Author: admin

  • Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

    விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

    1.விருந்தைச் சேருமேன்,
    அழைக்கிறார்
    ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்
    தாகத்தைத் தீர்க்கவும்
    இயேசுவின் மார்பிலும்
    சாய்ந்திளைப்பாறவும்
    வா, பாவி, வா.

    1. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
      பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
      நம்பி வந்தோருக்கு
      திருப்தி உண்டாயிற்று
      ஜீவாற்றின் அண்டைக்கு
      வா, பாவி, வா.
    2. மீட்பரின் பாதமும் சேராவிடில்
      தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
      இயேசுவே வல்லவர்,
      இயேசுவே நல்லவர்,
      இயேசுவே ஆண்டவர்
      வா, பாவி, வா.
    3. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்
      சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
      வாடாத கிரீடமும்
      ஆனந்த களிப்பும்
      பேர் வாழ்வும் பெறவும்
      வா, பாவி, வா.
    4. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
      பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
      அப்பாலே மோட்சத்தில்
      ஆனந்நக் கடலில்
      மூழ்கிப் பேரின்பத்தில்
      கெம்பீரிப்பேன்.

    Virunthai Serumen Alaikirar Lyrics in English
    virunthaich serumaen, alaikkiraar

    1.virunthaich serumaen,
    alaikkiraar
    aakaaram paarumaen, poshippippaar
    thaakaththaith theerkkavum
    Yesuvin maarpilum
    saaynthilaippaaravum
    vaa, paavi, vaa.

    1. oottanntai seravum jeevanunndaam
      paadum visaaramum neengum ellaam
      nampi vanthorukku
      thirupthi unndaayittu
      jeevaattin anntaikku
      vaa, paavi, vaa.
    2. meetparin paathamum seraavitil
      tholviyae naeridum poraattaththil
      Yesuvae vallavar,
      Yesuvae nallavar,
      Yesuvae aanndavar
      vaa, paavi, vaa.
    3. motchathithin paathaiyil munselluvaay
      sittinpa vaalvinil aen ulalvaay?
      vaadaatha kireedamum
      aanantha kalippum
      paer vaalvum peravum
      vaa, paavi, vaa.
    4. seruvaen, Yesuvae, aettukkolveer
      paavamum aravae suththamseyveer
      appaalae motchaththil
      aanannak kadalil
      moolkip paerinpaththil
      kempeerippaen.
  • Virumbathe Maname விரும்பாதே மனமே

    விரும்பாதே மனமே – உலக வாழ்வை
    விரும்பாதே மனமே – பதவி என

    தரும் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்
    கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை

    அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா
    மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும்

    பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்
    ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார்

    திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே
    அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும்

    பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்
    என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ

    லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு
    ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே

    நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
    களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு.


    Virumbathe Maname Lyrics in English
    virumpaathae manamae – ulaka vaalvai
    virumpaathae manamae – pathavi ena

    tharum perum sukam enaththaraiyin selvamathaik
    karumpa thaaka ennnnik kaathal minji athai

    akilam yaavukkum nee arasan aanaalum maa
    makimai niraintha oru maalikaiyil vaalnthaalum

    pelaththaal veeranenap paer geerththi atainthaalum
    jalaththin ottampolae kshanaththil olinthu povaar

    thittamaay nool kattuth thaerntha njaani ente
    attathikkilum un paer ishdam purinthaalum

    ponnum porulum untan pokkishamaanaalum
    enna pukalchchi entu ippothae veruththu nee

    loka aasthi ellaam kuppai enavae thallu
    aesu paran unakku aetta pokkisham thaanae

    nilalaip polae aekum nilaiyaach selvamathil
    kalikooraamal yaesu karththan pathaththaith thaedu.

  • Vinthai Kiristhaesu Raajaa விந்தை கிறிஸ்தேசு ராஜா!

    விந்தை கிறிஸ்தேசு ராஜா!
    உந்தன் சிலுவையென் மேன்மை (2)

    சுந்தரமிகும் இந்த பூவில்
    எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை

    1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
      செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
      குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
      உரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை
    2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
      ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
      துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
      தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை
    3. சென்னி, விலா, கை, கானின்று
      சிந்துதோ துயரோடன்பு,
      மன்னா இதைப் போன்ற காட்சி
      எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை
    4. இந்த விந்தை அன்புக்கீடாய்
      என்ன காணிக்கை ஈந்திடுவேன்
      எந்த அரும் பொருள் ஈடாகும்?
      என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை

    Vinthai Kiristhaesu Raajaa! Lyrics in English
    vinthai kiristhaesu raajaa!
    unthan siluvaiyen maenmai (2)

    suntharamikum intha poovil
    entha maenmaikal enakkiruppinum — vinthai

    1. thirannda aasthi, uyarntha kalvi
      selvaakkukal enakkiruppinum
      kurusai Nnokkip paarkka enakku
      uriya perumaikal yaavum arpamae — vinthai
    2. um kuruse aasikkellaam
      oottaாm vattaா jeeva nathiyaam
      thunga raththa oottil moolkith
      thooymaiyatainthae maenmaiyaakinaen — vinthai
    3. senni, vilaa, kai, kaanintu
      sinthutho thuyarodanpu,
      mannaa ithaip ponta kaatchi
      ennaalilumae engum kaanneen — vinthai
    4. intha vinthai anpukgeedaay
      enna kaannikkai eenthiduvaen
      entha arum porul eedaakum?
      ennai muttilum umakkalikkiraen — vinthai
  • Vinnoerkal Panpaata Innaalil விண்ணோர்கள் பண்பாட இந்நாளில்

    ஆ….ஆ….ஆ

    விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே |
    கன்னி மரி ஈன்ற மகன் |
    மண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாட|2
    அன்பாய் வந்த தேவ சுதன் |

    பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
    ஆலயம் கூடுவோம்
    பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
    ஆனந்தம் பாடுவோம்

    விண்மீனும் ஒளிக்காட்டிச் செல்ல |
    பொன் வேந்தர் வழி கண்டாரே |
    பாலன் முகம் கண்டு பணிந்து | 2
    காணிக்கை முன் வைத்தாரே |

    நெஞ்சங்கள் போற்ற நம் யேசு
    பாலன் பொற்பாதம் பணிந்திடுவோம்
    நீதியின் தேவன் தோன்றி விட்டரே
    அவர் துதி பாடிடுவோம் (விண்ணோ…)

    ஒளியாக உலகத்தில் வந்தார் |
    உள்ளத்தில் அமைதி தந்தார் |
    இருள் நீங்கி அருள் வாழ்வு மலர | 2
    இந்நிலம் தேடி வந்தார் |

    துன்பங்கள் போகும் இன்பங்கள் சேரும்
    இறைமகன் பிறந்து விட்டார்
    மானிடர் நம்மை விண்ணோராய் மாற்ற
    மனுமகன் தோன்றி விட்டார் (விண்ணோ..)


    Vinnoerkal Panpaata Innaalil Lyrics in English
    aa….aa….aa

    vinnnnorkal pannpaada innaalil vanthaarae |
    kanni mari eenta makan |
    mannnnorkal ponnaalaay innaalum konndaada|2
    anpaay vantha thaeva suthan |

    piranthaar piranthaar piranthaar piranthaar
    aalayam kooduvom
    piranthaar piranthaar piranthaar piranthaar
    aanantham paaduvom

    vinnmeenum olikkaattich sella |
    pon vaenthar vali kanndaarae |
    paalan mukam kanndu panninthu | 2
    kaannikkai mun vaiththaarae |

    nenjangal potta nam yaesu
    paalan porpaatham panninthiduvom
    neethiyin thaevan thonti vittarae
    avar thuthi paadiduvom (vinnnno…)

    oliyaaka ulakaththil vanthaar |
    ullaththil amaithi thanthaar |
    irul neengi arul vaalvu malara | 2
    innilam thaeti vanthaar |

    thunpangal pokum inpangal serum
    iraimakan piranthu vittar
    maanidar nammai vinnnnoraay maatta
    manumakan thonti vittar (vinnnno..)

  • Vinnoer Paatavae Mannoer Thaetavae விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே

    விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே
    மானுடர் மேல் பிரியமாய் மாபரன் தோன்றினார்.

    1. விண்ணின் செய்தி கேட்ட ஆயர்
      விண்ணோர் போல் கெம்பீரித்து
      கன்னிமரியிடம் பிறந்த பாலகனை
      கண்டு மகிழ்ந்து சென்றனர்.
    2. தூதர் சேனை பாடல் தொனிக்க
      துன்புறும் பசும் புல்லினில்
      இன்று ஜென்மித்த தெய்வ பாலனை
      இனிதே பாடி மகிழ்ந்தனர்.

    Vinnoer Paatavae Mannoer Thaetavae Lyrics in English
    vinnnnor paadavae mannnnor thaedavae
    maanudar mael piriyamaay maaparan thontinaar.

    1. vinnnnin seythi kaetta aayar
      vinnnnor pol kempeeriththu
      kannimariyidam pirantha paalakanai
      kanndu makilnthu sentanar.
    2. thoothar senai paadal thonikka
      thunpurum pasum pullinil
      intu jenmiththa theyva paalanai
      inithae paati makilnthanar.
  • Vinnnnorkal Pottum Aanndavaa விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா

    1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;
      பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்!
    2. நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,
      மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே!
    3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;
      நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே!
    4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,
      என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும்.
    5. உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?
      உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ?
    6. என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;
      என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்!
    7. மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்;
      உம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.

    Vinnnnorkal Pottum Aanndavaa Lyrics in English

    1. vinnnnorkal pottum aanndavaa, um maenmai arputham;
      palingupolath thontumae um kirupaasanam!
    2. niththiyaanantha thayaaparaa, alpaa omaekaavae,
      maa thooyar pottum aanndavaa raajaathi raajaavae!
    3. um njaanam thooymai vallamai alaviranthathae;
      neer thooyar, thooyar; unthanai thuthiththal inpamae!
    4. anpin soroopi thaevareer, naan paaviyaayinum,
      en neesa nenjaik kaetkireer um sonthamaakavum.
    5. ummaippol thayai mikuntha or thanthaiyum unntoo?
      ummaippol anpu niraintha thaaythaanum eenndunntoo?
    6. en paavamellaam manniththeer suththaangam nalkineer;
      en kuttamellaam thaangineer anpin piravaakam neer!
    7. maeloka niththiya paakkiyaththai naan pettu vaaluvaen;
      um thivviya inpa mukaththai kannnuttup poorippaen.
  • Vinnnnor Makilnthu Paadum Paadal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

    விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
    உன்னைத் தாலாட்ட
    மண்ணோர் உவந்து பாடும் பாடல்
    உன்னை வரவேற்க ஆ…

    1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
      வார்த்தை நீயன்றோ
      தேவ வாழ்வின் தூய மேன்மை
      ஏன் துறந்தாயோ
      எம் தாழ்ந்த உள்ளம் தன்னில்
      நீ வந்தருள்வாயோ
    2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
      வானவன் அறிவித்தான்
      தாவீதின் நகரில் மாமரி மடியில்
      மாபரன் பிறந்துள்ளார்
      நின் பாதம் தொழுதிட வந்தோம்
      எம் தாகம் தீர்ப்பாயோ
    3. கன்னித்தாயும் அவளது மடியில்
      உன்னைத் தாலாட்ட
      பன்னிரு நாளாய் காத்து
      நிற்கும் உவலயம் உனை வணங்க
      எம் வாழ்வின் இன்பம் பொழிய
      நின் வாழ்வை ஈந்தாயோ

    Vinnnnor Makilnthu Paadum Paadal Lyrics in English
    vinnnnor makilnthu paadum paadal
    unnaith thaalaatta
    mannnnor uvanthu paadum paadal
    unnai varavaerka aa…

    1. thanthai nenjil manjam konnda
      vaarththai neeyanto
      thaeva vaalvin thooya maenmai
      aen thuranthaayo
      em thaalntha ullam thannil
      nee vantharulvaayo
    2. maaperum makilvai valangum seythi
      vaanavan ariviththaan
      thaaveethin nakaril maamari matiyil
      maaparan piranthullaar
      nin paatham tholuthida vanthom
      em thaakam theerppaayo
    3. kanniththaayum avalathu matiyil
      unnaith thaalaatta
      panniru naalaay kaaththu
      nirkum uvalayam unai vananga
      em vaalvin inpam poliya
      nin vaalvai eenthaayo
  • Vinnilum Mannilum விண்ணிலும் மண்ணிலும்

    விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
    எனக்கு யாருண்டு? இந்த
    மண்ணுலகில் உம்மையன்றி வேற
    விருப்பம் எதுவுண்டு?

    நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
    உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்
    1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
      அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
      நன்றி ஐயா நாள் முழுதும்
      நல்லவரே வல்லவரே
    2. உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
      முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
    3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா……
      எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா
    4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
      உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்
    5. எனக்குள்ளே நீர் செயலாற்றிää மகிழ்கின்றீர்
      உம் சித்தம் செய்யää ஆற்றல் தருகின்றீர்

    Vinnilum Mannilum Lyrics in English
    vinnnnilum mannnnilum ummaiththavira
    enakku yaarunndu? intha
    mannnulakil ummaiyanti vaera
    viruppam ethuvunndu?

    neerthaanae en vaanjaiyellaam
    ummaiththaanae pattik konntaen
    1. ummodu thaan eppothum naan vaalkiraen
      appaa en valakkaram pitiththu thaangukireer
      nanti aiyaa naal muluthum
      nallavarae vallavarae
    2. um siththam pol ennai neer nadaththukireer
      mutivilae ennai makimaiyil aettukkolveer
    3. en ullaththin pelanae neerthaanayyaa……
      enakkuriya pangum ententum neerthaanayyaa
    4. ummaiththaanae naan ataikkalamaay konndullaen
      ummoduthaan vaalvathu en paakkiyam
    5. enakkullae neer seyalaattiää makilkinteer
      um siththam seyyaää aattal tharukinteer
  • Vinnil Oor Natchathiram Kanden விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்

    விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்

    1. விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
      அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்
      அதன் காரணம் என்னவென்று கேட்டேன்
      தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன்
      ஆ…ஆ…ஆ…

    அந்த பாலன் இயேசு ராஜன்
    அவர் பாதம் பணிவோம் (2)

    1. மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்
      அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்
      தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்
      இயேசுவை கண்டதையும் கேட்டேன்
      ஆ…ஆ…ஆ…
    2. ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்
      அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்
      இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர்
      தங்கள் தேசம் திரும்புவதை கண்டேன்
      ஆ…ஆ…ஆ…

    Vinnil Oor Natchathiram Kanden Lyrics in English
    vinnnnil or natchaththiram kanntaen

    1. vinnnnil or natchaththiram kanntaen
      athai ennnni viyappu mika konntaen
      athan kaaranam ennaventu kaettaen
      thaevan maanidan aanaar entarinthaen
      aa…aa…aa…

    antha paalan Yesu raajan
    avar paatham pannivom (2)

    1. manthai kaakkum maeyppar silar kanntaen
      avar vinthaiyaana seythi solla kaettaen
      thaeva thootharkal kooti paatiya paadalaiyum
      Yesuvai kanndathaiyum kaettaen
      aa…aa…aa…
    2. ottakaththil moovar sella kaettaen
      athai thittamaay ariya angu senten
      Yesuvai tharisiththa njaanikal moovar
      thangal thaesam thirumpuvathai kanntaen
      aa…aa…aa…
  • Vinnapathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே

    விண்ணப்பத்தைக் கேட்பவரே
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே

    சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்

    என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா

    குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்களை நடக்கச் செய்தீர்

    உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரமே


    Vinnapathai ketpavare Lyrics in English

    vinnnappaththaik kaetpavarae
    en kannnneeraik kaannpavarae
    sukam tharupavarae sthoththiram iyaesaiyaa

    ummaal koodum ellaam koodum
    oru vaarththai sonnaal pothum

    manathuruki karam neetti
    athisayam seypavarae

    siththam unndu suththamaaku
    entu solli sukamaakkineer

    en Nnoykalai siluvaiyilae
    sumanthu theerththeeraiyyaa

    kurudarkalai paarkkach seytheer
    mudavarkalai nadakkach seytheer

    um kaayaththaal sukamaanaen
    oru koti sthoththiramae