Author: admin

  • தாயானவள் மறந்தாலும் Thayanaval Maranthalum

    தாயானவள் மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    சேயாகுமுன் தெரிந்தழைத்தீர்
    நீர் என்னை விடுவதில்லை – 2

    தஞ்சம் தஞ்சம் இயேசு
    என் நெஞ்சின் தெய்வம் இயேசு
    தஞ்சம் தஞ்சம் இயேசு
    எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு

    கர்த்தருக்கு காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை – 2
    கண்ணிமையில் காப்பதுபோல்
    கர்த்தர் நம்மைக் காப்பாரே காத்தாரே – 2

    உள்ளங்கையில் வரைந்தவரே
    ஒரு நாளும் கை விடாதவரே – 2
    வழித்தப்பி போனவர்க்கு
    வழித்துணை ஆனவரே – 2

    இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்
    என்றும் நேசிக்க முடிவதில்லை – 2
    என்றும் நேசிக்கிறார்
    இயேசு என்றும் ஜீவிக்கிறார் – 2


    Thayanaval Maranthalum
    Neer Ennai Marapathillai
    Seiiyakummun Therinthalaitheer
    Neer Ennai Viduvathillai – 2

    Thanjam Thanjam Yesu
    En Nenjin Theivam Yesu
    Thanjam Thanjam Yesu
    Enthan Nenjin Theivam Yesu

    Kartharuku Kathiruppom
    Vetkappatu Povathillai – 2
    Kanninmaneil Kappathu Pol
    Karthar Nammai Kapparea Katharae– 2

    Ullangkaiyil Varainthavarea
    Oru Naalum Kaividathavarea – 2
    Vazhi Thappi Ponavaruku
    Nal Vazhithunai Aanavarea – 2

    Endru Nesikkum Manithar Ellam
    Endrum Nesikka Mudivathillai – 2
    Endrum Nesikkirar
    Yesu Endrum Jeevikkirar – 2


  • ஆராதனை செய்ய வந்தோம் Arathanai Seyya Vanthom

    ஆராதனை செய்ய வந்தோம்
    ஆடிபாடி ஆர்பரிப்போம்

    துதி ஆராதனை
    பலி ஆராதனை
    புகழ் ஆராதனை
    என்றும் உமக்குதானே

    அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்து
    அழைத்து வந்தீர்

    துதிகள் செலுத்தி
    பலிகள் செலுத்தி
    ஆராதனை செய்கின்றோம்

    துதி ஆராதனை
    பலி ஆராதனை
    புகழ் ஆராதனை
    என்றும் உமக்குதானே

    செங்கடலும் யோர்தானும்
    எதிரே வந்தும் கடக்க செய்தீர்

    அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
    அனுதினம் வழி நடத்தி வந்தீர்


    Arathanai Seyya Vanthom
    Aadi Padi Aarparippom

    Thuthi Aarathanai
    Bali Aarathanai
    Pugazh Arathanai
    Endrum Ummakuthane

    Adimaidanathin Veedana Egipthilirnuthu
    Alaithu Vantheer

    Thithugal Selutthi
    Baligal Selutthi
    Aarathanai Seikinrom

    Thuthi Aarathanai
    Bali Aarathanai
    Pugazh Arathanai
    Endrum Ummakuthane

    Sengadalum Yorthanum
    Ethire Vanthum Kadakka Seitheer

    Akkinisthambam Megasthambam
    Anuthinam Vazhi Nadathi Vantheer


  • துதிப்பலி துதிப்பலி Thudhipali Thudhipali

    துதிப்பலி துதிப்பலி
    தூயவர் இயேசுவுக்கே
    நன்றிப்பலி நன்றிப்பலி
    நல்லவர் இயேசுவுக்கே – 2

    ஆராதனை தேவனுக்கே
    ஆராதனை நம் ராஜனுக்கே – 2

    வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம்
    வல்லவர் இயேசுவையே
    போற்றிடுவோம் போற்றிடுவோம்
    பெரியவர் இயேசுவையே – 2

    பாடிடுவோம் பாடிடுவோம்
    பரமன் இயேசுவையே
    புகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம்
    புண்ணியர் இயேசுவையே – 2

    ஆராதிப்போம் ஆராதிப்போம்
    அன்பர் இயேசுவையே
    உயர்ந்திடுவோம் உயர்ந்திடுவோம்
    உன்னதர் இயேசுவையே – 2


    Thudhipali Thudhipali
    Thuyavar Yesuvuke
    Nandripali Nandripali
    Nalavar Yesuvuke – 2

    Aarathanai Devanuke
    Aarathanai Nam Rajanuke – 2

    Vazhthiduvom Vazhthiduvom
    Vallavar Yesuvaiye
    Potriduvom Potriduvom
    Periyavar Yesuvaiye – 2

    Padiduvom Padiduvom
    Paraman Yesuvaiyea
    Pugazhnthiduvom Pugazhnthiduvom
    Puniyar Yesuvaiyea – 2

    Arathipom Arathipom
    Anbar Yesuvaiyea
    Uyarthiduvom Uyarthiduvom
    Unnathar Yesuvaiyea – 2


  • புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் Pulambalai Anatha Kalipakineer

    புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்
    புது பாடல்களை என் நாவில் தந்தீர் – 2

    என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்
    இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன் – 2

    கை தூக்கி எடுத்தீரே
    கண்ணீரைத் துடைத்தீரே – 2
    என் கண்ணீரைத் துடைத்தீரே – 2

    அழுகையோடு அயர்ந்தேன்
    மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2
    என்னை மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2

    மாறாத உம் தயவால்
    என்னையும் வாழ வைத்தீர் – 2
    என்னையும் வாழ வைத்தீர் – 2

    சந்தோஷ கீதங்களை
    என் நாவில் தந்தீரையா – 2
    என் நாவில் தந்தீரையா – 2


    Pulambalai Anatha Kalipakineer
    Puthupadalgalai En Navil Thandeer – 2

    Endrum Nandri Soli Thuthipen
    Yesuve Um Anbil Mazhlven – 2

    Kaithuki Edutherea
    Kannerai Thudaitherea – 2
    En Kannerai Thudaitheerea – 2

    Azhugaiyodu Ayarnthen
    Magizhyudan Vizhlika Seitheer – 2
    Ennai Magizhyudan Vizhlika Seitheer – 2

    Maratha Um Thayaval
    Ennaiyum Vaazha Vaitheer – 2
    Ennaiyum Vaazha Vaitheer – 2

    Santhosha Geethankalai
    En Navil Thantheraiya – 2
    En Navil Thantheraiya – 2


  • நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் Nadapathelam Nanmaikuthan

    நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
    நம்பிடுவோம் நம் தேவனையே இயேசுவையே – 2

    தேவன் நம் சார்பில் இருக்கும் பொது
    நமக்கெதிராக நிற்பவன் யார் – 2
    தேவனே நமது சகாயரே
    யாருக்கு நாம் ஆஞ்சிடோம் – 2

    அவர் உண்மையுள்ளவரே
    நன்மை கைவிடாதவரே

    நம்மை விட்டு ஒரு போதும் அவர் விலகார்
    நம்மை ஒருநாளும் அவர் மறவார் – 2
    இதுவரை நம்மை நடத்தி வந்தார்
    இனிமேலும் நடத்திடுவார் – 2

    நம் கர்த்தர் என்றும் நல்லவரே
    ருசித்திடுவோம் அவர் அன்பினை – 2
    தாழ்மையில் நம்மை நினைத்தவரே
    வாழ்த்தியே பாடிடுவோம் – 2

    இளவயதில் நம் நம்பிக்கையாவர்
    முதிர்வயதில் நம்மை ஆராதிபர் – 2
    முடிவில் மகிமையில் அவருடனே
    நம்மையும் சேர்த்திடுவார் – 2


    Nadapathelam Nanmaikuthan
    Nambiduvom Nam Devanaiye Yesuvaiye – 2

    Devan Nam Sarbil Irukum Pothu
    Namakethiraga Nirpavan Yaar – 2
    Devane Namathu Sagayarea
    Yaruku Naam Aanjidom – 2

    Avar Unmaiyulavarea
    Nanmai Kaividathavarea

    Namai Vittu Oru Pothum Avar Vilakar
    Nanmai Orunalum Avar Maravar – 2
    Ithuvarai Namai Nadathi
    Vanthar Inimelum Nadathiduvar – 2

    Nam Karthar Enrum Nalavarea
    Ruchithiduvom Avar Anbinai – 2
    Thazhmaiyil Namai Ninaithavarea
    Vazhthiyea Padiduvom – 2

    Ilavayathil Nam Nambikaiyavar
    Muthervayathil Namai Arathipar – 2
    Mudivil Magimaiyil Avarudanea
    Namaiyum Serthiduvar – 2


  • மண்ணான மனிதன் என்னை Mannaana Manithan Ennai

    மண்ணான மனிதன் என்னை
    கண்ணோக்கி பார்த்தீரையா – 2
    துதிப்பேன் உம்மைப் புகழ்வேன்
    என் ஆயுள் நாளெல்லாம் – 2

    ஸ்தோத்திரம் இயேசுவே
    உம்மைப் பாடுவேன் என்றுமே – 2

    காலை தோறும் புது கிருபை
    நாள் தோறும் தந்தீரையா – 2
    என்னையும் நினைத்திடும்
    உம் பாசம் பெரியது – 2

    துன்பங்கள் மறந்திடச் செய்தீர்
    கண்ணீர்ரை களிப்பாக்கினீர் – 2
    என்ன நான் சொல்லுவேன்
    உம் மாறிடா நேசத்தை – 2

    என் உள்ளமுமே மகிழும்
    என்றென்றும் உம்மை போற்றும் – 2
    நல்லவர் நீர் வல்லவர்
    என்றும் என்னைக் காண்பவர் – 2


    Mannaana Manithan Ennai
    Kan Noki Parthiraiya – 2
    Thuthipen Ummai Puzhven
    En Ayul Alelam – 2

    Sthothiram Yesuve
    Ummai Paduven Enrumea – 2

    Kalaithorum Puthu Kirubai
    Nal Thorum Thantherraiya – 2
    Enaiyum Ninaithidum
    Um Pasam Periyathu – 2

    Thunpangal Maranthida Seither
    Kanneerai Kalipakiner – 2
    Enna Naan Soluven
    Um Marida Nesathai – 2

    En Ullam Ummil
    Entrenrum Ummai Potrum – 2
    Nalavar Neer Valavar
    Entrum Ennai Kanpavar – 2


  • இதயம் கலங்கும் நேரமெல்லாம் Ithayam Kalangum Neramealam

    இதயம் கலங்கும் நேரமெல்லாம்
    உம்மையல்லாமல் ஆறுதல் ஏது
    உள்ளம் உடைந்து கதறும் நேரம்
    உம்மையல்லாமல் நம்பிக்கை ஏது – 2

    கண்ணீரின் பாதையில் நான்
    நடந்திடும் வேளையில் – 2
    தஞ்சமும் நீரே துணையும் நீரே
    கைவிடா தெய்வம் நீரே – 2

    மனிதர்கள் மறந்தாலும்
    என்னை பிரிந்து போனாலும் – 2
    நீங்காத தேவம் என் இயேசு ராஜா
    நீர் மட்டும் போதுமையா – 2

    கண்முன்னே உம்மை வைத்தேன்
    கடந்ததெல்லாம் மறந்தேன் – 2
    என்ன வந்தாலும் ஓடுவேன்
    உமக்காய் சோர்ந்திடவே மாட்டேன் – 2


    Ithayam Kalangum Neramealam
    Ummaiyalamal Aruthal Ethu
    Ullam Udainthu Katharum Neram
    Ummaiyalamal Nambikai Ethu – 2

    Kannerin Padhayil Naan
    Nadanthidum Velaiyil – 2
    Thanjamum Neerea Thunaiyum Neerea
    Kaivida Theivam Neerae – 2

    Manithargal Maranthalum
    Ennai Pirinthu Ponalum – 2
    Nengatha Devam En Yesu Raja
    Neer Matum Pothumaiya – 2

    Kanmune Ummai Vaithen
    Kadanthathelam Marandhen – 2
    Enna Vanthalum Oduven
    Umakai Sornthidave Maten – 2


  • Isravelin Devan Ennai இஸ்ரவேலின் தேவன் என்னை

    இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதில்லை
    யாக்கோபின் தேவன் கை விடுவதில்லை – 2

    ஆயிரம் துன்பங்கள் என் வாழ்விலே
    சூழ்ந்தென்னை நெருக்கித் தாக்கினாலும் – 2
    கலங்கிடேன் அஞ்சிடேன் என்றென்றுமே
    இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதிலை – 2

    தாங்கிடும் துணையும் நங்கூரமும்
    தரணியில் எல்லாம் எனக்கவரே – 2
    தளர்ந்திட ஒரு போதும் விட மாட்டார்
    தம் கரத்தால் என்னை ஆசீர்வதிப்பார் – 2

    கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
    கழுகினைப் போல் என்னை சுமந்திடுவார் – 2
    அவர் சமுகம் என்னை வழி நடத்தும்
    அவர் கிருபை என் மேலிருக்கும் – 2

    மாறாத அன்பால் இறுதி வரை
    மகிழ்வுடன் என்னை நடத்திடுவார் – 2
    மகிமையில் என்னை சேர்த்திடவே
    தம் சாயலாய் என்னை உருவாக்குவார் – 2


    Isravelin Devan Ennai Marapathilai
    Yakobin Devan Kaividuvathilai – 2

    Ayiram Thunbangal En Vazhvilay
    Suzhndhenai Neruki Thakinalum – 2
    Kalangiden Anjiden Entrenrumea
    Isravelin Devan Ennai Marapathilai – 2

    Thangidum Thunaiyum Nanguramum
    Tharaniyil Ellam Enakavarea – 2
    Thalarnthida Orupothum Vidamatar
    Tham Karathal Ennai Asirvadhipar – 2

    Kanmanipol Ennai Kathiduvar
    Kazhuginai Pol Ennai Sumanthiduvar – 2
    Avar Samugam Ennai Vazhinadathum
    Avar Kirubai En Melierukum – 2

    Maratha Anbal Eruthivarai Magizhvudan
    Ennai Nadathiduvar – 2
    Magimaiyil Ennai Serthidavea
    Tham Sayalai Ennai Uruvakuvar – 2


  • எந்தன் இயேசு எந்தன் Enthan Yesu Enthan

    எந்தன் இயேசு எந்தன் உள்ளம் வந்ததால்
    என்னுள்ளம் துள்ளிப் பாடுதே
    எந்தன் இயேசு எந்தன்
    வாழ்வை மாற்றியதால்
    என் நெஞ்சம் போற்றிப் பாடுதே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    பாவம் சாபம் யாவும் ஒழிந்து போனதே
    எல்லாம் முற்றும் புதிதானதே
    இரத்தத்தாலே இயேசு என்னை கழுவினார்
    இரட்சண்யப் பாடல்கள் தந்தார்

    ஆவியாலே எந்தன் உள்ளம் நிரப்பினார்
    அப்பா என்று கூப்பிடச் செய்தார்
    கட்டுகள் யாவும் எந்தனேசு உடைத்தார்
    கண்ணீர் கவலை யாவும் போக்கினார்

    சத்தான் சேனை முற்றும்
    தோற்றுப் போனதே
    இயேசு ராஜா வெற்றி பெற்றாரே
    சிலுவை பாதை இன்றுமென்றும் ஜெயமே
    தோல்வி இல்லை வெற்றி வெற்றியே


    Enthan Yesu Enthan Ullam Vanthathal
    En Ullam Thulipaduthey
    Enthan Yesu Enthan Vazhvai Matriyadal
    En Nenjam Potripaduthey

    Alaeluya Alaeluya
    Alaeluya Alaeluya

    Pavam Sabam Yavum Ozhinthu Ponathy
    Ellam Mutrum Puthithanathy
    Rathathalay Yesu Ennai Kazhuvinar
    Ratchanya Padalgal Thandar

    Aviyalea Enthan Ullam Nirapinar
    Appa Endrn Kupida Seithar
    Katugal Yavum Enthan Yesu Udaithar
    Kannergal Kavalai Yavum Pokinar

    Sathan Senai
    Mutrum Thotruponathea
    Yesu Raja Vetri Petrarea
    Seluvaipadhai Indrum Endrum Jeyamea
    Tholvi Illia Vetri Vetriyea


  • எந்த நன்மையும் என்னில் Entha Nanmaiyum Ennil

    எந்த நன்மையும் என்னில் இல்லையே
    தேவா என்னையும் நீர் நேசிக்க
    எந்த மேன்மையும் என்னில் இல்லையே
    தேவா என்னையும் நீர் நினைக்க – 2

    அழகும் இல்லை அஸ்தியும் இல்லை
    ஆனாலும் என்னை நீர் அழத்தீர் – 2
    படிப்பும் இல்லை பட்டமும் இல்லை
    ஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர் – 2

    உந்தன் அன்பு உயர்ந்ததையா
    உந்தன் ஞானம் சிறந்ததையா – 2

    ஞானியும் அல்ல மேதையும் அல்ல
    பேதையாம் என்னை தேடி வந்தீர் – 2
    பெலவான் அல்ல கனவானுமல்ல
    பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர் – 2

    ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே
    அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே – 2
    வாழ்கின்ற வரையில் உம் புகழ் சொல்வேன்
    இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன் – 2


    Entha Nanmaiyum Ennil Illaiyea
    Deva Enaiyum Neer Nesika
    Entha Menmaiyum Ennil Illaiyea
    Deva Enaiyum Neer Ninaika – 2

    Azhagumilai Asthiyumilai
    Analum Ennai Neer Azhaither – 2
    Padipilai Patayamilai
    Analum Ennai Neer Pidithu Konder – 2

    Undhan Anbu Uyarthathaiya
    Undhan Gnanam Seirathathaiya – 2

    Gnyaniyumila Methaiyula
    Pedayam Ennai Thedivanther – 2
    Belavan Alla Ganavanumalla
    Belavenan Ennaiyum Therinthu Konder – 2

    Jeevanum Umake Vazhvum Umake
    Arpanam Seithen Anaithum Umake – 2
    Vazhginra Varaiyil Um Puzhal Selven
    Yesuvea Ummai Endrum Nesipean – 2