Author: admin

  • Kalvari anbai ennidum velai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
    உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

    கெத்செமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கின்றதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே

    சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே

    எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
    தரை மட்டும் தாழ்த்துகிறோம்
    தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்


    Kalvari anbai ennidum velai Lyrics in English

    kalvaari anpai ennnnidum vaelai
    kannkal kalangiduthae- karththaa
    um paadukal ippothum ninaiththaal
    nenjam nekilnthiduthae

    kethsemanae poongaavinil
    kathari alum osai
    eththisaiyum thonikkintathae
    engal manam thikaikkintathae
    kannkal kalangiduthae

    siluvaiyil vaatti vathaiththanaro
    ummai senniram aakkinaro
    appothu avarkkaay vaenntineero
    anpodu avarkalai kannteeranto
    appaa um manam perithae

    emmaiyum ummaip pol maattidavae
    um jeevan thantheeranto- engalai
    tharai mattum thaalththukirom
    thanthuvittaோm anpin karangalilae
    aettu entum nadaththum

  • Kalvaariyin Karunaiyithae கல்வாரியின் கருணையிதே

    கல்வாரியின் கருணையிதே
    காயங்களில் காணுதே
    கர்த்தர் இயேசு பார் உனக்காய்
    கஷ்டங்கள் சகித்தாரே

    விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்
    விலாவில் நின்று பாயுதே
    விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
    விலையாக ஈந்தனரே

    பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
    இவ்வன்புக் கிணையாகுமோ
    அன்னையிலும் அன்பு வைத்தே
    தன் ஜீவனை ஈந்தாரே

    சிந்தையிலே பாரங்களும்
    நிந்தனைகள் ஏற்றவராய்
    தொங்குகிறார் பாதகன் போல்
    மங்கா வாழ்வளிக்கவே


    Kalvaariyin Karunaiyithae Lyrics in English

    kalvaariyin karunnaiyithae
    kaayangalil kaanuthae
    karththar Yesu paar unakkaay
    kashdangal sakiththaarae

    vilaiyaerap petta thiru iraththamae – avar
    vilaavil nintu paayuthae
    vilaiyaerap pettaோnaay unnai maatta
    vilaiyaaka eenthanarae

    pon velliyo mannnnin vaalvo
    ivvanpuk kinnaiyaakumo
    annaiyilum anpu vaiththae
    than jeevanai eenthaarae

    sinthaiyilae paarangalum
    ninthanaikal aettavaraay
    thongukiraar paathakan pol
    mangaa vaalvalikkavae

  • Kalvaari Sinaekam Karaiththidum Ennai கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

    கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
    கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)

    1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
      காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
      குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
      கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
    2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
      இனியாவது உம் திருமுகம் காண
      நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
      என்னை காணுவோர் உம்மை காணட்டும்
    3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
      அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
      நான் சிறுகவும் நீர் பெருகவும்
      தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

    Kalvaari Sinaekam Karaiththidum Ennai Lyrics in English

    kalvaari sinaekam karaiththidum ennai
    kalmanam maatti karainthoda seyyum (2)

    1. kaalangal thorum kaavalil ullor
      kaanattum ummai kalippodu entum
      kurusathin iraththam kural kodukkattum
      kumpiduvorai kunamaakkum vaetham
    2. irunndathor vaalvil innamum vaalvor
      iniyaavathu um thirumukam kaana
      naathaa um sinaekam perukattum ennil
      ennai kaanuvor ummai kaanattum
    3. arpamaana vaalvu arputhamaay maara
      anaiththaiyum thanthaen aatkollum thaevaa
      naan sirukavum neer perukavum
      theepaththin thiriyaay eduththaatkollum
  • Kalvaari Siluvai Naadha கல்வாரி சிலுவை நாதா

    கல்வாரி சிலுவை நாதா
    காரிருள் நீக்கும் தேவா

    அனுபல்லவி

    பல்வினை பலனாம் பாவம்
    புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) — கல்வாரி

    சரணங்கள்

    1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
      தன் உயிர் மாய்த்தாய் அன்பே
      மன்பதை மாந்தர் முன்னால்
      தரணியை இழுத்தாய் நின்பால் (2) — கல்வாரி
    2. தூயவன் நின்னை கண்டோர்
      தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
      சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
      வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) — கல்வாரி

    Kalvaari Siluvai Naadha Lyrics in English

    kalvaari siluvai naathaa
    kaarirul neekkum thaevaa

    anupallavi

    palvinai palanaam paavam
    purinthavar emaikkann paarum (2) — kalvaari

    saranangal

    1. mannuyir meetkum anpaal
      than uyir maayththaay anpae
      manpathai maanthar munnaal
      tharanniyai iluththaay ninpaal (2) — kalvaari
    2. thooyavan ninnai kanntoor
      thee ullam thelinthae nirpaar
      sey ullam thanthaay arulaay
      vaay ullam thanthaen pukalaay (2) — kalvaari
  • Kalvaari Pookalai Em Karangalil Yenthi கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி

    கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2
    காணிக்கை உமக்களிக்க – 2
    குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
    இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

    இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
    உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
    கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
    இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

    நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
    வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
    அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்
    ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்


    Kalvaari Pookalai Em Karangalil Yenthi Lyrics in English

    kalvaari pookkalai em karangalil aenthi vanthom – 2
    kaannikkai umakkalikka – 2
    kuyilena paakkalai surangalil thoduththu vanthom
    ithaya kaannikkai umakkalikka -2 thaevaa

    ithaya yaalin iniya osai umakku kaannikkai
    uthayam thaedum viliyin oliyum umakku kaannikkai (2)
    kalmalaiyil karam viriththu unnai eenthathaal
    intu kasinthuruki paliyil rasamaay emmaith tharukintom

    nintunilaikkum peyarum pukalum umakku kaannikkai
    ventu sirakkum thiranum arivum umakku kaannikkai (2)
    anpin amuthaay appam athilae eenthathaal – ullam
    ontinnainthu ulaippin payanaay emmaith tharukintom

  • Kalvaari Malaiyoram Vaarum கல்வாரி மலையோரம் வாரும்

    கல்வாரி மலையோரம் வாரும்
    கல்வாரி மலையோரம் வாரும் – உம்
    பாவம் தீரும்.
    அனுபல்லவி
    செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.
    சரணங்கள்
    1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,
    நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
    தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
    சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,
    சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா – ஜோதி

    1. ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோ
      உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?
      விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?
      மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
      மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி

    3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோ
    மதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோ
    தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ ?
    தண்ணீரில் நடந்த பாதம் சவண்டதுமேனோ?
    சண்டாளர்கள் நம்மால் தானே நம்மால் தானே – ஜோதி


    Kalvaari Malaiyoram Vaarum Lyrics in English

    kalvaari malaiyoram vaarum
    kalvaari malaiyoram vaarum – um
    paavam theerum.

    anupallavi

    selvaraayan kiristhu thiyaakaesan thonguraarae.
    saranangal

    1.lokaththin paavamellaam aekamaay thiranndu,
    nompalap padavaikka aiyanmael urunndu,
    thaakaththaal udalvaatik karukiyae surunndu
    sadalamelaam uthirap piralayam puranndu ,
    saakintarae namathu naathaa jeevathaathaa – jothi

    2.onnmuti mannanukku munmutiyaachcho
    upakaaram purikaram sithaiyavum aachcho ?
    vinnnnilulaavum paatham punnnnaakalaachcho ?
    maeniyellaam veengi vithani kkalaachcho?
    maesaiyan appan kopam maelae itharkumaelae- jothi

    3.malarntha sunthara kannkal mayangalumo
    mathurikkum thirunaavu varanndathumaeno
    thalarnthidaa thirukkaikal thuvanndathumaeno ?
    thannnneeril nadantha paatham savanndathumaeno?
    sanndaalarkal nammaal thaanae nammaal thaanae – jothi

  • Kalvaari Maamalaimael கல்வாரி மாமலைமேல்

    1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்
      கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
      குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்
      குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை
    2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
      நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
      எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
      ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்
    3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
      பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
      என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
      சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

    Kalvaari Maamalaimael Lyrics in English

    1. kalvaari maamalaimael kai kaalkal aannikalaal
      kadaavap pattavaraay karththar thongak kanntaen
      kurusin vaethanaiyum sirasin mul mutiyum
      kuruthi sinthuvathum urukkitten manathai
    2. anjaathae en makanae minjum un paavamathaal
      nenjam kalangaathae thanjam naanae unakku
      enakkaen ippaadu unakkaakaththaanae
      eenakkola matainthaen unnai ratchiththaen entar
    3. karththarin saththamathai saththiyam entu nampi
      pakthiyudan vilunthu muththam seythaen avarai
      en paavam neengiyathae ekkaedum otiyathae
      santhaekam maariyathae santhosham pongiyathae
  • Kalvaari Maamalai Oram கல்வாரி மாமலை ஓரம்

    கல்வாரி மாமலை ஓரம்
    கொடுங்கோர காட்சி கண்டேன் (2)
    கண்ணில் நீர் வழிந்திடுதே
    எந்தன் மீட்பர் இயேசு அதோ (2)

    1. எருசலேமின் வீதிகளில்
      ரத்த வெள்ளம் கோலமிட (2)
      திருக்கோலம் நிந்தனையால்
      உருக்குலைந்து சென்றனரே (2)
      உருக்குலைந்து சென்றனரே
    2. சிலுவை தன் தோளதிலே
      சிதறும் தன் வேர்வையிலே (2)
      சிறுமை அடைந்தவராய்
      நிந்தனை பல சகித்தார் (2)
      நிந்தனை பல சகித்தார்
    3. எருசலேமின் வீதிகளில்
      இரத்த வெள்ளம் கோலமிட (2)
      திருக்கோலம் நிந்தனையாய்
      உருக்குலைந்து சென்றனரே (2)
      உருக்குலைந்து சென்றனரே

    Kalvaari Maamalai Oram Lyrics in English

    kalvaari maamalai oram
    kodungaோra kaatchi kanntaen (2)
    kannnnil neer valinthiduthae
    enthan meetpar Yesu atho (2)

    1. erusalaemin veethikalil
      raththa vellam kolamida (2)
      thirukkolam ninthanaiyaal
      urukkulainthu sentanarae (2)
      urukkulainthu sentanarae
    2. siluvai than tholathilae
      sitharum than vaervaiyilae (2)
      sirumai atainthavaraay
      ninthanai pala sakiththaar (2)
      ninthanai pala sakiththaar
    3. erusalaemin veethikalil
      iraththa vellam kolamida (2)
      thirukkolam ninthanaiyaay
      urukkulainthu sentanarae (2)
      urukkulainthu sentanarae
  • Kalvaari Kurusandai Yengi Nindren கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்

    கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்
    திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்
    என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன்
    என் பாவம் நீங்கினதே

    1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே
      விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட
      உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்
      உம்மை என்றும் துதிப்பேன்
      என்றும் உம்மை துதிப்பேன்
    2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட
      உம் பெலனாம் என்னை தேற்றிடுமே
      ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்
      ஊழியம் செய்திடவே
      தேவா அருள் செய்குவீர்
    3. உன்னத ஆவியை என்னில் ஊற்றும்
      இந்நிலம் தன்னில் நான் பிராகாசிக்க
      கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
      உம் கரம் பற்றிடுவேன்
      உம் வழி நான் நடப்பேன்
    4. சிலுவைக் காட்சியைக் கண்டிடுவேன்
      அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்
      சாந்த சொரூபியாம் ஏசுவின் சிலுவையில்
      சாய்ந்திடுவேன் நானும்
      ஏசுவை என்றும் விடேன்
    5. என்னையே முற்றிலும் உம் கரத்தில்
      ஜீவ பலியாக படைக்கிறேன்
      மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில்
      ஏழையான் காணப்பட
      நீர் என்னைக் காத்துக் கொள்வீர்

    Kalvaari Kurusandai Yengi Nindren Lyrics in English

    kalvaari kurusanntai aengi ninten
    thiru iraththam puranntooti peru vellamaay
    en meethu paaynthida naan suththamaayinaen
    en paavam neenginathae

    1. mann vaalvil inpangal veruththumae
      vinn vaalvin nanmaikal naam pettida
      unnatha jeevanai ennil neer eenthathaal
      ummai entum thuthippaen
      entum ummai thuthippaen
    2. um siththam seythu naan jeeviththida
      um pelanaam ennai thaettidumae
      aaththuma paaram naan pettentum umakkaay
      ooliyam seythidavae
      thaevaa arul seykuveer
    3. unnatha aaviyai ennil oottum
      innilam thannil naan piraakaasikka
      kashdangal vanthaalum nashdangal vanthaalum
      um karam pattiduvaen
      um vali naan nadappaen
    4. siluvaik kaatchiyaik kanndiduvaen
      athai ennnni thinamum vaalnthiduvaen
      saantha soroopiyaam aesuvin siluvaiyil
      saaynthiduvaen naanum
      aesuvai entum vitaen
    5. ennaiyae muttilum um karaththil
      jeeva paliyaaka pataikkiraen
      mannavaa vinnmeethu neer varum vaelaiyil
      aelaiyaan kaanappada
      neer ennaik kaaththuk kolveer
  • Kalvaari Anbai Ennidum Velai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே
    கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

    1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
      எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
      எந்தன் மனம் திகைக்கின்றதே
      கண்கள் கலங்கிடுதே — கல்வாரி
    2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோ
      அப்போது அவர்க்காய் வேண்டினீரே
      அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
      அப்பா உம் அன்பு பெரிதே — கல்வாரி
    3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
      என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
      தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
      ஏற்று என்றும் நடத்தும் — கல்வாரி

    Kalvaari Anbai Ennidum Velai Lyrics in English

    kalvaari anpai ennnnidum vaelai
    kannkal kalangiduthae
    karththaa um paadukal niththamum ninaiththaal
    nenjam nekilnthiduthae

    1. kethsamanae poongaavilae kathari alum osai
      eththisai antho thonikkintathae
      enthan manam thikaikkintathae
      kannkal kalangiduthae — kalvaari
    2. siluvaiyil maatti vathaiththanaro ummai senniramaakkinaro
      appothu avarkkaay vaenntineerae
      anpodu avarkalaik kannteeranto
      appaa um anpu perithae — kalvaari
    3. ennaiyum ummaippol maattidavae um jeevan thantheeranto
      en thalai tharai mattum thaalththukinten
      thanthuvittaen anpu karangalilae
      aettu entum nadaththum — kalvaari