Author: admin

  • Sathiyamullavarai Naan Aradhippen சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்

    சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்
    நித்தியமானவரை நான் ஆராதிப்பேன்
    சஞ்சலமும் தவிப்பும் என்னை விட்டு ஓடி போனதே
    நித்திய மகிழ்ச்சி எந்தன் தலை மேலே வந்ததே

    மகிழுவேன் நான் மகிழுவேன்
    கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
    புகழுவேன் நான் புகழுவேன்
    இயேசுவை அனுதினமும் புகழுவேன்

    என்னால தாங்க முடியல
    என்னால நடக்க முடியல
    என்ற நிலைமை எனக்கு
    இப்போ இல்ல இல்ல – காரணம்
    கர்த்தர் என்னை ஏந்திகொண்டார்
    கர்த்தர் என்னை சுமந்துகொண்டார்
    கர்த்தர் என்னை தாங்கிகொண்டார்
    கர்த்தர் என்னை தப்புவித்தார்

    மகிழுவேன் நான் மகிழுவேன்
    கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
    புகழுவேன் நான் புகழுவேன்
    இயேசுவை அனுதினமும் புகழுவேன்

    என்னால எதுவும் முடியல
    என்னால ஒன்னும் முடியல
    என்ற நிலைமை எனக்கு
    இப்போ இல்ல இல்ல – காரணம்
    என்னை பெலப்படுத்துகிற
    இயேசு கிறிஸ்துவினால்
    எல்லாமே செய்து முடிக்க
    எனக்கவர் பெலன் கொடுத்தார்

    மகிழுவேன் நான் மகிழுவேன்
    கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
    புகழுவேன் நான் புகழுவேன்
    இயேசுவை அனுதினமும் புகழுவேன்

    என்னால கடக்க முடியல
    என்னால தாண்ட முடியல
    என்ற நிலைமை எனக்கு
    இப்போ இல்ல இல்ல – காரணம்
    கர்த்தர் என்னை தோளில் வைத்தார்
    மலைகளை தாண்ட வைத்தார்
    மான் கால்கள் போல என்னை
    வேகமாய் ஓட வைத்தார்

    மகிழுவேன் நான் மகிழுவேன்
    கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
    புகழுவேன் நான் புகழுவேன்
    இயேசுவை அனுதினமும் புகழுவேன்


    Sathiyamullavarai Naan Aradhippen Lyrics in English
    saththiyamullavarai naan aaraathippaen
    niththiyamaanavarai naan aaraathippaen
    sanjalamum thavippum ennai vittu oti ponathae
    niththiya makilchchi enthan thalai maelae vanthathae

    makiluvaen naan makiluvaen
    karththarukkul anuthinamum makiluvaen
    pukaluvaen naan pukaluvaen
    Yesuvai anuthinamum pukaluvaen

    ennaala thaanga mutiyala
    ennaala nadakka mutiyala
    enta nilaimai enakku
    ippo illa illa – kaaranam
    karththar ennai aenthikonndaar
    karththar ennai sumanthukonndaar
    karththar ennai thaangikonndaar
    karththar ennai thappuviththaar

    makiluvaen naan makiluvaen
    karththarukkul anuthinamum makiluvaen
    pukaluvaen naan pukaluvaen
    Yesuvai anuthinamum pukaluvaen

    ennaala ethuvum mutiyala
    ennaala onnum mutiyala
    enta nilaimai enakku
    ippo illa illa – kaaranam
    ennai pelappaduththukira
    Yesu kiristhuvinaal
    ellaamae seythu mutikka
    enakkavar pelan koduththaar

    makiluvaen naan makiluvaen
    karththarukkul anuthinamum makiluvaen
    pukaluvaen naan pukaluvaen
    Yesuvai anuthinamum pukaluvaen

    ennaala kadakka mutiyala
    ennaala thaannda mutiyala
    enta nilaimai enakku
    ippo illa illa – kaaranam
    karththar ennai tholil vaiththaar
    malaikalai thaannda vaiththaar
    maan kaalkal pola ennai
    vaekamaay oda vaiththaar

    makiluvaen naan makiluvaen
    karththarukkul anuthinamum makiluvaen
    pukaluvaen naan pukaluvaen
    Yesuvai anuthinamum pukaluvaen

  • Sathiya Vedathai Dhinam Dhiyani சத்திய வேதத்தைத் தினம் தியானி

    சத்திய வேதத்தைத் தினம் தியானி
    சகல பேர்க்கும் அதபிமானி

    அனுபல்லவி

    உத்தமஜீவிய வழிகாட்டும்

    உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய

    சரணங்கள்

    1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
      வயோதியர்க்கும் அதுணவாகும்
      பாலகர்க்கினிய பாலும் அதாம்
      படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய
    2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
      தருணம் அதுநல் ஆயுதமாம்
      புத்திரர் மித்திரரோடு மகிழும்
      பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய
    3. புலைமேவிய மானிட ரிதயம்
      புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
      நிலையா நரர்வாணாள் நிலைக்க
      நேயகாய கற்பம் அதாம் — சத்திய
    4. கதியின் வழிகாணாதவர்கள்

    கண்ணுக்கரிய கலிக்கம் அது
    புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
    பயணத்துணையும் அது — சத்திய


    Sathiya Vedathai Dhinam Dhiyani Lyrics in English

    saththiya vaethaththaith thinam thiyaani
    sakala paerkkum athapimaani

    anupallavi

    uththamajeeviya valikaattum
    uyarvaanulakil unaikkoottum — saththiya

    saranangal

    1. vaaliparthamakkoonn athuvaakum
      vayothiyarkkum athunavaakum
      paalakarkkiniya paalum athaam
      patimee thaathmapasi thannikkum — saththiya
    2. saththurup paeyudan amarpuriyum
      tharunam athunal aayuthamaam
      puththirar miththirarodu makilum
      poluthum athunal uravaakum — saththiya
    3. pulaimaeviya maanida rithayam
      punitham perutharkathumarunthaam
      nilaiyaa nararvaannaal nilaikka
      naeyakaaya karpam athaam — saththiya
    4. kathiyin valikaannaathavarkal
      kannnukkariya kalikkam athu
      puthiya erusaalaempathikkup pokum
      payanaththunnaiyum athu — saththiya
  • Sathiya Vedam Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம்

    சத்திய வேதம் பக்தரின் கீதம்
    சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    உத்தம மார்க்கம் காட்டும்

    அனுபல்லவி

    எத்தனை துன்பம் துயரம் வந்தும்
    பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்

    சரணங்கள்

    1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
      சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
      இதயம் மகிழும் கண்கள் தெளியும்
      இருண்ட ஆத்மா உயிரடையும்
    2. பேதைகளிடம் ஞானம் அருளும்
      வேத புத்தகம் மேன்மை தரும்
      இரவும் பகலும் இதன் தியானம்
      இனிமை தங்கும் தனிமையிலும்
    3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
      சேதமடையா நடந்திடுவார்
      இலைகள் உதிரா மரங்கள் போல
      இவர்கள் நல்ல கனி தருவார்
    4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
      கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
      கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
      கனமடைய வழி நடத்தும்
    5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
      கன் மலையையும் நொறுக்கிடுமே
      இதய நினைவை வகையாய் அறுக்கும்
      இரு புறமும் கருக்குள்ளதே
    6. வானம் அகலும் பூமி அழியும்
      வேத வசனம் நிலைத்திருக்கும்
      பரமன் வேதம் எனது செல்வம்
      பரவசம் நிதம் அருளும்

    Sathiya Vedam Baktharin Geetham Lyrics in English

    saththiya vaetham paktharin geetham
    suththarkal pokum paathaiyin theepam
    uththama maarkkam kaattum

    anupallavi

    eththanai thunpam thuyaram vanthum
    pakthanaith thaettidum oushatham

    saranangal

    1. niththam virumpum karththar vasanam
      suththam pasumpon thelinthidum thaen
      ithayam makilum kannkal theliyum
      irunnda aathmaa uyirataiyum
    2. paethaikalidam njaanam arulum
      vaetha puththakam maenmai tharum
      iravum pakalum ithan thiyaanam
      inimai thangum thanimaiyilum
    3. vaethap piriyar thaeva puthalvar
      sethamataiyaa nadanthiduvaar
      ilaikal uthiraa marangal pola
      ivarkal nalla kani tharuvaar
    4. ullam uthikkum uruthi alikkum
      kallang kapadellaam akattum
      katinthuk kollum karaikal pokkum
      kanamataiya vali nadaththum
    5. karththar vasanam valla sammatti
      kan malaiyaiyum norukkidumae
      ithaya ninaivai vakaiyaay arukkum
      iru puramum karukkullathae
    6. vaanam akalum poomi aliyum
      vaetha vasanam nilaiththirukkum
      paraman vaetham enathu selvam
      paravasam nitham arulum
  • Sathikalam Neva Nanbane சாதிக்கலாம் நீ வா நண்பனே

    சாதிக்கலாம் நீ வா நண்பனே
    உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
    நீயும் சாதனை செய்திடலாம்

    1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
      மலர்கள் மணம் வீசுதே
      உறவுகள் இல்லாத பறவைகள் கூட
      மகிழ்வுடன் வாழ்கின்றதே
      உன்னால் ஏன் முடியாது
      உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
      எல்லாம் செய்ய பெலன் உண்டு
      உன் ஆண்டவர் இயேசுவினால்
    2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
      ஆதவன் ஓளி வீசுதே
      வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
      தினமும் ஒளிர்கின்றதே
      உன்னால் ஏன் முடியாது
      உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
      எல்லாம் செய்ய பெலன் உண்டு
      உன் ஆண்டவர் இயேசுவினால்

    Sathikalam Neva Nanbane

    Saadhikalaam neevaa nanbanae
    Unnai belapaduthu neasar yaesuvaalae
    Neeyum saadhanai seidhidalaamae

    1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
    Malargal manam veesudhae
    Uravugal illaadha paravaigal kooda
    Magizhvudan vaazhgindradhae
    Unnaal aen mudiyaadhu
    Ullathhil sindhanai sei nanbaa
    Ellaam seiyya belan undu
    Un aandavar yaesuvinaal

    2.Dhaevan sollaalae ulaginil udhikkum
    Aadhavan oli veesudhae
    Vaanatthil minnidum vinmeengal kooda
    Dhinamum olirgindradhae
    Unnaal aen mudiyaadhu
    Ullathhil sindhanai sei nanbaa
    Ellaam seiyya belan undu
    Un aandavar yaesuvinaal

  • Sathanuku Saval Vidum சாத்தானுக்கு சவால் விடும்

    சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
    சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
    சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

    சவால் …………..சவாலே
    நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

    1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
      ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
      சவால் ……………சவாலே
      நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே
    2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
      ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
      சவால் …………….சவாலே
      நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே
    3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
      எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
      சவால் ……………….சவாலே
      நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே
    4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
      என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
      சவால் ……சவாலே
      நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

    Sathanuku Saval Vidum Lyrics in English
    saaththaanukku savaal vidum santhathi naanga
    senaikalin thaevanaippol veerarkal naanga
    savaalae samaali saaththanae nee aemaali

    savaal …………..savaalae
    naanga pavula pola savaal viduvom savaalae

    1. saavukkaethuvaana aethum ontum seyvathillaiyae
      aaviyaanavar engalodu payamum illaiyae
      savaal ……………savaalae
      naanga thaavithaip pol savaal viduvom savaalae
    2. saaththiraak maeshaak aapaethnaeko aavi enakkullae
      aelu madangu eriyum soolai enakku payam illai
      savaal …………….savaalae
      naanga thaaniyal pol savaal viduvom savaalae
    3. paaliyaththin ichchaைkalukku vilaki otiyae
      engal vaalipaththai Yesuvukku sonthamaakkuvom
      savaal ……………….savaalae
      naanga joseppaip pol savaal viduvom savaalae
    4. en Yesuvaalae naan perum senaikkul paayvaen
      en Yesuvaalae naan perum mathilai thaannduvaen
      savaal ……savaalae
      naanga Yesuvaip pol savaal viduvom savaalae.
  • Satham Kettu Sitham Seyya Alaikirare சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே

    சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே — இயேசு
    சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
    சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

    காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது – ஆ ஆ ஆ
    கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
    வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 )

    1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ- ஆ- ஆ- ஆ
      கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே
      கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
      கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
      கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் — சத்தம்
    2. தேவை அதிகம் ஏராளம் – ஆ- ஆ- ஆ- ஆ
      தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
      குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே
      இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்
      நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? — சத்தம்
    3. உலக மாமிசப் பிடியினின்றும் – ஆ- ஆ- ஆ- ஆ
      உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்
      விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
      உப்பைப்போல கரைந்திடுவோம்
      மெழுகைப் போல உருகிடுவோம் — சத்தம்
    4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு – ஆ- ஆ- ஆ- ஆ
      வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்
      உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
      தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
      சபைகள் ஏராளம் பெருகிவிடும் — சத்தம்

    Satham Kettu Sitham Seyya Alaikirare Lyrics in English

    saththam kaettu siththam seyya alaikkiraarae — Yesu
    saththam kaettu siththam seyya alaikkiraarae
    saththam kaettu siththam seyya varunthi alaikkintarae

    kaalaththin vaekaththaip paarkkumpothu – aa aa aa
    karuththaay kavanamaay jaakkirathaiyaay
    vaalnthu vidumpati alaikkintarae ( 2 )

    1. karpanaikal yaavum nantallavo – aa- aa- aa- aa
      karpanaikal yaavum nantallavo athaik kataippitiththaaka vaenndumae
      geelppatinthavarkal avarkkuch sontha sampaththu allavo
      geelppatinthaal aaseervaatham perukum
      geelppatiyaavittal saapam perukum — saththam
    2. thaevai athikam aeraalam – aa- aa- aa- aa
      thaevai athikam aeraalam aeraalam aeraalamae
      kujaraath, peekaar, imayaththil aeraalam aeraalamae
      iraajasthaan , kaashmeer , orisaavil
      nee sella maruththaal yaar selluvaar? — saththam
    3. ulaka maamisap pitiyinintum – aa- aa- aa- aa
      ulaka maamisap pitiyinintum pisaasin thanthira valaiyinuntum
      viduviththuk kolvom seyalpaduvom saaththaanai muriyatippom
      uppaippola karainthiduvom
      melukaip pola urukiduvom — saththam
    4. vettiyae tharum aanndavarkku – aa- aa- aa- aa
      vettiyae tharum aanndavarkku nammai kaannikkaiyaakkiduvom
      udal porul yaavum Yesuvukkae kaannikkaiyaakkiduvom
      thaesam Yesuvaik kannduvidum
      sapaikal aeraalam perukividum — saththam
  • Sathai Nishkalamai சத்தாய் நிஷ்களமாய்

    சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
    சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
    அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
    கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்
    சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்
    அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்
    கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்
    பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்
    அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்
    நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்
    ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
    ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே
    செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்
    எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று
    அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
    தப்பா தேவெளியாநடுநாளெனைத் தாங்கிக்கொள்ள
    இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
    அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


    Sathai nishkalamai Lyrics in English
    saththaay nishkalamaay orusaamiyamum ilathaay
    siththaay aananthamaayth thikalkinta thiriththuvamae
    eththaal naayatiyaen kataiththaeruvan enpavantheernthu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    emmaa vikkuruki uyireenthu puranthatharkor
    kaimmaarunndukolo kataikaarung kaiyataiyaay
    summaaratchannai sey solsuthantharam yaathumilaen
    ammaan unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    thiraiser vempavamaam kadalmulkiya theeyaremaik
    karaiserth thuykka vente punnaiyaayinai kannniliyaan
    parasen pattukilaen ennaippattiya pattuvidaay
    arase unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    thaayae thanthai thamar kurusampaththu natpevaiyum
    neeyae emporumaan kathivaerilai ninnnayangaann
    aeyae entikalum ulakodenak kennurimai
    aayae unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    piththaerich sulalum jekappaeypitith thuppavathae
    seththaen unnarulaal pilaiththaenmatru jenmama thaay
    eththo shangalaiyum poruththentum irangukaventu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    thuppaar sinthaiyilaen maraintheettiya tholvinaiyum
    thappaa thaeveliyaanadunaalenaith thaangikkolla
    ippaa ruyyavente manukkolame duththa engal
    appaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

  • Satchigal Yesuvin Satchigal சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

    சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
    சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்

    1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
      உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்

    எருசலேமில் சாட்சிகள்
    யூதேயாவில் சாட்சிகள்
    சமாரியாவில் சாட்சிகள்
    உலகமெங்கும் சாட்சிகள்

    1. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
      கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில்
    2. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
      துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்

    Satchigal Yesuvin Satchigal Lyrics in English

    saatchikal Yesuvin saatchikal
    saatchikal ulakil naangal saatchikal

    1. parisuththa aaviyinaal pelanataintha saatchikal
      unnatha thaevanaal uyirataintha saatchikal

    erusalaemil saatchikal
    yoothaeyaavil saatchikal
    samaariyaavil saatchikal
    ulakamengum saatchikal

    1. Yesuvil nilaiththirukkum niththiyamaana saatchikal
      kanikoduththu karththarai makimaippaduththum saatchikal — erusalaemil
    2. therinthu kollappatta engal thaevanin saatchikal
      thunpappaduththappattum thunnintha veera saatchikal — erusalaemil
  • Sarva Vallavar சர்வ வல்லவர்

    சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)
    சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்)

    ஆ… இது அதிசயம் தானே
    ஓ… இது உண்மைதானே

    1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
      பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
      இயேசுதான் என் இரட்சகர்
      இயேசுதான் என் ராஜா
    2. சந்தோஷமும் சமாதானமும்
      என் உள்ளத்தில் பொங்குதம்மா
      பாவமெல்லாம் போக்கிவிட்டார்
      பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
    3. பரலோகத்தில் எனது பெயர்
      எழுதிவிட்டார் என் இயேசு
      என் வாழ்வின் நோக்கமெல்லாம்
      இயேசுவுக்காய் வாழ்வது தான்
    4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
      உலகமெங்கும் பறைசாற்றுவேன்
      ஜீவிக்கின்றார் என் இயேசு
      சீக்கிரமாய் வந்திடுவார்

    Sarva Vallavar Lyrics in English

    sarva vallavar en sonthamaanaar (ejamaanan)
    saavai ventavar en jeevanaanaar (manavaalan)

    aa… ithu athisayam thaanae
    o… ithu unnmaithaanae

    1. kanndu konntaen oru puthaiyal
      pettuk konntaen oru pokkisham
      Yesuthaan en iratchakar
      Yesuthaan en raajaa
    2. santhoshamum samaathaanamum
      en ullaththil ponguthammaa
      paavamellaam pokkivittar
      payangalellaam neekkivittar
    3. paralokaththil enathu peyar
      eluthivittar en Yesu
      en vaalvin Nnokkamellaam
      Yesuvukkaay vaalvathu thaan
    4. oorellaam solliduvaen
      ulakamengum paraisaattuvaen
      jeevikkintar en Yesu
      seekkiramaay vanthiduvaar
  • Sarva Valla Devan சர்வ வல்ல தேவன்

    சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
    நமக்காகவே பிறந்திட்டார்
    இந்த உலகிலே பிறந்திட்டார்
    நம்மை மீட்கவே பிறந்திட்டார்

    நம் பாவம் கழுவ
    நம் சாபம் சுமக்க
    நம் வாழ்வின் ஒளியாய்
    இவ்வுலகத்தின் பிள்ளையை

    அவர் தேவனே படுவேன்
    எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

    பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்
    பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்
    பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்
    பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார்

    1. தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரே
      ஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரே
      என் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (2)
      என் வாழ்வில் சந்தோஷம் அவர் தந்தாரே(2)

    | அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
    | வார்த்தை இலையே |

    1. உன்னதத்தில் மகிமை Hey உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
      இந்த பூமியில் இரட்சிப்பை நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே

    என் வாழ்நாள் முழுவதும் அவர் பரிசுத்தர்(2)
    என்று சொல்லி அவரையே துதித்திடுவேன்(2)

    | அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
    | வார்த்தை இலையே |


    Sarva valla devan pirandhitar
    Namakagave pirandhitar
    Indha ulagilae pirandhitar
    Nammai meetkavae pirandhitar

    Nam pavam kaluva
    Nam sabam sumakka
    Nam valvin oliyai
    Evulagathin pillayai

    Avar devanae paduvaen
    Elshaddai ummai uyarthiduvaen

    Pirandhar(2) nam yesu pirandhar
    Pirandhar(2) namakagave avar pirandhar
    Pirandhar(2) thuya devan pirandhar
    Pirandhar(2) ratchagar avar pirandhar

    1. Davidin oorilae namakagave avar vandharae
      yelmayin kolam eduthu pani eravinilae avar vandharae (2)

    En valvil samadhanam avar tharugirar
    En valvil sandhosham avar tharugirar (2)
    | Avar nallavar alagulavar varnika |
    | varthai ilayae (4) |

    1. Unadhathil magimai undagumbadiku avar udhitharae
      Indha boomiyil ratchipai nilainiruthavae avar udhitharae (2)

    En valnal muluvadhum avar parisuthar
    Endru soli avarayae nan thudhithiduvaen (2)
    | Avar nallavar alagulavar varnika |
    | varthai ilayae (4) |