Category: Song Lyrics

  • புத்தம் புதிய காரியங்கள் Puththam Puthiya Kaariyangal

    புத்தம் புதிய காரியங்கள்
    என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
    அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
    வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்

    ஸ்தோத்திரம் ஆமென்
    ஸ்தோத்திரம் ஆமென்
    ஸ்தோத்திரம் ஆமென்
    ஸ்தோத்திரம் ஆமென்

    அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே … நீரே
    அதிசயம் செய்யும் தேவன் நீரே … நீரே
    உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே … நீரே
    உருமாற்றம் செய்யும் தேவன் நீரே … நீரே


    Puththam Puthiya Kaariyangal
    En Vaazhvil Thuvakkineer Sthothiram
    Arpudhangal Aayiram Aayiram
    Vaazhvil Seitheer Sthothiram

    Sthothiram Amen
    Sthothiram Amen
    Sthothiram Amen
    Sthothiram Amen

    Arputhangal Saeiyum Devan Neerae… Neerae
    Adhisayam Saeiyum Devan Neerae… Neerae
    Uruvaakkum Devam Yeasu Neerae… Neerae
    Urumaattram Saeiyum Devam Neerae… Neerae


  • நீர் எனக்காய் காயப்பட்டீர் Neer Enakkaai Kaayappatteer

    நீர் எனக்காய் காயப்பட்டீர்
    நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
    நான் நன்றாய் வாழ்வதற்கு
    சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்
    எனக்காக நீர் சாபமானீர்
    முள்முடியால் சூட்டப்பட்டீர்

    உம்மாலே நான் விடுதலையானேன்
    உம்மாலே நான் சுகம் பெற்றேன்
    உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
    உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்

    நீர் சிந்திய இரத்தம்
    எனக்காய் பரிந்து பேசுது
    நீர் சிந்திய இரத்தம்
    தினம் என்னை வாழ வைக்குது


    Neer Enakkaai Kaayappatteer
    Neer Enakkaai Norukkappatteer
    Naan Nandraai Vaazhvatharkku
    Siluvaiyilae Um Jeevanai Thandheer
    Enakkaha Neer Saabamaaneer
    Mulmudiyaal Soottappatteer

    Ummaalae Naan Viduthalaiyaanaen
    Ummaalae Naan Sugam Petrraen
    Ummaalae Naan Mannippu Petrraen
    Ummaalae Naan Samaathaanam Petrraen

    Neer Sindhiya Raththam
    Enakkai Parindhu Pesuthu
    Neer Sindhiya Raththam
    Thinam Ennai Vaazha Vaikkuthu


  • தீமை அனைத்தையும் Theemai Anaithaiyum

    தீமை அனைத்தையும்
    நன்மையாக மாற்றினீரே
    எந்தன் வாழ்வில் அதிசயம்
    செய்தவரே செய்தவரே

    அல்லேலூயா பாடுவேன்
    ஆராதிப்பேன் உயர்த்துவேன்
    இயேசுவையே இயேசுவையே
    ஆராதிப்பேன்


    Theemai Anaithaiyum
    Nanmaiyaaga Maattrineerae
    Endhan Vazhvil Adhisayam
    Saeidhavarae Saeidhavarae

    Allaeluya Paaduvaen
    Aaradhipaen Uyarthuvaen
    Yeasuvaiyae Yeasuvaiyae
    Aaradhippaen


  • நமக்காக தேவ பாலகன் Namakkaga Deva Balagan

    நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
    நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் – 2

    அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்
    சர்வ வல்லவரே
    நித்திய பிதா சமாதான பிரபுஅவரே

    யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்
    மாட்டு தொழுவத்திலே
    ராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்து
    ஏழ்மையின் கோலமெடுத்து
    பாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிட
    நோய்களை தீர்த்து மீட்டிட
    நம்மை படைத்தவர் நம் ரட்சகர்
    மன்னவன் பிறந்தாரே

    இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்
    வெளிச்சம் தந்திடவே
    ஆதியும் வார்த்தையுமான தேவன்
    உலகத்தில் வந்தாரே
    அன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்
    நம் உள்ளத்தில் வந்திடுவார்
    நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்
    என்றும் மாறிடா நேசர் இயேசு


    Namakkaga Deva Balagan Piranthuvittar
    Namakkaga Deva Kumaran Kodukkapattar – 2

    Avar Athisayamea Aalosanai Karthar
    Sarva Vallavarea
    Nithya Pitha Samathana Prabu Avarea

    Yuthavilulla Bethlegemeennum Oorin
    Maattu Thozhuvathilea
    Raajathi Rajanam Yesu Christbu
    Ealmayin Kolameduthu
    Paavathai Mannikka Saabathai Pokkida
    Noikalai Theerthu Meettida
    Nammai Padaithavar Nam Ratchagar
    Mannavan Pirantharea

    Irulilea Irukindra Maanthargal Ellorkum
    Velicham Thanthidavea
    Aathiyum Vaarthayumana Devan
    Ulagathil Vantharea
    Anbaana Thagappanai Nalla Nanbanai
    Nam Ullathil Vanthiduvar
    Nammai Nadathiduvar Nammai Thangiduvar
    Endrum Marridu Nesar Yesu


  • யேகோவா மெஃபல்டி Yegova Mephalti

    யேகோவா மெஃபல்டி
    என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
    யேகோவா மெஃபல்டி
    என் இரட்சண்ய கன்மலை நீரே

    ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே
    வலக்கரம் நீட்டி விடுவித்தீரே – 2
    வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
    நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன் – 2

    எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
    கர்த்தர் விடுவித்தீரே
    சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
    கர்த்தர் விடுவித்தீரே

    ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
    எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே – 2

    வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
    நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் – 2

    மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
    கர்த்தர் விடுவித்தீரே
    பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
    கர்த்தர் விடுவித்தீரே

    கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும்
    படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே – 2

    வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
    நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் – 2


    Yegova Mephalti
    Ennai Viduvikkum Karthar Neerae
    Yegova Mephalti
    En Ratchanya Kanmalai Neerae

    Aabathu Kaalathil Koopittaen Ummayae
    Valakkaram Neeti Viduvitheerae – 2

    Vaazhnal Muzhuvadhum Nandri Solvaen
    Naamthai Solli Jeythiduvaen – 2

    Eththanai Adhigaaram Ezhumbina Podhum
    Karthar Viduvitheerae
    Sathuruvin Senai Soozhndha Podhum
    Karthar Viduvitheerae

    Aathumavai Odukukira Yavaraiyum Sangaripeer
    Ethireeyin Villukkennai Thappuvitheerae – 2

    Vaazhnal Muzhuvadhum Nandri Solvaen
    Naamthai Solli Jeythiduvaen – 2

    Marana Kattugal Soozhndha Podhum
    Karthar Viduvitheerae
    Bhadhalae Vallamaigal Ezhumbina Podhum
    Karthar Viduvitheerae

    Kaigalai Porukkum Viralgalai Yuththathirkum
    Padipikkum Kanmalayin Karthar Neerae – 2

    Vaazhnal Muzhuvadhum Nandri Solvaen
    Naamthai Solli Jeythiduvaen – 2


  • இயேசுவின் நாமம் Yesuvin Namam

    இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம் இன்ப நாமம்

    பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
    பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்

    பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
    பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்

    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்

    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நாமம்

    முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
    மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

    சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
    சாபப் பிசாசை துரத்திட்ட நாமம்


    Yesuvin Namam Inithana Namam
    Yesuvin Naamam Inithaana Naamam
    Innaiyillaa Naamam Inpa Naamam

    Paavaththaip Pokkum Payamathai Neekkum
    Parama Santhosham Paktharukkalikkum

    Parimala Thailamaam Yesuvin Naamam
    Paar Engum Vaasanai Veesidum Naamam

    Vaanilum Poovilum Maelaana Naamam
    Vaanaathi Vaanavar Yesuvin Naamam

    Naettum Intum Entum Maaridaa Naamam
    Nampinorai Entum Kaividaa Naamam

    Mulangaal Yaavum Mudakkidum Naamam
    Moontil Ontaka Jolippavar Naamam

    Saaththaanin Senaiyai Jeyiththitta Naamam
    Saapap Pisaasai Thuraththitta Naamam


  • இஸ்ரவேலின் ஜெயபலமே Isravelin Jeyabalame

    இஸ்ரவேலின் ஜெயபலமே
    எங்கள் சேனையின் கர்த்தரே – 2

    உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
    உம் கிருபையினால் நிலைத்திருப்போம் – 2

    நீரே தேவனாம் எங்கள்
    சேனையின் கர்த்தரே
    உம்மை உயர்த்தியே நாங்கள்
    தேசத்தை சுதந்தரிப்போம் – 2 – இஸ்ரவேலின்

    பாகால்கள் அழிந்திடவே
    உந்தன் அக்கினி அனுப்புமே – 2
    எலியாவின் தேவன் மெய்தேவன்
    என்று தேசங்கள் பாடவே – 2 – ஓ..ஓ ..ஓ ..- நீரே தேவனாம்

    எதிர்த்திடும் சிங்கங்களின்
    வாய்களை கட்டுவேன் – 2
    தானியேலின் தேவன் மெய்தேவன்
    என்று இராஜாக்கள் சொல்லவே – 2 – ஓ..ஓ ..ஓ .. – நீரே தேவனாம்

    எதிரியின் பாளையத்தில்
    உந்தன் வல்லமை அனுப்புமே – 2
    யோசுவாவின் தேவன் மெய் தேவன்
    என்று தேசங்கள் பாடவே
    யோசுவாவின் தேவன் மெய் தேவன்
    என்று இந்தியா பாடவே – ஓ..ஓ ..ஓ ..- நீரே தேவனாம்


    Isravelin Jeyabalame
    Yengal Senaiyin Kartharae – 2

    Um Vaarthaiyinaal Pilaithirupom
    Um Kirubaiyinaal Nilaithiruppom – 2

    Neerae Devanaam Yengal
    Senaiyin Kartharae
    Ummai Uyarthiyae Naangal
    Desathai Suthantharippom – 2 – Isravelin

    Paagaalkal Azhinthidavae
    Unthan Akkini Anupumae – 2
    Yeliyaavin Devan Mei Devan
    Yendru Desangal Paadavae – 2 Oh..Oh..Oh..- Neerae Devanaam

    Yethirthidum Singangalin
    Vaaigalai Kattuvaen
    Dhaaniyelin Devan Mei Devan
    Yendru Raajakal Sollavae – 2 Oh..Oh..Oh..- Neerae Devanaam

    Ethiriyin Paalayathil
    Unthan Vallamai Anupumae – 2
    Yosuvavin Devan Mei Devan
    Entru Desangal Paadavae
    Yosuvavin Devan Mei Devan
    Entru India Paadavae -2 Oh..Oh..Oh..- Neerae Devanaam


  • ஆராதிப்பேன் நான் ஆத்ம Aaraathippaen Naan

    ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்
    ஆண்டவர் இயேசுவை அனுதினமே
    ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே
    அனுதினம் ஸ்தோத்திரிப்பேன்
    என் இயேசுவை – 2

    தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனை
    துதிகளின் மத்தியிலே
    வாசம் செய்யும் நேசனை
    ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை
    தினம் தினம் ஸ்தோத்திரிப்பேன்
    என் இயேசுவை

    அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
    அன்னிய பாஷையிலே
    அவரோடே பேசி
    நன்மையால் என் வாழ்வை
    நாள்தோறும் நடத்தும் – 2
    நாதனை ஸ்தோத்திரிப்பேன்
    என் இயேசுவை


    Aaraathippaen Naan Aathma Mannaalan En
    Aanndavar Yesuvai Anuthinamae
    Aanantha Geethaththaal Avar Naamam Pottiyae
    Anuthinam Sthoththirippaen
    En Yesuvai – 2

    Thootharsenai Pottum Thooyaathi Thooyanai
    Thuthikalin Maththiyilae
    Vaasam Seyyum Naesanai
    Jepamathai Jeyamaakkum Thaevaathi Thaevanai
    Thinam Thinam Sthoththirippaen
    En Yesuvai

    Allaelooyaa Entu Aaviyil Nirainthu
    Anniya Paashaiyilae
    Avarotae Paesi
    Nanmaiyaal En Vaalvai
    Naalthorum Nadaththum – 2
    Naathanai Sthoththirippaen
    En Yesuvai


  • இயேசுவின் மார்பில் நான் Yesuvin Marbil Naan

    இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
    இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2
    பாரிலே பாடுகள் மறந்து நான்
    பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2

    வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
    நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா – 2

    சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
    வேதனையான வேளை வந்திடும் – 2
    என் மன பாரம் எல்லாம் மாறிடும்
    தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2

    ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
    நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2
    மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
    மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் – 2

    என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
    என்றும் என் கண்ணீரை துடைப்பாரே – 2
    ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
    இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2


    Yesuvin Marbil Naan Saainthumey
    Intrum Entrum Enthan Jeeva Paathaiyil – 2
    Paariley Paadugal Maranthu Naan
    Paaduven En Nesarai Naan Pottriye – 2

    Vazthuven Potruven Ummai Mathram
    Nokki Entrum Jeevippen Hallelujah – 2

    Sothanaiyaal En Ullam Sornthidum
    Vethanaiyaana Vezhai Vanthidum – 2
    En Mana Baramellam Maaridum
    Tham Kirubai Entrum Ennai Thaangidum – 2

    Snehithar Ellaam Kaivittitidinum
    Nesaraal Yesuennodiruppathaal – 2
    Mannilen Vazhvai Naan Vittegiye
    Mannavanaam Yesuvodu Seruven – 2

    Entrum En Venduthalgal Ketpaarey
    Entrum En Kanneerai Thudaipparey – 2
    Ezhai En Kashtam Yaavum Neengiye
    Yesuvodu Sernthu Nitham Vazhuven – 2


  • இரட்டிப்பான நன்மைகளை Raettippana Nanmaigalai

    இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன்
    இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன்
    உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்து
    உன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2

    அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன்
    தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2
    பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னை
    என் தோளில் என்றும் சுமப்பேன்
    மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன்

    வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன்
    உயரங்களில் கொண்டு செல்வேன்
    என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழ
    வானத்தின் வாசல் திறப்பேன்
    மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்


    Raettippana Nanmaigalai Tharuvaen Tharuvaen
    Indrai Thinam Unnai Aasirvathipaen
    Un Mael Naan En Kannai Vaithu Alosanai Thanthu
    Un Paeyarai Perumaipaduththuvaen – 2

    Anbaalae En Pakkam Unnai Azhaiththaen
    Theengondrum Anugamal Kaapaen – 2
    Belaveena Kastangal Saeraathu Unnai
    En Tholil Endrum Sumappaen
    Maganae Magalae Naan Endrum Unnodu Iruppaen

    Vaalakkamal Unnai Maenmaiyaay Vaipaen
    Uyarangalil Kondu Selvaen
    En Iswaryam Yavaiyum Nee Paetru Magizha
    Vaanaththin Vaasal Thirappaen
    Maganae Magalae Naan Unnai Aasirvathipaen