Author: admin

  • Theeyor Solvathai Kelaamal தீயோர் சொல்வதைக் கேளாமல்

    1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
      பாவத்துக்கு விலகி,
      பரிகாசரைச் சேராமல்
      நல்லோரோடு பழகி,
      கர்த்தர் தந்த வேதம் நம்பி
      வாஞ்சை வைத்து, அதைத்தான்
      ராப் பகலும் ஓதும் ஞானி
      என்றும் வாழும் பாக்கியவான்.
    2. நதி ஓரத்தில் வாடாமல்
      நடப்பட்டு வளர்ந்து,
      கனி தந்து, உதிராமல்
      இலை என்றும் பசந்து,
      காற்றைத் தாங்கும் மரம்போல
      அசைவின்றியே நிற்பான்;
      அவன் செய்கை யாவும் வாய்க்க
      ஆசீர்வாதம் பெறுவான்.
    3. தீயோர், பதர்போல் நில்லாமல்
      தீர்ப்பு நாளில் விழுவார்;
      நீதிமான்களோடிராமல்
      நாணி நைந்து அழிவார்;
      இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
      பாவ பலன் நாசந்தான்;
      நீதிமான் இங்கழுதாலும்
      கர்த்தர் வீட்டில் வாழுவான்.

    Theeyor Solvathai Kelaamal Lyrics in English

    1. theeyor solvathaik kaelaamal
      paavaththukku vilaki,
      parikaasaraich seraamal
      nallorodu palaki,
      karththar thantha vaetham nampi
      vaanjai vaiththu, athaiththaan
      raap pakalum othum njaani
      entum vaalum paakkiyavaan.
    2. nathi oraththil vaadaamal
      nadappattu valarnthu,
      kani thanthu, uthiraamal
      ilai entum pasanthu,
      kaattaைth thaangum marampola
      asaivintiyae nirpaan;
      avan seykai yaavum vaaykka
      aaseervaatham peruvaan.
    3. theeyor, patharpol nillaamal
      theerppu naalil viluvaar;
      neethimaankalotiraamal
      naanni nainthu alivaar;
      ingae paavi makilnthaalum,
      paava palan naasanthaan;
      neethimaan ingaluthaalum
      karththar veettil vaaluvaan.
  • Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன

    தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
    நேய ஆவியே

    1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
      பாவி நான் – தீய
    2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
      தீர்க்கும், தஞ்சமே – தீய
    3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
      பாவி நான் ஐயா – தீய
    4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
      இதயம் அஞ்சவே – தீய
    5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
      புகழ்ந்து காக்கவே – தீய
    6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
      கிருபை தேடவே – தீய
    7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
      தெளிவு வேண்டவே – தீய
    8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
      சிறப்பாய் ஏற்றவே – தீய

    Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் Lyrics in English
    Theeya Manathai Matra Varum
    theeya manathai maatta vaarum, thooya aaviyae – kana
    naeya aaviyae

    1. maayapaasath thalunthi vaati maalunj saavithaal – mika maayum
      paavi naan – theeya
    2. theemai seyya naaduthentan thirukku nenjamae – marul
      theerkkum, thanjamae – theeya
    3. paraththai Nnokka manam attenae, pathatithaan, aiyaa – oru
      paavi naan aiyaa – theeya
    4. aekkaththoden meetpaith thaeti iranthu kenjavae – thinam
      ithayam anjavae – theeya
    5. puthiya sinthai, puthiya aasai puthuppiththaakkavae – athaip
      pukalnthu kaakkavae – theeya
    6. kiristhu meethu naattang konndu geetham paadavae – avar
      kirupai thaedavae – theeya
    7. thaeva vasanap paalinmeethu thaettam thontavae – miku
      thelivu vaenndavae – theeya
    8. jepaththin thaakam akaththil oori jepiththup pottavae – mika
      sirappaay aettavae – theeya
  • Theevinai Seiyathe Maa Sothanaiyil தீவினை செய்யாதே மா சோதனையில்

    தீவினை செய்யாதே மா சோதனையில்

    பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்

    வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்

    யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

    ஆற்றித் தேற்றியே காப்பார்

    நித்தம் உதவி செய்வார்

    மீட்பர் பலனை ஈவார்

    ஜெயம் தந்திடுவார்

    வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்

    சேராமலே நீங்கி நல்வழியிலும்

    நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்

    யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

    மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான்

    பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான்

    மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்

    யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்


    Theevinai Seiyathe Maa Sothanaiyil Lyrics in English
    theevinai seyyaathae maa sothanaiyil

    pollaanganai ventu poraattaththinil

    veenn aasaiyai muttum geeladakkuvaay

    yaesaiyarai nampi ventekippovaay

    aattith thaettiyae kaappaar

    niththam uthavi seyvaar

    meetpar palanai eevaar

    jeyam thanthiduvaar

    veenn vaarththai paesaamal veenn tholaraiyum

    seraamalae neengi nalvaliyilum

    nintaூkkamum anpum sattenum vidaay

    yaesaiyarai nampi ventekippovaay

    mey nampikkaiyaalae ventekinon thaan

    porkireedam pettentum paervaalvataivaan

    maa naesarin pelan saarnthae selluvaay

    yaesaiyarai nampi ventekippovaay

  • Theeraatha Thaakaththaal தீராத தாகத்தால்

    1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
      ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.
    2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
      நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.
    3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
      மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.
    4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
      உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.
    5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
      மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.
    6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
      என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

    Theeraatha Thaakaththaal Lyrics in English

    1. theeraatha thaakaththaal en ullam thoynthathae,
      aa, jeeva thannnneeraal thaettum nal meetparae.
    2. vidaayththa poomiyil en pasi aattumae;
      neer poshikkaavitil, thikkattuch saavaenae.
    3. theyveeka pojanam, mey mannaa thaevareer,
      mannnnorin amirtham en jeeva oottu neer.
    4. um thooya raththaththaal em paavam pokkineer,
      um thiru maamsaththaal aanmaavaip poshippeer.
    5. maa thivviya aikkiyaththai ithaal unndaakkuveer;
      maelaana paakkiyaththai aeraalamaakkuveer.
    6. ivvarul panthiyil pirasannamaakumae;
      en aelai nenjaththil eppothum thangumae.
  • Theduven Athikalai Nerame தேடுவேன் அதிகாலை நேரமே

    தேடுவேன் அதிகாலை நேரமே
    நாடுவேன் என்றும் உந்தன் பாதமே
    நாளெல்லாம் உம்மையே தேடுவேன்
    கன்மலை உம்மையே நாடுவேன்

    அல்லேலூயா
    ஆராதிப்பேன் ஆரதிப்பேன்

    கிருபை உள்ளவரே
    தயவு நிறைந்தவரே
    காலை தோறும் கிருபை
    புதிதாக தானே நீர் பொழிகின்றீரே
    மாலை புலம்பல்கள் எல்லாம்
    களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்
    அல்லேலூயா

    இரக்கம் உள்ளவரே
    உருக்கம் நிறைந்தவரே
    உலகின் எல்லைகள் எங்கும்
    உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே
    சுவாசம் உள்ள வரைக்கும்
    உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்
    அல்லேலூயா


    Theduven athikalai nerame Lyrics in English
    thaeduvaen athikaalai naeramae
    naaduvaen entum unthan paathamae
    naalellaam ummaiyae thaeduvaen
    kanmalai ummaiyae naaduvaen

    allaelooyaa
    aaraathippaen aarathippaen

    kirupai ullavarae
    thayavu nirainthavarae
    kaalai thorum kirupai
    puthithaaka thaanae neer polikinteerae
    maalai pulampalkal ellaam
    kalippaaka maatti neer nadaththukinteer
    allaelooyaa

    irakkam ullavarae
    urukkam nirainthavarae
    ulakin ellaikal engum
    umakkaaka saatchiyaay sentiduvaenae
    suvaasam ulla varaikkum
    ummaiyae naan paati aaraathippaen
    allaelooyaa

  • Thedi Yesu Vanthar தேடி இயேசு வந்தார்

    தேடி இயேசு வந்தார்
    என்னைத் தேற்றி வாழ வைத்தார்

    1. கண்ணீர் கடலினிலே
      நான் கதறி மூழ்கையிலே
      கர்த்தர் தம் கரம் நீட்டினார்
      என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
    2. பாவச் சேற்றினிலே
      நான் மூழ்கிப் போகையிலே
      கல்வாரி இரத்தத்தாலே
      கழுவி மீட்டுக் கொண்டார்
    3. நோயின் பிடியினிலே
      நான் வாடித் தவிக்கையிலே
      இயேசுவின் தழும்புகளால்
      சுகமானேன் சுகமானேன் – நான்
    4. எத்தனை ஆண்டுகளோ – நான்
      இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
      மகராஜன் இயேசு வந்தார்
      மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

    Thedi Yesu Vanthar Lyrics in English
    thaeti Yesu vanthaar
    ennaith thaetti vaala vaiththaar

    1. kannnneer kadalinilae
      naan kathari moolkaiyilae
      karththar tham karam neettinaar
      en kannnneerellaam thutaiththaar
    2. paavach settinilae
      naan moolkip pokaiyilae
      kalvaari iraththaththaalae
      kaluvi meettuk konndaar
    3. Nnoyin pitiyinilae
      naan vaatith thavikkaiyilae
      Yesuvin thalumpukalaal
      sukamaanaen sukamaanaen – naan
    4. eththanai aanndukalo – naan
      ishdam pol vaalnthu vanthaen
      makaraajan Yesu vanthaar
      makanaay aettuk konndaar -ennai
  • Thedi Vantha Deivam Yesu தேடிவந்த தெய்வம் இயேசு என்னை

    தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
    தேடி வந்த தெய்வம் இயேசு
    வாடி நின்ற என்னையே வாழவைத்திட
    தேடி வந்த தெய்வம் இயேசு

    1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
      ஆவி பொழிந்து என்னையே
      தாவி அணைத்திட்டார்
      அன்பே அவரின் பெயராம்
      அருளே அவரின் மொழியாம்
      இருளே போக்கும் ஒளியாம்
    2. இயேசு என்னில் இருக்கிறார்
      என்ன ஆனந்தம்
      இருளும் புயலும் வரட்டுமே
      இதயம் கலங்குமோ
      இறைவா இயேசு தேவா
      இதயம் மகிழ்ந்து பாடும்
      என்றும் உம்மை நாடும்

    Thedi Vantha Deivam Yesu Lyrics in English
    thaetivantha theyvam Yesu – ennai
    thaeti vantha theyvam Yesu
    vaati ninta ennaiyae vaalavaiththida
    thaeti vantha theyvam Yesu

    1. paaviyaaka iruntha en paavam pokkittar
      aavi polinthu ennaiyae
      thaavi annaiththittar
      anpae avarin peyaraam
      arulae avarin moliyaam
      irulae pokkum oliyaam
    2. Yesu ennil irukkiraar
      enna aanantham
      irulum puyalum varattumae
      ithayam kalangumo
      iraivaa Yesu thaevaa
      ithayam makilnthu paadum
      entum ummai naadum
  • Thayinum Melai Enmel தாயினும் மேலாய் என்மேல்

    தாயினும் மேலாய் என்மேல்
    அன்பு வைத்தவர் நீரே
    ஒரு தந்தையைப் போல
    என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே

    என் உயிரோடு கலந்தவரே
    உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
    உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
    உமக்காக எதையும் செய்வேன்

    கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
    உம் கரம் பிடிப்பேன்
    எனைக் காக்கும் கரமதை
    நழுவவிடாமல் முத்தம் செய்வேன்

    எந்தன் கால்கள் இடறும் போது
    விழுந்திட மாட்டேன் – உம்
    தோளின் மீது ஏறிக்கொண்டு
    பயணம் செய்வேன்


    Thayinum Melai Enmel Lyrics in English
    Thayinum Melai Enmel
    thaayinum maelaay enmael
    anpu vaiththavar neerae
    oru thanthaiyaip pola
    ennaiyum aattith thaettitiveerae

    en uyirodu kalanthavarae
    um uravaalae makilnthiduvaen
    un mael anpu vaiththaen -naan
    umakkaaka ethaiyum seyvaen

    kaividappatta naerangalellaam
    um karam pitippaen
    enaik kaakkum karamathai
    naluvavidaamal muththam seyvaen

    enthan kaalkal idarum pothu
    vilunthida maattaen – um
    tholin meethu aerikkonndu
    payanam seyvaen

  • Thayin Madithaan Ulagam தாயின் மடிதான் உலகம்

    தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் – 2

    அவள் சேயின் மடிதான் மோட்சம்

    நம் சேசுவைத் தொழுதிடுவோம் – 2

    பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் – 2

    அவள் உள்ளம் என்றும் மகிழ

    உண்மை வழியில் நாம் நடப்போம்

    அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் – 2

    அன்பு கருணை உருவாய்

    ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

    வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் – 2

    தங்க நிலாவின் ஒளியால்

    தாரகை சூடும் ஆரோக்கியமாதா


    Thayin Madithaan Ulagam Lyrics in English
    thaayin matithaan ulakam aval thaalaip panninthiduvom – 2

    aval seyin matithaan motcham

    nam sesuvaith tholuthiduvom – 2

    pillai entum vaala nallathu ellaam tharuvaal – 2

    aval ullam entum makila

    unnmai valiyil naam nadappom

    annai mariyaal ullam aalam kaannaak kadalaam – 2

    anpu karunnai uruvaay

    aanndavan thantha arumporulaam

    vangak kadarkarai yoram vaelaangannnniyil vaalum – 2

    thanga nilaavin oliyaal

    thaarakai soodum aarokkiyamaathaa

  • Thayapara Rani Thatchanam Allrani தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
    தலைபணி ஜெயராணி –2

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
    விமரிசை புரிராணி –2

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    வங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்
    குதுகலி மகாராணி –2

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    ஆந்திரம் குடகம் அகில மராட்டம்
    ஆண்டிடும் மகாராணி — 2


    Thayapara Rani Thatchanam Allrani Lyrics in English
    thayaapara raanni thatchanam aalraanni
    thannnarum senthamil thenmunaik kumariyum
    thalaipanni jeyaraanni –2

    thayaapara raanni thatchanam aalraanni
    vennpani imayam vellamaar kangai
    vimarisai puriraanni –2

    thayaapara raanni thatchanam aalraanni
    vangamaar kalingam konganam malaiyaalam
    kuthukali makaaraanni –2

    thayaapara raanni thatchanam aalraanni
    aanthiram kudakam akila maraattam
    aanndidum makaaraanni — 2