Author: admin

  • மோட்ச நாடு நோக்கியே Motcha Nadu Nokiye

    மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
    மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார்

    பரம தேசம் வாஞ்சிக்குறேன்
    இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
    பின்னோக்கி பார்ப்பதில்லை
    முன்செல்வேன் எந்நாளும்

    அல்லேலூயா பாடுவேன்
    மோட்ச நாடு சேருவேன்

    அலைகள் மோதினாலும்
    புயல் காற்று தடுத்திட்டாலும்
    என் படகில் இயேசு உண்டு
    என்ன பயம் எனக்கு உண்டு


    Motcha Nadu Nokiye Payanam Selkiren
    Mosam Ethuyum Vanthidamal Nesar Kapar

    Parama Desam Vaanjikuren
    Elakai Noki Thodarkiren
    Pinoki Parpathilai
    Munselven Ennalume

    Alaeluya Paduven
    Motcha Nadu Seruven

    Alaigal Mothinalum
    Puyal Katru Thaduthitalum
    En Padakil Yesu Undu
    Enna Payam Enaku Undu


  • மனம் திறந்து உம்மிடம் Manam Thiranthu Ummitam

    மனம் திறந்து உம்மிடம் பேசினேன்
    மனக்கவலை மறைந்து போனதையா
    உள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்
    நறுமணம் வாழ்வில் வந்ததையா

    கறுப்பு நிறம் நானென்று சொன்னேன்
    ரூபவதி நீ தான் என்றீர்
    வறண்டு போன நிலம் நான் என்றேன்
    ஜீவத்தண்ணீர் நானே என்றீர்

    பெலவீனன் நான் என்று சொன்னேன்
    என் கிருபை போதும் என்றீர்
    காயப்பட்ட மனிதன் நான் என்றேன்
    பரிகாரி நானே என்றீர்

    துணை ஏதும் இல்லை என்று சொன்னேன்
    நான் உனக்கு போதும் என்றீர்
    இந்த பூமி சொந்தமல்ல என்றேன்
    சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர்


    Manam Thiranthu Ummitam Pesinen
    Manakkavalai Marainthu Ponathaiya
    Ullam Utainthu Ummai Nokkinen
    Narumanam Vazhvil Vanthathaiya

    Karuppu Niram Nanenru Sonnen
    Rupavathi Ni Than Enrir
    Varantu Pona Nilam Nan Enren
    Jivaththannir Nane Enrir

    Pelavinan Nan Enru Sonnen
    En Kirupai Pothum Enrir
    Kayappatta Manithan Nan Enren
    Parikari Nane Enrir

    Thunai Eethum Illai Enru Sonnen
    Nan Unakku Pothum Enrir
    Intha Pumi Sonthamalla Enren
    Sontha Thesam Serppen Enrir


  • எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Enthan Jeeva Natkalelam

    எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
    அப்பா உம் சமூகத்திலே
    வாழ்வதை நாடுகிறேன்

    அப்பா உம் பாதத்திலே
    எப்போதும் அமர்ந்திருப்பேன்
    உம்மோடு இணைத்திருப்பேன்
    உம்மையே நினைத்திருப்பேன்
    மேகமே ஆராதனை ! அக்கினியே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை

    உம்மையன்றி வேரத்யும் வேறெதையும்
    நேசிப்பதில்லை ஐயா
    பலிபீடம் கட்டுகிறேன்
    ஈசாக்கை (என்னையே) வைத்துவிட்டேன்
    நேசரே ஆராதனை இயேசுவே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை

    நீங்காத நல்ல பங்கு
    தேவை எனக்கு நீரே
    அதையே நாடுகிறேன்
    நீர்மட்டும் எனக்கு போதும்
    அன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை


    Enthan Jeeva Natkalelam
    Appa Um Samugathilay
    Vazhvathai Nadukiren

    Appa Um Pathail
    Epothum Amarthirupen
    Ummodu Enaithirupen
    Ummaiye Ninaithirupen
    Megame Arathanai Akkiniye Arathanai
    Arathanai Thuthi Arathanai

    Umaiyantri Verathyum
    Nesipathilai Iyya
    Palipidam Katukiren
    Esakai Ennaiye Vaithuviten
    Nesarea Arathanai Yesuve Arathanai
    Arathanai Thuthi Arathanai

    Ningatha Nalla Pangu
    Thevai Enaku Neerae
    Athaiye Nadukiren
    Neermatum Enaku Pothum
    Anbarea Arathanai Aruyiah Arathanai
    Arathani Thuthi Arathanai


  • எண்ணில்லாத நன்மைகள் Ennilatha Nanmaigal

    எண்ணில்லாத நன்மைகள்
    எந்தன் வாழ்வில் செய்தவரே
    என்னச் சொல்லி நான் பாடுவேன்
    உம் அன்பை

    சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர்
    சேதமின்றி காத்து கொண்டீர்
    நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர்
    நன்றி எந்தன் இயேசு ராஜனே

    அமைதி நிறைந்த இதயம் தந்தீர்
    அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர்
    அப்பா உம் நேசம் எத்தனை பெரிது
    அளவிட முடியா அலைகடல் போன்றது

    ஏற்ற வேலை நன்மை செய்தீர் போற்றி
    உம்மை புகழ்ந்திடுவேன்
    வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர்
    பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே


    Ennilatha Nanmaigal
    Enthan Vazhvil Seithavarea
    Enna Soli Nan Paduven
    Um Anbai

    Setril Erunthu Thuki Eduthir
    Sethaminri Kathu Kondir
    Nandri Padal Enan Navinil Thanthir
    Nandri Enthan Yesu Rajanea

    Amaithiniratiha Eruthayam Thanther
    Agamazhnthu Ummai Pada Vaither
    Appa Um Nesam Ethanai Perithu
    Alavida Mudiya Alaikadal Ponrathu

    Etra Velai Nanmai Seither
    Potri Ummai Puzhanthiduven
    Vatratha Utrai Enulam Vandher
    Patrikolven Enrum Umaiye


  • எதுவும் பிரிப்பதில்லை Ethuvum Pirippathillai

    எதுவும் பிரிப்பதில்லை
    இயேசு உம் அன்பிலிருந்து
    என் மனம் உம்மைப் பிரிந்து
    வேறெங்கும் செல்வதில்லை

    மரணமோ நாசமோ மோசமோ
    எதையும் தாங்கிடுவேன்
    என்ன துன்பங்கள் வந்தாலும்
    இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன்

    உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன்
    உம் ஜீவன் என்னில் பெற்றேன்
    இனி வாழ்வது நானல்ல
    என்னில் வாழ்வது நீர்தானையா

    உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை
    என் ஆசை இயேசய்யா
    உம்மை அறிந்திடும் தாகத்தினால்
    இந்த உலகமே குப்பை என்றேன்


    Ethuvum Pirippathillai
    Iyesu Um Anpilirunthu
    En Manam Ummaip Pirinthu
    Verengkum Selvathillai

    Maranamo Nasamo Mosamo
    Ethaiyum Thangkituven
    Enna Thunpangkal Vanthalum
    Innum Ummantai Nerungkituven

    Ummotu Siluvaiyil Araiyappatten
    Um Jivan Ennil Perren
    Ini Vazhvathu Nanalla
    Ennil Vazhvathu Nirthanaiya

    Ummaiyanri Veroru Viruppamillai
    En Aasai Iyesayya
    Ummai Arinthitum Thakaththinal
    Intha Ulakame Kuppai Enren


  • தளர்ந்திடாமல் முன் Thalarnthidamal Mun

    தளர்ந்திடாமல் முன் சொல்லுவோம்
    நம் இயேசு நம்மோடு உண்டு – 2

    தளர்ந்திட்ட கைகளே
    இன்றே திடன் கொள்ளுங்கள் – 2
    தள்ளாடும் கால்களே
    இன்றே பெலன் கொள்ளுங்கள் – 2

    கலங்கும் இதயங்களே
    அமைதி கொள்ளுங்களே – 2
    இயேசு வருகிறார்
    விடுதலை தந்திடுவார் – 2

    பரிசுத்த வழி நடப்போம்
    பரலோகம் வழி நடப்போம் – 2
    ஆனந்த களிப்புடனே
    சீயோனைக் கண்டிடுவோம் – 2


    Thalarnthidamal Mun Seluvom
    Nam Yesu Namodu Undu – 2

    Thalarnthida Kaikalae
    Indre Thidan Kolungal – 2
    Thaladum Kalgalae
    Indre Belan Kolungal – 2

    Kalangum Ithayangalae
    Amaithi Kolugalae – 2
    Yesu Varugirar
    Viduthalia Thandhiduvaar – 2

    Parisutha Vazhi Nadapom
    Parologam Sernthiduvom – 2
    Aanantha Kalipudanae
    Siyonai Kandituvom – 2


  • சிநேகிதரே உம் நேசத்தினால் Sinaekitharae Um Naesaththinaal

    சிநேகிதரே உம் நேசத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீர்
    அன்பரே உந்தன் அன்பால்
    என்னை அணைத்துக் கொண்டீர்

    கொடியாக பறக்குதையா
    உந்தன் நேசமைய்யா

    இராக்கால நேரங்களில்
    ராஜா என் தியானம் நீரே

    நேசத்தின் வல்லமையை
    எதுவும் தணிக்காதையா

    ஆஸ்தியும் செல்வங்களும்
    உம் அன்பிற்கிணையாகுமோ

    நேசத்தின் உச்சிதங்கள்
    நேசரே உமக்களித்தேன்


    Sinaekitharae Um Naesaththinaal
    Ennai Iluththuk Konnteer
    Anparae Unthan Anpaal
    Ennai Annaiththuk Konnteer

    Kotiyaaka Parakkuthaiyaa
    Unthan Naesamaiyyaa

    Iraakkaala Naerangalil
    Raajaa En Thiyaanam Neerae

    Naesaththin Vallamaiyai
    Ethuvum Thannikkaathaiyaa

    Aasthiyum Selvangalum
    Um Anpirkinnaiyaakumo

    Naesaththin Uchithangal
    Naesarae Umakkaliththaen


  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Karthar En Meiparayirukirar

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
    எனக்கொன்றும் குறைவில்லை

    புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
    அமர்ந்த தண்ணீரண்டை
    அனுதினம் நடத்துவார்
    அன்பின் தெய்வம் இயேசு ராஜா

    ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
    ஆறுதல் அளிக்கின்றார்
    நீதியின் பாதையில்
    நித்தம் என்னை நடத்துவார்

    மரண இருளின் பள்ளத்தாக்கில்
    நடக்க நேர்ந்தாலும்
    கொஞ்சமும் பயமில்லை
    தேற்றும் தெய்வம் என் துணையே


    Karthar En Meiparayirukirar
    Enakondrum Kuraivilai

    Pullula Edangalil Ennai Meithu
    Amarntha Thaneerandai
    Anuthinam Nadathuvar
    Anbin Devam Yesu Raja

    Aanmavai Thinamum Thaetrugirar
    Aaruthal Alikinrar
    Neethiyin Padhaiyil
    Nitham Ennai Nadathuvar

    Marana Irulin Pallathakil
    Nadakka Nernthalum
    Konjamum Bayamilai
    Thaetrum Devam En Thunaiyae


  • கண்மணி போல் என்னைக் Kanmani Pol Ennai Kaapavarae

    கண்மணி போல் என்னைக் காப்பவரே
    கருத்தாய் என்னை விசாரிப்பாரே

    பாரங்கள் யாவும் சுமந்தார்
    சந்தோஷம் நிறைவாய் தந்தார்
    புலம்பல் மாற்றி ஆனந்தம் அளித்தார்
    துதித்துப் பாடச் செய்தார்

    கண்ணீரை தேவன் துடைத்தார்
    இதயம் பூரிக்குதே
    மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி
    எனக்குள் இல்லை வறட்சி

    வல்லமையுடைய தேவன்
    நம்மைகள் எனக்கு செய்தார்
    நேர்த்தியான வழியில் என்னை
    என்றும் நடத்திடுவார்


    Kanmani Pol Ennai Kaapavarae
    Karuththaay Ennai Visaarippaarae

    Paarangal Yaavum Sumanthaar
    Santhosham Niraivaay Thanthaar
    Pulampal Maatti Aanantham Aliththaar
    Thuthiththup Paadach Seythaar

    Kanneerai Thaevan Thutaiththaar
    Ithayam Poorikkuthae
    Manathil Makilchchi Mukaththil Malarchi
    Enakkul Illai Varatchi

    Vallamaiyutaiya Thaevan
    Nammaikal Enakku Seythaar
    Naerththiyaana Valiyil Ennai
    Entum Nadaththiduvaar


  • ஆனந்த களிப்புடனே என் Aanantha Kalipudanae En

    ஆனந்த களிப்புடனே என்
    அப்பாவை பெற்றிடுவேன் என்
    ஜீவிய காலமெல்லாம்
    இயேசு ராஜாவை உயர்த்திடுவேன்

    பாடுவேன் இயேசு ராஜனை
    போற்றுவேன் இயேசு ராஜாவை
    என் வாழ்வின் இன்பம் இயேசு தான்
    என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான்

    சிலுவையில் இயேசு மரித்தார்
    என் பாவம் போக்கிடவே
    மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்
    என்னோடு வாழ்ந்திடவே

    முழங்கள் யாவும் முடங்கும்
    இயேசுவின் நாமத்தினால்
    பாதாள சேனைகள் நடுங்கும்
    இயேசுவின் நாமத்தினால்

    நுகங்கள் முறிந்து போகும்
    உன்னதரின் அபிஷேகத்தில்
    ஆற்றலோ சக்தியோ அல்ல
    ஆவியால் எல்லாம் ஆகும்


    Aanantha Kalipudanae En
    Appavai Prtriduven En
    Jeeviya Kalamelam
    Yesu Rajavai Uyarthiduven

    Paduven Yesu Rajanai
    Potruven Yesu Rajavai
    En Vazhvin Inbam Yesu Thaan
    En Vazhkaiyin Thipam Iyesuthan

    Siluvaiyil Yesu Marithar
    En Pavam Pokidavae
    Moondram Naal Uyirodu Ezhundhar
    Ennodu Vazhnthidavae

    Muzhangkal Yaavum Mudangum
    Yesuvin Namathinaal
    Paathala Senaikal Nadungum
    Yesuvin Namathinaal

    Nukangal Murinthu Pokum
    Unatharin Abishekathal
    Atralo Sakthiyo Alla
    Aaviyal Ellam Agum