பிரசன்னமே
    வழிந்தோடும் பிரசன்னமே
    நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால்
    உம் மகிமையில் மூழ்கிடவே


    pirasannam theva pirasannam
    pirasannam theva pirasanname
    pirasannam tharume intha nalil iyesuve
    unthan iniya pirasannaththale nennai

    niraiththu nataththume
    makimaiyin pirasanname
    paraloka pirasanname
    aatkollume unthan pirasannaththal
    aaviyil anal perave

    utaiththu norukkitume
    unthan unnatha pirasannaththal
    parama tharisana pirasannaththal
    ennai marurupamakitume

    vallamaiyin pirasanname
    vazhinthotum pirasanname
    nirappitume unthan pirasannaththal
    um makimaiyil muzhkitave


  • ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே Sthoththiram sthoththirame

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே
    கோடான கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
    அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்
    பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
    நித்திய பிதாவே ஸ்தோத்திரம்

    ஆப்ரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
    ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
    யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
    தாவீதின் தேவனே ஸ்தோத்திரமே

    துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திரம்
    துதியில் மகிழ்வோரே ஸ்தோத்திரம்
    துதிகளின் உன்னதரே ஸ்தோத்திரம்
    தூயாதி தூயவரே ஸ்தோத்திரமே


    sthoththiram sthoththirame iyesuve
    kotana koti sthoththirame
    sthoththiram sthoththiram
    sthoththiram sthoththiram
    sthoththiram sthoththiram

    appa pithave sthoththiram
    anpin pithave sthoththiram
    paraloka pithave sthoththiram
    niththiya pithave sthoththiram

    aaprakamin thevane sthoththiram
    iisakkin thevane sthoththiram
    yakkopin thevane sthoththiram
    thavithin thevane sthoththirame

    thuthikku paththirare sthoththiram
    thuthiyil makizhvore sthoththiram
    thuthikalin unnathare sthoththiram
    thuyathi thuyavare sthoththirame


  • உமக்கே ஆராதனை Umakke aarathanai

    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    உமக்கே ஆராதனை

    யேகோவா இலியும் ஆராதனை
    உன்னத தேவனே ஆராதனை
    யேகோவா ஒசேனு ஆராதனை
    உருவாக்கும் கர்த்தரே ஆராதனை

    யேகோவா யேலோகே ஆராதனை
    எங்கும் நிறைந்தவரே ஆராதனை
    யேகோவா சபையோர் ஆராதனை
    சேனைகளின் கர்த்தரே ஆராதனை


    umakke aarathanai
    umakke aarathanai
    umakke aarathanai
    umakke aarathanai
    aarathanai aarathanai
    umakke aarathanai

    yekova iliyum aarathanai
    unnatha thevane aarathanai
    yekova osenu aarathanai
    uruvakkum karththare aarathanai

    yekova yeloke aarathanai
    engkum nirainthavare aarathanai
    yekova sapaiyor aarathanai
    senaikalin karththare aarathanai


  • கர்த்தரை தேடின Karththarai thetina

    கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
    காரியம் வாய்க்கச் செய்தாரே
    எத்தனை எத்தனை நன்மைகளோ
    இயேசப்பா செய்தாரே-நான்
    இறுதிவரை என் வாழ்வு
    இயேசப்பா உமக்குத்தானே

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ரயேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார்

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும், இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும், எப்போதும்
    எந்நாளும் காத்திடுவார்


    Karththarai thetina natkalellam
    Kariyam vaykkas seythare
    Eththanai eththanai nanmaikalo
    Iyesappa seythare-nan
    Iruthivarai en vazhvu
    Iyesappa umakkuththane

    Kalkal thallata vitamattar
    Kakkum thevan urangka mattar
    Israyelaik kakkiravar
    Ennalum thungka mattar

    Karththar ennaik kakkinrar
    Enathu nizhalay irukkinrar
    Pakalinilum iravinilum
    Pathukakkinrar

    Pokum pothum kakkinrar
    Thirumpum pothum kakkinrar
    Ippothum eppothum
    Ennalum kaththituvar


  • இயேசு ராஜனே Iyesu rajane

    இயேசு ராஜனே
    நேசிக்கின்றேன் உம்மையே
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
    சந்தோஷமே, சமாதானமே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    இம்மானுவேல் நீர்தானே,
    எப்போதும் இருப்பவரே
    ஜீவன் தரும், திருவார்த்தையே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
    விடிவெள்ளியே, நட்சத்திரமே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    யோனாவிலும் பெரியவரே
    சாலமோனிலும் பெரியவரே
    ரபூனுயே போதகரே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
    கிருபாதார பலி நீரே
    பரிந்து பேசும் ஆசாரியரே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்


    Iyesu rajane
    nesikkinren ummaiye
    uyirulla nalellam
    ummaiththan nesikkiren
    nesikkiren nesikkiren
    nesikkiren nesikkiren
    uyirulla nalellam
    ummaiththan nesikkiren
    athisayamanavare aaruthal nayakare
    santhoshame samathaname
    ummaiththan nesikkiren

    immanuvel nirthane
    eppothum iruppavare
    jivan tharum thiruvarththaiye
    ummaiththan nesikkiren
    thiratsais seti nire thavithin ver nire
    vitivelliye natsaththirame
    ummaiththan nesikkiren

    yonavilum periyavare
    salamonilum periyavare
    rapunuye pothakare
    ummaiththan nesikkiren

    pavangkal nivarththi seyyum
    kirupathara pali nire
    parinthu pesum aasariyare
    ummaiththan nesikkiren