Author: admin

  • மலைகள் விலகி போனாலும் Malaikal Vilaki Ponalum

    மலைகள் விலகி போனாலும்
    மகிழ்ந்து பாடுவேன்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    துதித்து பாடுவேன்
    எந்தன் இயேசு என்னை கைவிடமாட்டார்
    இயேசு என்னை மறந்திட மாட்டார்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்
    அன்பரை துதித்து பாடுவேன்

    தண்ணீர்களை கடந்தாலும்
    சோர்ந்திட மாட்டேன்
    அக்கினியில் நடந்தாலும்
    அழுதிட மாட்டேன்
    எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரே
    இயேசு என்னை ஆதரிப்பாரே

    மரணமோ நாசமோ
    பயப்பட மாட்டேன்
    துன்பமோ தொல்லையோ
    கலங்கிட மாட்டேன்
    எந்தன் இயேசு என்னை காத்திடுவாரே
    இயேசு என்னை நடத்திடுவாரே

    செங்கடலோ யோர்தானோ
    முன்னே வந்தாலும்
    எரிகோவின் கோட்டைகள்
    எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரே
    இயேசு எல்லாம் பார்த்து கொள்வாரே


    Malaikal Vilaki Ponalum
    Magizhnthu Paduven
    Parvathangkal Peyarnthalum
    Thuthithu Paduven
    Enthan Yesu Ennai Kaividamatar
    Yesu Ennai Maranthida Matar

    Aarathipen Aarathipen En
    Anparai Thuthithu Paduven

    Thannirkalai Kadanthalum
    Sornthida Maten
    Akkiniyil Nadanthalum
    Azhuthida Maten
    Enthan Yesu Ennai Sumanthiduvare
    Yesu Ennai Atharipare

    Maranamo Nasamo
    Payapata Maten
    Thunpamo Thaolaiyo
    Kalangkida Maten
    Enthan Yesu Ennai Kathituvare
    Yesu Ennai Nadathiduvare

    Sengkatalo Yorthano
    Munne Vanthalum
    Erikovin Kotiakal
    Enthan Yesu Enaku Jeyam Tharuvare
    Yesu Ellam Parthu Kolvare


  • இந்த மேகங்களை கடந்து Intha Mekangkalia Kadanthu

    இந்த மேகங்களை கடந்து
    மோசநாடு சேர்ந்திடுவோம்
    இயேசுவோடு வாழ்ந்திருப்போம்
    இயேசுவோடு ம்கிழ்ந்திருப்போம்

    மாரநாதா அல்லேலுயா
    மாரநாதா அல்லேலுயா – 2

    நள்ளிரவோ அதிகாலையோ
    மாலையோ நடுப்பகலோ – 2
    நினையாத நேரம் வந்திடுவார்
    விழிப்புடன் காத்திருப்போம் – 2

    நம் மீட்பு மிக சமீபம்
    தலைகளை உயர்த்திடுவோம் – 2
    மணவாளன் இயேசு வருகின்றார்
    மகிமையில் சேர்ந்திடுவோம் – 2

    விசுவாசம் காத்து கொள்வோம்
    நம் ஒட்டத்தில் ஜெயம் பெறுவோம் – 2
    நீதியின் கீரிடம் தந்திடுவார்
    நம் நியாயாதிபதி இயேசு – 2

    நோவாவின் நாட்களைப் போல
    இந்நாட்கள் மாறினதே – 2
    கறைதிரை இன்றி வாழ்ந்திடுவோம்
    பரிசுத்த மணவாட்டியாய் – 2


    Intha Mekangkalia Kadanthu
    Motsa Nadu Sernthituvom
    Iyesuvodu Vazhnthirupom
    Iyesuvodu Magizhnthirupom

    Maranatha Alaeluya
    Maranatha Alaeluya – 2

    Naliravo Athikaliyo
    Malaiyo Natupakalo – 2
    Ninaiyatha Neram Vanthituvar
    Vizhipudan Kathirupom – 2

    Nam Mitpu Mika Samipam
    Thalaikali Uyarthituvom – 2
    Manavalan Yesu Varukinrar
    Magimaiyil Sernthiduvom – 2

    Visuvasam Kathu Kolvom
    Otathil Jeyam Peruvom – 2
    Nithiyin Kiridam Thanthituvar
    Niyathipathi Yesu – 2

    Novavin Natkalai Pol
    Inatkal Marinathe – 2
    Karai Thiraiyinri Vazhnthituvom
    Parisutha Manavatiyai – 2


  • எந்தன் உயிரே கர்த்தரை Enthan Uyire Kartharai

    எந்தன் உயிரே கர்த்தரை துதி
    எந்தன் உள்ளமே கர்த்தரை துதி – 2
    அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் – 2
    வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி – 2

    பாவங்களை மன்னித்தார்
    பரிசுத்த வாழ்வு தந்தார் – உன் – 2

    வியாதியின் நேரத்திலே
    பூரண சுகமளித்தார்

    மனதை புதிதாக்கினார்
    மறுரூப வாழ்வளித்தார்

    நன்மையாம் ஈவுகளை
    நாள்தோறும் உனக்குத் தந்தார்

    கர்த்தர் செய்த உபகாரங்கள்
    எண்ணி முடியாதவைகள் – நம்


    Enthan Uyire Kartharai Thuthi
    Enthan Ullame Kartharai Thuthi – 2
    Avar Seythitta Nanmaikalukkay – 2
    Vazhnalellam Karththarai Thuthi – 2

    Pavangkalai Manniththar
    Parisuththa Vazhvu Thanthar – Un – 2

    Viyathiyin Neraththile
    Purana Sukamaliththar

    Manathai Puthithakinar
    Maruruba Vazhvalithar

    Nanmaiyam Iivukalai
    Nalthorum Unakkuth Thanthar

    Karththar Seytha Upakarangkal
    Enni Mutiyathavaikal – Nam


  • என் வாழ்வின் ஆனந்தம் நீரே En Vazhvin Aanantham Neerae

    என் வாழ்வின் ஆனந்தம் நீரே
    என்றென்றும் போதும் எனக்கு நீரே
    உம்மை கண்ணில் வைத்தே
    உலகை மறந்து போனேன்

    பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே
    மாறாத நம்பிக்கையும் நீரே
    மாறிப் போகிடும் மானிடர் உண்டு
    மாறிடாத இம்மானுவேல் நீரே

    மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில்
    மன்னவா உம் பாதம் சேருவேன்
    திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில்
    மனத்துயரம் மறைந்து போகுதே

    ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்
    அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
    மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்
    மகிழ்வோடு நான் வாழ்வேன்


    En Vazhvin Aanantham Neerae
    Enrenrum Pothum Enakku Neerae
    Ummai Kannil Vaiththe
    Ulakai Maranthu Ponen

    Perrorum Neerae En Sonthangkalum Neerae
    Maratha Nampikkaiyum Neerae
    Marip Pokitum Manitar Untu
    Maritatha Immanuvel Neerae

    Manathin Parangkal Nerukkum Neraththil
    Mannava Um Patham Seruven
    Thiruvay Mozhikal Ketkum Velaiyil
    Manaththuyaram Marainthu Pokuthe

    Aanantha Thailam Anuthinamum Thanthir
    Athisayamay Thinam Nataththukirir
    Makimaiyil Sernthitum Nal Varaiyil
    Makizhvotu Nan Vazhven


  • அப்பா உம் அன்பு ஒன்றே Appa Um Anbu Onrea

    அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
    என் உயிருள்ள நாளெல்லாம்
    ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
    என் ஜீவிய நாளெல்லாம்

    நீரே எனதெல்லாம்
    உம்மையே நேசிப்பேன் – 2
    உம்மையே நேசிப்பேன்

    கல்வாரி நேசத்தினால்
    எந்தன் உள்ளம் மாறிற்றே
    உம் தூய இரத்தத்தினால்
    எந்தன் பாவம் நீங்கிற்றே

    தினம் என் உள்ளமதை ஆளும்
    தேவ ஆவியே
    உம் தூய பாதையில் நடத்தும்
    தேவ ஆவியே


    Appa Um Anbu Onrea Pothum
    En Uyirula Nalelam
    Raja Um Pasam Onrea Pothum
    En Jeeviya Nalelam

    Neerea Enathelam
    Ummaiyea Nesipen – 2
    Ummaiyea Nesipen

    Kalvari Nesathal Enthan
    Ullam Matrinerea
    Um Thuya Rathathinal Enthan
    Pavam Nengitrea

    Dhinam En Ullamathai Alum
    En Deva Aviyea
    Um Thuya Padhaiyil Nadhathum
    En Deva Aviye


  • அண்டிக்கொள்ளும் தெய்வம் Anntikkollum Theyvam

    அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா
    என் ஆறுதல் நாயகன் நீர்தானையா

    கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னை
    காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா
    தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
    தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா
    தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா

    கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என்
    கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா
    பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு
    பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா
    கிருபையை ஈந்ததும் நீர்தானையா

    வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை
    ஒளியாக மாற்றியவர் நீர்தானையா
    உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு
    மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை
    மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா


    Anntikkollum Theyvam Neerthaanaiyaa
    En Aaruthal Naayakan Neerthaanaiyaa

    Karuvinil Kanndavar Neerthaanaiyaa – Ennai
    Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa
    Thaay Maranthaalum Thanthai Veruththaalum
    Thayavaaka Annaippavar Neerthaanaiyyaa
    Thol Meethu Sumappavar Neerthaanaiyyaa

    Kannnneeraith Thutaippavar Neerthaanaiyaa- En
    Kavalaikal Theerppavar Neerthaanaiyaa
    Pelaveena Naeram Sornthitta Enakku
    Pelan Thanthu Nadaththiyathum Neerthaanaiyaa
    Kirupaiyai Eenthathum Neerthaanaiyaa

    Valiyaaka Vanthavar Neerthaanaiyaa – Ennai
    Oliyaaka Maarriyavar Neerthaanaiyaa
    Ulakaththin Maayaikku Mayangaathapatikku
    Maruroopamaakkiyavar Neerthaanaiyaa – Ennai
    Makimaiyil Serppavar Neerthaanaiyaa


  • பூர்வ நாட்களை நினைத்துப் Purva Natkalai Ninaiththup

    பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
    செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்
    எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யா
    நித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா

    பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே
    உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா

    கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர்
    கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர்
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா

    உந்தன் துதி பாடல் எந்தன் ஆவி தந்தீர்
    எந்த நாளும் உம் பாதம் அமரச் செய்தீர்
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன்

    நானும் எந்தன் வீட்டாரும் என்றென்றும்
    உண்மையுடன் உந்தன் பணி செய்திடுவோம்
    உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம்
    வாழ்வோ தாழ்வோ உந்தன் பின் செல்வோம்


    Purva Natkalai Ninaiththup Parkkiren
    Seyalkalaiyellam Thiyanikkiren
    Eththanaiyo Nanmaikal Seythir Ayya
    Niththam Nanri Solli Thuthippen Ayya

    Paviyaka Iruntha Ennai Thetivanthire
    Um Iraththathale En Pavam Pokkivittire
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren – Ayya

    Karam Pitiththu Um Sontham Aakkik Kontir
    Kavalai Payam Ethuvuminri Kaththuk Kontir
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren – Ayya

    Unthan Thuthi Patal Enthan Aavi Thanthir
    Entha Nalum Um Patham Amaras Seythir
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren

    Nanum Enthan Vittarum Enrenrum
    Unmaiyutan Unthan Pani Seythituvom
    Uyirulla Nalellam Ummaiye Nesippom
    Vazhvo Thazhvo Unthan Pin Selvom


  • பிறந்த நாள் முதல் இந்த Pirantha Naal Mudhal

    பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
    என்னை காத்து வந்தீர்
    இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
    உமக்கு நன்றி ஐயா

    எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
    என்னை அறிந்த தெய்வம் நீரே

    உம்மையே உயர்த்திடுவேன்
    உம்மையே துதித்திடுவேன்

    தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
    இறுதி நாள் வரை சுமந்திடுவீர்

    எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
    கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்

    அனுதினம் நல்ல உணவு தந்தீர்
    தேவை அறிந்து உதவி செய்தீர்


    Pirantha Naal Mudhal Intha Naal Varai
    Ennai Kathu Vanther
    Ithuvarai Nadathiner Eniyum Nadathuver
    Umaku Nandri Iyya

    Endhan Elumbugal Uruvagum Munamea
    Ennai Aritha Theivam Neerae

    Ummaiye Uyarthiduven
    Ummaiye Thuthithiduven

    Thayin Karuvil Ennai Neer Thangineer
    Eruthinal Varai Sumathiduver

    Ethanai Theimaigal Ennai Suzhnthalum
    Kanmani Pol Ennai Pathukather

    Anudhinam Nalla Unavu Thanther
    Thevai Arinthu Udavi Seidher


  • நன்றி இயேசுவே உம் Nandri Yesuvae Um

    நன்றி இயேசுவே உம் அன்பிற்கே
    நன்றி இயேசுவே உம் கிருபைக்கே

    ஜீவனைத் தந்தீரே ஜீவனாக வந்தீரே
    ஜீவனுள்ள நாளெல்லாம் போற்றி போற்றி பாடுவேன்

    கைவிடாமல் காத்தீரே கன்மலைமேல் வைத்தீரே
    கருத்துடன் பாடுவேன் கர்த்தாவே உம் அன்பினை

    அளவில்லா ஆனந்தம் அனுதினமும் தந்தீரே
    ஆவியோடு பாடுவேன் அன்பரே உம் நேசத்தை

    சிறுமையான எந்தன் மேல் சிந்தை வைத்து காத்தீரே
    என்னை நீர் நினைத்திட தகுதி ஒன்றும் இல்லையே


    Nandri Yesuvae Um Anpirke
    Nandri Yesuvae Um Kirupaike

    Jeevanaith Thanthire Jeevanaka Vanthire
    Jeevanula Nalelam Potri Potri Paduven

    Kaividamal Kathire Kanmalaimel Vaithire
    Karuthudan Paduven Karthave Um Anpinai

    Alavila Anantham Anuthinamum Thanthire
    Aviyodu Paduven Anpare Um Nesathai

    Sirumaiyana Enthan Mel Sinthai Vaithu Kathire
    Ennai Neer Ninaithida Thakuthi Onrum Illaiye


  • நான் பாடுவேன் உம்மை Naan Paduven Ummai Enrume

    நான் பாடுவேன் உம்மை என்றுமே
    நான் போற்றுவேன் உம்மை என்றுமே – 2
    தேவனே என் ஜீவனே
    தேடி வந்த என் தெய்வமே – 2

    ஆராதனை என்றும் உமக்கே
    ஆராதனை என்றும் உமக்கே
    ஆராதனை என்றும் உமக்கே
    ஆராதனை என்றும் உமக்கே – 4

    உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
    முழு மனதால் உம்மை நேசிப்பேன் – 2
    தாழ்மையிலே என்னை நினைத்தவரே
    தாங்கி நடத்தும் என் இயேசுவே – 2

    பெலவீன நேரம் பெலன் தந்தீர்
    கிருபையினால் தினம் தாங்கினீர் – 2
    கண்மணி போல் என்னைக் காப்பவரே
    காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன் – 2

    நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே
    உம் அன்பால் உள்ளம் பொங்குதே – 2
    இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
    மகிழ்வுடனே உம் துதி பாடுவேன் – 2


    Naan Paduven Ummai Enrume
    Naan Potruven Ummai Enrume – 2
    Thevane En Jivane
    Theti Vantha En Theyvame – 2

    Aarathanai Enrum Umakke
    Aarathanai Enrum Umakke
    Aarathanai Enrum Umakke
    Aarathanai Enrum Umakke – 4

    Uyirulla Nalellam Patuven
    Muzhu Manathal Ummai Nesippen – 2
    Thazhmaiyile Ennai Ninaiththavare
    Thangki Nataththum En Iyesuve – 2

    Pelavina Neram Pelan Thanthir
    Kirupaiyinal Thinam Thangkinir – 2
    Kanmani Pol Ennaik Kappavare
    Kalamellam Um Pukazh Patuven – 2

    Neer Seytha Nanmaikal Ninaikkaiyile
    Um Anpal Ullam Pongkuthe – 2
    Ithayamellam Ummai Vanysikkuthe
    Makizhvutane Um Thuthi Patuven – 2