Author: admin

  • Kalame devanai thedu காலமே தேவனைத் தேடு

    காலமே தேவனைத் தேடு ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
    சிரான நித்திய ஜீவனை நாடு

    மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
    மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு

    பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனு வேலனைப் பணிய

    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்

    வேலையுனக்குக் கைகூட சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே


    Kalame devanai thedu Lyrics in English

    kaalamae thaevanaith thaedu jeeva
    kaarunnyar paatham panninthu mantadu

    seelamudan patham paatikkonndaadu
    siraana niththiya jeevanai naadu

    mannuyirkkaay mariththaarae manu
    maintha nenanaamaam vaiththirunthaarae
    un siruttikarai nee uthayaththilennnu
    ullanganinthu thani jepam pannnu

    paavach sothanaikalai vellu ketta
    paarudal paeyudan porukku nillu
    jeeva kireedanj siraththilanniyach
    sinthanai sey manu vaelanaip panniya

    siruvarkal ennidanj serath thatai
    seyyaa thirungalentar manathaara
    paraloka selva mavarkkup palikkum
    paakkiyamellaam paranthu jolikkum

    vaelaiyunakkuk kaikooda sathya
    vaethan kirupai varaththai mantada
    kaalai thaeduvor enaik kanndataivorae
    kannviliththu jepanj seyyumentarae

  • Kalaimaangal Neerodai Thaedum Enthan கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன்

    கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

    உள்ளத்தாகம் உந்தன் மீது

    கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்

    மான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

    காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் – 2

    உயிரைத் தந்திடும் கருவினிலே

    அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் – 2

    குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்

    கதையின் நாயகன் நான் இன்று –கலைமான்கள்

    பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் – 2

    காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் – 2

    சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்

    அழகிய மணிமாலை நானாவேன் –கலைமான்கள்


    Kalaimaangal Neerodai Thaedum Enthan Lyrics in English

    kalaimaankal neerotai thaedum enthan ithayam iraivanai naadum

    ullaththaakam unthan meethu

    konndapothu enakku vaeraெnna vaenndum

    maankal neerotai thaedum enthan ithayam iraivanai naadum

    kaalam thontap poluthinilae karunnaiyil ennai nee ninaiththaay – 2

    uyiraith thanthidum karuvinilae

    arulinaip polinthu aravannaiththaay – 2

    kuyavan kaiyaalae mannpaanndam mutainthidum

    kathaiyin naayakan naan intu –kalaimaankal

    paarai arannaay iruppavarae norungiya ithayam naan sumanthaen – 2

    kaalai maalai ariyaamal kannnneer vatiththidum nilaiyaanaen – 2

    sithariya mannikalai korththu eduththaal

    alakiya mannimaalai naanaavaen –kalaimaankal

  • Kal mithikum desam ellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்

    கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
    கர்த்தருக்குச் சொந்தமாகும்
    கண் பார்க்கும் பூமியெல்லாம்
    கல்வாரி கொடி பறக்கும்

    பறக்கட்டும் பறக்கட்டும்
    சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
    உயரட்டும் உயரட்டும்
    இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா

    எழும்பட்டும் எழும்பட்டும்
    கிதியோனின் சேனைகள்
    முழங்கட்டும் முழங்கட்டும்
    இயேசுதான் வழியென்று

    செல்லட்டும் செல்லட்டும்
    ஜெபசேனை துதிசேனை
    வெல்லட்டும் வெல்லட்டும்
    எதிரியின் எரிகோவை

    திறக்கட்டும் திறக்கட்டும்
    சுவிசேஷ வாசல்கள்
    வளரட்டும் வளரட்டும்
    அபிஷேக திருச்சபைகள்


    Kal mithikum desam ellam Lyrics in English

    kaal mithikkum thaesamellaam – en
    karththarukkuch sonthamaakum
    kann paarkkum poomiyellaam
    kalvaari koti parakkum

    parakkattum parakkattum
    siluvaiyin jeyakkoti – allaelooyaa
    uyarattum uyarattum
    Yesuvin thirunaamam – allaelooyaa

    elumpattum elumpattum
    kithiyonin senaikal
    mulangattum mulangattum
    Yesuthaan valiyentu

    sellattum sellattum
    jepasenai thuthisenai
    vellattum vellattum
    ethiriyin erikovai

    thirakkattum thirakkattum
    suvisesha vaasalkal
    valarattum valarattum
    apishaeka thiruchchapaikal

  • Kal Manam Karaiya Kankalum Panikka கல்மனம் கரைய கண்களும் பனிக்க

    கல்மனம் கரைய கண்களும் பனிக்க

    கைகளைக் குவித்தேன் இறைவா

    என் மனம் வருவாய் இறைவா (2)

    என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து

    பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு

    புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய

    இன்னருள் தருவாய் இறைவா -2

    பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

    பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்

    வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்

    அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

    நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து

    நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு

    பூவெனும் இதய பீடத்தில் எனையே

    பலியாய் அளிப்பேன் இறைவா


    Kal Manam Karaiya Kankalum Panikka Lyrics in English

    kalmanam karaiya kannkalum panikka

    kaikalaik kuviththaen iraivaa

    en manam varuvaay iraivaa (2)

    ennakam pukunthu ithayaththil amarnthu

    ponnakam punaivaay iraivaa (2) angu

    punmaikal marainthu nanmaikal niraiya

    innarul tharuvaay iraivaa -2

    paasaththaik kalainthu paavaththai vilakka

    paathaththaip pitiththaen iraivaa (2) thuyar

    veesidum puyalum vekunndelum alaiyum

    amainthidap pannippaay iraivaa -2

    naan enum akanthai narakaththai aliththu

    nallulakamaippom iraivaa (2) angu

    poovenum ithaya peedaththil enaiyae

    paliyaay alippaen iraivaa

  • Kakkum karangal காக்கும் கரங்கள்

    காக்கும் கரங்கள் உண்டெனக்கு
    காத்திடுவார் கிருபையாலே
    அல்லேலூயா பாடிப் பாடி
    அலைகளை நான் தாண்டிடுவேன்
    நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

    நிந்தனைகள் போராட்டம் வந்தும்
    நீதியின் தேவன் தாங்கினாரே
    நேசக்கொடி என்மேல் பறக்க
    நேசருக்காய் ஜீவித்திடுவேன்

    கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
    கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
    காத்திருந்து பெலன் அடைந்து
    கழுகுபோல எழும்பிடுவாய்

    அத்திமரம் துளிர்விடாமல்
    ஆட்டு மந்தை முதலற்றாலும்
    கர்த்தருக்கு காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை


    Kakkum karangal Lyrics in English

    kaakkum karangal unndenakku
    kaaththiduvaar kirupaiyaalae
    allaelooyaa paatip paati
    alaikalai naan thaanndiduvaen
    nampuvaen Yesuvai nampuvaen Yesuvai

    ninthanaikal poraattam vanthum
    neethiyin thaevan thaanginaarae
    naesakkoti enmael parakka
    naesarukkaay jeeviththiduvaen

    kanmalaikal peyarkkum patiyaay
    karththar unnai karam pitiththaar
    kaaththirunthu pelan atainthu
    kalukupola elumpiduvaay

    aththimaram thulirvidaamal
    aattu manthai muthalattaாlum
    karththarukku kaaththiruppor
    vetkappattup povathillai

  • Kakkum deivam yesu iruka காக்கும் தெய்வம் இயேசு இருக்க

    காக்கும் தெய்வம் இயேசு இருக்க
    கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே

    இதுவரை உன்னை நடத்தின தேவன்
    இனியும் நடத்திச் செல்வார்
    எபிநேசர் அவர்தானே

    பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
    கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்

    காண்கின்ற உலகம் நமது இல்லை
    காணாத பரலோகம் தான்
    நமது குடியிருப்பு

    சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
    மகிமையை கொண்டு வரும்
    மறவாதே என் மனமே

    சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
    தெரிந்துகொள் மனமே
    சீடன் அவன் தானே

    மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
    கிருபை விலகாதென்றார்
    மனது உருகும் தெய்வம்


    Kakkum deivam yesu iruka Lyrics in English

    kaakkum theyvam Yesu irukka
    kalakkam en manamae kannnneer aen manamae

    ithuvarai unnai nadaththina thaevan
    iniyum nadaththich selvaar
    epinaesar avarthaanae

    paadukal sakiththaal paramanin varukaiyil
    kooda sentidalaam paati makilnthidalaam

    kaannkinta ulakam namathu illai
    kaannaatha paralokam thaan
    namathu kutiyiruppu

    seekkiram neengidum ulakappaadukal
    makimaiyai konndu varum
    maravaathae en manamae

    siluvai sumanthaal supaavam maarum
    therinthukol manamae
    seedan avan thaanae

    malaikal vilakum kuntukal akalum
    kirupai vilakaathentar
    manathu urukum theyvam

  • Kaividaathirunthaar Udaintha Nerathilae கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே

    கைவிடாதிருந்தார்
    உடைந்த நேரத்திலே
    கரம் பிடித்துவந்தார்

    என்னை நினைப்பவரே
    உண்மை உள்ளவரே
    உயர்ந்த ஸ்தனாத்திலே
    எடுத்து வைத்தவரே

    அவர் என்னோடு இருந்ததினால்
    கைவிடாமல் காத்துவந்தார்

    சோர்ந்த நேரத்திலே
    பெலன் தந்தவரே
    கலங்கின நேரத்திலே
    கிருபை அளித்தவரே


    Kaividaathirunthaar Udaintha Nerathilae Lyrics in English

    kaividaathirunthaar
    utaintha naeraththilae
    karam pitiththuvanthaar

    ennai ninaippavarae
    unnmai ullavarae
    uyarntha sthanaaththilae
    eduththu vaiththavarae

    avar ennodu irunthathinaal
    kaividaamal kaaththuvanthaar

    sorntha naeraththilae
    pelan thanthavarae
    kalangina naeraththilae
    kirupai aliththavarae

  • kai thatti paadi magilnthiruppom கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

    கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
    கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம்

    களிகூறுவோம் களிகூறுவோம்
    கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
    களிகூறுவோம் களிகூறுவோம்
    கவலைகள் மறந்து களிகூறுவோம்

    நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்திடுவார்

    பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
    எனக்கே நீ சொந்தம் என்றார்

    நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
    ஜீவனுள்ள நாட்களேல்லாம்

    அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
    ஆலோசனை அவர் தருவார்

    ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
    அவர் நம்மை விடுவிப்பாரே

    வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
    கீழாக்காமல் மேலாக்குவார்

    பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
    வலக்கரம் தாங்கும் என்றார்

    உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
    அவர் உன்னை மறப்பதில்லை


    kai thatti paadi magilnthiruppom Lyrics in English

    kaiththatti paati makilnthiruppom
    karththar samukaththil kalikooruvom

    kalikooruvom kalikooruvom
    karththar sonna vaakkuththaththam solli makilvom
    kalikooruvom kalikooruvom
    kavalaikal maranthu kalikooruvom

    ninaippatharkum naan jepippatharkum
    athikamaay seythiduvaar

    payappadaathae unnai meettuk konntaen
    enakkae nee sontham entar

    nanmaiyum kirupaiyum nammaith thodarum
    jeevanulla naatkalaellaam

    arivu pukattuvaar paathaikaattuvaar
    aalosanai avar tharuvaar

    aapaththuk kaalaththil Nnokkik kooppittal
    avar nammai viduvippaarae

    vaalaakkaamal avar thalaiyaakkuvaar
    geelaakkaamal maelaakkuvaar

    pelappaduththi naan sakaayam seyvaen
    valakkaram thaangum entar

    ullangaiyil avar poriththu ullaar
    avar unnai marappathillai

  • Kaereeth Aattu Neer Vattinaalum கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

    1. கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
      தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
      பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
      காக்கும் தேவன் உனக்கு உண்டு

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. இல்லை என்ற நிலை வந்தாலும்
      இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
      உயிர்ப்பிக்கும் ஆவியினால்
      உருவாக்கி நடத்திடுவார்
    2. முடியாததென்று நினைக்கும் நேரம்
      கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
      அளவற்ற நன்மையினால்
      ஆண்டு நடத்திடுவார்
    3. இருளான பாதை நடந்திட்டாலும்
      வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
      மகிமையின் ப்ரசன்னத்தால்
      மூடி நடத்திடுவார்

    Kaereeth Aattu Neer Vattinaalum Lyrics in English

    1. kaereeth aattu neer vattinaalum
      thaesam panjaththil vaatinaalum
      paanaiyil maa ennnney kurainthittalum
      kaakkum thaevan unakku unndu

    karththar unndu vaarththai unndu
    thoothan unndu avar arputham unndu

    1. illai enta nilai vanthaalum
      iruppathaip pol alaikkum thaevan
      uyirppikkum aaviyinaal
      uruvaakki nadaththiduvaar
    2. mutiyaathathentu ninaikkum naeram
      karththarin karam unnil thontidumae
      alavatta nanmaiyinaal
      aanndu nadaththiduvaar
    3. irulaana paathai nadanthittalum
      velichchamaay thaevan vanthiduvaar
      makimaiyin prasannaththaal
      mooti nadaththiduvaar
  • Kael! Jenmiththa Raayarkkae கேள்! ஜென்மித்த ராயர்க்கே

    1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
      விண்ணில் துத்தியம் ஏறுதே;
      அவர் பாவ நாசகர்,
      சமாதான காரணர்,
      மண்ணோர் யாரும் எழுந்து
      விண்ணோர்போல் கெம்பீரித்து
      பெத்லெகேமில் கூடுங்கள்,
      ஜென்ம செய்தி கூறுங்கள்.
      கேள்! ஜென்மித்த ராயர்க்கே
      விண்ணில் துத்தியம் ஏறுதே.
    2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
      லோகம் ஆளும் நாதரே,
      ஏற்ற காலம் தோன்றினீர்,
      கன்னியிடம் பிறந்தீர்.
      வாழ்க நர தெய்வமே,
      அருள் அவதாரமே!
      நீர், இம்மானுவேல், அன்பாய்
      பாரில் வந்தீர் மாந்தனாய்.
    3. வாழ்க, சாந்த பிரபுவே!
      வாழ்க, நீதி சூரியனே!
      மீட்பராக வந்தவர்,
      ஒளி, ஜீவன் தந்தவர்;
      மகிமையை வெறுத்து,
      ஏழைக் கோலம் எடுத்து,
      சாவை வெல்லப் பிறந்தீர்,
      மறு ஜென்மம் அளித்தீர்

    Kael! Jenmiththa Raayarkkae Lyrics in English

    1. kael! jenmiththa raayarkkae
      vinnnnil thuththiyam aeruthae;
      avar paava naasakar,
      samaathaana kaaranar,
      mannnnor yaarum elunthu
      vinnnnorpol kempeeriththu
      pethlekaemil koodungal,
      jenma seythi koorungal.
      kael! jenmiththa raayarkkae
      vinnnnil thuththiyam aeruthae.
    2. vaanor pottum kiristhuvae,
      lokam aalum naatharae,
      aetta kaalam thontineer,
      kanniyidam pirantheer.
      vaalka nara theyvamae,
      arul avathaaramae!
      neer, immaanuvael, anpaay
      paaril vantheer maanthanaay.
    3. vaalka, saantha pirapuvae!
      vaalka, neethi sooriyanae!
      meetparaaka vanthavar,
      oli, jeevan thanthavar;
      makimaiyai veruththu,
      aelaik kolam eduththu,
      saavai vellap pirantheer,
      matru jenmam aliththeer.