Author: admin

  • Thaguvadhu Thoanaadhu Yearkindavar

    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர் – 2

    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

    பல்கால் யாக்கையில்
    என் கால் தவறியும்
    ஒருக்கால் விலகாது
    மால்வரை சுமந்தார் – 2
    வழி தொலை கொடுத்தாய்
    உழிதனை இழந்தாய் என
    பழி சொல்லும் மாந்தர் முன்
    செழி என ததும்பிடும் எந்தை

    ஏகாதாவர்…….
    ப நி ச ரி ம ப….
    ரி க க ரி ம க ரி….

    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர் – 2

    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

    Thaguvathu Thonaathu Yerkindravar
    Vallathu Ethuvendru Nadaathavar
    Vadipponorai Naadi Thaan Sendru
    Moodi Siraginil Kappavar

    Alleloo Hallelujah Aaa ..Aaa..Aaa. – 2
    En Niram Maarave Tham Tharam Thazhththinaar
    En Siram Thaazhththi Paaduven Hallelujah…

    Palkaal Yaakkayil En Kaal Thavariyum
    Orukkal Vilakaathu Maalvarai Sumanthaar – 2
    Vazhi Tholai Koduththaay
    Ulithanai Izhanthaay Ena
    Pazhi Sollum Manthar Mun
    Sezhi Ena Thathumbidum Enthai

    Yegaathavar…..


    PA NI SA RI MA PA…
    RI GA GA RI MA GA RI…
    Thaguvathu Thonaathu Yerkindravar
    Vallathu Ethuvendru Nadaathavar
    Vadipponorai Naadi Thaan Sendru
    Moodi Siraginil Kappavar

    Alleloo Hallelujah Aaa ..Aaa..Aaa. – 2
    En Niram Maarave Tham Tharam Thazhththinaar
    En Siram Thaazhththi Paaduven Hallelujah…

  • Thagappaney Thandhayae

    தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
    நீர் போதும் என் வாழ்விலே – 2
    அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்
    சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் – 2

    1. உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே
      உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே – 2
      தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கிறேன் – 2
    2. ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே
      திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே – 2
      தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கின்றேன் – 2

    Thagappaney Thandhayae Elamae Neer dhanae
    Neer podhum en valvilae – 2
    Anbae Aruyirae Umai Aradhipenae
    Swasamae yen nesamae Ummai Aradhipenae – 2

    1. Um anbai solida varthaigal ilayae
      Um seigaigal vivarika Yen valnal podhadhae – 2
      Thagappaney magilgiren Madiyilae Thavalgiren – 2
    2. Athuma nesarae Neer utrunda parimalamae
      Dhratchai rasathilum Um nesam inimayae – 2
      Thagapanaey magilgiren Madiyilae Thavalgiren – 2
  • Thagappane Nalla Thagappane

    தகப்பனே நல்ல தகப்பனே – 2
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2

    1. குறைவொன்றும் இல்லை
      என்னை நிறைவாக நடத்துறீங்க – 2
      நன்றி சொல்ல வார்த்தை இல்லை
      நலமாக நடத்துறீங்க – 2

    நன்றி உமக்கே நன்றி – 3

    1. எத்தனை நன்மை நீங்க
      என் வாழ்வில் செஞ்சீங்க – 2
      எதை கண்டு என்னை நீர்
      இவ்வளவாய் நேசிச்சீங்க

    நன்றி உமக்கே நன்றி – 3

    1. தகுதிக்கு மிஞ்சி நீங்க
      நன்மையால நிரப்புறீங்க – 2
      உதவாத என்மேல் நீர்
      உண்மையாக இருக்குறீங்க – 2

    நன்றி உமக்கே நன்றி – 3
    – தகப்பனே


    Thagappane Nalla Thagappane
    Ennai Thaangidum Nalla Thagappane

    1. Kurai Ondrum illa Ennai
      Niraivaaga Nadaththureenga – 2
      Nandri Solla Varthai illa
      Nalamaaga Nadaththureenga – 2

    Nandri Umakkae Nandri – 3

    1. Eththana Nanmai Neenga
      En Vaazhvil Senjeenga – 2
      Yedhaik kandu Ennai
      Neenga ivvalavai Nesicheenga – 2

    Nandri Umakkae Nandri – 3

    1. Thaguthikku Minji Enna
      Nanmaiyaala Nirappureenga – 2
      Udhavaadha En Mel Neer
      Unmaiyaga irukkureenga – 2

    Nandri Umakkae Nandri – 3

    Thagappane Nalla Thagappane
    Ennai Thaangidum Nalla Thagappane

  • Thaetraravaalanae Ennai Thaedi

    தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
    தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே -2

    நீர் நெருப்பாய் வருவீர்
    நீர் காற்றாய் வருவீர்
    நீர் அக்கினியாய் வருவீர்
    நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே

    1. காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
      கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே – 2

    நீர் நெருப்பாய் வருவீர்
    நீர் காற்றாய் வருவீர்
    நீர் அக்கினியாய் வருவீர்
    நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே

    1. அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
      உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே – 2

    நீர் நெருப்பாய் வருவீர்
    நீர் காற்றாய் வருவீர்
    நீர் அக்கினியாய் வருவீர்
    நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே

    1. பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே
      பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே – 2

    நீர் நெருப்பாய் வருவீர்
    நீர் காற்றாய் வருவீர்
    நீர் அக்கினியாய் வருவீர்
    நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே


    Thaetraravaalanae Ennai Thaedi Vandheerae
    Thaetraravaalanae Ennai Thaetrum Dheivamae

    Neer Neruppai Varuveer
    Neer Kaatraai Varuveer
    Neer Akkiniyaai Varuveer
    Neer Anbaagha Varuveer – Thaetraravaalanae

    1. Kaatrai Vandheerae Sengadal Pilandhadhae
      Kaatrai Vandheerae Sengadal Pilandhadhae

    Neer Neruppai Varuveer
    Neer Kaatraai Varuveer
    Neer Akkiniyaai Varuveer
    Neer Anbaagha Varuveer

    1. Anbaai Vandheerae Ennai Anaithukondeerae
      Um Karathai Neettiye Ennai Serthukondeerae

    Neer Neruppai Varuveer
    Neer Kaatraai Varuveer
    Neer Akkiniyaai Varuveer
    Neer Anbaagha Varuveer

    1. Parisutharae Parisutharae
      Neer Vaarumae Neer Vaarumae – 4

    Neer Neruppai Varuveer
    Neer Kaatraai Varuveer
    Neer Akkiniyaai Varuveer
    Neer Anbaagha Varuveer – 2 – Thaetraravaalanae

  • Swasame

    உயிரே என் ஆருயிரே
    என் உயிரே உம்மை மறவேன் – 2

    உம் பாதம் சேர்ந்தேனே
    என்னையே தொலைத்தேனே
    உம் அன்பால் நிதம் நிதம்
    என்னை தொலைத்தேனே

    உம் அன்பின் மலரிலே
    எந்நாளும் வாசம் நான்
    அபிஷேக தென்றலிலே
    மகிழ்ந்திடும் சோலை நான் – 2

    ஓ.. ஓ… என் சுவாசமே
    ஓ..ஓ.. என் உயிர் மூச்சே – 2

    உம் மார்பில் சாய்ந்தாலே
    என்னையே மறப்பேனே
    உம் பாச நேசத்தால்
    என்னை மறப்பேனே

    உம் பாச மழையிலே
    எந்நாளும் துளிகள் நான்
    உம் பிரசன்ன காற்றிலே
    மகிழ்ந்திடும் மனிதன் நான் – 2

    ஓ.. ஓ… என் சுவாசமே
    ஓ..ஓ.. என் உயிர் மூச்சே – 2


    Uyirae En Aarutirae
    En Uyirae Ummai Maravean – 2

    Um Paatham Searnthenae
    Ennayae Tholaithean
    Um Anbal Nitham Nitham
    Ennai Tholaitheanae

    Um Anbain Malarilae
    Ennalum Vaasam Naan
    Abishekaa Thentralilae
    Magilnthidum Solai Naan – 2

    Oh Swasame
    Oh En Uyir Mooche – 2

    Um Marbil Saainthalae
    Ennayae Marappeane
    Um Paasa Neasathal
    Ennai Marappeane

    Um Paasa Mazhayilae
    Ennalum Thuligal Naan
    Um Pirasanna Kaattrilae
    Maginthidum Manithan Naan – 2

    Oh Swasame
    Oh En Uyir Mooche – 2

  • Sutri Thirinthen Ullagam Muzhuvathum

    சுற்றி திரிந்தேன் உலகம் முழுவதும்
    நிம்மதி தேடி அழைத்தேன் உலகிலேயே
    குற்றம் உறவும் சூழ்ந்து சிறிதும் ??
    தனிமை உணர்ந்தேன் நிம்மதி இல்லையே

    நான் சொல்வதை கேள்
    நிம்மதி பொருளில் இல்லையே
    நான் சொல்வதை கேள்
    நிம்மதி மனுஷரில் இல்லையே
    நான் சொல்வதை கேள்
    உலகில் செல்வம் சேர்த்தாலும்
    மரித்தால் ஒன்றுமே இல்லையே

    நிம்மதி இங்குண்டு
    என்னை கேள் சொல்கிறேன்
    நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே – 2

    1. துளியும் நிம்மதி இல்லமேல் நீ
      என்டே போகிறாய்
      மனதை தந்திடும்
      தம் கரங்கள் நீட்டிடும்
      ஏசுவே நிம்மதி

    உண்மை செல்வம் எங்கே தேடினேன்
    காலம் செல்ல கரைந்து போனதே
    எல்லாம் தெரிந்தும் நிம்மதி தேடினேன்
    படம் ஓன்று மட்டும் கற்றுக்கொண்டேன்

    நான் சொல்வதை கேள்
    நிம்மதி பொருளில் இல்லையே
    நான் சொல்வதை கேள்
    நிம்மதி மனுஷரில் இல்லையே
    நான் சொல்வதை கேள்
    உலகில் செல்வம் சேர்த்தாலும்
    மரித்தால் ஒன்றுமே இல்லையே

    நிம்மதி இங்குண்டு
    என்னை கேள் சொல்கிறேன்
    நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே – 2


    Sutri thirinthen ullagam muzhuvathum
    Nimadhi thedi azhaindhen ulagilea
    Utram uravum soolnthum sirithum??
    Thanimai unarndhen nimadhi illaiyea

    Naan solvadhai kel
    Nimadhi porulil illaiye
    Naan solvadhai kel
    Nimadhi manusaril illaiye
    Naan solvadhai Kel
    Ullagil selvam serthalum
    Marithaal ondrumea illaiye

    Nimadhi engundu
    Ennai kel solgiren
    Nimathi yesuvin sanithiyil matume – 2

    1. Thuliyum nimadhi illamel nee
      Ende pogirai
      Manathai thadidum
      Tham karangal neetidum
      Yesuvae nimadhi

    Unmai selvam enge thedinen
    Kalam sella karainthu ponathey
    Ellam therinthum nimadhi thedinen
    Padam ontru mattum katrukonden

    Naan solvadhai kel
    Nimadhi porulil illaiye
    Naan solvadhai kel
    Nimadhi manusaril illaiye
    Naan solvadhai Kel
    Ullagil selvam serthalum

    Nimadhi engundu
    Ennai kel solgiren
    Nimathi yesuvin sanithiyil matume – 2

  • Sthothiram Yesu Nadha

    1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
      உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
      ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
      திரு நாமத்தின் ஆதரவில்!
    2. வான துதர் சேனைகள்
      மனோகர கீதங்களால் எப்போதும்
      ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
      மன்னவனே உமக்கு!
    3. இத்தனை மகத்துவமுள்ள
      பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
      எத்தனை மாதயவு நின் கிருபை
      எத்தனை ஆச்சரியம்!
    4. நின் உதிரமதினால்
      திறந்த நின் ஜீவப் புது வழியாம்
      நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
      சேரவுமே சந்ததம்!
    5. இன்றைத் தினமதிலும்
      ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
      தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
      ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
    6. நீரல்லால் எங்களுக்குப்
      பரலோகில் யாருண்டு ஜீவநாதா
      நீரேயன்றி இகத்தில் வேறொரு
      தேட்டமில்லை பரனே!

    1. Sthoththiram Yesu Naathaa
      Umakkentum Sthoththiram Yesu Naathaa
      Sthoththiram Seykirom Ninnatiyaar
      Thiru Naamaththin Aatharavil!
    2. Vaana Thuthar Senaikal
      Manokara Geethangalaal Eppothum
      Oyvintip Paatith Thuthikkap Perum
      Mannavanae Umakku!
    3. Iththanai Makaththuvamulla
      Pathavi Ivvaelaikal Engalukku
      Eththanai Maathayavu Nin Kirupai
      Eththanai Aachchariyam!
    4. Nin Uthiramathinaal
      Thirantha Nin Jeevap Puthu Valiyaam
      Nin Atiyaarkkup Pithaavin Sannithi
      Seravumae Santhatham!
    5. Intaith Thinamathilum
      Orumiththukkooda Um Naamaththinaal
      Thantha Nin Kirupaikkaay Umakkentum
      Sthoththiram, Sthoththiramae!
    6. Neerallaal Engalukkup
      Paralokil Yaarunndu Jeevanaathaa
      Neeraeyanti Ikaththil Vaeroru
      Thaettamillai Paranae!
  • Sthothiram Seivenae

    ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
    பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
    பாத்திரனை யூத கோத்திரனை – என்றும்

    1. அன்னை மரிசுதனை
      புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை
      முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
      முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை
    2. கந்தை பொதிந்தவனை
      வானோர்களும் வந்தடி பணிபவனை
      மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை
      வான பரன் என்னும் ஞான குருவானை
    3. செம்பொன்னுருவானைத்
      தேசிகர்கள் தேடும் குரவானை
      அம்பரமேவிய உம்பர் கணத்தோடு
      அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

    Sthothiram Seyvaenae Iratchakanai
    Paaththiramaaka Immaaththiram Karunnai Vaiththa
    Paaththiranai Yootha Koththiranai – Entum

    1. Annai Marisuthanai
      Pulmeethu Amilnthuk Kaluthavanai
      Munnannai Meethutta Sinnak Kumaaranai
      Munnurai Noorpati Innilaththuttanai
    2. Kanthai Pothinthavanai
      Vaanorkalum Vanthati Pannipavanai
      Manthaiyarkaanantha Maatchiyalith Thonai
      Vaana Paran Ennum Njaana Kuruvaanai
    3. Semponnuruvaanaith
      Thaesikarkal Thaedum Kuravaanai
      Amparamaeviya Umpar Kanaththodu
      Anpu Pera Nintu Paimpon Malar Thuvi
  • Sthotharikkiren Naan Sthotharikkiren

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    மனு உருவானவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    மனு உருவானவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    மோட்ச வாசலை திறந்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    மோட்ச வாசலை திறந்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    கனிவினை தீர்த்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    கனிவினை தீர்த்தவனை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    எங்கள் காவலனை ஆவலோடன்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    எங்கள் காவலனை ஆவலோடன்
    ஸ்தோத்தரிக்கிறேன்

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்

    அணைமனு மைந்தனையே
    ஸ்தோத்தரிக்கிறேன்
    அணைமனு மைந்தனையே
    ஸ்தோத்தரிக்கிறேன்
    வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்
    ஸ்தோத்தரிக்கிறேன்

    ஸ்தோத்தரிக்கிறேன் நான்
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்
    தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை
    ஸ்தோத்தரிக்கிறேன்


    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

    Manu ooruvaanavanai
    Sthotharikkiren
    Manu ooruvaanavanai
    Sthotharikkiren
    Motcha vaasalai thirandhavanai
    Sthotharikkiren
    Motcha vaasalai thirandhavanai
    Sthotharikkiren

    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

    Kanivinai theerthavanai
    Sthotharikkiren
    Kanivinai theerthavanai
    Sthotharikkiren
    Engal kaavalanai aavalodan
    Sthotharikkiren
    Engal kaavalanai aavalodan
    Sthotharikkiren

    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

    Anaimanu maindhanaiye
    Sthotharikkiren
    Anaimanu maindhanaiye
    Sthotharikkiren
    Varum messiahvai meiyaai
    Sthotharikkiren
    Varum messiahvai meiyaai
    Sthotharikkiren

    Sthotharikkiren naan
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren
    Deva sundara kiristhu veindhai
    Sthotharikkiren

  • Sirumaiyum Elimaiyum

    சிறகுகளாலே மூடிடுவார்
    அரணான பட்டணம் போல காத்திடுவார்
    கழுகை போல எழும்ப செய்வார்
    உன்னை நடத்திடுவார்
    அவர் உன்னை நடத்திடுவார் – 2

    எல்ஷடாய் எல்ஷடாய்
    சர்வ வல்லமை உள்ளவரே – 2
    உன்னை நடத்திடுவார்
    அவர் உன்னை நடத்திடுவார் – 2

    1. பாதை அறியாத நேரமெல்லாம்
      அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2
      கரங்களை பிடித்து கைவிடாமல்
      உன்னை நடத்திடுவார் – 2
    2. வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை
      கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2
      சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
      தலையை உயர்த்திடுவார் – 2
    3. பாதம் கல்லில் இடறாமல்
      தூதர்களை அனுப்பிடுவார் – 2
      உன்னை காக்க கூட இருந்து
      உன்னை நடத்திடுவார் – 2

    Sirumaiyum Elimaiyum Mana En Mel
    Ninaivaai Irupavare
    En Belanum Neere
    Kotaiyum Neera
    Ummai Thedugiren
    En Belanum Neere
    Kotaiyum Neera
    Ummai Vaanjiliren

    Karthave Naan Nilaiyatravan
    En Kaalgalai Sthirapaduthum – 2

    1. Thakapane Unthan Thayai Konda Anbaal
      Thaluvi Ennai Thaangume – 2
      Thayangidum Nerthil Dheva Unthan
      Tholil Sumanthidume – 2
    2. Ularntha En Elumbugal Uyiradain Thonga
      Dheva Um Belan Thaarume – 2
      Uyirulla Varaiyul Umakkaga Vaazhum
      Unarvinai Uruvaakkume – 2