Author: admin

  • Sagayam Seiyum Kanmalaiye சகாயம் செய்யும் கன்மலையே

    சகாயம் செய்யும் கன்மலையே
    சரணடைந்தேன் உம் சந்நிதி
    தேவா சரணம் சரணம்
    இயேசு ராஜா சரணம் சரணம்

    கை தூக்கி எடுத்தீரே
    காணங்களால் புகழ்வேன்
    சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர்
    சங்கீதங்கள் பாடுவேன்

    நன்றி இயேசு ராஜா
    சரணம் இயேசு ராஜா

    எதைக் குறித்தும் கலக்கமில்லை
    எபினேசர் இருப்பதினால்
    கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்
    காலமெல்லாம் போதும் நீரே

    வாழ்க்கை பயணத்திலே
    துணையாக வருபவரே
    காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்
    கரை சேர்க்கும் தெய்வம் நீரே


    Sagayam Seiyum Kanmalaiye
    Saranadanthen Um Santhathi
    Dheva Saranam Saranam
    Yesu Raja Saranam Saranam

    Kai Thuki Eduthirea
    Kanalgalal Pugazhven
    Sanjalam Matrineer Santhosam Alitheer
    Sangeethangal Paduven

    Nandri Yesu Raja
    Saranam Yesu Raja

    Ethaikurithum Kalakamilai
    Ebinesar Erupathinal
    Karuvil Kandavar Kaividamateer
    Kalamelam Pothum Neerea

    Vazhkai Payanathile
    Thunaiyaga Varubavarea
    Katru Vesatum Kadalum Pongatum
    Karai Serkum Dheivam Neerea


  • ஒன்றும் குறைவு படாது Ondrum Kuraivupadaathu

    ஒன்றும் குறைவு படாது
    கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால்

    அவர் சமுகம் நம் முன் சென்றிடும்
    என்றும் இளைப்பாறுதல்
    தடைகள் நீக்கிவிடும்
    கோட்டைகள் தகர்ந்து விடும்

    தகப்பனை போல் சுமந்திடுவார்
    கண்மணி போல் காப்பார்
    வாதை அணுகாது
    பொல்லாப்பு நேரிடாது

    நன்மையினால் நிரப்பிடுவார்
    கிருபை பொழிந்திடுவார்
    பசும்புல் மேய்ச்சலுண்டு
    அமர்ந்த தண்ணீருண்டு

    எக்காளம் நாம் ஊதிடுவோம்
    எதிரியை வென்றிடுவோம்
    சிலுவைக்கொடி பிடிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    சிலுவைக்கொடி பிடிப்போம்
    தேசத்தை சுதந்தரிப்போம்


    Ondrum Kuraivupadaathu
    Karthar Yesu Namodu Irupathaal

    Avar Samugam Nam Mun Sendridum
    Endrum Elaipaaruthal
    Thadaigal Neeki Vidum
    Kodaikal Thagarnthu Vidum

    Thagapanai Pol Sumathiduvaar
    Kanmani Pol Kaapaar
    Vadhai Anugaathu
    Polappu Naeridathu

    Nanmayil Nirapiduvaar
    Kirubai Pozhithiduvaar
    Pasumpul Meichalundu
    Amarntha Thaneerundu

    Ekalam Nam Oothiduvom
    Ethiriyai Vendriduvom
    Siluvai Kodiyai Pidipom
    Allaeluya Paduvom
    Siluvai Kodiyai Pidipom
    Desathai Sudhantharipom


  • நன்றி சொல்லி துதிப்பேன் Nandri Solli Thuthipen

    நன்றி சொல்லி துதிப்பேன்
    நாளெல்லாம் பாடுவேன்
    நல்லவரே நீர் செய்த
    நன்மைகளை நினைத்தே

    உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி
    உம்முடனே என்னை அமர செய்தீர்

    வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ
    கிருபைகளால் தினம் முடிசூட்டினீர்

    எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்
    புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்

    ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்
    என் பயம் யாவும் நீக்கி விட்டீர்

    ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்
    ஆதரித்தீர் என்னை அனுதினமும்

    எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பை
    கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்


    Nandri Solli Thuthipen
    Nalelam Paduven
    Nalavarea Neer Seitha
    Nanmaigalai Ninaithea

    Um Thiru Rathathal Enthanai Kazhuvi
    Ummudane Ennai Amara Seitheer

    Vazhnalelam Ummil Kalikurnthu Magizha
    Kirubaikalal Thinam Mudisoodineer

    Ethiriyin Kanmun Virunthonru Seitheer
    Pudhu Enaiyal Ennai Abishekitheer

    Ezhai En Satham Nithamum Keateer
    En Payam Yaavum Nikki Viter

    Agaram Thantheer Adaikal Alitheer
    Atharithir Ennai Anuthinamum

    Eppadi Naan Marapen Appa Um Anbai
    Kaneerudan Dhinam Nandri Soluven


  • கர்த்தாவே என் கன்மலையே Karthavae En Kanmalaiyea

    கர்த்தாவே என் கன்மலையே
    காலமெல்லாம் என்னை சுமக்கின்றீர்
    உம்மையே நம்பியுள்ளேன்
    ஒரு போதும் நான் வெட்கம் அடையேன்

    பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரே
    சாபங்கள் யாவும் நீக்கினீரே
    புதிய கிருபை தந்தீரே
    புண்ணியரே உம்மை போற்றிடுவேன்

    என் பெலனே கேடகமே
    உம்மையே நான் நம்பி நிற்கிறேன்
    உதவி தந்தீர் ஸ்தோத்திரமே
    உன்னதரே உம்மை போற்றிடுவேன்

    ஆயன் ஆட்டை சுமப்பது போல்
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல்
    கடந்து வந்த பாதையெல்லாம்
    என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரமே


    Karthavae En Kanmalaiyea
    Kalamelam Ennai Sumakinreer
    Ummaiye Nambiullen
    Oru Pothum Naan Vetkam Adaiyen

    Paavangal Anaithum Manithirea
    Sabangal Yaavum Neekineerea
    Puthiya Kirubai Thanthirea
    Puniyarea Ummai Potreduven

    En Belanea Kedagamea
    Ummaiye Naan Nambi Nirkiren
    Udavi Thanthir Sothiramea
    Unatharea Ummai Potriduven

    Ayan Aatrai Sumapathupol
    Thagapan Pillaiyai Sumapathupol
    Kadanthu Vantha Padaiyelam
    Ennai Sumanthu Vanthir Sothiramae


  • எந்தன் கன்மலையானவரே Enthan Kanmalaiyaanavarae

    எந்தன் கன்மலையானவரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
    மகிமைக்கு பாத்திரரே

    ஆராதனை உமக்கே – 4

    உந்தன் சிறகுகளின் நிழலில்
    என்றென்றும் மகிழச் செய்தீர்
    தூயவரே என் துணையாளரே
    துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

    எந்தன் பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தந்தீரைய்யா
    இயேசு ராஜா என் பெலனானீர்
    எதற்கும் பயமில்லையே — ஆராதனை

    எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை


    Enthan Kanmalaiyaanavarae
    Ennai Kaakkum Theyvam Neerae
    Vallamai Maatchimai Nirainthavarae
    Makimaikku Paaththirarae

    Aaraathanai Umakkae – 4

    Unthan Sirakukalin Nilalil
    Ententum Makilach Seytheer
    Thooyavarae En Thunnaiyaalarae
    Thuthikkup Paaththirarae — Aaraathanai

    Enthan Pelaveena Naerangalil
    Um Kirupai Thantheeraiyyaa
    Yesu Raajaa En Pelanaaneer
    Etharkum Payamillaiyae — Aaraathanai

    Enthan Uyirulla Naatkalellaam
    Ummai Pukalnthu Paadiduvaen
    Raajaa Neer Seytha Nanmaikalai
    Ennnniyae Thuthiththiduvaen — Aaraathanai


  • என் கால்கள் சறுக்கும் En Kalgal Sarukum

    என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    கர்த்தாவே உம் அன்பு தாங்குதையா
    ஆறுதல் நீர்த்தனையா – என்
    அடைக்கலம் நீர்த்தனையா

    உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்
    உந்தன் ஆறுதல் தேற்றுதையா
    தாங்குகிறீர் தினம் நடத்துகிறீர்
    தகப்பனே உம்மை துதிப்பேன்

    மலைகள் குன்றுகள் விலகினாலும்
    அப்பா உம் அன்பு மாறாதையா
    உந்தன் கிருபை போதுமையா
    எந்தன் பெலன் நீர்தானையா

    ஜீவனை பார்க்கிலும் உம் அன்பு
    மிகவும் மிகவும் உயர்ந்ததையா
    காயங்கள் ஆற்றும் மருத்துவரே
    கருணை நிறைந்தவரே


    En Kalgal Sarukum Neramelam
    Karthavea Um Anbu Thnguthaiya
    Aruthal Nerthanaiya – En
    Adaikalam Neerthanaiya

    Ullam Kalangum Neramelam
    Unthan Aruthal Thotruthaiya
    Thangukireer Thinam Nadathukireer
    Thagapane Ummai Thuthipen

    Malaikal Kunrugal Vilaginalum
    Appa Um Anbu Marathaiya
    Unthan Kirubai Pothumaiya
    Enthan Belan Neerthanaiya

    Jeevanai Parkilum Um Anbu
    Migavum Migavum Uyarnthathaiya
    Kayangal Atrum Maruthuvarea
    Karunai Nirainthavarea


  • பலிபீடத்தின் காணிக்கையாய் Balibidathin Kanikaiyai

    பலிபீடத்தின் காணிக்கையாய்
    பரனேசுவே என்னை தந்தேன்
    ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்
    ஜீவ பலியாகவே

    விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
    உம் பிள்ளையாக என்னை மாற்றினீர்
    பொன்னும் பொருளும் ஈடாகுமோ
    அப்பா உம் நேசத்திற்கே

    உகந்த பலியாய் ஏற்றுக்கொள்ளும்
    உடைத்து என்னை உருவாக்கிடும்
    அர்பணித்தேன் முற்றிலுமாய்
    ஆட்கொண்டு நடந்திடும்

    நான் செய்த நன்மை ஏதும் இல்லை
    உம் அன்பினாலே தேடி வந்தீர்
    உயிர்வாழ்ந்திடும் நாள் வரையில்
    உம் அன்பை நான் மறவேன்


    Balibidathin Kanikaiyai
    Paranesuve Ennai Thanden
    Etrukolum Etrukolum
    Jeeva Baliyagavae

    Valaiyerapetra Um Rathathal
    Um Pilaiyaga Ennai Matreineer
    Ponum Porulum Edagumo
    Appa Um Nesathikea

    Ugantha Paliyai Etrukolum
    Udaithu Ennai Uruvagidum
    Arpanithen Mutrilumai
    Atkondu Nadathidum

    Naan Seitha Nanmai Ethum Illai
    Um Anbinalea Thedi Vanther
    Uyri Vazthidum Nal Varayil
    Um Anbai Naan Maraven

  • அழுகையை களிப்பாய் Azhugai Kalipai

    அழுகையை களிப்பாய் மாற்றினீரையா
    புலம்பலை எல்லாம் நீக்கினீரையா
    ஆறுதலாய் வந்தீரையா
    காயங்களை ஆற்றிநீரையா

    தனிமையிலே அழுத நேரத்திலே
    உம்மையன்றி என்னை அறிந்தவர் யார்
    கண்ணீர் மாற்றினீர் கவலைபோக்கினீர்
    உள்ளம் மகிழ்ந்து பாடிட செய்தீர்

    என் இதயம் உம்மை நம்பியது
    உம் தயவோ என்னை சூழ்ந்து கொண்டது
    உதவி செய்தீரே உயர்த்தி வைத்தீரே
    உம்மை பாடிடும் உள்ளம் தந்தீரே

    என் பெலன் எந்தன் கேடகமே
    என் தலையை நிமிர செய்பவரே
    ஆசை ஆசையாய் உம்மை பாடுவேன்
    எந்தன் இயேசையா உம்மை நேசிப்பேன்

    Azhugai Kalipai Matrineraiya
    Pulambalai Ellam Nekineraiya
    Aruthalai Vantheraiya
    Kayangalai Atrineraiya

    Thanimayilea Azhutha Nerathil
    Ummaiyanri Ennai Arinthavar Yar
    Kaner Matriner Kavalaipokiner
    Ullam Magizhthu Padida Seither

    En Ithayam Ummai Nambiyathu
    Um Thayavo Ennai Suzhthu Kondathu
    Udavi Seithirea Yuarthi Vaitherea
    Ummai Padidum Ullam Thantherea

    En Belan Enthan Kedagamea
    En Thalaiyai Nimira Seipavarea
    Asai Asaiyai Ummai Paduven
    Enthan Yesaiya Ummai Nesipen

  • ஆனந்தமே ஜெயா ஜெயா Aananthamae Jeyaa Jeyaa

    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்

    சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்

    முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
    தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ்

    பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்


    Aananthamae Jeyaa Jeyaa
    Akamakilnthanaivarum Paadiduvom

    Njaanaratchakar Naathar Namai – Intha
    Naalvarai Njaalamathinil Kaaththaar – Pukal

    Sangu Kanam Valar Senga larasivai
    Thalaraathula Kiristhaanavaraam
    Engal Ratchakaraesu Namai – Veku
    Irakkang Kirupaiyudan Ratchiththathaal – Pukal

    Munthu Varuda Mathinil Manudaril Veku
    Mosakasthikal Thanilaeyulala
    Thanthu Namakkuyirutaiyunavum – Veku
    Thayavudan Yesu Tharkaaththathinaal – Pukal

    Panjam Pasikkum Pattayaththukkum Veku Kodum
    Paal Kollai Nnoy Vishathoshaththirkum
    Thanja Ratchakar Thavirththu Namai – Ith
    Tharai Thanil Kurai Thanniththaattiyathaal – Pukal

  • என் ஆலோசனை கர்த்தர் Yen Aalosanai Karthar

    என் ஆலோசனை கர்த்தர் நீரே
    உம் வாக்கை தந்து என்னை நடத்தினீரே
    ஆர்வமாய் நான் உம்மை தேட
    என்னை அபிஷேகித்து வழி நடத்தினீரே

    கிருபையாய் என்னை இரட்சித்தீரே
    வல்லமையால் என்னை நிரப்பினீரே – 2

    நல்ல மேய்ப்பன் நீர்தானையா
    தொலைந்து போன என்னை தேடி வந்தீர் -2
    ஜீவனுள்ள மார்க்கம் தந்தீரையா
    என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினீரே

    உம்மை விட்டு தூரம் சென்ற என்னை
    மீண்டும் உம் பிள்ளையாய் சேர்த்துக் கொண்டீர் -2
    நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்
    பாக்கியத்தை எனக்கு தந்தீரையா


    Yen Aalosanai Karthar Neerae
    Um Vaakkai Thanthu Ennai Nadathinirae
    Aarvamaai Naan Ummai Theda
    Ennai Abishegithu Vazhi Nadathinirae

    Kirubaiyai Ennai Ratchithirae
    Vallamaiyal Ennai Nirapinirae – 2

    Nalla Meipan Neer Tanayya
    Tholainthu Pona Ennai Thedi Vanthir – 2
    Jeevanulla Markam Thantheerayya
    En Santhoshathai Rettipakinirae

    Ummai Vittu Thooram Sentra Ennai
    Meendum Um Pillayai Serthu Kondeer – 2
    Nithiya Jeevanai Petru Kollum
    Bakiyathai Enaku Thantheerayya