Author: admin

  • Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

    விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – அல்லேலூயா
    எழும்புது எழும்புது இயேசுவின் படை – துநளரள (2)
    துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
    துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)

    1. யோசுவாவின் சந்ததி நாமே
      தேசத்தை சுதந்தரிப்போமே (2)
      உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு
      ஊர் ஊராய் வலம் வருவோமே (2)
    2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
      கர்த்தர் தந்திடுவாரே (2)
      எதிர்த்து நிற்க எவராலுமே
      முடியாது என்று வாக்குரைத்தாரே
    3. மோசேயோடு இருந்தது போல
      சேனைகளின் கர்த்தர் நம்மோடு
      தளபதியாய் முன் செல்கிறார்
      தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்
    4. அச்சமின்றி துணிந்து செல்வோமே
      அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
      கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
      நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
    5. தேசத்து எதிரிகளெல்லாம்
      திகில் பிடித்து நடுங்குகின்றனர்
      கர்த்தர் செய்யும் அற்புதங்களை
      கேள்விப்பட்டு கலங்குகின்றனர்
    6. செங்கடலை வற்றச் செய்தவர்
      சீக்கிரத்தில் வெற்றி தருவார்
      யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
      பாரதத்தை ஆளுகை செய்வார்

    Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai Lyrics in English
    vilukuthu vilukuthu eriko kottaை – allaelooyaa
    elumputhu elumputhu Yesuvin patai – thunalarala (2)
    thuthippom saaththaanai jeyippom
    thuthippom thaesaththai sonthamaakkuvom (2)

    1. yosuvaavin santhathi naamae
      thaesaththai suthantharippomae (2)
      udanpatikkaip petti nammodu
      oor ooraay valam varuvomae (2)
    2. kaal mithikkum evvidaththaiyum
      karththar thanthiduvaarae (2)
      ethirththu nirka evaraalumae
      mutiyaathu entu vaakkuraiththaarae
    3. moseyodu irunthathu pola
      senaikalin karththar nammodu
      thalapathiyaay mun selkiraar
      thalarnthidaamal pin thodarvom
    4. achchaminti thunninthu selvomae
      arikkai seythu aarpparippomae
      karththar vaarththai nam vaayilae
      nichchayamaay vetti peruvom
    5. thaesaththu ethirikalellaam
      thikil pitiththu nadungukintanar
      karththar seyyum arputhangalai
      kaelvippattu kalangukintanar
    6. sengadalai vattach seythavar
      seekkiraththil vetti tharuvaar
      yorthaanai nirkach seythavar – nam
      paarathaththai aalukai seyvaar
  • Vizhiththiruppoem! Vaekam விழித்திருப்போம்! வேகம்

    விழிப்புடன் செயலாற்றுவோம்!

    விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!
    கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!
    இடைவிடாது ஜெபித்திடுவோம்!
    இந்தியரை நாம் சுதந்தரிப்போம்!

    1. விரைந்து நெருங்கிடும் அவர் வருகை
      விளைந்து நிற்கும் வயல் வெளிகள்
      தாமதிக்க இனி காலமில்லை
      சிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்!
    2. அத்தி மரமும் துளிர்த்ததே
      ஆண்டவர் வருகையும் நெருங்கியதே
      விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே
      களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்!
    3. இந்தியர் அனைவரும் நமது ஜனம்
      ஆண்டவர் இயேசுவின் பின்னே வர
      சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம்
      மங்கள நித்திய வாழ்வளிப்போம்!
    4. தூய்மை வாழ்வை அணிந்திருப்போம்
      தூயவர் வருகைக்குக் காத்திருப்போம்
      வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம்
      மங்கா விளக்காய் எரிந்திடுவோம்!

    Vizhiththiruppoem! Vaekam Lyrics in English
    vilippudan seyalaattuvom!

    viliththiruppom! vaekam ulaiththiduvom!
    kalinthidum naatkalai unarnthiduvom!
    itaividaathu jepiththiduvom!
    inthiyarai naam suthantharippom!

    1. virainthu nerungidum avar varukai
      vilainthu nirkum vayal velikal
      thaamathikka ini kaalamillai
      siluvai veerarae aarththeluveer!
    2. aththi maramum thulirththathae
      aanndavar varukaiyum nerungiyathae
      vithaiththavar munnor aruppavar naamae
      kalanjiyam serppom virainthiduvom!
    3. inthiyar anaivarum namathu janam
      aanndavar Yesuvin pinnae vara
      suviseshath theepam aettivaippom
      mangala niththiya vaalvalippom!
    4. thooymai vaalvai anninthiruppom
      thooyavar varukaikkuk kaaththiruppom
      vanjakap paeyinai jeyiththiduvom
      mangaa vilakkaay erinthiduvom!
  • Visuvasa Kappal Ondru விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

    விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
    புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
    அசைந்தாடி செல்கின்றது – (2)
    அக்கரை நோக்கி – (2)

    1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
      பாரச்சுமையோடு செல்கின்றது
      பரபரப்போடே செல்கின்றது
      பரமன் வாழும் பரம் நோக்கி
      ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
    2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
      அலைவந்து மோதியும் செல்கின்றது
      ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
      ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
      ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
    3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
      நீண்ட பயணமாக செல்கின்றது
      நிலைப் பலமாக செல்கின்றது
      நிரந்தரமான இடத்தைக் காண
      ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

    Visuvasa Kappal Ondru Lyrics in English
    visuvaasak kappal ontu selkintathu
    puyal vantha pothum thental veesum pothum
    asainthaati selkintathu – (2)
    akkarai Nnokki – (2)

    1. parantha samuththiraththil selkintathu
      paarachchumaiyodu selkintathu
      paraparappotae selkintathu
      paraman vaalum param Nnokki
      aelo – aelaelo – (6) aa – aa
    2. aalam nirai kadalil selkintathu
      alaivanthu mothiyum selkintathu
      aarpparippotae selkintathu
      aanndavar atharku maalumiyaam
      aelo – aelaelo – (6) aa – aa
    3. neetiya porumaiyotae selkintathu
      neennda payanamaaka selkintathu
      nilaip palamaaka selkintathu
      nirantharamaana idaththaik kaana
      aelo – aelaelo – (6) aa – aa
  • Visuvaasiyin Kaadhil Pada Yesu Vendra Naamam விசுவாசியின் காதில்பட யேசுவென்ற நாமம்

    விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்
    விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.

    1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;
      முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு
    2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;
      பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு
    3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
      மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு
    4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
      எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு
    5. என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,
      என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. — விசு

    Visuvaasiyin Kaadhil Pada Yesu Vendra Naamam Lyrics in English

    visuvaasiyin kaathilpada, yaesuventa naamam
    viruppaayavar seviyil thoni inippaakuthu paasam.

    1. pasiththa aaththumaavaip pasiyaattu mannaavathuvae;
      musippaaruthal ilaiththorkkellaam muttum anthap peyarae. — visu
    2. thuyaraiyathu neekkik kaayamaattik kunappaduththum;
      payangal yaavum yaesuvental paranthotiyae pokum. — visu
    3. kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum,
      maayaikonnda nenjaiyathu mayakkamintividukkam. — visu
    4. ellai illaak kirupaiththiral aettunirainthirukkum,
      ellaa naalum maaraachchelvam yaesuventa peyarae. — visu
    5. ennaanndavaa, en jeevanae, en maarkkamae, mutivae,
      ennaal varunthuthiyai neerae aettukkollum, thaevae. — visu
  • Visuvaasathal Neethiman Pilaippan விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

    விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்
    விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

    1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு
      விஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு
    2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்
      செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு
    3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்
      சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு
    4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்
      மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு
    5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்
      பாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு
    6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய
      பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு

    Visuvaasathal Neethiman Pilaippan Lyrics in English

    visuvaasaththaal neethimaan pilaippaan; – mey
    visuvaasamullavan thaan thalaippaan.

    1. nisamaaka naam paavaththinil piranthor; – mulu
      vishamaana paavaththinaal iranthor. — visu
    2. uyyum vakaiyariyom; pelanaeyillai; – narar
      seyyum kiriyaikalil nalanaeyillai. — visu
    3. paavak kadanolikkap palamae yattaோm; – ech
      saapam alivinukkam thakaimai yuttaோm. — visu
    4. thaevan kirupaiyonte namaip paarkkum; – avar
      maavanpae paavikalin kadan theerkkum. — visu
    5. neethimaanaik kuttanjaatta yaaraalaeyaakum? – avan
      paathakam palimaranam, yaavumae pokum. — visu
    6. thaevanin pillai naanente avan thulluvaan; – theeya
      paava valithanaip pakaiththae thalluvaan. — visu
  • Visuvaasamey Nam Jeyamey விசுவாசமே நம் ஜெயமே

    விசுவாசமே நம் ஜெயமே
    விலை மதியா தோர்
    நல் பொக்கிஷமே
    விசுவாசமாம் கேடகம் தாங்கி
    விசுவாச பாதையில் முன்னேறுவோம்

    1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும்
    மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி
    வருத்தம் போராட்டம் வந்தும்
    விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்

    2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே
    ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்
    விசுவாசத்தாலே முன்னேறியே நாம்
    வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம்

    3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை
    விசுவாச வீரர்கள் இழந்தனரே
    நல்ல போராட்டம் போராடியே
    நாம் விசுவாசத்தை என்றும்
    காத்துக் கொள்வோம்

    4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்
    திடமான மனதுடன் நிலைத்திருப்போம்
    வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம்
    பின் செல்லுவோம்

    5.பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே
    நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம்
    இயேசுவை நோக்கி சீராக ஓடி
    விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்


    Visuvaasamey Nam Jeyamey Lyrics in English
    visuvaasamae nam jeyamae
    vilai mathiyaa thor
    nal pokkishamae
    visuvaasamaam kaedakam thaangi
    visuvaasa paathaiyil munnaeruvom

    1.malai ponta thunpangal nerungitinum
    malaiyaathae yaavum akantidumae viyaathi
    varuththam poraattam vanthum
    visuvaasaththaal naamum jeyamataivom

    2.erikovin mathilkal thakarnthidavae
    aekich sentan pakthan yosuvaavum
    visuvaasaththaalae munnaeriyae naam
    vallavar pelaththaal ventiduvom

    3.visuvaasam kaaththida tham jeevanai
    visuvaasa veerarkal ilanthanarae
    nalla poraattam poraatiyae
    naam visuvaasaththai entum
    kaaththuk kolvom

    4.visuvaasa nampikkai arikkaiyilum
    thidamaana manathudan nilaiththiruppom
    vaakku maaraatha karththarai nithamum visuvaasaththodu naam
    pin selluvom

    5.paavangal paarangal akattidavae
    naam parisuththar sinthaiyai anninthiduvom
    Yesuvai Nnokki seeraaka oti
    visuvaasa ottaththai mutiththiduvom

  • Visuvaasam Perukita Vaentum விசுவாசம் பெருகிட வேண்டும்

    விசுவாசம் பெருகிட வேண்டும்
    நிலைத்தே நின்றிட வேண்டும்
    இயேசுவைப் பணிந்திட வேண்டும்
    நீடூழி காலமாய் மீண்டும்

    1. அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
      பாவத்தின் விலங்குகள் காரணமோ
      மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
      உலக மாமிச மயக்கம் தானோ
    2. ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
      மறைவான பாவங்கள் காரணமோ
      வீணான கேள்விகள் எழுப்புவதேனோ
      வேதத்தில் பற்றில்லாத தாலோ
    3. வாழ்வில் மந்தாரம் ஏனோ
      விசுவாசத் துரோகம் காரணமோ
      அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
      உலகின் மீதுள்ள நாட்டம்தானோ

    Visuvaasam Perukita Vaentum Lyrics in English
    visuvaasam perukida vaenndum
    nilaiththae nintida vaenndum
    Yesuvaip panninthida vaenndum
    neetooli kaalamaay meenndum

    1. arinthor arivikkaathu aeno
      paavaththin vilangukal kaaranamo
      meenndum meenndum viluvathu aeno
      ulaka maamisa mayakkam thaano
    2. jepaththil thalarchchi aeno
      maraivaana paavangal kaaranamo
      veennaana kaelvikal eluppuvathaeno
      vaethaththil pattillaatha thaalo
    3. vaalvil manthaaram aeno
      visuvaasath thurokam kaaranamo
      alaippil asattaை konndathaeno
      ulakin meethulla naattamthaano
  • Visuvaasak Kuuttamae விசுவாசக் கூட்டமே

    விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்
    விசுவாசம் உலகையே அசைத்திடுமே

    கால்கள் முடக்கித் தொழுதிடுவோம்
    நாவால் அறிக்கைசெய்திடுவோம்
    இயேசுவே கர்த்தரென்று – நம்

    1. ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்
      வேதம் என்றுமே நல் தீபமாகட்டும்
      பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்
      வெற்றி வாழ்க்கையே நம் ஆவலாகட்டும்
    2. அச்சம் என்பது நம் வீழ்ச்சியாகட்டும்
      துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்
      அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்
      இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும்
    3. அசதி என்பது நம் தோல்வி அல்லவா
      விழித்து எழுவது நம் கடமை அல்லவா
      தேசம் மடிவதை நாம் பார்க்கலாகுமா
      விரைந்து மீட்பதே நம் பொறுப்பல்லவா

    Visuvaasak Kuuttamae Lyrics in English
    visuvaasak koottamae ontu serungal – nam
    visuvaasam ulakaiyae asaiththidumae

    kaalkal mudakkith tholuthiduvom
    naavaal arikkaiseythiduvom
    Yesuvae karththarentu – nam

    1. jepam enpathu nam moochchaாkattum
      vaetham entumae nal theepamaakattum
      paavam entumae nam ethiriyaakattum
      vetti vaalkkaiyae nam aavalaakattum
    2. achcham enpathu nam veelchchiyaakattum
      thunninthu selvathae nam vettiyaakattum
      anal nirainthathu nam vaalkkaiyaakattum
      Yesu kiristhuvae nam mulakkamaakattum
    3. asathi enpathu nam tholvi allavaa
      viliththu eluvathu nam kadamai allavaa
      thaesam mativathai naam paarkkalaakumaa
      virainthu meetpathae nam poruppallavaa
  • Visuvaasai Avnentrum Patharaan விசுவாசி அவனென்றும் பதறான்

    விசுவாசி அவனென்றும் பதறான் – 2
    அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு
    ஆபத்தை கண்டென்றும் அஞ்சான்
    அசையாத விசுவாசம் கொள்வான்
    இசையோடு இயேசுவை புகழ்வான்

    1. ஆபிரகாம் விசுவாசித்தான்
      ஈசாக்கை பலியாக படைத்திட்டானே
      – 2 மரித்தாலும் விசுவாசி
      பிழைத்திடுவான் மரியாமலும்
      என்றும் வாழ்ந்திடுவான் -2
    2. விசுவாசித்தால் மகிமையை
      காண்பாய் வெற்றியுடன் என்றும்
      வாழ்ந்திடலாம் பாவம் நம்மை
      மேற்கொள்ளாமல் பரன் ஈந்து
      ஆவியால் காத்திடுவார்
    3. போராட்டம் இன்று
      வந்திட்டாலும் இயேசுவில்
      நின்று நிலைத்திடுவேன்
      விசுவாசத்தால் நான்
      பிழைத்திடுவேன் நம்பும் என்

    தேவனை நான் அறிவேன்!


    Visuvaasai Avnentrum Patharaan Lyrics in English
    visuvaasi avanentum patharaan – 2
    avan nangaூram Yesuvil unndu
    aapaththai kanndentum anjaan
    asaiyaatha visuvaasam kolvaan
    isaiyodu Yesuvai pukalvaan

    1. aapirakaam visuvaasiththaan
      eesaakkai paliyaaka pataiththittanae
      – 2 mariththaalum visuvaasi
      pilaiththiduvaan mariyaamalum
      entum vaalnthiduvaan -2
    2. visuvaasiththaal makimaiyai
      kaannpaay vettiyudan entum
      vaalnthidalaam paavam nammai
      maerkollaamal paran eenthu
      aaviyaal kaaththiduvaar
    3. poraattam intu
      vanthittalum Yesuvil
      nintu nilaiththiduvaen
      visuvaasaththaal naan
      pilaiththiduvaen nampum en
      thaevanai naan arivaen!
  • Virunthu Vaippoemae Nalla Virunthu விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே

    அல்-லே-லுயா அல்லேலுயா (2)

    விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
    ஜாதிமதம் பேதமின்றி அனைவருக்கும் நல்லதொரு
    கிறிஸ்மஸ் விருந்து வைப்போமே – அல்-லே-லுயா

    1. பெத்தலையில் பிறந்தாரே அல்லேலுயா
      மாட்டுக்கொட்டிலில் பிறந்தாரே அல்லேலுயா
      பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே
      மாட்டுக்கொட்டில் பிறந்தவரை போற்றி துதிமனமே
      மாட்டுக்கொட்டில் ஏழ்மை கோலம்
      தாழ்மையுள்ள முன்னணையில் நீர் பிறந்தீரே
      விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே (2)
      பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே – விருந்து
    2. ஆயர் பாலர் தேடினர் அல்லேலுயா
      பாலன் இயேசு தோன்றினார் அல்லேலுயா
      கன்னி மகவாய் பிறந்தவரை போற்றி துதிமனமே
      ஏழ்மை கோலம் ஏற்றவரை போற்றி துதிமனமே
      மேய்ப்பர்களும் ஞானியரும்
      வந்தும்மை பணிந்து தொழுதனரே
      அன்று சொன்ன தீர்க்கனின் மொழி நிறைவேறுதே (2)
      பாவம் போக்கவே நீர் பிறந்தீரே – விருந்து
    3. ஆடுவதும் பாடுவதும் கிறிஸ்மஸ் ஆகுமோ
      உண்டு உடுத்தி மகிழ்ந்து விட்டால் கடமை தீருமோ
      இயேசுவை போல் கிறிஸ்தவர்கள் அன்புகாட்டனும்
      கிறிஸ்தவரின் தாழ்மை இந்த உலகம் போற்றனும்
      உன்னைப்பார்த்து உலகில் வாழும் மக்கள் திருந்தனும்
      உனது உருவில் இயேசு இந்த உலகம் பார்க்கனும் – விருந்து

    Virunthu Vaippoemae Nalla Virunthu Lyrics in English
    al-lae-luyaa allaeluyaa (2)

    virunthu vaippomae nalla virunthu vaippomae
    jaathimatham paethaminti anaivarukkum nallathoru
    kirismas virunthu vaippomae – al-lae-luyaa

    1. peththalaiyil piranthaarae allaeluyaa
      maattukkottilil piranthaarae allaeluyaa
      peththalaiyil piranthavarai potti thuthimanamae
      maattukkottil piranthavarai potti thuthimanamae
      maattukkottil aelmai kolam
      thaalmaiyulla munnannaiyil neer pirantheerae
      vinnnulakam thurantheerae mannnulakam meettirae (2)
      paavam pokkidavae neer pirantheerae – virunthu
    2. aayar paalar thaetinar allaeluyaa
      paalan Yesu thontinaar allaeluyaa
      kanni makavaay piranthavarai potti thuthimanamae
      aelmai kolam aettavarai potti thuthimanamae
      maeypparkalum njaaniyarum
      vanthummai panninthu tholuthanarae
      antu sonna theerkkanin moli niraivaeruthae (2)
      paavam pokkavae neer pirantheerae – virunthu
    3. aaduvathum paaduvathum kirismas aakumo
      unndu uduththi makilnthu vittal kadamai theerumo
      Yesuvai pol kiristhavarkal anpukaattanum
      kiristhavarin thaalmai intha ulakam pottanum
      unnaippaarththu ulakil vaalum makkal thirunthanum
      unathu uruvil Yesu intha ulakam paarkkanum – virunthu