Author: admin

  • Sarva Sirushtikkum Ejamaanum Neerae சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

    சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
    சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
    என்றென்றும் பணிந்து தொழுவோம்

    ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.

    1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
      வார்த்தைகள் என்றும் மாறாதே
      உலகம் அழிந்து மறைந்து போம்
      விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா
    2. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
      கிருபை எங்கள் மேலூற்றுவீரே
      ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
      அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
    3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
      எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே – (2)
      எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
      ஏங்குகின்றோம் உம் ஆசி பெறவே
    4. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
      ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
      தோல்வி என்றும் உனக்கில்லையே
      துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா
    5. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
      என்னை காக்கும் கர்த்தரும் நீரே
      என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
      என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா

    Sarva Sirushtikkum Ejamaanum Neerae Lyrics in English
    sarva sirushtikkum ejamaanum neerae
    sarva sirushtiyaik kaappavar neerae
    engal ithayaththil ummai pottukirom
    ententum panninthu tholuvom

    aahaa haa allaelooyaa (8) aamen.

    1. vaanam poomi olinthu ponaalum um
      vaarththaikal entum maaraathae
      ulakam alinthu marainthu pom
      visuvaasi ententum nilaippaan – aahaa haa
    2. karththar karaththin kiriyaikal naangal
      kirupai engal maeloottuveerae
      aavi aathmaa sareeram um sonthamae
      athai saaththaan thodaamal kaappeerae
    3. ellaa manitharkkum aanndavar neerae
      ellaa aaseervaathaththirkum ootte – (2)
      engal ithayaththai ummidam pataikkintom
      aengukintom um aasi peravae
    4. saaththaan unnai ethirththu pothum
      jeyak kiristhu unnotae unntae
      tholvi entum unakkillaiyae
      thuthikaanam thoniththu makilvaay – aahaa haa
    5. enthan meetparumat jeevanum neerae
      ennai kaakkum karththarum neerae
      ennai umakku entum arppanniththaen
      en vaalvil jothiyum neerae – aahaa haa
  • Sarva Logathiba Namaskaram சருவ லோகாதிபா நமஸ்காரம்

    சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
    சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
    தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
    தயாபர பிதாவே, நமஸ்காரம்.

    திரு அவதாரா, நமஸ்காரம்!
    ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
    தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
    தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.

    பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
    பரம சற்குருவே, நமஸ்காரம்!
    அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
    அரியசித்தே சதா நமஸ்காரம்.

    முத்தொழிலோனே, நமஸ்காரம்!
    மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
    கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
    நித்ய திரியேகா, நமஸ்காரம்.


    Sarva logathiba namaskaram Lyrics in English
    saruva lokaathipaa, namaskaaram!
    saruva sirushtikanae, namaskaaram!
    tharai, kadal, uyir, vaan sakalamum pataiththa
    thayaapara pithaavae, namaskaaram.

    thiru avathaaraa, namaskaaram!
    jekath thiratchakanae, namaskaaram!
    tharanniyin manudar uyir atainthongath
    tharuvinil maanntooy namaskaaram.

    parisuththa aavi, namaskaaram!
    parama sarkuruvae, namaskaaram!
    aroopiyaay atiyaar akaththinil vasikkum
    ariyasiththae sathaa namaskaaram.

    muththolilonae, namaskaaram!
    moontilontonae namaskaaram!
    karththaathi karththaa, karunnaasamuththiraa,
    nithya thiriyaekaa, namaskaaram.

  • Sarva Angan Thaganapali சர்வ அங்க தகனபலி

    சர்வ அங்க தகனபலி
    எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு
    உதடுகளின் ஸ்தோத்திர பலி
    எங்கள் உன்னத நல் ராஜனுக்கு

    ஸ்தோத்திர பலி
    நான் செலுத்தும் பலி

    அசைவாட்டும் ஜீவபலி – எங்கள்
    அசைவாடும் தேவனுக்கு
    பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி
    எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு

    சமாதான ஜீவபலி – எங்கள்
    சமாதான தேவனுக்கே
    இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி
    என்னை நடத்திடும் தேவனுக்கு

    என் கைகளின் காணிக்கை பலி
    என்னை வாழ வைக்கும் தேவனுக்கு
    என் ஆவி ஆத்ம சரீர பலி
    என்னை ஆளுகின்ற தேவனுக்கு


    Sarva angan thaganapali Lyrics in English
    sarva anga thakanapali
    engal sarva valla thaevanukku
    uthadukalin sthoththira pali
    engal unnatha nal raajanukku

    sthoththira pali
    naan seluththum pali

    asaivaattum jeevapali – engal
    asaivaadum thaevanukku
    pisaintha maavin or melliya pali
    engal melliya nal raajanukku

    samaathaana jeevapali – engal
    samaathaana thaevanukkae
    itiththu pilintha thiraatchaை rasaththin pali
    ennai nadaththidum thaevanukku

    en kaikalin kaannikkai pali
    ennai vaala vaikkum thaevanukku
    en aavi aathma sareera pali
    ennai aalukinta thaevanukku

  • Saruva Valimai Kirubaigal சருவ வலிமை கிருபைகள்

    சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
    தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

    தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
    தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா

    இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
    இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

    அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
    அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா


    Saruva valimai kirubaigal Lyrics in English
    saruva valimai kirupaikal mikuntha saruvaesaa
    tharisanam peraun sannithi pukunthaen thiruvaasaa

    thooyasinthai unnmaiyil unaiyae tholuthaeththa
    thooya aavi konndenai nirappum jakatheesaa

    iruthayaththaich sithara vidaamal oru naeraay
    isaiththamaiththup paravasamaakkum nasaraeyaa

    arulin vaakkaik karuththudan kaettu akaththaettu
    arupathu noorumuppathaayp peruka aruleesaa

  • Saruva Loekaathipaa சருவ லோகாதிபா

    1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
      சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
      தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
      தயாபர பிதாவே, நமஸ்காரம்!
    2. திரு அவதாரா, நமஸ்காரம்!
      ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
      தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
      தருவினில் மாண்டோர், நமஸ்காரம்!
    3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
      பரம சற்குருவே, நமஸ்காரம்!
      அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
      அரியசித்தே சதா நமஸ்காரம்
    4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
      மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
      கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
      நித்திய திரியேகா, நமஸ்காரம்

    Saruva Loekaathipaa, Namaskaaram! Lyrics in English

    1. saruva lokaathipaa, namaskaaram!
      saruva sirushtikanae, namaskaaram!
      tharai, kadal, uyir, vaan, sakalamum pataiththa
      thayaapara pithaavae, namaskaaram!
    2. thiru avathaaraa, namaskaaram!
      jekath thiratchakanae, namaskaaram!
      tharanniyil manudar uyir atainthongath
      tharuvinil maanntoor, namaskaaram!
    3. parisuththa aavi, namaskaaram!
      parama sarkuruvae, namaskaaram!
      aroopiyaay atiyaar akaththinil vasikkum
      ariyasiththae sathaa namaskaaram
    4. muththolilonae, namaskaaram!
      moontilontonae, namaskaaram!
      karththaathi karththaa, karunnaasamuththiraa,
      niththiya thiriyaekaa, namaskaaram
  • Saronin Rojave Salemin சாரோனின் ரோஜாவே சாலேமின்

    சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே
    சர்வேசு நாதனே நமோ நமோ

    ஆ. அல்லேலூயா ஆ.. அல்லேலூயா
    தேவாதி தேவனுக்கு நமோ நமோ
    ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

    விண்ணாளும் வேந்தனே
    மண்ணாளும் மைந்தனே
    எனையாளும் தெய்வமே நமோ நமோ

    யேகோவா தேவனே யேகோவா நிசியே
    யேகோவா ஷம்மாவே நமோ நமோ

    ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே
    ஆனந்த ராகமே நமோ நமோ

    திரியேக தேவனே மகத்துவ ராஜனே
    மன்னாதி மன்னனே நமோ நமோ

    காட்டு மரங்களில் கிச்சலியானவரே
    ஊற்றுண்ட தைலமே நமோ நமோ


    Saronin rojave salemin Lyrics in English
    saaronin rojaavae saalaemin raajaavae
    sarvaesu naathanae namo namo

    aa. allaelooyaa aa.. allaelooyaa
    thaevaathi thaevanukku namo namo
    raajaathi raajanukku namo namo

    vinnnnaalum vaenthanae
    mannnnaalum mainthanae
    enaiyaalum theyvamae namo namo

    yaekovaa thaevanae yaekovaa nisiyae
    yaekovaa shammaavae namo namo

    aaththuma naesarae aaruyir nannparae
    aanantha raakamae namo namo

    thiriyaeka thaevanae makaththuva raajanae
    mannaathi mannanae namo namo

    kaattu marangalil kichchaliyaanavarae
    oottunnda thailamae namo namo

  • Saronin Roja Pallathakkin Lily சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
    நேசர் அழகுள்ளவர்
    பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
    அழகில் சிறந்தவரே
    துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!


    Saronin Roja Pallathakkin Lily Lyrics in English

    saaronin rojaa pallaththaakkin leeli
    maruthontip poongaொththu neerthaanae!

    oli tharum kannkal sudar tharum paathangal
    peru vella iraichchal nee thaanae
    naesar alakullavar
    pathinaayirangalil avar siranthavarae

    oli tharum kannkal sudar tharum paathangal
    peru vella iraichchal nee thaanae
    alakil siranthavarae
    thuthikal seluththi tholuthiduvom

    saaronin rojaa pallaththaakkin leeli
    maruthontip poongaொththu neerthaanae!

  • Saronin Raja Ivar Paripoorna சாரோனின் ராஜா இவர்

    சாரோனின் ராஜா இவர்
    பரிபூரண அழகுள்ளவர்
    அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
    துணைவன் என்பேன்

    இன்ப நேசரை நான் கண்டேன்
    காடானாலும் மேடானாலும்
    கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன

    1. சீயோன் வாசியே தளராதே
      அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
      அன்பின் தேவன் மறக்கமாட்டார்
      ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
    2. மலைகள் பெயர்ந்து போகலாம்
      குன்றுகள் அசைந்து போகலாம்
      மாறா தேவனின் புதுகிருபை
      காலை தோறும் நமக்கு உண்டு
    3. நேசரை அறியா தேசமுண்டு
      பாசமாய் செல்ல யார்தானுண்டு
      தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
      சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

    Saronin Raja Ivar Paripoorna Lyrics in English
    saaronin raajaa ivar
    paripoorana alakullavar
    anputh tholanenpaen – aattum
    thunnaivan enpaen

    inpa naesarai naan kanntaen
    kaadaanaalum maedaanaalum
    karththarin pinnae pokaththunninthaena

    1. seeyon vaasiyae thalaraathae
      alaiththavar entum unnmaiyullavar
      anpin thaevan marakkamaattar
      aaruthal karangalaal annaikkintar
    2. malaikal peyarnthu pokalaam
      kuntukal asainthu pokalaam
      maaraa thaevanin puthukirupai
      kaalai thorum namakku unndu
    3. naesarai ariyaa thaesamunndu
      paasamaay sella yaarthaanunndu
      thaakamaay vaadidum karththarukkaay
      siluvai sumanthu pinselvor yaar
  • Sariththiram Pataikka Vaarunkal சரித்திரம் படைக்க வாருங்கள்

    சரித்திரம் படைக்க வாருங்கள்
    சரித்திர நாயகர் முன் செல்கிறார்
    சர்வ வல்லவர் கர்த்தரே அவர்
    என்றென்றும் அவர் நம்முடனே

    1. மனிதனாய் மனிதன் வாழ்ந்திடவே
      மறுரூப அனுபவம் தேவையன்றோ
      மன்னவர் இயேசுவின் ஆளுகையால்
      மானிடர் ரூபம் மாறிடுமே
    2. தேவனின் அழைப்புக்கு அடிபணிந்தே
      பாவ உலகை அசைத்திடுவோம்
      இந்தியர் இயேசுவை அறியும் வரை
      இணைந்தே உழைப்போம் ஜெயம் பெறுவோம்
    3. கர்த்தரின் வைராக்கியம் நாம் பெறுவோம்
      கருத்துடன் செயலில் முனைந்திடுவோம்
      இயேசு இராஜா என்றும் துணை
      எதிரியின் ஆயுதம் வாய்த்திடாதே

    Sariththiram Pataikka Vaarunkal Lyrics in English
    sariththiram pataikka vaarungal
    sariththira naayakar mun selkiraar
    sarva vallavar karththarae avar
    ententum avar nammudanae

    1. manithanaay manithan vaalnthidavae
      maruroopa anupavam thaevaiyanto
      mannavar Yesuvin aalukaiyaal
      maanidar roopam maaridumae
    2. thaevanin alaippukku atipanninthae
      paava ulakai asaiththiduvom
      inthiyar Yesuvai ariyum varai
      innainthae ulaippom jeyam peruvom
    3. karththarin vairaakkiyam naam peruvom
      karuththudan seyalil munainthiduvom
      Yesu iraajaa entum thunnai
      ethiriyin aayutham vaayththidaathae
  • Saranam Saranam Saranam சரணம் சரணம் சரணம்

    சரணம் சரணம் சரணம் எனக்குன்
    தயைபுரியும் என்பரனே

    மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
    மன்னா ஓ சன்னா

    தரணிதனில் வந்தவதரித்த தற்
    பரனே எனக்காக வலு
    மரணம் அடைந்தும் உயிர்த்தெழுந்த தென்
    மகிமை நித்திய பெருமை

    சுரர்கள் போற்றும் பரனே உனக்குத்
    துரோகியான எனக்கு நீயே
    இரவு பகல் என் குறைவு நீக்க உண்
    டேது நலம் என்மீது

    தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
    தானே வந்து தேட உனக்
    கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
    கற்புதமாம் முடி சூட

    எவ்வித நன்மைக்குங் காரணனே உனை
    ஏழை அடியேனே பற்றி
    இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
    இரங்காய் எனக் கிரங்காய்


    Saranam Saranam Saranam Lyrics in English
    saranam saranam saranam enakkun
    thayaipuriyum enparanae

    maranaththin pelan aliththuyirththa en
    mannaa o sannaa

    tharannithanil vanthavathariththa thar
    paranae enakkaaka valu
    maranam atainthum uyirththeluntha then
    makimai niththiya perumai

    surarkal pottum paranae unakkuth
    thurokiyaana enakku neeyae
    iravu pakal en kuraivu neekka unn
    taethu nalam enmeethu

    thappina aadathar koththa atiyaenaith
    thaanae vanthu thaeda unak
    keppatich siththam unndaanathiv varpanuk
    karputhamaam muti sooda

    evvitha nanmaikkung kaarananae unai
    aelai atiyaenae patti
    iv vulakaththil evvaelaiyum pottavae
    irangaay enak kirangaay